Tuesday, September 23, 2025

Lokah Chapter 1: Chandra (2025)

 


Lokah Chapter 1: Chandra
அப்டின்னு ஒரு தமிழ் பேசும் மலையாள சூப்பர் வுமன் படம். உண்மையில இது சூப்பர் வுமன் படம்ன்னு சொல்றத விட புராணங்களிலிருந்து வந்த ஒரு ராட்சசி படம்ன்னே சொல்லிக்கலாம். உண்மையில அப்டி ஒன்னு இருக்கான்னா, எல்லாமே கட்டுக்கதை தான். யக்ஷிங்கறது ஒரு வகை ராட்சசி. அதை இங்க கேரளாவுல, ஒரு தெய்வமாத்தான் வழிபடறாங்க. ஏன்னா தெய்வமோ அசுரனோ, சாரி அசுரி அல்லது ராட்சசியோ, கெட்டவங்களை அழிச்சாலோ நல்லவங்களக் காப்பாத்தினாலோ, அவங்கள வழிபடறதுதான நம்ம தொன்னுத்தெட்டு வழக்கம். மறுக்காவும் சாரி, ‘தொன்று தொட்டு’ வழக்கம்?
அப்டி இதுல யக்ஷியா நடிச்சிருக்க கல்யாணி பிரியதர்ஷன் ஆர்கன் திருட்டு செய்யிற கும்பலப் பிடிச்சுக் கொல்லுறதா பல பதிவுகள்ல படிச்சேன். ஒருவேள அவங்க பார்த்த ஷோவுல மட்டும் அந்தக் காட்சிகள் இருந்திருக்கலாம். இல்லன்னா, அவங்க பார்த்தது லோகாஹ் சேப்டர் 2வா இருந்திருக்கலாம். ஆனா அது இன்னும் கேரளாவுலயே ரிலீஸாகலங்கறதெல்லாம் வருத்தத்துக்குரிய விசயம். ஷ்பெசலா அவங்களுக்கு மட்டும் எப்டி ஷோ போடலாம்? இல்ல நான் கேக்கறேன். இதெல்லாம் நாயமா?
நான் பாத்த ஷோல, ஆர்கன் திருட்டைப் பத்தி ஒரு பேப்பர்ல நியூஸ் வரும். அவ்வளவுதான். மத்தபடி அதைப் பத்தின எந்த சீனும் அதுக்கு மேல இல்ல. சோகங்கள். அந்த ஃபைட்ட வேற நான் மிஸ் பண்ணிட்டேன்ங்கற வருத்தத்துல தான் நான் இதயெல்லாம் சொல்லுறேன்.
அப்புறம் வில்லனா நடிச்ச சாண்டி. இவரைப் பத்தியும் பல ஆஹா ஓஹோ பதிவுகளைப் பாத்தேன். நான் பாத்த ஷோவுல அவர் நடிச்சது ரொம்ப ஆர்ட்டிஃபீசியலாத் தான் இருந்தது. அதாவது, அவன் இதைத் தான் ரியாக்ட் பண்ணுவான்னு தெரிஞ்சே பாத்ததால அவர் ஸ்கிரீன்ல வந்தாலே எரிச்சலாத் தான் இருந்தது. மத்தவங்க பாத்த அந்த சேப்டர் டூவும் ரிலீஸாகட்டும் அப்பப் பார்த்துக்கறேன் அந்த நடிப்பையெல்லாம்.
அடுத்து நெஸ்லன், பிரேமலூவுல ஹீரோவா நடிச்சிருப்பாரே அவருதான். பெருசா எதுவுமில்ல. அத்தே பிரேமலூ ரியாக்சன்ஸ் தான் இதுலயும். ஒருவேள அந்தளவுக்கு இருந்தா போதும்னு புக் பண்ணிட்டாங்களோ என்னவோ? எனக்கு சமயத்துல பிரேமலூவத்தான் பார்த்துகிட்டிருக்கேனாங்கற டவுட்டு வந்ததை மறுக்க முடியாது.
அப்புறம், அஞ்சு நிமிசம் மட்டுமே வந்தாலும், மனசுல நிக்கிற கேரக்ட்டர்ன்னா அது டொவினோ தாமஸ்தான். என்னென்னமோ பண்றாப்ல. ஆனா எப்டி இதெல்லாம் பண்றாருன்னு எந்த விளக்கமும் இல்ல.
அதே போல கல்யாணி பிரியதர்ஷனையும் யக்ஷி, கள்ளியங்காட்டு நீலி, வாம்பயர்னெல்லாம் சொல்றாங்க. வாம்பயர், டிராகுலான்னா நான் ஏத்துக்கறேன். மத்தபடி, யக்ஷி கள்ளியங்காட்டு நீலின்னெல்லாம் சொன்னா அது எப்டி அவங்க ஆனாங்கன்னு எந்த முன்கதையும் சரியா பதிவாகல. குகையில ஒரு தலையில்லாத சிலைகிட்ட நிப்பாங்க. நிறைய பறவைங்கெல்லாம் அவங்கள சுத்திப் பறக்கும். கல்யாணியோட ஆறு வயசுல. ஆனா, அதுக்கப்புறம் என்ன நடந்தது? அடுத்த சீன்ல அந்த பாப்பா தான் வெளிய நடந்து வந்தது. நோ பிராப்பர் ரீசன் ஃபார் ஹவ் ஷீ காட் தீஸ் பவர்ஸ். இது சோகமில்ல. ஸ்கேம். இத நம்ப வச்சித்தான் நம்மள முழுப்படத்தையும் பாக்க வச்சிருக்காங்க. எல்லாத்தையும் தாண்டி கல்யாணியோட அந்த நடிப்பு எல்லாமே செம ஆப்ட்டா இருந்தது. அக்சப்ட்டபிள் ஆஸ் அ சூப்பர் வுமன்.
மத்தபடி படத்துல சொல்லிக்கிற மாதிரி ஒன்னே ஒன்னுதான் இருக்கு. எல்லாரும் பாக்கறாங்க, நல்லாருக்குன்னு சொல்றாங்கன்னு நானும் பாத்தேன். நீங்களும் அந்த சமுதாயக் கடமைய ஆத்தனும்ன்னு விரும்பினா நான் தடுக்க முடியுமா என்ன?
இவ்வளவுக்கும் மேல ஒரு விசயத்தை நான் இங்க பாராட்டியே ஆகணும் இந்தப் படத்தைப் பத்தி. ஒரு சீன்ல கூட கவர்ச்சியே இல்லாத சூப்பர் வுமன் சினிமா எடுத்ததுக்காக! பாராட்டுக்கள் துல்கர்!

No comments:

Post a Comment