Tuesday, September 23, 2025

Murder in Mahim (2024) - Web-Series

 


Murder in Mahim
அப்டின்னு ஒரு செம வெப்-சீரிஸ் ஹாட்ஸ்டார்ல. இது விறுவிறுப்பான சீரிஸ்னு சொல்லிக்க முடியல. நான் இதைப் பார்த்தப்ப என்னவெல்லாம் உணர்ந்தேன் அப்டிங்கறதைத் தான் இங்க எழுதறேன். பொதுவா அதைத்தான் பதிவா எழுதிகிட்டிருக்கேன். மொதல்லயே சொல்லிடறேன். என்னோட பதிவுகள்ல ஸ்பாய்லர்ஸ் இருக்கும். அதெல்லாம் வேண்டாம்ன்னு நினைக்கறவங்க ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடலாம்.
இது ஒரு எல்.ஜி.பி.டி.கியூ சம்பந்தமான வெப்-சீரிஸ். ஆனா, என்னைக் கேட்டா இதை நீங்க எல்லாரும் தாராளமா பார்க்கலாம்னு தான் சொல்லுவேன். ஏன்னா இதுல காமத்தைப் பத்தின எஜுகேசன் எதுவும் இல்ல. சொசைட்டி சொசைட்டின்னு ஒரு கூட்டம் இருக்கே, அதுல நாம எங்க இருக்கோம்னு நமக்கே உணர்த்தற ஒரு எஜுகேசனா வேணும்ன்னா இருக்கலாம்னு உறுதியா சொல்ல முடியும்.
இதுல வர்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் பர்சனல் லைஃப்னு ஒன்னு இருக்கும் வெப்-சீரிஸ் தானேன்னு அதையும் பொறுமையா எடுத்திருக்காங்க. அது நல்லாவுமிருக்கு. குறிப்பா ஹீரோன்னு இதுல ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் போலிஸ், இன்னொருத்தர் ஜர்னலிஸ்ட். ஆனா அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிற உரையாடல்கள் எல்லாம் நமக்கு, ரகுவரனும், சங்கமம் ரகுமானும் பேசிக்கிட்டா எப்டி இருக்குமோ அப்டித்தான் ஃபீலாகும். இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிற ஒவ்வொரு சீன்லயும் இதை உணர்ந்தேன்.
உண்மையில இவங்க ரெண்டு பேரும், ஆல்ரெடி தமிழ்ப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. சோ நமக்கு இவங்க ரெண்டு பேர் மட்டும் புதுசில்ல. அதனால என்னால ஈஸியா கனெக்ட் ஆக முடிஞ்சது. அதுக்கும் மேல, மேல சொன்ன அந்த காரணமும் கூட. அந்தளவுக்கு ஆப்ட்டான டப்பிங்.
இப்ப கதைக்குப் போவோம். மாஹிம் ரயில்வே ஜங்சன்ல ஒரு கொலை நடக்குது. அதுல கொலையாகறது ஒரு செக்ஸ் வொர்க்கர் ஆண். அதை ஒரு டிவி சேனல்ல இருந்து வந்து கவர் பண்ணிட்டிருப்பாங்க. ஆனா, அவங்க பேசறது பண்றது எல்லாம், போலிஸ் தங்களோட வேலைய செய்ய விடாம டிஸ்டர்ப் பண்ற மாதிரி நமக்கே எரிச்சலா இருக்கும். அதே எரிச்சல்ல அந்த போலிஸ் ஹீரோவும், அந்த மீடியாக்காரங்கள போகச் சொல்லி விரட்டுவார். அப்ப அவரு செத்துப் போன பையனைப் பத்தி குறிப்பிடற வார்த்தை ‘உஸ்’. அப்டித்தான் பலரும் ’கே’க்களை கூப்பிடறாங்க.
