Mathu Vadalara (2019)
தெலுங்கு
Drama
போன மாசம் இந்தப் படத்த அஞ்சு பத்து நிமிசம் பாத்துட்டு ச்சைக்னு ஆப் பண்ணிட்டேன். அப்புறமும் சக சிட்டிசன்ஸ் இதப் பத்தி போஸ்ட் போட்டுகிட்டே யிருக்க மறுக்கா இன்னிக்கி தான் முழுசா பாத்தேன்.
அதுலயும் அந்த இண்டர்வெல் ப்ளாக், யோவ் டைரக்ட்டரே, யாருய்யா நீயி? எத்தனையோ திரில்லர் கதை படிச்சிருக்கேன். பாத்திருக்கேன். ஆனா இது வேற மாதிரி. ரெண்டு மூனு சீனெல்லாம் அடங்கோன்னு சீட் எட்ஜுக்கு வந்துட்டேன். திகில் திகில் திருப்பங்கள் குபீர் குபீர்னு வந்துட்டே இருக்கு. கதை எப்படா சீரியஸாகும்னு பாத்துகிட்டிருந்தா சீரியஸா ட்விஸ்ட் வச்சிகிட்டே இருக்கானுக - அதுவும் மரண காமெடியா!
ஆரம்பத்துல சீரியல விடவும் மொக்கையான மேக்கிங்ல ஆரம்பிச்சி, சீரியஸான ட்ராக்குல மாறி, நடுவுல சீரியலயும் கலாய்ச்சி - வயிறு புண்ணாயிரிச்சிடா டேய்களா!
அதுலயும் அந்த ஹெட்ஷாட் சீரியல் சீன் 👌
போகப் போக கதையும் அதுக்கான மேக்கிங்கும் பர்பெக்ட் லெவலுக்கு மாறிக்கிட்டே படம் பாக்கற நம்மள நீ என்ன இத லோ பட்ஜெட் ட்ராமான்னு நெனச்சியான்னு டீஸ் பண்ணிகிட்டே VFXல ஒரு மெரட்டு மெரட்டி நம்மள பொரட்டி எடுக்கறானுக.
ஆனாலும் கடைசிவரைக்கும் காமெடிய விட்டுக் கொடுக்கவேயில்ல.
பாக்க வேண்டிய படமல்ல. பாத்தே ஆகவேண்டிய படம். டாட்

No comments:
Post a Comment