Saturday, January 30, 2021

Judas Kiss (1998)

 


Judas Kiss (1998)

Crime / Thriller

 

இன்னிக்கு நாம பாக்கப் போறது She Creature (2001) இயக்குநரோட படம்தான். இது ஒரு ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட கதை. ஆள்கடத்தலைப் பொறுத்தவரை ஒரு விசயம் ரொம்பவே இம்பார்ட்டண்ட். (அய்யய்யோ நமக்கு படம் பார்த்து புரிஞ்சிகிட்டதுதான். தெரிஞ்ச மாதிரி அடிச்சி விடறேன்னு கூட எடுத்துக்கோங்க. ஆனா எனக்கு இது அத்தனையும் சூது கவ்வும் விஜய் சேதுபதி நியூஸ் படிச்சி கத்துகிட்ட மாதிரி நான் படம் பாத்து புரிஞ்சிகிட்டது.) அது ஆயுதம் ஏந்தலாம். ஆனா அதை உபயோகிக்கக் கூடாது. அப்படி ஒரு நிலை வந்தால் என்னாகும்ங்கறதுதான் இந்தப்படம்.

 

இதுலயும் லீட் ரோல் இயக்குநர் செபாஸ்டியனோட வொய்ப் கார்லா ககினோதான்.

 

நாலு பேர்கொண்ட ஒரு குழு ஒரு முக்கியமான ஆள கடத்துது. அந்த ஆள் அந்த மாகாண செனட்டரோட குழுவுல முக்கியமான ஆள். ஆக ஈஸியா கவன ஈர்ப்பு செய்யலாம். கேட்ட அளவுக்கு பணத்தைக் கறக்கலாம். இதுதான் அவங்களோட திட்டம். ஆக்சுவலா இந்த நாலு பேரும் சின்னச் சின்ன கொள்ளையில ஈடுபட்டுகிட்டிருந்தவங்க. உதாரணத்துக்கு பார்ல ஒரு வயசான பணக்காரன் வர்றான்னு வச்சிக்கோங்க. அவன் கொஞ்சம் சபலிஸ்ட்டா இருந்தா போதும். அவனை மடக்கி தனியறைக்கு இழுத்துட்டுப் போயி அவன் செய்யிற நேரம் பாத்து கதவ ஒடச்சிகிட்டு உள்ள வந்து கிளிக் கிளிக் கிளிக்னு டிசைன் டிசைனா போட்டோ எடுத்து ஸ்பாட்ல அவன மெரட்டி வேணும்ங்கறத கறக்கறதுதான் இவங்களோட லெவலு. Money Hiest-ல வர்ற புரொபெசர் மாதிரி இதுல ஒரு கேரக்ட்டர் இருக்கு. அவர்தான் இவங்க எல்லார்த்துக்கும் மாஸ்டர் மைண்ட். அவன் போட்டுக்குடுத்து எக்ஸிகியூட் பண்ற ஸ்கெட்ச்லதான் இவங்க எல்லாரும் வொர்க் பண்ணுவாங்க.

இவங்களுக்கு இந்த கிட்னாப்பே ஒரு புரமோசன் மாதிரி. அதுக்காக அமெச்சூர்னெல்லாம் சொல்ல முடியாது. இந்த ஒரு விசயத்துக்கு கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

 

நேரா போறோம். சிசிடிவி ரூம ஹேண்டில் பண்றோம். அங்க உள்ள வீடியோ ஆதாரங்கள அழிச்சிட்டு, இவங்க வந்தத ரெக்கார்ட் பண்ண டேப்கள தூக்கறோம். தூக்க வேண்டிய ஆளோட கதவ தட்றோம். அவன் வெளிய வந்ததும் துப்பாக்கி முனையில அவன மடக்கி தூக்குறோம். கேப்ல அந்தப் பக்கம் வேற யாரும் வந்துறாம இருக்க லிப்ட்ட கீழ மேல போகாம தடுக்க ஒரு ஆளப் போட்டு தடுக்கறோம். ஆளத் தூக்குனதும் கீழ பார்க்கிங்ல ரெடியா வண்டிய கெளப்ப ஒரு ஆள போட்டு வக்கிறோம்.

