Dexter (2006 -2013)
Television Series
Drama
டெக்ஸ்டர் சீரிஸ்ல ஒரு திடீர் சீன்.
அது என்னான்னு தெரியறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விசயம்.
டெக்ஸ்டர்ங்கறவன் ஒரு சீரியல் கில்லர். ஆனா பொது மக்களைக் கொல்லுறவன் இல்ல. பொது மக்களை வதைக்கிறவங்களைக் கொல்லுறவன். அதாவது நல்ல சீரியல் கில்லர். கவர்மெண்டால கொடுக்க முடியாத, அதாவது அவனைப் புடிச்சி உள்ள போட்டா அவன்கிட்ட இருக்கற அரசியல், செல்வாக்கு, பண பலத்துல எப்படியும் கேஸை ஒடச்சி வெளிய வந்துருவான்ங்கற மாதிரியான வெளிப்படையா அறியப்பட்ட/ கிரிமினல்ஸ்ன்னு கோர்ட்டாலயே நிரூபிக்க முடியாத கிரிமினல்ஸை தேடிப் புடிச்சி தண்டனை கொடுக்கறவன்.
அதயெல்லாம் தாண்டி கதை இண்டென்சா போகும். அதுல நெஜமாவே பொது மக்களை ரேண்டமா கொல்லுற சீரியல் கில்லர்களும் இருப்பாங்க தான. அதுல ஒருத்தன் டெக்ஸ்டரோட மனைவிய கொன்னுடறான். (ஸ்பாய்லர் தான்) அந்த சீரியல் கில்லரோட M.O (மாடஸ் ஆபராண்டி) எப்படின்னா தன்னோட விக்டிமான குடும்பப் பெண்களை, அவங்க வீட்டு பாத் டப்புல அவங்க ட்ரெஸ் எதுவும் இல்லாம கழுத்த அறுத்து அந்த பாத் டப்ப ரத்த வெளாறா ஆக்குறதுதான்.
இப்படி அவன் டெக்ஸ்டரோட மனைவிய (அவள் ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தைகளைப் பெத்துட்டு அவன பிரிஞ்சி டிவோர்ஸ் வாங்கிட்டு டெக்ஸ்டர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பா) அதே மாதிரி கொன்னிருப்பான்.
டெக்ஸ்டர்ங்கறவன் சீரியல் கில்லர்ங்கறது அந்த சீரிஸ் பாக்குற நமக்கு மட்டுந்தான் தெரியும். ஆனா அவன் பொதுவுல மியாமில உள்ள போலீஸ் ஸ்டேசன்ல ப்ளட் ஸ்ப்ளாட்டர் (அதாவது ஒரு கொலையில ரத்தம் தெறிக்க தெறிக்க நடக்குற கொலையில அந்த ரத்தம் அந்தக் கொலை நடக்குறப்ப எப்படியெல்லாம் தெறிச்சதுன்னு விளக்குற) ஃபாரன்சிக் அதிகாரி.
அவன் கூட அதே வேலையை பாக்குறவன் சைனீஸ் மொட்டை மசூக்கா.
டெக்ஸ்டரோட மனைவி அந்த கெட்ட சீரியல் கில்லரால பாத் டப்புல கழுத்தறுபட்டு செத்துக் கெடப்பா. அப்ப அந்த டெட் பாடிய டெக்ஸ்டரால ஃபாரன்சிக் ரிப்போர்ட் எடுக்க வர முடியாதில்லியா? அதனால அங்க அவனோட கலீக் மசூக்கா வர்றான். அப்ப அவன் தன்னோட சக அதிகாரிககிட்ட ஒரு டயலாக் சொல்லுவான்...
"இவள எத்தனையோ முறை நிர்வாணமா கற்பனை பண்ணிப் பார்த்து ஆர்கசம் அடஞ்சிருக்கேன். ஆனா இந்த மாதிரி கொடூரமா ஒருவாட்டிக் கூட நான் கனவுலயும் நெனச்சிதில்லே" அப்டின்னு.
செத்துக் கெடக்கறது தன்னோட கலீக்கோட, நெருங்கிய நண்பனோட மனைவி. ஆனாலும் அவன்கிட்டயிருந்து இப்படி ஒரு ஓப்பன் ஒப்பீனியன் ஸ்டேட்மென்ட் வரும்.
இது நம்மள அவ செத்த சோகத்த விட அதிக அதிர்ச்சியக் கொடுக்கற டயலாக். இதுமாதிரி இந்த சீரிஸ் நெடுகவும் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் இருக்கு.
இப்பவரைக்கும் நான் ரொம்பவே விரும்பற ஒரு சீரிஸ் - இதுதான்!


No comments:
Post a Comment