Mirage (2018)
Durante La Tormenta (Spanish)
Drama / Sci-Fi
இதுவும் காலப்பயணம் சம்பந்தப்பட்ட படம்தான்.
1989ல ஒரு கொலை ப்ளஸ் ஆக்ஸிடண்ட் நடக்குது. அன்னிக்கி மின்புயல் வேற 72 மணி நேரத்துக்கு
தொடர்ந்து மேல இடிச்சிட்டே கெடக்கு. சரியா 25 வருசம் கழிச்சி அந்த வீட்டுக்கு ஒரு குடும்பம்
புதுசா குடி வர்றாங்க. நர்ஸ் வெரா ராய், அவளோட கணவன் டேவிட் ஆர்டிஸ் மற்றும் அவங்க
குட்டிப் பொண்ணு குளோரியா.
அந்த வீட்ல ஆல்ரெடி இருந்த பர்னிச்சர்ஸ்
எல்லாம் அப்டியேதான் முன்ன குடியிருந்தவங்க விட்டுட்டு போயிருக்காங்க. அப்படி எல்லா
ரூமையும் கிளீன் பண்றப்ப அவங்களுக்கு ஒரு பழைய டிவி ஒன்னும், வீடியோ கேமராவும், ஒரு
பெட்டி நெறய அதுல ரெக்கார்ட் பண்ண வீடியோ கேசட்டுகளும் கிடைக்குது. அதையெல்லாம் ஒன்னொன்னா
போட்டுப் பாக்கறாங்க. அந்த வீடியோக்கள் எல்லாத்துலயும் இதுக்கு முன்னாடி இந்த வீட்லயிருந்த
பையன் நிக்கோ லசார்ட்டே கிட்டார் வாசிக்கிறதா இருக்கு. அதுல கடைசி வீடியோ ஒன்னு எக்ஸாக்ட்டா
இவங்க பாக்குற அதே தேதி, அதே மாசம், ஆனா வருசம் மட்டும் 1989ன்னு இருக்க இவங்க அட பாரேன்
என்ன ஒரு கோ-இன்ஸிடன்ஸ்ன்னு அவங்க பாட்டுக்கு போயிடறாங்க.
ஆனா அன்னிக்கி இன்னொரு கோ-இன்ஸிடன்ஸும் இருந்தது.
அன்னிக்கி வந்த அதே மின்புயல் இன்னிக்கும் சரியா 25 வருசம் கழிச்சி அந்த நகரத்தை தாக்குது.
எதிர் வீட்டுல ஒரு அம்மாவும் பையனும் குடியிருக்காங்க.
அந்தப் பையன் எய்ட்டோர் பைலட்டா வேலை பாக்கறான். அவங்களை நைட் டின்னருக்கு வரவேத்து
உபசரிக்கிறாங்க. அப்ப அந்த வீடியோக்களப் பத்தி சொல்லவும், எய்ட்டோர், அது தன்னோட பால்ய
சினேகிதன் நிக்கோ. அவன் அன்னிக்கி நைட்டு ஆக்ஸிடண்டாகி செத்துப் போயிட்டான்னு சொல்ல,
அவனோட அம்மா கிளாரா, மேற்கொண்டு அவன எதுவும் சொல்லவிடாம, சின்னக் கொழந்தைங்க இருக்கறப்ப
இந்த மாதிரி பேச்செல்லாம் எதுக்குன்னு சொல்லி அவனை தடுத்துடறாங்க
அன்னிக்கி நைட்டு இவங்க தூங்கிட்டிருக்கறப்போ,
அந்த பழைய டப்பா டிவி தன்னப்பாட்டுல ஆன் ஆயிக்கிது. வேரா, எந்திரிச்சிப் போயி என்னடா அந்த
ரூம்ல சத்தம்னு பாத்தா அந்த டிவில நிக்கோ, கிட்டார் வாசிச்சிட்டிருக்கான். ஆனா டிவி
கேமரா எல்லாம் ஆப் பண்ணி வச்சிருக்கு. வேராவுக்கு செம ஷாக்கு.