 

அப்றமென்ன? எல்லாம் பக்காதான! Seems perfect sketch. ஆனா, இந்தப் பிளான்ல ஒரு ஓட்டையிருக்கு. அது என்னான்னு இந்நேரம் நீங்க யூகிச்சிருப்பீங்கர்தானே? அதுக்காக உங்கள மாதிரி நான் பல கிட்னாப்ப சக்சஸ்புல்லா அட்டன் பண்ணவங்கன்னு சொல்ல மாட்டேன். உங்கள மாதிரி. ஏன்னா பேஸிக்கலி அயம் இன்னொசண்ட். சின்ன வயசுலேர்ந்து.

 

சரி. அது என்ன ஓட்டை?

 

அதாவது லிப்ட்ட நீங்க இயங்க விடாம மேல்தளம், கீழ்தளம் போக விடாம தடுக்கலாம். ஆனா, லிப்ட்டு வேலை செய்யலேன்னு படிக்கட்டு வழியா அந்த தளத்தை கடக்கறவங்க உங்க ஆள்கடத்தலைப் பார்க்கவோ, உங்க மொசரக்கட்டைகளைப் பார்த்துடவோ வாய்ப்பிருக்கா, இல்லியா?

 

இருக்குதான?

அப்டி ஒரு ஆள் இந்த கிட்னாப்ப சுடச் சுட பார்த்துடறாங்க?

 

இப்ப உங்களுக்கு என்னென்ன ஆப்சன் இருக்கும்?

 

ஏ. அவங்கள மெரட்டி எங்க அடையாளங்களையோ எங்கள பார்த்ததாகவோ வெளிய சொன்னா  உன்னய கொன்றுவேன்னு மெரட்டலாம்.

 

பி. அவங்க குடும்பத்த கொன்றுவேன்னு மெரட்டலாம்.

 

ஏவோ, பியோ, அவங்க பயந்தா ஓக்கே. ஒருவேள அவங்க சாவுக்கு பயப்படாதவங்களா நீதிடா நேர்மைடான்னு இருந்துட்டா செத்தீங்க. அதுவும் குடும்பமில்லாத ஒண்டிக்கட்டையா இருந்துட்டாங்கன்னா ஆட்டம் காலி. இல்லையா?

 

ஆனா, அந்த ஸ்பாட்ல இந்த ஸ்மார்ட்னஸோ, ஏ. பின்னு லிஸ்ட் போட்டு மிரட்டுற ரிஸ்க்கெல்லாம் எடுத்துகிட்டிருக்க முடியாது.

 

பாத்தாச்சு. இனி வேற வழியே இல்ல. டுச்சுக்கூல்னு சுட்டுனு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

 

அப்டித்தான் இங்கயும் நடக்குது. ரொம்ப தயங்கி வேற வழியில்லாம பொட்டுன்னு சைலன்சர் கன்ன வச்சி டுப்புன்னு சுட்டுடறாங்க. லிப்ட் ரெடி. பார்க்கிங்ல வண்டி ரெடி. ஆனா இந்தக் கொலை.

ஒரு கிட்னாப் நடந்திருக்கறது தெரிய எவ்ளோ காலமெடுக்கும்? அதுவே அந்த ஸ்பாட்ல ஒரு கொலையும் நடக்குதுன்னா எவ்ளோ வேகமா அந்த செய்தி போலிஸுக்கு தெரிய வரும்?

 

அதுக்கப்புறந்தான் கதையே.

 

மக்களே, நம்ம டைரக்டர் செபாஸ்டியனோட படங்களை எந்த வகையிலயும் குடும்பத்தோட பாக்கவே முடியாது. அவ்ளோ நியூடிட்டி காட்சிகள் இருக்கு. பாருங்க. கண்டிப்பா புடிக்கும். எனக்கு ரொம்பப் புடிச்சது.


ஆங், சொல்ல மறந்துட்டேன். இதுல ஹாரிபாட்டர்ல நடிச்ச ரொம்ப முக்கியமான ரெண்டு பேரு, ரொம்ப முக்கியமான ரோல்ல இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. இந்தக் குற்றங்கள துப்பித் துலக்கற ஆபிசர்ஸ்.


