Thursday, May 7, 2020

The Invisible Guardian (2017) - ஸ்பானிஷ்




The Invisible Guardian (2017) 

(Original Title) El guardián invisible (2017)

ஸ்பானிஷ்

Thriller

இதுவும் Twin Murders:The Silence of the White City (2019) படத்தைப் போல சீரியல் கில்லர் கதைதான். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னரே வெளிவந்து விட்டது. நியாயமாய் நாம் முதலில் இதைப் பார்த்துவிட்டுத்தான் அதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் விதி, ரேண்டமாய் சுழற்றியடித்து இதை லேட்டாக பார்க்க வைத்துவிட்டது. ஆனால், அதைவிட நன்றாகவே எடுக்கப்பட்டு அன்ஃபார்ச்சுனேட்லி விமர்சகர்களால் காறித்துப்பப்பட்ட படம். என்னைப் பொறுத்தவரை ட்வின் மர்டரை விட இன்விசிபிள் கார்டியன் பெஸ்ட். இதுவும் El guardian invisible என்கிற நாவலின் தழுவல்தான்.

கதைப்படி இதிலும் ஒரு சீரியல் கில்லர், அவனது இரை பதின்ம வயதுப் பெண்கள். அவர்களை அழகாக தலைசீவி, முகத்தில் அழகாக மேக்கப் செய்து கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்று, நிர்வாணமாக்கி (இதை ஒரு சைக்கோத்தனமாக என்பதை விட சீரியல் கில்லர்களின் டெம்ப்ளேட்டாக அவர்களின் சிலபஸில் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள் போலயே!) உடல்களில் ஆங்காங்கே மான், கரடி போன்ற மிருகங்களின் முடிகளைத் தூவி, அவளது பெண்ணுறுப்பின் மேலுள்ள முடிகளை சிரைத்து, அதன் மேல் ஒரு குக்கியை (Cookie) வைத்து, அந்த உடலை காட்டுக்குள் இருக்கும் ஒரு ஓடையின் கரையில் காட்சிப்படுத்தி விட்டு மாயமாய் மறைந்து விடுகிறான்.

இந்த வழக்கை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிதான் படத்தின் ஹீரோயின். பெயர் - அமைய்யா சலஸார் (Amaia Salazar). அவளது குடும்பம் மொத்தமும் பேக்கரி மற்றும் பேஸ்ட்ரி கடைகளின் பின்புலம் கொண்டது. அதுதான் அவர்களது குடும்பத் தொழில். அதில் இவள் மட்டும் தனது தாயாரால் வெறுக்கப்பட்டு குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தனது அத்தையிடம் வளர்ந்தவள். குடும்பத் தொழிலிருந்து ஒதுங்கி போலீஸான அவளது பின்கதை இதுதான். ஜேம்ஸ் என்றொரு அமெரிக்கக் கணவனுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள். ஆனால், இந்தத் தொடர் கொலைகள் ஆரம்பித்தபின் அவளது மொத்த நிம்மதியும் பறிபோகிறது.

அவள் அதிலிருந்து மீண்டாளா? அவளது குடும்பம் என்னவானது? யாரந்த கொலைகாரன்? ஏன் பதின்ம வயதுப் பெண்களை மட்டும் தேடித் தேடிக் கொல்லுகிறான் என்பதுதான் மீதிக் கதை.

முதலில் இந்தப் படத்தில் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய விசயம், இந்தப்படம் படமாக்கப்பட்ட Baztan எனப்படும் அந்த ஊர். வடக்கு ஸ்பெய்னில், Navarre எனப்படும் மாகாணத்தில் உள்ள, 58 கிமி பரப்பளவு கொண்ட, சின்ன முனிசிபாலிட்டி. ப்ப்பா கொள்ளை அழகு! எப்போதும் மூடிய பனிமூட்டங்களுடன், மழை பெய்துகொண்டு, அந்திசாயும் நேர மங்கிய சூரிய வெளிச்சத்திலேயேதான் இருக்கும். அப்படி ஒரு ஊரை படங்களில் இப்போதுதான் பார்க்கிறேன். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் அந்த மரங்களினூடே சலசலக்கும் அந்த ஏரியைப் பார்க்கும்போதே நாம் படத்தின் சீனரிகளுக்குள் ஒன்றிவிடுவோம் என்பது உறுதி.

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபிறகு ஒரு கோ-இன்ஸிடென்ஸ். பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் இந்தப் படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்திருந்தார். அதன் கூடவே இன்னொரு போஸ்ட்டரும். அது இந்தப் படத்தின் சீக்குவலாம். (அடேய் எக்ஸ்ட்ராக்ஸன்...) அது The Legacy of Bones (2019)


No comments:

Post a Comment