அப்டி அவர் தன்னோட குடும்பத்துல கூட வாழறவங்கள எல்லாம், தன்னோட போலிஸ் ஸ்டேசன்ல உள்ள கைதிங்க மாதிரியும், கம்ப்ளைண்ட் கொடுக்க வர்றவங்கள ட்ரீட் பண்ற மாதிரியும் தான் ட்ரீட் பண்ணிட்டிருப்பாரு. அப்றம் எப்டி அவர் ஹீரோ? கதையோட மெயின் மேட்டரான கொலைகள இவர்தான டீல் பண்றாரு. அந்த முறையில அப்ப இவர்தான ஹீரோ? தலையெழுத்து. அவர் சம்பளம் வாங்கி செய்யிற வேலைக்கி, அவர் இதுல ஹீரோ ஆகிடறாரு. அப்டின்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா போகப்போக அவர் இந்த மேற்படி சொன்ன விசயங்கள்ல, தான் மத்தவங்க பார்வையில எப்டி இருக்கோம்ங்கறத ஒன்னொன்னா புரிஞ்சுகிட்டே வருவாரு. கடைசில உண்மையிலேயே ஹீரோவா நம்ம பார்வைக்கும் மாறிடுவாரு.
இதே போல இன்னொரு ஹீரோ ஜர்னலிஸ்ட்னு சொன்னேன்ல, அவரும் அப்டித்தான். தன்னோட மகன் காணாம போயிட்டான்னு மட்டும்தான் சொல்லல. அப்டி ஓப்பனா சொன்னா, ஏண்டா நீ இன்னும் இதை போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலன்னு நாம கேட்ருவோம்னு, ’சுனில் இன்னும் வீட்டுக்கு வரல’ன்னு மட்டும் சொல்லிட்டு கெடப்பாங்க புருசனும் பொண்டாட்டியும். அதுலயும் இவர் பொண்டாட்டியெல்லாம் டிட்டோ, நம்ம சொசைட்டிய பிரதிபலிக்கிற மாதிரி, நமக்கு கடுப்பாகற மாதிரி தான் பேசுவாங்க. பையன் வீட்டுக்கு வரல. எங்க போனான், என்ன ஆச்சோ அவனுக்குன்னு எல்லாம் கவலையே படாம, டிவி பார்ப்பாங்க, சமைப்பாங்க, சாப்டுவாங்க, துணி மணியெல்லாம் மடிச்சு வப்பாங்க. என்ன நடந்தாலும் நடக்கலன்னாலும், லைஃப் மஸ்ட் கோ ஆன்லே. நீ உன்ர வேலைய மட்டும் பாருலேன்னு கடமையைச் செய், பையனைக் காணோம்னு கம்ப்ளைண்ட் பண்ணிட்டுக் கெடக்காதன்னு நாமெல்லாம், வேட்டைல நாசர் சொல்ற மாதிரி, “கத்துக்கிடனும்லே கத்துக்கிடனும்” இந்தம்மாட்ட கத்துக்கிடனும்.
அப்புறம் இந்த ரெண்டு கேரக்ட்டர்ஸும் கதையோட போக்குல அப்படியே கொஞ்சம் கொஞ்சமா யதார்த்தத்துக்கு வந்து, இவங்க ரெண்டு பேர்த்தையும் நமக்கே பிடிச்சிடும். இது ஒன்னும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இல்ல. ஒரு பழைய டயலாக் இருக்கு. இங்லிஷ் படத்துல வர்ற ஹீரோயினையெல்லாம் நமக்கு மொதல்ல புடிக்காது, அப்புறம் பாக்கப் பாக்க நமக்கே அவங்க எல்லாம் தேவதை மாதிரி தெரிவாங்க, நமக்கு அவங்களைப் புடிச்சு ஃபேன்ஸா மாறிடுவோம்னு சொல்லுவாங்கல்ல. அந்த மாதிரி இல்ல.
