Saturday, January 30, 2021

Judas Kiss (1998)

 


Judas Kiss (1998)

Crime / Thriller

 

இன்னிக்கு நாம பாக்கப் போறது She Creature (2001) இயக்குநரோட படம்தான். இது ஒரு ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட கதை. ஆள்கடத்தலைப் பொறுத்தவரை ஒரு விசயம் ரொம்பவே இம்பார்ட்டண்ட். (அய்யய்யோ நமக்கு படம் பார்த்து புரிஞ்சிகிட்டதுதான். தெரிஞ்ச மாதிரி அடிச்சி விடறேன்னு கூட எடுத்துக்கோங்க. ஆனா எனக்கு இது அத்தனையும் சூது கவ்வும் விஜய் சேதுபதி நியூஸ் படிச்சி கத்துகிட்ட மாதிரி நான் படம் பாத்து புரிஞ்சிகிட்டது.) அது ஆயுதம் ஏந்தலாம். ஆனா அதை உபயோகிக்கக் கூடாது. அப்படி ஒரு நிலை வந்தால் என்னாகும்ங்கறதுதான் இந்தப்படம்.

 

இதுலயும் லீட் ரோல் இயக்குநர் செபாஸ்டியனோட வொய்ப் கார்லா ககினோதான்.

 

நாலு பேர்கொண்ட ஒரு குழு ஒரு முக்கியமான ஆள கடத்துது. அந்த ஆள் அந்த மாகாண செனட்டரோட குழுவுல முக்கியமான ஆள். ஆக ஈஸியா கவன ஈர்ப்பு செய்யலாம். கேட்ட அளவுக்கு பணத்தைக் கறக்கலாம். இதுதான் அவங்களோட திட்டம். ஆக்சுவலா இந்த நாலு பேரும் சின்னச் சின்ன கொள்ளையில ஈடுபட்டுகிட்டிருந்தவங்க. உதாரணத்துக்கு பார்ல ஒரு வயசான பணக்காரன் வர்றான்னு வச்சிக்கோங்க. அவன் கொஞ்சம் சபலிஸ்ட்டா இருந்தா போதும். அவனை மடக்கி தனியறைக்கு இழுத்துட்டுப் போயி அவன் செய்யிற நேரம் பாத்து கதவ ஒடச்சிகிட்டு உள்ள வந்து கிளிக் கிளிக் கிளிக்னு டிசைன் டிசைனா போட்டோ எடுத்து ஸ்பாட்ல அவன மெரட்டி வேணும்ங்கறத கறக்கறதுதான் இவங்களோட லெவலு. Money Hiest-ல வர்ற புரொபெசர் மாதிரி இதுல ஒரு கேரக்ட்டர் இருக்கு. அவர்தான் இவங்க எல்லார்த்துக்கும் மாஸ்டர் மைண்ட். அவன் போட்டுக்குடுத்து எக்ஸிகியூட் பண்ற ஸ்கெட்ச்லதான் இவங்க எல்லாரும் வொர்க் பண்ணுவாங்க.

இவங்களுக்கு இந்த கிட்னாப்பே ஒரு புரமோசன் மாதிரி. அதுக்காக அமெச்சூர்னெல்லாம் சொல்ல முடியாது. இந்த ஒரு விசயத்துக்கு கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

 

நேரா போறோம். சிசிடிவி ரூம ஹேண்டில் பண்றோம். அங்க உள்ள வீடியோ ஆதாரங்கள அழிச்சிட்டு, இவங்க வந்தத ரெக்கார்ட் பண்ண டேப்கள தூக்கறோம். தூக்க வேண்டிய ஆளோட கதவ தட்றோம். அவன் வெளிய வந்ததும் துப்பாக்கி முனையில அவன மடக்கி தூக்குறோம். கேப்ல அந்தப் பக்கம் வேற யாரும் வந்துறாம இருக்க லிப்ட்ட கீழ மேல போகாம தடுக்க ஒரு ஆளப் போட்டு தடுக்கறோம். ஆளத் தூக்குனதும் கீழ பார்க்கிங்ல ரெடியா வண்டிய கெளப்ப ஒரு ஆள போட்டு வக்கிறோம்.