She Creature (2001)

 

இனி நாம கொஞ்ச நாளைக்கி ஒரு முக்கியமான ஒரு இயக்குநரோட படங்களைத் தான் வரிசையா பாக்கப் போறோம். அதுவும் அவரைப் பத்தி யாரும் அதிகமா பேசினதும் கிடையாது. அவர் இயக்கின எல்லா படங்களுமே ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம். ஆனா எல்லாத்துலயும் ரெண்டு ஒத்துமை இருக்கும். முதல் ஒத்துமை இப்டியெல்லாம் கூடவா யோசிச்சி படம் எடுப்பாங்கன்னு நம்மள வியக்க வக்கிற கதையமைப்பு. இன்னொன்னு அப்புறமா சொல்றேன். அந்த இயக்குநர்தான் Sebastian Gurierrez. என்ன, கேள்விப்பட்ட மாதிரியே தெரியலியா? தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாலும் அவரோட ஒரு சில படங்களை கண்டிப்பா பாத்திருப்பிங்க. அதையும் பாப்போம்.


அதிகமா அண்டர் ரேட்டட் ஓவர் ரேட்டட்னெல்லாம் போட்டு உருட்டாம அவரோட படங்களைப் பத்தி நாம பேசலாம். அதுல நாம இன்னிக்கி பாக்கப் போற படம்,



She Creature (2001)

Horror / Sci-Fi

 

இது ஒரு (Mermaid) கடல்கன்னியைப் பத்தின படம். இதுவரைக்கும் அவ்ளோ சிறப்பான கடல்கன்னிகளோட கதைகளெல்லாம் எந்தப் படத்துலயும் வந்ததா எனக்கு ஞாபகமில்லை. Pirates of the Caribbean பட வரிசைகள்ல On Stranger Tides (2011) மட்டும் விதிவிலக்கு. அதுலயும் அது ஒரு ஓரத்துல இருக்கும். கேப்டன் ஜேக் ஸ்பாரோ இருக்கற எடத்துல வேற யார் வந்தாலும் நாம பெருசா கண்டுக்கவும் மாட்டோம். ஆனா She Creature படத்துல கதையே அந்த கடல்கன்னிதான்.

 

கதை 1905ல அயர்லாந்துல ஆரம்பிக்கிது. Angus Circus-ல ஒரு சின்ன சம்பவம் நடக்குது. அங்க காட்சிக்காக சங்கிலியில கட்டி வச்சிருக்கற ஒரு காட்டுமிராண்டி மனுசன் திடீர்னு வெறி பிடிச்ச மாதிரி எல்லார்த்தையும் தாக்கத் தொடங்குறான். மேடையில இருந்த அந்த சர்க்கஸ் சிப்பந்திகளையெல்லாம் அடிச்சிட்டு கடைசில சர்க்கஸ் ஓனர் Angus Shawவை அடிக்க வரவும், அவன் பயந்து நடுங்கை என்னைய விட்ரு விட்ருன்னு கெஞ்சறான். அப்ப அந்த சமயத்துல எங்கிருந்தோ ஒரு பாட்டு மாதிரி ஒரு இசை சத்தம் கேக்க அந்த காட்டுமிராண்டி அந்த சத்தம் வந்த திசைய நோக்கி அப்டியே போறான். அந்த பாட்டுச்சத்தம் சர்க்கஸ் கூடாரத்துக்கு பின்பக்கமா இருந்து வருது. போயிப் பாத்தா அங்க ஒரு கண்ணாடி கூண்டுக்குள்ள இருந்து ஒரு கடல்கன்னி வார்த்தைகளே இல்லாம குரலை அசைச்சி பாடிகிட்டிருந்திச்சி. இந்தக் காட்டுமிராண்டியும் அப்படியே அதுபக்கத்துல சொக்கிப்போய் நின்னு கேட்டுக்கிட்டிருக்க, சர்க்கஸ் சிப்பந்திகள் அங்க வேடிக்கை பாத்துகிட்டிருந்த பார்வையாளர்களை துரத்தறாங்க.

 

எல்லாரும் போனதுக்கப்புறம், “சரி எல்லாரும் போயிட்டாங்க. ரெக்கார்ட ஆப் பண்ணு”ன்னு அந்த கடல் கன்னி உள்ள இருக்கற யாருக்கோ உத்தரவு போடுறா. ஏன்னா அவ உண்மையான மெர்மெய்ட் கிடையாது. போலி. சர்க்கஸ் ஷோவுக்காக அவங்க போட்ட செட்டப்பு. அந்தக் காட்டுமிராண்டியும் அதே டெய்லர். அதே வாடகை. உட்டாலக்கடி.

