Thursday, April 16, 2020

Trance (2020) - மலையாளம்



Trance (2020)

மலையாளம்

Drama / Action


ஹெவி_ஸ்பாய்லர்_அலர்ட் 
(ஸ்பாய்லர் அடுத்த சிவப்புக் கோடு வரை இந்தப் பதிவைத் தவிர்க்கவும்)

காட்சி 1

ஃபகத்துக்கு வில்லன்களான கவுதம் மேனனும், செம்பன் வினோத்தும் இருக்கும் இடம் தெரியாது. அவர்களிருவரின் கையாள் திலீஷ் போத்தன் இதை ஒரு காட்சியில் தெளிவாக தனது வசனம் வாயிலாக விளக்குவார். ஆகா ஃபகத்தால் அவர்களைக் காட்டிக் கொடுக்க முடியாமல் போகும். அவர்களிருவரின் பெயரோ, வசிப்பிடமோ, இத்தனை நாள் அவர்கள் நடத்தி வருவதாக ஃபகத் நம்பிக் கொண்டிருந்த ட்ரைபாக் நிறுவனமோ எதுவுமே உண்மையில்லை என்பது திலீஸின் வசனம் மூலமாக ஃபகத்துக்கு விளக்கப் பட்டிருக்கும். ஆக ஃபகத்தையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை அவர்களிருவரும் கோஸ்ட்ஸ். அவர்களின் இருப்பிற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களைப் பார்த்தவர்களுமில்லை.

இது இப்படியிருக்க, கிளைமாக்ஸில் பாஸ்ட்டர் ஃபகத்தின் பேச்சினால் உந்தப்பட்டு தனது மகளைப் பறிகொடுத்த விநாயகன் (கம்மட்டிபாடம் விநாயகனேதான்) எதோ தான் ரெகுலாரக செல்லும் டீக்கடைக்குள் நுழைவதைப் போல நுழைகிறார். செம்பன் வினோத்தையும், கவுதம் மேனனையும் கதிர் அரிவாளால் (எதோ குறியீடு போல) வெட்டிச் சாய்க்கிறார்.

இதே போல ஒரு காட்சி வேதாளத்திலேயும் உண்டு. அஜித் தனது தங்கை லட்சுமி மேனன் திருமணத்திற்கு குடும்பத்துடன் ஒரு துணிக்கடையில் துணி எடுத்துக் கொண்டிருப்பார். ஒரு போன் கால் லட்சுமி மேனனிடமிருந்து வரும். அந்தக் கால் வில்லன்களால் ட்ரேஸ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும். தான் ட்ரேஸ் செய்யப்படுகிறோம் என்பதை அறியும் அதி நவீன போன்கள் அஜித்திற்கு சிவா கொடுத்திருக்கலாமென அவதானிக்கிறேன். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அப்படியே தன்னை ட்ரேஸ் செய்யும் வில்லனின் அலுவலகத்திற்கு அதுவும் பல அடுக்கு மாடிகளைக் கடந்து பர்பெக்ட்டாக வந்து சேருவார். வில்லனின் அடியாட்களையெல்லாம் வெறும் கையால் துவம்சம் செய்து வில்லனையும் கொன்று... அடேய்களா, இது என்னடா லாஜிக் என்று முழி பிதுங்கி நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஸ்ருதிஹாசனும் எந்தவித க்ளூவும் இல்லாமல் அதே இடத்திற்கு வந்து சேருவார். அடப் போங்கடாங்க...


காட்சி 2

இந்தப் படத்தில் நஸ்ரியா ஒரு ட்ரக் அடிக்ட். நாடோடி. தன்னால் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. அடிக்கடி தனது ஜாகையை மாற்றிக் கொண்டே இருப்பார். கிளைமாக்ஸுக்கு முன்னர், கவுதம் மேனன் மற்றும் செம்பன் வினோத்திடமிருந்து தப்பிப் பிழைக்க வேறு நாட்டுக்குச் சென்று விடுவார். (அதை அவர் இறந்து விட்டது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்).

