திகட்ட திகட்ட ஒரு பிரம்மாண்டமான மேஜிக் ஷோ
பார்த்த அனுபவம் கிடைத்தால் எப்படியிருக்கும்? அதோடு சேர்த்து கண்கட்டு
வித்தைகளும், திடீர் திடீர் ட்விஸ்ட்டுகளும் இருந்தால்? போனஸாக, ஒவ்வொரு முறை
அந்தப் படத்தைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு மாதிரியான வித்தியாசமான பர்ஸ்பெக்ட்டிவ்வில்
படம் நம்மை அசத்தினால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு படம்தான் Now You See Me (2013).
முதல் முறை பார்க்கும் போது Four Horsemen நடத்தும் மேஜிக் ஷோவின்
ஆடியன்சாக
இரண்டாவது முறை அதில்
மறைந்திருக்கும் ஐந்தாவது நபராக
மூன்றாவது முறை Four Horsemen செய்யும் தந்திரங்களை
உடைத்து உலகுக்கு அறிவிக்கும் மார்கன் ப்ரீமேனாக
நான்காவது முறை அந்த Four Horsemen ஆகவே மாறி படத்தோடு
ஒன்றிப் போயிருப்போம்.
இதெல்லாம் முதல் பாகத்தை பார்த்த
போது ஒவ்வொரு முறையும் கிடைத்த புதுப் புது அனுபவங்கள். இதுதான் படத்தில்
மறைந்திருக்கும் ரகசிய லேயர்கள். இதுதான் இந்தப் படத்தோடு ரிலீஸாகியிருந்த Man of Steel, Fast and Furious 6, Iron Man
3, Star Trek into Darkness படங்களின் வசூலுக்கு நிகராக இருந்து வெற்றி பெற
வைத்தது.
உண்மையில் இது ஒரு ரிவென்ஞ்
மூவி. ஆனால், ஆரம்பத்திலிருந்தே படம் பார்க்கும் நமது கண்கள் கட்டப்பட்டு அதற்கான
க்ளூஸ் இருந்தும் கிளைமேக்ஸ் வரை வேறு பாதையில் நம்மை டைவர்ட் செய்து இறுதியில்
நம்மை டேய் இது அத்தனையும் இவனை பழிவாங்கறதுக்குத்தானாடா என்று உணர வைத்து அட போட
வைத்திருக்கும்.
சில லாஜிக் பொத்தல்களை மறந்து
விட்டு (உண்மையில் அது படம் முடிந்த பின்புதான் நமக்கே எதெல்லாம் லாஜிக்
பொத்தல்களென்று புரியும்) பார்த்தால் இது நிச்சயமாக சூப்பர் மேஜிக் ஷோ. ஒவ்வொரு
ஃப்ரேமும் நம்மை அசத்திக் கொண்டே இன்னொரு வியப்புக்குள் தள்ளிக் கொண்டிருக்கும்.
அந்த பிரம்மாண்ட மேஜிக் ஷோக்கள் மட்டுமின்றி, படத்தின் பிரதான நான்கு
கதாபாத்திரங்கள் செய்யும் சில மேஜிக் ட்ரிக்குகள்தான் படத்தையே நகர்த்தும்
சுவாரஸ்யங்கள்.
The
closer you think you are, the less you'll actually see.
அது உண்மைதான். நாம்
என்னென்னவெல்லாம் உண்மையென்று நம்பி பார்க்கிறோமோ அதெல்லாம் உண்மையில்லை.
உண்மையில் நாம் எதையும் சரியாகப் பார்க்கவேயில்லை. பெருமாளே இல்லிங்க. அப்புறம்
எப்பிடி பெருமாளுக்கு மகன் இருப்பான்கற மாதிரி.
