ASHFALL
(2019)
கொரியன்
Action
/ Drama
சியோலில்,
திடீரென்று ஒரு நன்னாளில், 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும் அதனால் பெரும் சேதத்தை
விளைவிக்கும் பூகம்பமும் ஏற்படுகிறது. அந்தக் காட்சிகள் மொத்தமும் 2009-இல் வெளிவந்த
ரோலண்ட் எம்ரிச்சின் 2012 படத்தின் காட்சிகளுக்கு
ஒப்பானதாக இருக்கிறது. ஓ அப்படியென்றால் மொத்தக் கதையும் அதைப் போலவே இருக்கும் போல
என்று அசட்டையாக நினைக்க வேண்டாம். கதை அப்படியே ரியாலிட்டிக்கும் ஃபேண்டசிக்கும் நடுவில்
கோடு போட்டாற் போல நகர ஆரம்பிக்கிறது.
ஒரு
புதிய ராணுவக்குழு மற்றும் ஒரு தலைவன், அவனது கர்ப்பிணி மனைவி, அவனுக்கு மிஷனாகக் கொடுக்கப்பட்டிருக்கும்
ஒரு கைதியும், அவன் காட்டப் போகும் ரூட்டும் - இதுதான் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள்.
பூகம்பம்
நிகழ்ந்ததென்னவோ சவுத் கொரியாவில்தான். ஆனால், அதற்குக் காரணமான எரிமலைக் குமுறல் நிகழ்ந்தது
நார்த் கொரியாவில் - கிட்டத்தட்ட சவுத் கொரியாவிற்கு மிக அருகில் இருக்கும் Mount
Paektu மலையில்.
பூகம்பம்
நிகழ்ந்ததும் சவுத் கொரிய அரசு, ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டுகிறது. நிறைய விஞ்ஞானிகள்
அதில் கலந்து கொள்கிறார்கள். அதில் இதற்கு தீர்வு சொல்லப் போகும் - அதாவது நம்மை பயமுறுத்துமாறு
ஒரு யோசனையைக் கூறப் போகும் ஒரு விஞ்ஞானியும் கலந்து கொள்கிறான்.
அவன்
கூறிய யோசனையானது, பேக்ட்டு (Paektu) மலையின் அடிவாரத்தில்
உள்ள Magma எனப்படும் எரிமலைக் குழம்பு மூன்று அடுக்குகளில் இருப்பதாகவும் அவனது கணிப்பு
சரியென்றால் இப்போது நிகழ்ந்தது அதன் முதற்கட்ட அடுக்கிலிருந்து வெளிப்பட்டதாகவும்
கூறுகிறான்.
ஓ
மை காட் என்று அந்த கூட்டத்திலிருப்பவர்களும் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாமும்
அதிர்ச்சியில் வாய்பிளக்க, அடுத்து நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த அரிய கேள்வியை
சவுத் கொரியன் ப்ரெசிடெண்ட் கேட்கிறார்.
“இதுக்கு
வேற வழியே இல்லியா சித்தப்பூ?”
ஆஹ்கா
இந்தக் கேள்விக்காகத்தாண்டா காத்துகிட்டிருந்தேன் என்பது போல வந்த உற்சாகத்தை உள்ளடக்கிக்
கொண்டு முகத்தில் கொஞ்சமும் சிரிப்புக் காட்டாமல், தர்பாரில், நிவேதாவிடம் உனக்கு மண்டையில
பிரச்சினை என்று கூறும் நியூரோ சர்ஜன் போல முகத்தை வைத்துக் கொண்டு, இருக்கு. தமிழ்ல
இல்ல இந்தியில இருக்கு எனும் உன்னைத் தேடி டுபாக்கூர் ஜோதிடர் மெய் மெய்யப்பனைப் போல,
“வழியிருக்கு.
சவுத் கொரியால இல்ல. நார்த் கொரியால இருக்கு” என்றும் அங்கே உள்ள பேக்ட்டு மலைடிவாரத்தில்
நியூக்ளியரை வைத்து அதனை தகர்த்து விட்டால் வரப் போகும் பேராபத்தைத் தவிர்க்க முடியும்
என்றும் அதற்கும் 3.48% வாய்ப்புக்கள்தான் உள்ளது. அதை மலையின் அடிவாரத்தில் எந்த மூலையில்
வைத்து தகர்த்தால் இந்த பேரழிவைத் தவிர்க்கலாமென்பதும் இன்னும் கண்டறியப் படவில்லையென்பது
போனஸ் தகவல்.
இந்த
முதல் பூகம்பத்தையே Large Scale Disaster என்று தேசியப் பேரிடராக அரசு அறிவித்து மக்களை
ஊரைக் காலி செய்து அண்டை நாடுகளுக்கு சென்றுவிட உத்தரவிடுகிறது.
இதற்கு
என்ன வழி? இதெல்லாம் நம்மால் முடியுமா? இதற்கான நியூக்ளியருக்கு எங்கே செல்வது? அதை
எப்படி நடைமுறையில் சாத்தியமாக்குவது? இத்தனை காலம் வாழ்ந்த நாட்டை எப்படி ஒரே நாளில்
காலி செய்வது என்று இப்படி யோசித்து யோசித்து நத்தை போல் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த
வேலையில், முன்னாடி வந்து வெறும் டீசர்தாம்மா, இப்பபாரு டிரெய்லரை என்று அடுத்த பூகம்பமும்
அரங்கேறி விடுகிறது.
இன்னும்
மெயின் பிக்சர் வேறு பாக்கி இருக்கிறது? அதற்கு ஸ்டே வாங்கலாமா? / லாகுமா? என்பதை
ASHFALL (2019) கொரியன் படத்தில் காண்க.

Super 😍😍😍
ReplyDelete//“இதுக்கு வேற வழியே இல்லியா சித்தப்பூ?”// 🤣🤣🤣
ReplyDeleteThat's your touch of review...