எல்லா குற்றங்களையும் ஒப்புக் கொண்டு ஜெயிலுக்கு சென்ற தனது மாஜி முதலாளியின்பால் உள்ள அன்பால் கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பார். சிறைவாசம் முடிந்ததும் திரும்பி வரும்போது அவளது கடிதங்களையெல்லாம் மீண்டுமொரு முறை படித்துவிட்டு கடைசியாக அவள் அனுப்பியிருந்த கார்டைப் படிப்பார். அதில் ஒரு இடத்தின் / ஊரின் படம் இருக்கும். அந்த இடம் / ஊருக்குச் சென்று தெருத் தெருவாக ஃபகத் நஸ்ரியாவைத் தேடுவார். அந்த ஊரின் ரெட்லைட் ஏரியா போன்ற ஒரு இடத்தில் அவளைக் கண்டுபிடித்து அப்படியே நிற்பார். நஸ்ரியாவும் அவரைக் கண்டுகொள்வார். இருவரும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் படம் சுபம்.

ங்கொய்யால இது Shawshank Redemption கிளைமாக்ஸ் டோய்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஃபகத்துக்கு அடுத்த ஒரு மைல்கல். மிரட்டி எடுத்திருக்காங்க. கவுதம் மேனன் கொலமாஸ் அப்படி இப்படின்னு எக்கச்சக்க பேஸ்புக் பில்டப்புகள்.

ஆனால் ட்ரான்ஸ் அப்படியா இருந்தது?

சத்தியமாக இல்லை. ஒரு படமாக ஓகே. சுமாரான படம் அல்ல. சாதாரண ஓகே ரகம். மிரட்டி எடுத்திருக்கிறார்கள் அப்டிங்கற மாதிரியெல்லாம் எதுவுமில்லை. சைகடெலிக் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிக்கிற டைட்டில் கார்டைப் பார்த்து வாவ் என்று வாய் பிளந்திருக்கிறார்கள் இந்த பேஸ்புக்வாசிகள். குறிப்பாக இந்த சம்பத்குமார் கணேசன் வகையறா.

அவருக்கு இரண்டு மூன்று நாட்கள் தூக்கமே வராமல் அதே நினைப்பாக வேறு இருந்ததாம். அய்யோ பாவம் குமாரு.

கதை உண்மையில் சாதாரணமான கதை. படமும் அப்படியே. அருமையான ஒளிப்பதிவும், ரசுல் பூக்குட்டியின் சவுண்ட் மிக்ஸிங்கும் மட்டுமே ஒரு படத்தைக் காப்பாத்தாது. எக்கச்சக்க்க்க்க்க்க்க லாஜிக் பொத்தல்கள். அதையெல்லாம் சொல்வது கூட ஒருவகையில் ஸ்பாய்லர் என்பதால் அவைகளை இங்கே தவிர்க்கிறேன். வா மச்சி கமெண்ட்ல கபடி ஆடிக்கலாம். போஸ்ட்ல வேண்டாம்.

ஃபகத்தைப் பொருத்தவரை அவர் ஏற்கனவே செய்த கேரக்டர்களை விட, இது பிரம்மாதமான ஒன்றெல்லாம் இல்லை. முன்னரை விட இது ரொம்பவே சாதாரணம். சாதாரணமாகவே அந்த ஆள் இப்படித்தான் நடிப்பார். அதாவது அவரது நடிப்பில் இது புதிதாக என ஒன்றும் இல்லை.

அப்புறம் கவுதம் மேனன்.

இன்னும் ஒன்றிரண்டு படங்கள் அவர் இப்படியே நடித்தால் அவரது டெம்ப்ளேட் நடிப்பில் மாட்டி மீம்களில் கலாய்க்கப்படப் போவது உறுதி. கவுதம் மேனன் மாஸ், கொலமாஸ் போன்றவையெல்லாம் ஓவர் பில்டப்புங்க. சாதாரண வில்லன் அவ்வளவே.

சொல்லப் போனால் இந்தப் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான சிலர் உண்டு.

1) திலீஸ் போத்தன்
2) விநாயகனும் அவரது ஊமை மனைவியும்
3) ஸ்ரீநாத் பாஷி
4) நஸ்ரியா
5) ஸ்ரிந்தா (அந்த நொண்டி கேரக்டர்)


இவர்கள்தான் உண்மையில் தனித்துத் தெரியும் கதாபாத்திரங்களும் அவர்களது நடிப்பும்.
மற்றபடி ட்ரான்ஸ் மிரட்டவெல்லாம் இல்லை. வெறும் உருட்டுதான். ஒருமுறை பார்க்கலாம். அமேசான் பிரைமில் அவைலபிள்.

No comments:

Post a Comment