 

இத அங்க வந்திருந்த ஒரு கிழவனார் கண்டுபுடிச்சிடறாரு. ஆத்திரத்துல அவங்களை திட்டவும் செய்யிறாரு. ஆனா, அவங்க இதுதாங்க எங்க ஷோவேன்னு சொன்னதுக்கப்புறம் சரின்னு ஒத்துக்கறாரு. ஆனா அவர் ஃபுல் மப்புல இருந்ததால அவரை இவங்களே கொண்டு போய் விடலாம்னு கூட்டிட்டு போறாங்க. அதாவது சர்க்கஸ் ஓனர் ஆங்கஸ் ஷா-வும், அந்த மெர்மெய்ட் நடிகை லில்லியும். ரெண்டு பேரும் காதலர்களும் கூட.

 

சரி வீடு வரைக்கும் வந்துட்டீங்க. வந்து சாப்ட்டு போங்கன்னு அந்த கிழவனார் அவங்களை வீட்டுக்குள்ள கூப்ட்டு உபசரிக்கிறாரு. வீட்ல அவர் தனியாத்தான் இருக்காரு. அதனால புதுசா ரெண்டு பேர் வந்ததும் போதையில நெறய பேசறாரு. கடல்கன்னிகளோட வரலாறா அடிச்சி விடறாரு. ரெண்டு பேருக்கும் செம போர் அடிக்கவும் கெளம்பறாங்க. ஆனா பெருசு விடல. நீங்க நான் சொன்ன எதையுமே நம்பலேன்னு தெரியும். அதனால இதையும் சொல்லிடறேன்னு அவங்கள ஒரு அறைக்குள்ள கூட்டிட்டுப் போறாரு. அங்க போயிப் பாத்தா இவங்களுக்கு செம ஷாக்கு. அங்க கண்ணாடித் தொட்டியில நெசமாவே ஒரு மெர்மெய்ட் இருக்கு. யெஸ் மேற்புறத்துல எந்த பாசாங்கும் இல்லாம பொண்ணாவும், கீழ்புறம் மொத்தமும் மீனோட உடலமைப்புல ஒரு நிஜ கடல்கன்னி.

 

திரும்ப சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்ததுக்கப்புறம் ஆங்கஸோட மூளை வேற மாதிரி ஒரு யோசனை செய்யிது. அந்தக் கடல்கன்னியை அங்கிருந்து கடத்தறதுன்னு ஒரு முடிவோட துணைக்கு ரெண்டு பேர்த்த கூட்டிகிட்டு அங்க போறாங்க. அதுக்கப்புறம் ஒன்னு தொட்டு ஒன்னு, ஒரு கேயாஸ் மாதிரி, சீட்டுக்கட்ட வரிசையா அடுக்கி வச்சி அத தட்டிவிட்டா ஒன்னொன்னா வரிசையா விழுகற மாதிரி மீதிப் படம் செம சுவாரஸ்யமா இருந்தது.

 

நான் பாத்தது மொக்கைப் ப்ரிண்டா இல்ல படத்தோட ஒளிப்பதிவே அப்படித்தானான்னு தெர்ல. ஒரு B Grade Movie மாதிரி தரத்துலதான் அந்த ஒளிப்பதிவு இருந்தது. ஆனா விசுவல் எபெக்ட்ஸ்லாம் எந்தக் குறையும் சொல்ற மாதிரி இல்ல. நாக்கு நீளறது, மூக்கு நீளறதுன்னு மொக்கையா இல்லாம சிறப்பா தரம்மா இருந்தது.

 

நிச்சயமா அடிச்சி சொல்றேன். உங்களுக்கும் புடிக்கும். ஏன்னா நேத்து பாக்கறப்ப கூட எனக்கு இது இருபது வருசத்துக்கு முன்னாடி எடுத்த படம்ங்கற ஃபீலே இல்ல. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்தப் படத்த தேடிப் புடிக்கனும். எனக்கே ஒரு விடா முயற்சியில கிடைச்ச விஸ்வரூப வெற்றியாத்தான் இந்தப் படத்தோட லின்க் கிடைச்சது. குழந்தைகள் தவிர்க்கவும். கடல்கன்னி வேற. நிறைய டாப்லெஸ் காட்சிகள் இருக்கும்.

