Tuesday, September 23, 2025

Materialists (2025) - ரோம்-காம்

 


Materialists
அப்டின்னு ஒரு படம். மெட்டீரியலிஸ்ட்சா, அப்டீன்னா? அப்டின்னா, பொருளையும் சொத்துக்களையும் மட்டுமே பெருசுன்னு நம்பிட்டிருக்கறவங்கன்னு அர்த்தமாம். கூகுள்ல படிச்சது. மத்தபடி காதலையும் கல்யாணத்தையும் பத்தி பேசற படம். அப்ப இது ரொமான்ஸ் மூவியா இல்ல மேரேஜ் மூவியா? வெய்ட். மேரேஜ் மூவிஸ்னு ஒன்னு இருக்கா என்ன? இந்தப் படம் கல்யாணத்தைப் பத்தித் தான் பெருசா பேசுது. ஐ மீன் அதிகமா பேசுது. அப்பப்ப லவ்வைப் பத்தியும். காதலா, கல்யாணமா – பாவம் அவங்களே கன்பீஸாயிட்டாங்க போல. நாம படத்தப் பத்தி மட்டும் பாப்போம்.
கதைப்படி ஹீரோயின் லூஸி, ஒரு மேட்ச் மேக்கர். விவேக் பேரழகன்ல ஒரு வேலை பாத்துகிட்டிருப்பாரே, மேரேஜ் அசெம்ப்ளர். அதேதான். யெஸ், நம்ம ஊர் வழக்கப்படி புரோக்கர். அவங்க ஒரு மேட்ச் மேக்கிங் பண்ற மேட்ரிமோனி கம்பெனியில, கஸ்டமரைப் பிடிக்கிற எக்ஸிகியூட்டிவ்வா வொர்க் பண்ணிட்டிருக்காங்க. மொத சீன்லயே அவங்க யாரு என்னன்னு நேரா விசயத்துக்கு வந்துடறாங்க. ரோட்டுல நடந்து போயிட்டிருப்பாங்க. அவங்க உடைகள் ரொம்ப ப்ரொஃபெசனலா இருக்கும். சோ எங்கயோ வேலைல இருக்காங்கன்னு நமக்கு தோனுறதுக்கு முன்னாடியே, ஆப்போஸிட்ல ஹைஃபையா ஒரு ஆள் நடந்து போயிட்டிருப்பாரு. அப்ப லூஸி உடனே, அவர்கிட்ட முன்பின் அறிமுகம் இல்லாம, அறிமுகப்படுத்திக்க முயற்சி கூடப் பண்ணாம, நேரடியா புராடக்ட் சேல்ல எறங்கிடுறாங்க. “ஹலோ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலேல்ல (கஸ்டமராக்க முதல் தகுதி அவங்க ஆல்ரெடி கல்யாணம் ஆனவங்களா இருக்கக்கூடாது)”. அந்த ஆள் ’இல்ல’ன்னு சொன்னதும், டக்குன்னு தன்னோட பிஸ்னஸ் கார்ட எடுத்து அந்தாள்கிட்ட கொடுத்து, ”உங்கள மாறி ஆளுங்களுக்கு நல்ல வசதியான (இதுதான் அந்த தூண்டில் கொக்கி) நிறைய பொண்ணுங்க கெடைப்பாங்க. எங்ககிட்ட அப்டி நிறைய பேர் இருக்காங்க. தேவைப்படும் போது காண்டேக்ட் பண்ணுங்க,” அப்டின்னு, அவ்ளோதான். தட் ஃப்ரெஷ் கிளயண்ட் மீட்டிங் ஓவர்.
சிம்பிளா முடிஞ்சிருச்சில்ல. இப்டித்தான் மொத்தப்படமும். இதைச் சுத்தியே லூஸி ஓடிட்டிருக்காங்க. இதுல, லூஸியோட இந்த ஓட்டத்துக்கு நடுவுல, அவ லைஃப்ல ஹேரின்னு ஒரு பணக்காரனும், ஜான்னு ஒரு புவரும் குறுக்கிடறாங்க. இதுல நடிகனாக ட்ரை பண்ணிட்டிருக்கற ஜான் லூஸியோட முன்னாள் காதலன். இப்ப பிரேக்கப். ஹேரி, சொந்தமா ஒரு ’பிரைவேட் ஈக்விட்டி’ நடத்திட்டிருக்கறவன். ஏன் மொதல்ல ஜானோட பிரேக்கப் ஆச்சின்னா, லூஸியைப் பொறுத்தவரைக்கும் பெரிய தெகட்டறளவுக்கு ரிச்சா இருக்கறவனாலதான் லைஃப் நல்லாருக்கும். ஈஸியா செட்டிலாகிடலாம்ங்க்றது எண்ணம். அதனால, இதைப் பத்தி முதல்லயே யோசிக்காம ஆள் நல்லாருக்கான்னு ஜானோட பண்ணதுதான் அந்த மொத லவ்.
