Tuesday, September 23, 2025

ஸ்கெட்ச் (2018) - கொரியன் டெலிவிசன் சீரிஸ்

 


ஸ்கெட்ச் (2018)
கொரியன் டெலிவிசன் சீரிஸ்
யூ சி ஹ்யூன் ஒரு போலிஸ். அவளுக்கு அடிக்கடி எதிர்காலத்துல நடக்கற முக்கியமான சம்பவங்கள் எல்லாம் ஒரு விஷனா தேஜா-வூ மாதிரி தெரிய வரும். அத அவ தெரிய வரும்போதே ஒரு நோட்புக்ல கிறுக்கற மாதிரி ஸ்கெட்ச் பண்ணுவா. அந்த ஸ்கெட்ச்சுகள வச்சு அது எந்த இடம், என்ன மாதிரியான சம்பவம், யாருக்கு நடக்கும்னு கண்டு புடிக்க போலிஸ்லயே அன்னபீசியலா மூனு பேர் கொண்ட ஒரு டீம் இயங்கும். பொதுவா இந்த ஸ்கெட்ச்ல உள்ளதெல்லாம் எக்ஸாக்ட்டா மூனு நாளுக்குள்ள நடந்து முடிஞ்சிரும். அதுலயும் இந்த கிறுக்கல் ஸ்கெட்ச்சுங்கள வச்சிகிட்டு, அது யாருக்கு, எங்கே, எப்போ, எப்படி, யாரல நடக்கப் போகுதுன்னு கண்டுபுடிக்கிறதுதான் சவாலான விசயம்.
இதே டீம்ல இன்னொரு ஆள், ஓ யங் ஷிம். அவ ஒரு கம்ப்யூட்டர் ஜித்தி. யூ சி ஹ்யூன் வரைஞ்சு முடிச்சதும், அத ஸ்கேன் பண்ணி அதுல உள்ள டீட்டெய்ல்கள அலசி ஆராய்ஞ்சு, அந்த சம்பவங்கள் (சம்பவம்னு சொல்றது எல்லாமே கொலைகளாத்தான் பெரும்பாலும் இருக்கும்) நடக்கறதுக்கு முன்னாடியே தடுக்க முயற்சி செய்வாங்க.
நான் மேல சொன்னது எல்லாம் ஸ்பீல்பெர்க்கோட மைனாரிட்டி ரிப்போர்ட் படத்தோட கதை மாதிரித்தான் தோணும். ஆனா, இது அப்படியில்ல. டோட்டலா வேற கதை. என்னதான் அவங்க, அந்த ஸ்கெட்ச்சுகள வச்சு, அலசி ஆராய்ஞ்சு, துப்பி துலக்கி அங்க போய் நின்னாலும், அந்த கொலைகள இவங்களால தடுக்கவே முடியாது.
”அலோ உங்க ஏரியால இதுக்கு முன்னாடி எதாவது கொல விழுந்திருக்கா?”
“இல்ல. ஏன் கேக்கறீங்க?”
“கண்டிப்பா கொல விழும். கொல விழுந்தே தீரும்.”
அப்டின்னு கவுண்டமணி செந்தில்கிட்ட ஜெய்ஹிந்த் கிளைமேக்ஸ்ல சொல்ற மாதிரி, யூ சி ஹ்யூனோட விஷன்ல வர்ற சம்பவங்கள் எல்லாமே கண்டிப்பா நடந்தே தீரும்.
அப்டி அவ கிறுக்கின ஸ்கெட்ச்ல ஹீரோ, காங் டாங் சூ-வோட ஃபியான்ஸே மின் ஜி சூ சாகுற மாதிரியும், கூடவே இன்னொரு பொண்ணு செத்துக் கெடக்கற மாதிரியும் வருது. இத அவன்கிட்ட சொன்னா அவன் நம்பல. ஆனா யூ சி ஹ்யூனோட விஷன்ல வந்து வரைஞ்சது எல்லாமே டெபனட்டா நடந்தே தீருமே. காங் எப்படி மின்-ன காப்பாத்தப் போறான்? அந்த இன்னொரு மரணம் யாருன்னு கண்டுபுடிச்சு காப்பாத்தறது எப்படி? குறிப்பா, இதுல யாரு மின் ஜி சூவ கொல்லப் போறா? அப்டிங்கறதெல்லாம், என்ன தலைசுத்தற விசயங்கள்னு சொல்லப் போறேன்னு நெனச்சீங்களா? அதான் இல்ல. ஏன்னா அதெல்லாம் நமக்கொரு வார்ம்-அப் தான். அதுக்கப்புறம் ஒவ்வொரு எபிசோட்லயும் நடக்கும் பாருங்க தலை சுத்தல். சும்மா கிறுகிறுன்னு.
ஹாட்ஸ்டார்ல தமிழ் டப்பிங்லயே இருக்கு.

No comments:

Post a Comment