 

அப்புறம் அந்த ரெண்டாவது ஒத்துமை. மறந்துட்டேன்னு நினைச்சிங்களா? நோ வே. அது அந்த லில்லியா நடிச்ச நடிகை Carla Gugino தான் அந்த ரெ.ஒ. ஏன்னா செபாஸ்டியனோட எல்லா படங்கள்லயும் முக்கியமான ரோல்ல நடிப்பாங்க. ஏன்னா அவங்கதான் அவரோட மனைவி.




 

Friday, January 22, 2021

RADIUS (2017)

 


RADIUS (2017)

Sci-Fi / Thriller

 

ஒரு கார் விபத்துல இருந்து ஹீரோ கண் முழிக்கிறாரு. சுத்தி யாரும் இல்ல. தலையில ஒரு பக்கம் ரத்தம் வழிஞ்சிகிட்டிருக்கு. அவருக்கு ஒன்னும் புரியல. இது எப்டி நடந்தது? யாரு ஓட்டுனா? எந்த வண்டியில மோதுனோம்னு ஒன்னும் ஞாபகமில்ல. எவ்ளோ யோசிச்சாலும் அது ஆக்ஸிடண்ட் நடந்த சில நொடிக் காட்சிகள் மட்டும்தான் ஞாபகத்துல தெரியிது. சரி அப்டியே போய் யார்ட்டயாச்சும் ஹெல்ப் கேப்போம்னு ரோட்டுல நடந்து போகையில ஒரு கார் வருது. இவரு கைய காட்டி நிறுத்த, அந்த வண்டி ஸ்லோவாகி இவர்கிட்ட வரும்போதே தாறுமாறா ரோட்டுக்கு கீழ எறங்கி ஒரு எடத்துல போய் நிக்கிது. ஓடிப் போயி பாத்தா, டிரைவர் சீட்ல ஒரு லேடி. கண்ணுல கருவிழி மேல போயி வெறும் வெள்ளைக் கலர் மட்டும் தெரிய, நாடிய செக் பண்ணிப் பாத்தா, அது நின்னு போயிருக்கு. லிப்ட்டு குடுக்க ஒதுங்கின கேப்ல உசுர வுட்ருக்கு அந்த லேடி.

 

சரின்னு 911க்கு கால் பண்றாரு. அவங்க எல்லாத்தையும் கேட்டுட்டு, சரி உதவுறோம். உங்க பேரென்னன்னு கேக்க, அப்பத்தான் இவருக்கு ஒரு விசயம் புரியிது. ஹீரோவுக்கு தன்னோட பேர் கூட ஞாபகத்துல இல்ல. அதுமட்டுமில்ல. அவருக்கு அந்த ஆக்ஸிடண்டைத் தவிர, தன்னைப் பத்தின வேற எந்த விவரமும் ஞாபகத்துல இல்ல. ஆனா, ஒருமாதிரி சமாளிச்சி பாக்கெட்ல கைய வுட்டு அலாசி ஆராய்ஞ்சி பர்ஸ்ல இருந்து டிரைவிங் லைசன்ஸ் எடுத்து தன்னோட பேர கண்டுபுடிச்சி சொல்றாரு – Liam. அதான் ஹீரோவோட பேரு. அதுல உள்ள அட்ரஸ கண்டுபுடிச்சி உள்ள போயி அவரோட வீடுதானான்னு செக் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டு அங்கேயே இருக்கறாரு.

 

ஹீரோவுக்கு சிலபல சம்பவங்களுக்கு அப்புறம்தான் புரியிது, தான் இருக்குற எடத்துலேர்ந்து சில அடி தூரத்துல இருக்கறவங்க எல்லாரும் எதோ வைரஸ் தாக்கின மாதிரி ஸ்பாட்லயே பொத்து பொத்துன்னு விழுந்து சாவுறாங்க. எல்லாருக்கும் சொல்லி வச்ச மாதிரி மொத பாரா கண்ணு மேட்டரு ஒரே மாதிரி கருவிழி மேல போயி வெள்ளையா மட்டும் இருக்கு.

 

இது எதோ வைரஸ் காத்துல பரவுனதாலதான்னு மொதல்ல நினைக்கிறாரு. ஊர்ல மத்தவங்களும் அப்டித்தான் மொதல்ல நினைக்கிறாங்க. ஆனா, அதுதான் இல்ல. நம்ம ஹீரோவை குறிப்பிட்ட ரேடியஸ்ல நெருங்கறவங்க எல்லாரும் செத்துப் போறாங்க. அதுக்கு நம்ம ஹீரோதான் காரணம். அவரோட ஒடம்புல இருந்து எதோ மர்மமான முறையில எதோ வெளிப்பட்டுதான் இதெல்லாம் நடக்குதுன்னு கண்டுபுடிக்கிறாரு.