நான்கு நபர்கள் அமெரிக்காவின்
நான்கு பகுதிகளில் தாந்தோன்றித்தனமாக மேஜிக் என்ற பெயரில் ஊரை ஏமாற்றி பணம் சாம்பாதிக்க
செய்யும் ட்ரிக்குகளையும், அவர்களையும் ஒருவன் மறைந்திருந்து கவனித்துக் கொண்டே
இருக்கிறான். அந்த நான்கு பேருக்கும் தன் முகத்தைக் காட்டிக் கொள்ளாமலேயே Tarot
card மூலம் ரகசிய அழைப்பை விடுக்கிறான். அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட இடத்தில்
சந்தித்துக் கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அந்த நான்கு பேரும் இணைந்து Four Horsemen என்ற பெயரில் மூன்று
பிரண்டமான மேஜிக் ஷோவின் முதல் காட்சியை அரங்கேற்றுகிறார்கள். பாரிஸிலுள்ள ஒரு
பேங்குக்கு நியூ யார்க்கில் நடைபெறும் இந்த மேஜிக் ஷோவிற்கு வந்திருக்கும் யாரோ
ஒரு நபரை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டெலிபோர்ட்டேசன் மூலமாக அனுப்பி, அங்கே
லாக்கரில் புதியதாக அச்சடித்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணக்கட்டுகளை ஷோ
நடக்கும் நியூ யார்க் அரங்கிற்குள் பண மழையாக பெய்ய வைக்கிறார்கள். அது எப்படி
சாத்தியம்? இது மிகப்பெரிய கிரைம் அல்லவா? போலீஸ் புடிக்காதா? என்று நமக்கெல்லாம்
தோன்றும் அதே நேரத்தில் FBI அவர்களைக் கைது செய்கிறது. ஆனால், அவர்களால் அந்தப்
பணத்தை அவர்கள் கொள்ளையடித்ததாக நிரூபிக்க முடிவதில்லை. இப்படியே படம் முழுக்க
மூன்று பிரம்மாண்ட மேஜிக் ஷோக்களும் அரங்கேற்றப் படுகிறது. கையும் களவுமாக பிடிக்க
முடியாமல் FBI திணறுகிறது. இவர்கள்
எப்படி இந்த மாதிரி சாத்தியமேயில்லாத மேஜிக்குகளை அற்புதங்களாக நிகழ்த்துகிறார்கள்
என்பதற்கான விளக்கமும், சில சேஸிங்குகளும், மந்திர தந்திர சாகசங்களும்,
எக்கச்சக்கமான ட்விஸ்ட்டுகளும் கொண்டதுதான் மீதிக் கதை.
இறுதியில் ஒரு வில்லன்
பழிவாங்கப் படுகிறான். அத்தோடு முதல் பாகம் முடிவடைகிறது.
Now You
See Me 2 (2016)
மீண்டும் அதே வாசகங்கள். The closer you think you are, the less
you'll actually see.
கொஞ்சம் மாற்றி If you think you’ve seen it all, take
another look.
அடப்பாவிங்களா, ஃபர்ஸ்ட் பார்ட்ல
பார்த்த எல்லாமே கப்சாவா, எதுவுமே உண்மையில்லையா? என்று நம்மை புலம்ப
வைக்குமளவிற்கு நம் கண்ணைக் கட்டி ஏமாற்றியிருப்பார்கள். முதல் பாகத்துல நீங்க
வில்லனா பார்த்திங்களே அவரு வில்லனில்ல. முதல் பாகத்துல நீங்க அஞ்சாவதா ஒரு ஆளை
மறைஞ்சிருந்து எல்லா ட்ரிக்கையும் செய்ய வைப்பாரே அவரு உண்மையில அதைச் செய்யல.
அவரும் கண்காணிக்கப் படுபவரே.
போன முறை இவர்களால்
பழிவாங்கப்பட்ட ஒரு ஆள் மீண்டும் தன் மகனோடு வந்து இவர்களை பழிவாங்குகிறார். இந்த
மாதிரி ட்ரிக் செய்யும் நபர்களின் வசத்தில்தான் மொத்த ஷோவும் இருக்க வேண்டும்.
கொஞ்சம் பிசகினாலும் அசிங்கமாகி விடும். அதை நன்கு தெரிந்த அந்த வில்லன் ஏற்கனவே
இவர்களோடு இருந்த அனுபவத்தில் இவர்களைக் கடத்துகிறான். அந்த வில்லனாக பேட்மேன்
படத்தில் வரும் ஆல்ப்ரெட் தாத்தா மைக்கெல் கெய்னும், அவரது மகனாக மந்திர தந்திர
ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் படித்த ஹாரி பாட்டர் டேனியல் ராட்க்ளிப்பும். டேனியை
வில்லனாகக் சித்தரித்ததை மட்டும்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதல் பாகத்தில் நடந்த கொள்ளையடிக்கும் ட்ரிக்குகளை விட அசத்தலான ஒரு ட்ரிக் இதில் இருக்கிறது. அதுவும் ஒரே ஒரு சீட்டுக் கட்டு அட்டையை வைத்து. படத்தின் நீளமான காட்சியும் இதுதான். மொத்தம் பத்து நிமிடங்கள் அந்த ஒரே ஒரு அட்டையை வைத்து. அதைப் பற்றி நோ மூச்!
முதல் பாகத்தில் நடந்த கொள்ளையடிக்கும் ட்ரிக்குகளை விட அசத்தலான ஒரு ட்ரிக் இதில் இருக்கிறது. அதுவும் ஒரே ஒரு சீட்டுக் கட்டு அட்டையை வைத்து. படத்தின் நீளமான காட்சியும் இதுதான். மொத்தம் பத்து நிமிடங்கள் அந்த ஒரே ஒரு அட்டையை வைத்து. அதைப் பற்றி நோ மூச்!
இதன் மூன்றாவது பாகம் கண்டிப்பாக
வரும். ஏனென்றால், இதன் வசூல் அப்படி.
இது ஒரு
முறை மட்டும் பார்ப்பதற்கான சீக்குவல் இல்லை என்பதை படம் பார்த்தால் உணர்வீர்கள்.


No comments:
Post a Comment