அந்தப் பக்கம் நிக்கோவுக்கும் ஷாக்கு. ஏன்னா
அவனுக்கு டிவியில தன்னோட உருவத்துக்கு பதிலா வேரா தெரியிறாங்க. அவன் இருக்க அதே ரூம்ல அவன் உக்காந்திருக்கற ஷோபாவும்
அவளுக்குப் பின்னாடி இருக்கு. அச்சு அசலா எல்லாமே அவனோட ரூம்தான்னு உறுதியா தெரியிது.
அவன் பதட்டத்தோட ஹலோ சொல்ல, பதிலுக்கு வேராவும் ஹலோ சொல்றாங்க.
அதே ரூம், அதே டிவி ஆனா காலம் மட்டும் வேற.
காரணம் அந்த மின்புயல்.
அப்பதான் ஒரு விசயம் வேராவுக்கு புரியவருது.
இப்ப நம்மால நிக்கோ கூட பேச முடியிதுன்னா, அவன் அன்னிக்கி நைட் ஆக்ஸிடண்டாகி சாகப்
போறதையும் சொல்லி தடுக்க முடியும்தானே? அதைத்தான் செய்யிறாங்க. ஆனா, தப்பு பண்ணிட்டியே
சிங்காரம். நீங்க காலம்ங்கற பேட்ட வேலன் மேல கை வச்சிருக்கக் கூடாது.
காலைல கண்ணு முழிச்சிப் பாத்தா வேரா தான்
நர்ஸா வேலை பாக்கற ஹாஸ்பிட்டல்ல ஒரு பேமஸான டாக்டரா இருக்காங்க. இது ஒரு நல்ல ஷாக்குன்னாலும்
பின்னாடியே ஒரு ஆப்பும் இருக்கு. அது என்னன்னா, அவளோட கணவன் டேவிட்டுக்கு இவ யார்ன்னே தெர்ல.
ஆப்பு சுமார்தான்னாலும் அடுத்து இன்னொரு பெரிய ஆப்பு இடி மாதிரி சொழட்டி அடிக்கிது. வேராவுக்கும்,
டேவிட்டுக்கும் கல்யாணமே ஆகலேன்னா, அவளோட அழகான குட்டிப் பொண்ணு குளோரியா பொறந்திருக்கவே
வாய்ப்பில்லேல்ல. மொத்தமும் போச்சா? பழச கொழப்புனதுனால இப்ப வேரா இருக்கறது ஒரு புது
டைம்லைன்.
இப்ப வேராவுக்கு தன்னோட பழைய குடும்ப வாழ்க்கை
வேணும். அவ பொண்ணு குளோரியாவும் வேணும். இதுக்கெல்லாம் அவ அந்த பழைய டைம்லைனுக்குப்
போகணும்.
அது எப்படிங்கறத Mirage (2018) Aka Durante
La Tormenta (2018) ஸ்பானிஷ் படத்துல
பாருங்க. செம சுவாரஸ்யமான படம். நெட்பிளிக்ஸ்ல இருக்கு. நான் ரெண்டு வாட்டி பாத்துட்டேன்.
போன கர்ப்யூ டைம்ல ஒருக்கா பாத்துட்டேன். இந்தப் படத்தைப் பத்தி எழுதிட்டேன்னே
நெனச்சிட்டிருந்தேன். ஆனா, அந்தப் பதிவயே என்னோட ப்லாக்ல காணோம். ஒருவேள வேற டைம்லைன்ல
எழுதிருப்பனோ, என்னவோ? ஆனா, அடிச்சி சொல்றேன். நான் அப்பவே எழுதி போஸ்ட் பண்ணிருந்தேன். ஆனா, உங்க மேல சத்தியமா காணோம். ட்ராஃப்ட்லயும் இல்ல. ட்ராஸ்லயும் இல்ல.
அப்புறம் இதுல வேராவோட கணவனா நடிச்சிருக்கறது நம்ம Money Heist Professor.

No comments:
Post a Comment