 

அப்றமென்ன? எல்லாம் பக்காதான! Seems perfect sketch. ஆனா, இந்தப் பிளான்ல ஒரு ஓட்டையிருக்கு. அது என்னான்னு இந்நேரம் நீங்க யூகிச்சிருப்பீங்கர்தானே? அதுக்காக உங்கள மாதிரி நான் பல கிட்னாப்ப சக்சஸ்புல்லா அட்டன் பண்ணவங்கன்னு சொல்ல மாட்டேன். உங்கள மாதிரி. ஏன்னா பேஸிக்கலி அயம் இன்னொசண்ட். சின்ன வயசுலேர்ந்து.

 

சரி. அது என்ன ஓட்டை?

 

அதாவது லிப்ட்ட நீங்க இயங்க விடாம மேல்தளம், கீழ்தளம் போக விடாம தடுக்கலாம். ஆனா, லிப்ட்டு வேலை செய்யலேன்னு படிக்கட்டு வழியா அந்த தளத்தை கடக்கறவங்க உங்க ஆள்கடத்தலைப் பார்க்கவோ, உங்க மொசரக்கட்டைகளைப் பார்த்துடவோ வாய்ப்பிருக்கா, இல்லியா?

 

இருக்குதான?

அப்டி ஒரு ஆள் இந்த கிட்னாப்ப சுடச் சுட பார்த்துடறாங்க?

 

இப்ப உங்களுக்கு என்னென்ன ஆப்சன் இருக்கும்?

 

ஏ. அவங்கள மெரட்டி எங்க அடையாளங்களையோ எங்கள பார்த்ததாகவோ வெளிய சொன்னா  உன்னய கொன்றுவேன்னு மெரட்டலாம்.

 

பி. அவங்க குடும்பத்த கொன்றுவேன்னு மெரட்டலாம்.

 

ஏவோ, பியோ, அவங்க பயந்தா ஓக்கே. ஒருவேள அவங்க சாவுக்கு பயப்படாதவங்களா நீதிடா நேர்மைடான்னு இருந்துட்டா செத்தீங்க. அதுவும் குடும்பமில்லாத ஒண்டிக்கட்டையா இருந்துட்டாங்கன்னா ஆட்டம் காலி. இல்லையா?

 

ஆனா, அந்த ஸ்பாட்ல இந்த ஸ்மார்ட்னஸோ, ஏ. பின்னு லிஸ்ட் போட்டு மிரட்டுற ரிஸ்க்கெல்லாம் எடுத்துகிட்டிருக்க முடியாது.

 

பாத்தாச்சு. இனி வேற வழியே இல்ல. டுச்சுக்கூல்னு சுட்டுனு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

 

அப்டித்தான் இங்கயும் நடக்குது. ரொம்ப தயங்கி வேற வழியில்லாம பொட்டுன்னு சைலன்சர் கன்ன வச்சி டுப்புன்னு சுட்டுடறாங்க. லிப்ட் ரெடி. பார்க்கிங்ல வண்டி ரெடி. ஆனா இந்தக் கொலை.

ஒரு கிட்னாப் நடந்திருக்கறது தெரிய எவ்ளோ காலமெடுக்கும்? அதுவே அந்த ஸ்பாட்ல ஒரு கொலையும் நடக்குதுன்னா எவ்ளோ வேகமா அந்த செய்தி போலிஸுக்கு தெரிய வரும்?

 

அதுக்கப்புறந்தான் கதையே.

 

மக்களே, நம்ம டைரக்டர் செபாஸ்டியனோட படங்களை எந்த வகையிலயும் குடும்பத்தோட பாக்கவே முடியாது. அவ்ளோ நியூடிட்டி காட்சிகள் இருக்கு. பாருங்க. கண்டிப்பா புடிக்கும். எனக்கு ரொம்பப் புடிச்சது.


ஆங், சொல்ல மறந்துட்டேன். இதுல ஹாரிபாட்டர்ல நடிச்ச ரொம்ப முக்கியமான ரெண்டு பேரு, ரொம்ப முக்கியமான ரோல்ல இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. இந்தக் குற்றங்கள துப்பித் துலக்கற ஆபிசர்ஸ்.


No comments:

Post a Comment