அடுத்ததா இதுல இன்னும் ஒரு சொல்லிக்கிற மாதிரியான ஒரு கேரக்ட்டர். அது நம்ம போலிஸ் ஹீரோவுக்கு அசிஸ்ட்டண்டா வர்ற இன்னொரு போலிஸ் பெண் கதாபாத்திரம், ஃபிர்தவுஸ் ரப்பாணி. பாக்கறதுக்கு நம்ம குக்கு வித் கோமாளியில வர்ற காஷ்மிர் குக் உமைர் லத்தீஃப்க்கு – ஆமா அமரன்ல நடிச்சவர்தான் (நான் இன்னும் அமரன் பக்கல) பொண்ணு வேசம் போட்ட மாதிரி அழகா ஒரு பெண் போலிஸ் கதாபாத்திரம். உண்மையில இந்த கேஸ்ல நாம என்னென்ன மனசுல நினைக்கிறமோ, அதையெல்லாம் தன்னோட டவுட்டா கேக்கற கேரக்ட்டர். அந்த வகையில இவங்க, ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆஃப் வ்யூ கேரக்ட்டர். அந்த வகையில மட்டும். இவங்களும் ஒரு லெஸ்பியன். அதுக்கு அவங்க ரெண்டு குடும்பமும் காட்டுற ரியாக்சன்ஸ் எல்லாம், இந்த மாதிரி விசயங்களுக்கு நம்ம குடும்பங்கள்ல எப்டி ரியாக்ட் பண்ணுவாங்களோ அதை அப்டியே ஜெராக்ஸ் காப்பி பண்ணிருப்பாங்க. பாவம் அதுல அவங்க கூட ஜோடியா வர்ற டாக்டர் பொண்ணுக்கு ஏற்படுற கதிதான் நமக்கும்.
இதுல ரிப்பீட்டடா ரெண்டு கேள்விகள் வரும். ஒன்னு, “இப்டியே கல்யாணம் வேணாம்னு இருந்தின்னா நாளைக்கி உனக்கு யார்தான் துணையா இருப்பாங்க?” அடுத்து ரெண்டாவது, “நீங்க பாட்டுக்கு செக்யூரிட்டி வேலைக்கிப் போய்ட்டா, ஊர்ல மத்தவங்க எல்லாம் என்ன நெனப்பாங்க?”ன்னு.
இந்த ரெண்டுலயும், நாம தெரிஞ்சிக்க வேண்டியதும் சொல்ல வேண்டியதும் ஒன்னுதான். அவனவன் லைஃப்ப அவனவன் பாத்துக்குவான். உன் கடமையையும், கவுரவத்தையும் உன் பெத்த மகன்/மகள்/தகப்பன்னு யார் தலையிலயும் சுமத்த வேண்டாம். உன் வேலைய பாருடா/டின்னு சொல்லலாம்னு நமக்கே தோனும்.
அதுலயும் ரெண்டு ஹீரோக்களும், பழைய நண்பர்கள். ஒன்னா வேலை செஞ்சு பல கேஸ்கள முடிச்சவங்க. ஆனா கதையோட முக்கால்வாசி இவங்க ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க. சண்டை போட்டு பிரிஞ்சிருப்பாங்க. அவங்கள ஒன்னு சேர்க்கற மாதிரி ஒரு தண்ணியடிக்கிற சீன் வரும். அதுல அவங்க பேசிக்கறது அடிச்சிக்கறதெல்லாம், நம்ம ஃப்ரெண்ட்ஸ் தண்ணியடிச்சா என்னென்ன பேசிக்குவோமோ, பண்ணுவோமோ, அப்டியே டிட்டோ சீன் அது.
இது ஜெர்ரி பிண்டோன்னு ஒரு எழுத்தாளர் எழுதின நாவலை, அதே டைட்டில்ல எடுத்த வெப்-சீரிஸ். சோ ஒரு நாவலைப் படிச்ச அனுபவம் இதைப் பாக்குறப்ப எனக்கே இருந்தது.
அதே மாதிரி சில டயலாக்ஸ் எல்லாம் டப்பிங்காவே இருந்தாலும், நமக்கு செமயா கனெக்ட்டாவும். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது இந்த வெப்-சீரிஸ். உங்களுக்கும் பிடிக்கலாம். கொஞ்சம் விறுவிறுப்பு குறைவுதான். காரணம் இருக்கு. அதை நீங்களே பார்த்தா புரிஞ்சுக்குவீங்க. பார்த்துட்டு வாங்க பேசலாம். பேச இதுல நிறைய இருக்கு.

No comments:

Post a Comment