 

மனுசங்க மட்டுமில்ல. அந்தக் குறிப்பிட்ட ரேடியஸ்ல மேல பறக்குற பறவைகளும் செத்து பொத்து பொத்துன்னு விழுகுது.

 

போதுண்டா சாமி. இதுக்கு மேல தன்னால யாரும் சாக வேண்டாம்னு தன்னைத்தானே தனிமைப் படுத்திகிட்டு குவாரண்டைன்ல வாழ நினைக்கிறாரு லியம்.

 

ஆனா, அவரைத் தேடி ஒரு பொண்ணு வருது. அங்க ஒரு ட்விஸ்ட்டு. அவ கிட்ட நெருங்கியும் அவ சாகல. இதுல இன்னொரு ட்விஸ்ட் என்னன்னா அவளுக்கும் தன்னோட பழசு எதுவுமே ஞாபகத்துல இல்ல. இன்னொன்னொரு ட்விஸ்ட்டு அவளும் அந்தக் காருல ஆக்ஸிடண்டாகறதுக்கு முன்னாடி லியம் கூட கார்ல இருந்தா. அவ பேரு Jane Doe.

இதென்ன பிரமாதம். இதுக்கு மேல ஒரு ட்விஸ்ட்டு இருக்கு. அது அந்தப் பொண்ணு ஹீரோகூட இருக்கறப்ப மத்தவங்க யாரும் சாகறதில்ல.

 

ஏன்? எதுக்கு? எப்படி?

 

இதெல்லாம் Radius (2017) படத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கோங்க. படம் உங்களுக்கு எல்லாருக்கும் கண்டிப்பா புடிக்கும். செம கதை இது. 


இந்தப் படம் OTT platformல எதுலயும் இல்ல. அதனால இதுக்கு உங்களால முடிஞ்ச சாமர்த்தியங்கள வச்சி இந்தப் படத்த்தைப் பார்த்துக்கவும்.


Wednesday, January 13, 2021

மாஸ்டர் (2021)

 


ஒன்னரை வருசம் காத்திருந்து ஒரு படம் பாக்கறோம். படம் நல்லாருக்கா? அது நம்ம எதிர்பார்ப்ப பூர்த்தி செஞ்சிருக்கான்னு பாத்தா...?

சத்தியமா 100% அது சாத்தியமாயிருக்கு!

என்னடா ஒரு அஜித் ஃபேன், விஜய் படத்த தூக்கி வச்சி பேசறேன்னு உங்களுக்கெல்லாம் டவுட்டு வரலாம். வரணும். ஏன்னா அப்டி ஆக்கி வச்சிருக்கானுக.

உண்மையில நா ஒரு எய்ட்டிஸ் கிட் பாஸு. எனக்கு ரெண்டு பேரும் ஒன்னுதான். அதுக்கப்புறம் அடிச்சிகிட்டதெல்லாம் நய்ண்டிஸ் டு டூ’கே கிட்ஸ் பிரச்சினை. அதுக்கு நாங்க பலிகடா ஆக மாட்டோம். ரெண்டு பேர்த்தயும் மொத படத்துலேர்ந்து பாத்துகிட்டிருக்கோம். எங்களுக்கு ரெண்டு பேருமே மிகப்பெரிய டீனேஜ் ஹீரோஸ். ரெண்டு பேருக்கும் மொதல்ல இருந்த இமேஜுக்கும் இப்ப இருக்கற மாசுக்கும் நடுவுல நெறய வரலாறு இருக்கு.

ரெண்டு பேரும் தல - தளபதி ஆகறதுக்கு முன்னாடியிருந்தே எங்களுக்கு ஆதர்சம். இதுல எத விட்டுக் கொடுக்கச் சொல்றிங்க? சொன்னாலும் முடியாது.

சரி. இப்ப மாஸ்டருக்கு வருவோம்.

