காந்தி கண்ணாடி
அப்டின்னு ஒரு ‘படம்’. இந்த ‘அன்கண்டிசனல்’ ‘அன்கண்டிசனல்’னு ஒரு வார்த்தை இருக்கில்லையா. அதை எனக்குத் தெளிவா புரிய வச்ச படம்ன்னே சொல்லலாம். ‘அன்கண்டிசனல் லவ்’ அப்டின்னா, என்னாங்கறது சொல்லிப் புரிய வைக்க முடியாது. அது நீங்க எதிர்பார்த்து கிடைக்கறது இல்ல. மொதல்ல அது நமக்குக் கிடைக்கறது இல்ல, கொடுக்கறதுங்கறத புரிஞ்சிக்கனும். சரி அப்றம் லவ் பண்ணுவோம். இப்பப் படத்தைப் பத்திப் பாப்போம்.
இந்தக் கதைபடி பாலா ஹீரோ இல்ல. நமீதா கிருஷ்ணமூர்த்தி ஹீரோயின் இல்ல. இவங்க எல்லாருமே ஒருவித சப்போர்ட்டிங் கேரக்ட்டர்ஸ்தான். உண்மையில காந்தி கண்ணாடியோட ஹீரோ - பாலாஜி சக்திவேல். ஹீரோயின் - அர்ச்சனா. வெறுமனே, பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடின்னு புரொமோட் பண்ணா யார் வருவா படம் பாக்க? அதனாலதான் மேல ஒரு லேயர் பாலா அண்ட் நமீதா கேரக்ட்டர்கள். உண்மையில இவங்க பார்வையிலதான் நாம, பாலாஜி சக்திவேல் அண்ட் அர்ச்சனா லவ்வ பாக்குறோம்.
ஹீரோ காந்தி மகானுக்கு, ஊர், குடும்பம்னு எல்லாத்தையும் விட்டுட்டு, தனக்காக சிம்பிளான வாழ்க்கையே போதும்னு வாழறதுக்காக வந்த தன் கண்ணாம்மாவோட ஒரு ஆசைய நிறைவேத்தறதுதான் படத்தோட மொத்தக் கதையும். இதுல நாம எங்க கனெக்ட்டாகிருக்கோம், எங்க டிஸ்கனெக்ட்டாகிருக்கோம்னு புரிஞ்சிக்க வக்கிறதுதான் இந்தக் கதையோட ஷ்பெசாலிட்டியே.
இந்த ரெண்டு ஜோடியும் இல்லாம, இன்னொரு அழகான ஜோடி படத்துல இருக்காங்க. அந்த ஜோடி, பாலாஜி சக்திவேல் அண்ட் அர்ச்சனாவோட இளமைக்கால வயசுல அவங்க எப்டி லவ் பண்ணிட்டிருந்தாங்க, கல்யாணம் பண்ணாங்கன்னு காட்டறதுக்காக, யங்கா ரெண்டு பேர்த்த நடிக்க வச்சிருக்காங்க. அதுலயும் அவங்க பேசற ப்யூர் கோயம்பத்தூர் ஸ்லாங் - செம! இதுவரைக்கும் நீங்க நெனச்சிட்டிருக்கற ஏனுங், வாங், போங் மட்டும் கோவை ஸ்லாங் இல்லன்னு, இதுல இவங்க ரெண்டு பேரும் பேசறதப் பாத்து - கேட்டு புரிஞ்சிக்குவீங்க. ஆனா அதுவே வயசானதுக்கப்புறம் பாலாஜி சக்திவேலும், அர்ச்சனாவும் அப்டியே கோயம்பத்தூர் ஸ்லாங்ல பேசிருந்திருக்கலாம். அது மட்டும் மிஸ்ஸிங். சென்னைல இருக்கறதால அப்டி வச்சிருந்தா துருத்திக்கிட்டு தெரியும்னு அதைத் தவிர்த்துட்டாங்க போல இருக்கு.
