Tuesday, September 23, 2025

மதராஸி (2025) - இதுவும் ஒரு ஏ.ஆர்.முருகதாஸ் படம்

 


மதராஸி
அப்டின்னு ஒரு ஏ.ஆர்.முருகதாஸ் படம். சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிச்சது. ஆனா பாருங்க, இது ஏ.ஆர்.முருகதாஸ் படம் மாதிரியும் இல்லாம, சிவகார்த்திகேயனோட படம் மாதிரியும் இல்லாம ஒரு டைப்பா இருக்கறதுதான் மிகப்பெரிய தலைவலி.
முதல்ல ஏ.ஆர்.முருகதாஸ். ஒவ்வொரு படத்துலயும் ஒரு இன்சைட் இன்சிடெண்ட் வச்சிருப்பாரு. தீனாவுல அந்த காஃபி ஷாப் ஃபைட், ரமணால ஹாஸ்பிட்டல் சீன் ப்ளஸ் யூகி சேது நேசனல் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் எல்லாம் பண்றாங்கன்னு கண்டுபுடிக்கற சீன், கஜினியில கல்பனா சஞ்சய் ராமசாமி லவ் போர்சன், ஏழாம் அறிவுல டோங்லீயோட நோக்கு வர்மம், துப்பாக்கியில ஒரே டைம்ல மொத்த ஸ்லீப்பர் செல்ஸயும் கொல்லுற அந்த சீன், கத்தியில காயின் ஃபைட், ஸ்பைடர்ல மகேஷ்பாபுவோட அம்மாவையும் தம்பியையும் காப்பாத்த அவர் வீட்டுக்கு நிறைய டோர் டெலிவரி ஆளுங்கள அனுப்பி வைக்கிறது ப்ளஸ், பக்கத்து வீட்டு லேடிஸ மட்டும் வச்சு, சுடலை அட்டாக் மிசன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. இதுக்கெல்லாம் நடுவுல அவர் சில படங்களை எடுக்கவும் செஞ்சிருக்காரு ஹிந்தி தெலுங்குன்னு, அதையெல்லாம் பார்க்கலங்கறதால அதைத் தவிர்த்துடலாம். தர்பார்னு தமிழ்லயும்தான். அதுவும் ஒரு படமா வந்துச்சுன்னு அடிக்கடி இவர் படங்களோட பதிவுகள்ல சொல்லிக்கலாம். அவ்ளொதான் வொர்த்து.
மேல சொன்ன படங்கள்ல, ரமணா, துப்பாக்கி அண்ட் ஸ்பைடர் மொத்த படத்தையுமே ஃபுல் ரீவாட்ச் மெட்டீரியலா எடுத்திருப்பாரு. ஏன்னா லிஸ்ட்ல மத்ததெல்லாம் சூப்பர் சீன்ஸ் மட்டுமே பார்த்தாக் கூட போதும். ஆனா இந்த மூனும், ஃபுல் மூவியையும் பார்க்க வச்சிடும்ங்கறளவுக்கு வொர்த்து. ஆனா மதராஸி? அதை இந்தப் படத்துல வொர்க் பண்ண மத்தவங்களையும் பார்த்துட்டு மதராஸி என்ன கண்டிசன்னு பார்க்கலாம்.
அடுத்து சிவகார்த்திகேயன். கதைப்படி இவர் ஒரு டில்யூசன் பேசண்ட். நோய் பேரெல்லாம் சொல்ல வேண்டாம். தன்னோட மொத்தக் குடும்பமும், சொந்தக்காரங்களும் ஒன்னா, ஒரே பஸ்ல ஆக்சிடெண்டாகி வெடிச்சி சாகறத சின்னவயசுல பார்த்ததுல இருந்து, யாருக்கு ஆக்சிடெண்டானாலும், அது தன்னோட குடும்பம் ப்ளஸ் சொந்தக்காரங்கதான்னு இல்யூசன் ஆகிடும். அப்ப அவங்கள எல்லாரையும் காப்பாத்த துடிக்கிறது உண்மையிலயே நல்ல விசயம்தான். ஏன்னா, தன்னைப் போல் பிறரை நேசிங்கறது, சொல்லியாவது நமக்கு வரணும். ஆனா இது, மன நோய் வந்துதான் வரணும்ங்கறளவுக்கு எல்லாரும் சுயநலமா இருக்கறதுதான் பரிதாபத்துக்குரிய விசயம்.