விஜய்

இந்தப் பேரு ஒரு எனர்ஜி. அந்தளவுக்கு மொத படத்துல எப்டி இருந்தாரோ அதே அளவுக்கு இன்னிக்கும் பவர்ஃபுல் ஹீரோ. மாஸ்டர் அதுக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம். படத்துக்குப் படம் யூத்தாகிட்டே போற வரத்த இவரு எங்கிருந்து வாங்கிட்டு வந்தாரோ தெர்ல. மனுசன் அப்டே அட்மயர் பண்றாரு. பகல்ல காலேஜ் புரொபெசராவும், ஆறு மணிக்கு மேல சரக்கடிச்சிட்டு மட்டையாகுற அந்த மேனரிசம், லோகேஷ் எங்கயிருந்து விஜய் முகத்துல அந்த ரெஃபரன்ச புடிச்சாப்லன்னு தெர்ல? அது ஒரு ஆச்சர்யமான விசயம். பாதிப் படத்துக்கு விஜய் கதைக்குள்ள ஒரு போதைக் கை. அப்டியே அவங்கவங்க வாழ்ற ஏரியால / நம்ம ஏரியால நமக்குத் தெரிஞ்ச / பழக்கமான ஒரு நெய்பர்ஹுட் போதைக் கைய ஞாபகப் படுத்தறாரு. ஏன்னா எங்க ஏரியாலயும் ஒரு சிலர் இந்த மாதிரி எல்லாருக்கும் புடிச்சாப்ல இருக்கறவங்க வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. அத விஜய் பண்ணும்போது எப்டியிருக்கும்ங்கறதுதான் மேஜிக்.

அதே மாதிரிதான் விஜய் சேதுபதி கேரக்ட்டரும். நீங்க வாழ்ற உங்க ஏரியால உங்களுக்கு புடிக்காம நெகட்டிவ்வா பெரிய லெவல்ல வளந்துகிட்டிருக்கற கேரக்ட்டரும் இருக்கும். அது கொஞ்சம் டேஞ்சரான ஆளுன்னாலும் நம்மால தட்டிக் கேக்கறளவுக்கு தைரியம் வருமான்னா… ம்ஹும் நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்.

இந்த ரெண்டு கேரக்ட்டரும் மோதிக்கிட்டா / மோத வேண்டியிருந்தா எப்டியிருக்கும்ங்கறதுதான் மாஸ்டர்.

விஜய் சேதுபதிகிட்ட ஒரு கெட்ட பழக்கமிருக்கு. எந்த கேரக்ட்டரைக் குடுத்தாலும் அதை ஒரே மாடுலேசன்ல வேற வேற கெட்டப்ல ப(பி)ண்ணுவாப்ல. இதுலயும் அதை மட்டும்தான் பண்றாரு. பெரிசா அலட்டிக்கத் தேவையில்ல. ஹீரோவா பண்ணாலும் அதே மாடுலேசன்தான். வில்லன் or சைடு ஆக்ட்டரா பண்ணாலும் அதே மாடுலேசன்தான். இதுல வர்சட்டைல்ங்கற வார்த்தைய அவர்கிட்ட யாரு சொன்னாங்கன்னு தெர்ல. அப்டி சொன்னவங்களுக்கு மண்டையில என்ன கோளாறுன்னு அவங்களே நல்ல ஸ்கேன் பாய்ண்ட்டா போயி செக் பண்ணிக்கிறது நல்லது.

பலரோட ரிவ்யூஸ்ல சொன்ன மாதிரி படத்தோட மொத பாதி வேகமாவும், ரெண்டாவது பாதி லேக்காவும் இருக்கறதா சொல்லிருந்தாங்க. அடப்பாவிங்களா… படமே ரெண்டாவது பாதிலதான் சரியான பாதையில போகுது, இதுல லோகேஷ்க்கு டைரக்ட்டோரியல் டிப்ஸ் வேற.

உண்மையில மாஸ்டர் முதல் பாதி எப்டி இருந்ததோ, அதை விட நல்லாவே ரெண்டாவது பாதியும் நல்லாவே இருந்தது. (எங்கயும் ஸ்பாய்லர் சொல்லலேங்கறதுல எனக்கு கர்வமும் உண்டு).

படம் நல்லாருக்குங்கறத எதைக் கொண்டும் மறைக்க முடியாது. தாராளமா பார்க்கலாம் ப்ரெண்ட்ஸ். படத்தைப் பத்தின டீட்டெய்ல் ரிவ்யூ soon