பாலா பேசறது பெரும்பாலும், விஜய் டிவி ப்ரோக்ராம்ல பேசிருந்த கவுன்ட்டர்ஸ் மாதிரிதான் இருக்கு. மத்தபடி வித்தியாசம்ன்னு பாத்தா, ரியல்ல பலருக்கும் சோனு சூட் மாதிரி உதவி செஞ்சு அத விளம்பரப்படுத்தி அதனால இவர் இதுவரைக்கும் கவுன்ட்டர் கொடுக்கறேன் கலாய்க்கிறேன் பேர்வழினு விஜய் டிவில இவர் பேசி நமக்கு ஏற்பட்டிருந்த இரிட்டேட்டிங் ஃபீல் எதுவும் இல்லாததனால, இவர ஹீரோவா நெனச்சுகிட்டு, இந்தப் படத்தப் பார்க்கறதுக்கு உறுத்தல. முகத்த சீரியஸா வச்சிகிட்டுத்தான் நிறைய சீன்ஸ் இருக்கு. அது கூட நாம அக்சப்ட் பண்ணிக்கிற மாதிரியான நடிப்புதான். மொத்தத்துல ஒரு நடிகராவும், ஹீரோவாவும் பாலா ‘டன்!’
படத்துல முக்கால்வாசிக்கும் மேற்பட்ட சீன்ஸ் எல்லாமே கொஞ்சம் பிசகிருந்தாலும் க்ரிஞ்ச்ன்னு சொல்லிருப்போம். ஆனா, ரொம்ப கேர்ஃபுலா அத ஹேண்டில் பண்ணது நல்லாருக்கு. அதுலயும் அர்ச்சனா பேசறதக் கேட்டப்ப - இவங்க பொதுவாவே, ரொம்ப மென்மையாவும், ஹஸ்கியாவும், ரொமாண்டிக்காவும் தான் பேசுவாங்க. அவங்க யங் ஏஜ்லயே அவங்க பேசறது, நமக்கு அப்டித்தான் இருக்கும். ஆனா அவங்க சீனியர் சிட்டிசனா ஆனதுக்கப்புறம் அப்டிப் பேசினா ரியாலிட்டி எப்டி இருக்கும்னு நெனச்சா கெதக்குன்னு தான் இருந்தது. ஆனா ச்சே ச்சே. அப்டி எதுவும் ஆகல. அக்சப்ட்டபிள். ஏன்னா இந்தக் கதைக்கு ஓகே. அது ஆப்ட்டாத்தான் இருந்தது.
சமீபத்துல நான் பார்த்த எந்தப் படங்கள்லயும், பாட்டுன்னு எதுவும் கேக்கறப்ப சத்தியமா நல்லால்ல. ஆனா ஆச்சரியமா இந்தப் படத்துல வந்த முதல் பாடல் ‘வண்டி வண்டி’ பாட்டு நல்லாருக்கற மாதிரி ஃபீலானதும் ஒரு ‘அப்பாடா’ ஃபீல். அப்டியே மத்த பாடல்களும். அதுலயும் தேனிசைத் தென்றலும், ட்ரக் டீலரும் பாடியிருந்தது உண்மையிலயே செம. அதுலயும் ட்ரக் டீலர் வாய்ஸ்ல வர்ற ஒரு பாட்டுல எனக்கு கண்ணீர் வந்ததெல்லாம் நடந்தது.
எல்லாத்துக்கும் மேல உலகத்துலயே, டீமானிட்டைசேசனைப் பத்தி யாரும் படம் எடுத்ததா எந்த வரலாறும் இல்ல. அதைக் கதைல கொண்டுவந்து, அதனால ஏற்பட்ட பின்விளைவுகள் எல்லாத்தையும் மிச்சக் கதையா கொண்டு போய், படம் முடியிறப்ப நாம டீமானிட்டைசேசனத் தாண்டி, அப்டி ஒன்னு நடந்தத நமக்கெல்லாம்னு மறந்து வாழப் பழகிட்டோம்னு நிச்சயம் புரிஞ்சிக்க வக்கிது இந்தப் படம்.
தமிழ்ல ஒரு நல்ல படம். வொர்த் டு வாட்ச். நத்திங் டு சே மோர் தேன் திஸ்!

No comments:
Post a Comment