இப்ப ஒரு மேரேஜ்ல சந்திச்ச ஹேரிக்கும் இவள விட நிறைய பொண்ணு கெடைக்கும். ஆனா பாருங்க, அவனுக்கு நாப்பதுக்கு ஏஜ் ட்ராவலாகிட்டிருக்கற லூஸியத்தான் பிடிச்சிருக்கு. ஏன்னா அவ இப்பப் பாக்க அழகாருக்கா. அதனால அவன் பாத்ததும் சட்டுன்னு புடிச்சிருக்குன்னு முடிவெடுத்து புரப்போஸ் பண்ணி டேட் பண்ண ஆரம்பிச்சிடறான்.
இவ்ளோதாங்க மொத்தக்கதையும். மேற்படி சொன்னதுல அவ என்ன பண்ணிருப்பான்னு ஆப்சனே இல்லாம பதில் சொல்ல நம்ம எல்லாராலயும் முடியும். ஆனா பாருங்க, லைஃப்ங்கறது அப்டியில்ல. நாம நெனச்ச மாதிரி அப்டி ஸ்மூத்தா போயிட்டிருக்காது. அது நம்ம ஊர் ரோடுக மாதிரி. நாமதான் அத ஸ்மூத்தா போகுதுன்னு நம்பிட்டிருப்போம். ஆனா உண்மையில, அதுல எங்கெங்க நமக்குப் பாதகமில்லையோ, அதுல நேக்கா வண்டியோட்டப் பழகிப் பயணிச்சிட்டிருப்போம். அப்டித்தான் இந்தப் படமும்.
ஹீரோயின் ஒரு வினை செய்யறாங்க. ரெண்டு ஹீரோக்களும் அவங்கவங்க பொருளாதாரத்துக்கு தகுந்த மாதிரி ஆளுக்கொரு வினையில இருக்காங்க. இவங்க மூனு பேரும் தனித்தனியா கிராஸாயிக்கிறாங்க. இதுல என்ன பெருசா வித்தியாசம் இருக்கு? அவங்க மூனு பேரும் ஒரு வாட்டி மூனு பேருமே சந்திச்சிக்கறாங்க. அவ்ளோதான், நமக்குக் கத கெடச்சிருச்சுன்னு டைரக்ட்டா சூட்டிங் போன மாதிரிதான் இருக்கு இந்தப் படம். ஆனா பாருங்க, இத ரொம்ப நல்ல படம்னு ரேட்டிங் கொடுத்து ஸ்கேம் பண்ணி வச்சிருக்கானுக. சினிமால சில படங்கள் இப்டி ஸ்கேம் பண்ணி நம்மள நம்ப வச்சு பாக்க வச்சுகிட்டிருக்கானுகன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
ஓப்பனா ஒரு உண்மைய சொல்லனும்ன்னா, அதுல ஒன்னுமே இல்ல. கீழ போட்ரு தான், இந்தப் படத்துக்கு நான் சொல்ல வர்ற விசயம். மத்தபடி டைம்பாஸ்க்குன்னு பாக்க ஆரம்பிச்சாக் கூட, பெருசா டைம் நீண்டுகிட்டே போற மாதிரி படம் ஜவ்வா புடிச்சி இழுத்தும் இழுக்காத மாதிரி ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கும். அதென்ன இழுத்தும் இழுக்காத மாதிரி? ஆமா, நாமதான் வேலை வெட்டியில்லாம இந்தப் படத்தப்புடிச்சி இழுத்துகிட்டிருக்கோம். ஆனா படத்துல எல்லாரும் அவங்கவங்க வேலைய பாத்துகிட்டுத்தான இருக்காங்க.

No comments:

Post a Comment