Safe (2018) -
Netflix mini-series
நேத்து இந்த ஆள எதார்த்தமா நெட்பிளிக்ஸ்ல பார்த்ததும் கிறுக்கு பிடிச்சிருச்சு. எட்டு எபிசோட். ஒரே நாள்ல சிஸ்டம், மொபைல், டேப்னு எங்கெல்லாம் போறனோ அங்கெல்லாம் உக்காந்து, நின்னு படுத்து உருண்டு பார்த்து முடிச்சிட்டேன். முடிக்கும் போது நைட்டு 11.30.
டெக்ஸ்டருக்கு அப்புறமா ஒரு நல்ல சீரிஸ் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேயில்ல. டெக்ஸ்டர் பார்த்து முடிச்சு ஒரு வருஷமாயிருச்சு. அதுக்கப்புறம் நேத்து வரைக்கும் நான் பார்த்த சீரிஸ் எதுவுமே மனசுல ஒட்டல. ஆனா இந்த #Safe பச்சக்குனு மனசுல ஒட்டிக்கிச்சு.
கதை ரொம்ப சிம்பிள்.
டாக்டர். டாம் டிலேனியோட (Michael.C.Hall) மனைவி இறந்து ஒரு வருசத்துக்கப்புறமா ஒரு நாள் தன்னோட பெரிய பொண்ணு ஜென்னி, ஒரு பார்ட்டிக்கு போறா. அது அவளோட ஸ்கூல் மேட் சியா மார்ஷலோட வீடு. பார்ட்டிக்கு தன்னோட பாய் ப்ரெண்ட் கிறிஸ் ச்சாஹலை வரச் சொல்றா. அவனும் வர்றான். அவளுக்கும் அவனுக்கும் நடுவுல எதோ பிரச்சினை ஓடிட்டிருக்கு. பார்ட்டி முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போயிடறாங்க. ஆனா கிறிஸ்சை காணோம்னு ஜென்னி தேடுறா.
நைட்டு ரொம்ப நேரமாகியும் ஜென்னி வீடு திரும்பாததால, டாம் அவளுக்கு கால் பண்ணிட்டே இருக்காரு. ஆனா அவ நம்பர் அவுட் ஆப் ரீச். வாய்ஸ் மெசேஜ் மட்டுமே போகுது. விடிஞ்சு ரொம்ப நேரமாகியும் அவ வரல. வாய்ஸ் மெசேஜ்களுக்கும் ரெஸ்பான்ஸ் இல்ல.
டாமுக்கும் ஜென்னிக்கும் நடுவுல ஒரு சின்ன மனஸ்தாபம் இருக்கு. தன்னோட அம்மாவோட இறப்பு, டாமோட அஜாக்கிரதையால நடந்ததுன்னு நினைக்கிறா. இதனால, அப்ப இருந்து ரெண்டு பேரும் பேசிக்கிறதில்ல. ஆனா, அதுக்காகவெல்லாம் தன்னோட பொண்ணை டாம் விட்டுக் கொடுக்கறதில்ல. அவ தன்கிட்ட ஒரு வருசமா எதுவுமே பேசிக்கிறதில்லேன்னாலும், அவளோட மொபைல் போன்ல Spy App இன்ஸ்டால் பண்ணி, மேசேஜ், மெயிலெல்லாம் குளோன் பண்ணி அவ என்ன பண்றாங்கறத அவளுக்கு தெரியாமயே அப்பப்ப வாட்ச் பண்ணிக்கிறாரு. வேற வழியில்லாம அந்த அப்ளிகேசனை ஓபன் பண்ணி அவ அனுப்பின மெசேஜ்கள படிக்கிறாரு. அதுல,
‘அப்படி எதுவும் பண்ணிடாத. நா உன்ன கெஞ்சி கேக்கறேன்’,
‘TONIGHT HEAVEN'
அப்டின்னு ரெண்டு மெசேஜ் கடைசியா ஜென்னிகிட்டிருந்து கிறிஸ் நம்பருக்கு போயிருக்கு. அதுக்கப்புறமா அந்த போன்ல எந்த மெசேஜோ, மெயிலோ, இன்கமிங், அவுட்கோயிங் கால்ஸோ இல்ல.
எல்லாத்துக்கும் மேல அவ பார்ட்டிக்குத்தான் போனான்னு கூட டாமுக்கு தெரியாது. தேட ஆரம்பிக்கிறாரு. அது ஒரு ஸ்மால் டவுன்ங்கறதால எல்லா வீடும் ஒரு பத்து பதினஞ்சு தெருவுக்குள்ளயே இருக்கு. ஆனாலும் அவ எங்கயுமே கிடைக்கல. அவளோட சேர்ந்து கிறிஸ் ச்சஹாலும் மிஸ்ஸிங்னு தெரிய வருது.
ரெண்டு நாள் கழிச்சு கிறிஸ் ச்சாஹல் அந்த ஊர் ஏரியில இறந்து மிதக்குறான். டாம் ரொம்ப ஒடஞ்சு போயிடறாரு.
விடாம தேடறாரு. ஆனா, கெணறு வெட்ட பூதம் கெளம்பின கதையா, அந்த ஊருக்குள்ள என்னிக்கோ எப்பவோ புதைக்கப்பட்ட பல மர்மங்கள் பூதாகரமா மாறி வந்து நிக்கிது.
மேலோட்டமா பார்த்தா, தொலைஞ்சு போன பொண்ணைத் தேடுற சப்பை கதைதான். ஆனா, மைக்கெல்.சி.ஹால் நடிச்சதால கதை ஏப்பசாப்பையா இருக்காதுன்னு நம்பி பார்த்தேன். எக்கச்சக்க லேயர்ஸ். கிரேட் எக்ஸ்பீரியன்ஸ்.

No comments:
Post a Comment