Extreme Job (2019)
கொரியன்
Comedy / Action
சியோலில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இரண்டு குழுக்கள் உண்டு. ஒன்று தான் எடுக்கும் எந்த வழக்கையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் குழு. மற்றொன்று அப்படியே ரெஸிப்ரோக்கல். எல்லா கேஸையும் சொதப்பும். ஆகையால் அவர்களது டீமின் கேப்டன் டீப்ரமோட் செய்யப்பட்டு முதலாம் டீமின் கேப்டனை ப்ரமோட் செய்து அவருக்குக் கீழ் இந்த டீமை வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
அப்போது அவர்களிடம் சியோலில் போதைப் பொருள் விற்கும் கும்பலைப் பிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. இதுதாண்டா எங்களின் கடைசி சான்ஸ் என்று இரவு பகல் என்று பாராது அந்தக் கும்பல் டாப்படிக்கும் ஒரு கட்டிடம் உள்ள சாலையில் பதுங்கிக் கொண்டு சரியான ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். அதாவது கையும் களவுமாக பிடிக்க வேண்டுமல்லவா? அதற்காக இவர்கள் அங்கேயே தேவுடு காக்கிறார்கள்.
ஒரே மாதிரி காரில் கும்பலாக உட்கார்ந்து கொண்டு வேவு பார்ப்பதில் போரடித்து விடுகிறது. இடத்தை மாற்ற முடிவு செய்து, அந்தக் கட்டிடத்திற்கு எதிராக இருக்கும் ஒரு சிக்கன் பக்கோடா விற்கும் ஹோட்டலில் அமர்ந்து கொண்டு காலை ட்டூ மாலை ட்டூ அடுத்த நாள் காலை ட்டூ மாலை என பல ட்டூ-க்கள் அங்கேயே டாப்படிக்கிறார்கள். சரியான வாய்ப்பும் அமையவில்லை. சரியான துப்பும் கிடைப்பதில்லை.
காலை முதல் மாலை வரை ப்ளேட் ப்ளேட்டாக வயிறு முட்ட தின்று வெறுத்துப் போய் வாந்தியெடுக்குமளவிற்கு சிக்கன் பக்கோடாவையே தின்று தின்று சலித்துப் போகிறார்கள்.
அங்கேயும் ஒரு சிக்கல்.
அடுத்த நாள் அந்தக் கடையை காலி செய்யப் போவதாக இவர்களிடம் அதன் ஓனர் தெரிவிக்கிறார். அந்தக் கும்பலை நோட்டம் விட்டு கையும் களவுமாகப் பிடிக்கத் தோதாக இதை விட்டால் வேறு இடமே அமையப் போவதில்லை.
ஒரே ஒரு வாய்ப்புத்தான். அந்தக் கும்பலைப் பிடித்தால்த்தான் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவர்களது அவப்பெயரும் வேலையும் நிரந்தரமாகும். வேறு வழியே இல்லை. அந்தக் கடையை வாங்க முடிவு செய்கிறார்கள். ஆனால் காசு?
மேலதிகாரியிடம் கேட்டுப் பார்க்கிறார்கள். ம்ஹும். அவர்கள் எப்படி இப்படி ஒரு பட்ஜெட்டிற்கு முன்வருவார்கள்? குற்றவாளிகளைப் பிடிக்க பெட்ரோல் கன்வேயன்ஸ்தான் கிளைம் செய்ய முடியும். இதைப் போன்ற முட்டாள்த்தனமான ஐடியாக்களுக்கு - வாய்ப்பில்ல ராஜா. வேறு வழியின்றி இவர்களிடம் உள்ள கையிருப்பு, வாழ்நாள் சேமிப்பு எல்லாவற்றையும் இதில் இன்வெஸ்ட் செய்கிறார்கள்.
கடைய வாங்கிய ஆரம்பத்தில் வெறுமனே வேவு பார்க்கத்தான் செய்கிறார்கள். அதற்காகத்தானே இன்வெஸ்ட்டும் செய்தார்கள். ஆனால் அந்தக் கடைக்கென்று ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அதுதான் ஹோட்டல் என்பது. கஸ்டமர்கள் உள்ளே நுழைவதும், இவர்கள் தங்களது துப்பி துலக்கும் பணியை தடாலடியாக / அவசரவசராம மறைப்பதுமாக இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றிரண்டு கஸ்டமர்களிடம் பலிக்கும். எல்லோரிடமும் அதையே செய்து கொண்டிருக்க முடியாதல்லவா?
அதனால், அவர்கள் ஐவரில் யாருக்காவது சிக்கன் சமைக்க வருமா என்று பார்த்தால் அதுலேயும் சொதப்பல். ஆனால், அதில் ஒருவன் எதையோ செய்யப் போக அது டக்கரான சுவையில் அமைந்து விடுகிறது. அன்றிலிருந்து அந்த காப், அந்த ஹோட்டலின் ஆஸ்தான ச்செஃப் ஆக்கப்படுகிறார்.
கடையில் கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே அமர்ந்து சிக்கன் பக்கோடா திங்க, வெளியில் பெருங்கூட்டமே வரிசையாக நிற்கிறது. இங்கே கூட்டம் குறையக் குறைய அவர்களையெல்லாம் இரண்டிரண்டு பேராக உள்ளே அழைத்து... ஹே வெய்ட். இவர்கள் போதைப் பொருள் விற்கும் கும்பலைப் பிடிக்கத்தானே வந்தார்கள்? அது என்னவானது? அவர்களைப் பிடித்தார்களா? இந்த ஹோட்டல் என்னவானது? அவர்கள் இன்வெஸ்ட் செய்த காசு என்னவானது? என்பதை Extreme Job (2019) என்கிற கொரியன் படத்தை டமில்ராக்கர்ஸில் டவுன்லோடு செய்தாவது காண்க.
வொர்த்து!

No comments:
Post a Comment