Vrithra (2018)
கன்னடம்
Crime / Drama
ஒரு தற்கொலை. அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஆள் கடத்தல். அந்த இரண்டும் புது கிரைம் பிரான்ச் ஆபிசர் இந்திராவிற்கு கிடைத்த முதல் வழக்கு / வழக்குகள்.
தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கிடைக்கும் விடைகள் பூஜ்ஜியங்களே. யார்? ஏன்? எப்படி? எதற்கும் க்ளூவே கிடைப்பதில்லை.
அதிக ஆர்ப்பாட்டங்களில்லாத கதையமைப்பும் அதற்கேற்ற காட்சி நகர்வும் ஆச்சரியம். கதை ஓடிக் கொண்டே இருக்கிறது குற்றவாளிகளுக்கு சற்றும் சளைக்காமல்.
ஆங்கிலப் படங்களில் வரும் ஒற்றை நாடி சரீர ஹீரோயினிகள் ஆரம்பத்தில் மொக்கையாகவும், இறுதியில் நமக்கு மிகவும் பிடித்த ஆதர்சமாகவும் மாறும். அதேபோலத்தான் இந்திராவும். படம் முழுக்க இந்திரா இந்திரா இந்திரா மட்டுமே.
மற்றவர்கள் - இருக்கிறார்கள்.
காவலுதாரி (crossroads) படம் போல இந்தப் படமும் பார்க்க வேண்டிய கிரைம் மிஸ்டரி திரில்லர்.
அமேசான் பிரைமில் அவைலபிள்.

No comments:
Post a Comment