இதே உதவுற காரணத்துக்காக ருக்மணி வசந்தும் சிகாவ காதலிக்கிறாங்க, இப்டி ஒரு மனநோயாலதான்னு தெரிஞ்சே. ஆனா அது இவங்க காதலிச்சதுக்கப்புறம் குணமாயிடுது. கொயட் பாசிபிள். பெத்தவங்க சொந்தம்னு யாரோட அன்பும் பாசமும்னு கிடைக்காம இருக்கற ஒருத்தனுக்கு இதெல்லாம் ஒருத்தி மூலமா கிடைக்கறப்ப நடக்கறதுதான். இதை நானே அனுபவிச்சிருக்கேன். குணமாகி நார்மலா இருக்கற சிகாவ ருக்மணி இவனும் சாதாரண மனுசங்க மாதிரி சுயநலமா இருக்கான்னு அவாய்ட் பண்ண ஆரம்பிச்சதும், அவ இல்லாத லைஃப் வேஸ்ட்டுன்னு சாகனும்னு முடிவெடுக்கறாரு. அதுக்காக அவர் எவ்வளவோ ட்ரை பண்றாரு. ஆனா, அவரை சாவும் ஏமாத்திட்டே இருக்குன்னு சொல்றாங்க. ஆனா அந்தக் காட்சிகள் எல்லாம் வேணும்ன்னே திணிச்ச மாதிரியும், இவரு அந்த சூசைட் மிசனுக்குன்னே அளவெடுத்து செஞ்ச ஆள் மாதிரி அமையனும்னு அமைச்சது துண்டா துருத்திட்டு தெரியிறது ஒரு பெரிய மைனஸ்.
அடுத்து பிஜு மேனன். இதுல இவர் ஒரு என்.ஐ.ஏ அதிகாரி. ஆனா படத்தோட ஆரம்பக் காட்சியில இவர் மட்டுமே எட்டு பத்து கண்டெய்னர் லாரிகளைப் புடிக்க தன்னந்தனியா வண்டியோட்டிட்டு போறதெல்லாம் இன்னொரு பெரிய மைனஸ்.
அடுத்து வித்யுத் ஜாம்வெல். துப்பாக்கியில சஸ்பென்சோடயே செத்தவரு இதுல கம்பேக்கானா எப்டி இருக்குமோ அதே ஃபீல்தான் இவர் ஏ.ஆர்.முருகதாசோட அடுத்த எந்தப் படங்கள்ல வந்தாலும் நமக்குத் தோணும் போல. எனக்கும் அப்டித்தான் தோணுச்சு. கொஞ்ச நேரத்துலயே குண்டடி பட்டு கோமாவுக்கு போயிடறாரு. படமும் இவர் கூடவே படுத்துடுது. இவர் முழிச்சிருந்தப்ப என்ன பண்ணாருன்னு பார்த்தா, ரெண்டு நாளிக்கி முன்னாடிதான் கன்ஸ ஃப்ரீயா கொடுத்தா என்னாகும்னு ஒரு கொரியன் வெப்-சீரிஸ பார்த்துட்டு பதிவெழுதிருந்தேன். இவரும் அதைத்தான் பண்றாரு. அந்த வெப்-சீரிஸ் பேரு ட்ரிகர். ஆக இந்த சீனும் காப்பி.
டான்சிங் ரோஸா சார்பட்டா பரம்பரைல ரெண்டு மூனு சீன்ல வந்தாலும் இப்பக்கூட பேர் சொல்ற மாதிரி நடிச்சவர் தான் (இவர் பேரு சபீர். இப்ப இந்தப் பதிவ எழுதறப்பத்தான் இவரோட நிஜப்பேரையே கூகுள் பண்ணிப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அந்தளவுக்கு டான்சிங் ரோஸ் கேரக்ட்டர் நம்ம மனசுல நின்னுடுச்சு.) இதுலயும் நடிச்சிருக்காரு. வில்லன் தான். அவர்தானா இவர்னு குறுகுறுன்னு பாத்து கன்பார்ம் பண்றளவுக்கு பெரும்பாலும் ஹிந்தில பேசிக்கிருக்காரு. அயர்னி என்னன்னா, மலையாளி நடிகர் தமிழ்ப்படத்துல இந்தியும், இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வெல், தமிழ்லயும் பேசறதுதான். இத்தனைக்கும் இவங்க ரெண்டு பேரும் தான் படத்தோட வில்லன்ஸ்.
அதே மாதிரிதான் இவங்க ரெண்டு பேரு கூட விமலா ராமன் வில்லி போல நடிச்சிருக்காங்க. அவங்க ஏன் வந்தாங்க, சிகா உள்ள தேடிப் போனப்ப எங்க போனாங்க, ஒரு ஆனியனும் புரியல. அதே மாதிரி இன்னும் கொஞ்சம் அதிக சீன்ல வந்த விக்ராந்த் பிஜு மேனனோட பையனா வர்றாரு. ஒரே கம்பெனியில ஒரு குடும்ப ஆட்களை, அதாவது பிளட் ரிலேசன்களை, வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. ஆனா அப்பாவும் பையனும் என்.ஐ.ஏல வேலை செய்யிறதா காட்டினது ஒரு மைனஸ் தான். ஆனா இது ஒன்னும் அவ்ளோ பெரிய மைனஸ் எல்லாம் இல்ல. ஏன்னா, மகனையே பலி கொடுத்தாலும் கடமையை கருத்தா செய்தார் பிஜு மேனன்னு மக்கள் உச்சு கொட்டுவாங்கன்னு நினைச்சு ஒரு செண்டிமெண்ட் எலிமெண்டா, பர்ப்பஸா வச்சிருக்காங்க. ஆனா பாருங்க அவர் செத்தப்ப நமக்கு அப்பாடா இந்த ஆக்சன் கும்பல்ல ஒருத்தன் செத்தாண்டா. நிம்மதி. நீங்க சிகா-ருக்கு லவ் சீன்ஸையே போடுங்கடா, கொடுத்த காசுக்கு அதாண்டா நல்லாருக்குன்னு நாம நினைக்கறளவுக்கு, என்.ஐ.ஏ காட்சிகளோ, கன்ஸ் கடத்தல்னு வில்லன் குரூப் காட்சிகளோ வந்தா கொட்டாவியும், சிகா-ருக்கு லவ் சீன்ஸ் வந்தா நல்லாருக்கறதாவும் ஃபீலாக வச்சிடுது. அந்தளவுக்கு புவர் ஸ்கிரீன்பிளே.
இதுல ஆக்சன் காட்சிகளுக்குன்னா ஷ்பெசலா எழுதுவேன்னு வெட்டி பில்டப்பு வேற, ப்ரமோசன் பேட்டிகள்ல. அதான் வொர்க்கவுட்டே ஆகலயே. ஒரு விசயம் நல்லாருந்தா, அதுவே தன்னோட இடத்தைப் பிடிச்சிக்கும். புரமோசன்லாம் பண்ணா அங்க டோட்டலா வீக்காத்தான் இருக்கும்னு மீண்டும் ஒருமுறை நமக்கு புரிய வச்சதுக்கு ஏ.ஆர்.முருகதாஸ்க்கு நன்றிகள்!
அப்புறம் இன்னமும் இவர் தன்னோட படங்கள்ல ஒரு மலையாள நடிகரையும், ஒரு இந்தி நடிகரையும் ஏன் புடிச்சு தொங்கிட்டிருக்காருன்னுதான் புரியல. அதே போல எல்லா படங்கள்லயும் தன்னோட சொந்த ஊர் அபிமானத்தையும் திணிச்சிடுவாரு. இதுலயும்!
மொத்தமா இந்தப்படத்துல ஆக்சன் காட்சிகள் போராவும், லவ் சீன்ஸ் ஓக்கே ரகமாவும் – ஏன்னா ஆக்சன் காட்சிகள் சுமாரா போனதால லவ் சீன்ஸ் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மாதிரி நமக்கு நல்லாருக்கற மாதிரி புடிச்சுப் போயிடுது. அதெல்லாம் சூப்பர் சீன்ஸா பார்த்தா நல்லாருக்காதுன்னு இந்தப் பதிவை எழுட்டிருக்கறப்ப என்னை நானே கேள்வி கேட்டு வந்த முடிவு. நான் நிச்சயம் அந்த லவ் சீன்ஸ கூட தனியா பாத்தா போரா தான் ஃபீல் பண்ணுவேன்.
அப்புறம் இசை - அனிருத். இம்சை - அனிருத்னு வேணும்ன்னா சொல்லலாம். டோட்டல் வேஸ்ட்டு.
மொத்தத்துல இந்தப் படத்துல இருந்து சிகா அண்ட் ருக்குவ கழிச்சிட்டா எதுவுமே மிஞ்சாதுங்கறதுதான் நான் புரிஞ்சுகிட்ட உண்மை.
இந்தப்படத்துக்கு இத்தாத்தண்டி பதிவு, ரொம்பவே ஓவர்தான். சொல்ல வந்தத முழுசா சொல்லனுமேன்னு தான் கொஞ்சம் ஓவராகிடுச்சுன்னு நானே ஃபீல் பண்றேன். அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் ப்ரெண்ட்ஸ்.
இந்தப்படத்துக்கு எந்த ரெக்கமெண்டேசனும் இல்ல. அது உங்க இஷ்டம்!

No comments:

Post a Comment