Tuesday, September 23, 2025

Trigger (2025) - சவுத் கொரியன் வெப்-சீரிஸ்

 


Trigger
அப்டின்னு ஒரு சவுத் கொரியன் வெப்-சீரிஸ். ஆரம்பத்துல எனக்கும் கனெக்ட்டாக ஒரு எபிசோட் டைமெடுத்தது. மொத எபிசோட் பார்த்ததுக்கப்புறம், அடுத்தடுத்தன்னு, அதுல உள்ள பத்து எபிசோட்ஸையும் ஒரே நாள்ல பாத்து முடிச்சிட்டேன்.
கதைப்படி, சவுத் கொரியால ஒரு சட்டம் இருக்கு (நிஜத்துல அப்டி ஒன்னு இருக்குன்னு கூகுள் பண்ணிப் பார்த்ததுல தெரிஞ்சிகிட்டேன்) துப்பாக்கிகள பொதுப்பயன்பாட்டுல உபயோகப்படுத்துற தடைச்சட்டம். அதாவது, துப்பாக்கிகள யாரும் பயன்படுத்தக் கூடாது. இன்ஃபாக்ட் இதுல வர்ற கேங்க்ஸ்ட்டர்ஸ் கூட கத்திகளைத் தான் பயன்படுத்திட்டிருப்பாங்க. புல்லட் டிரெய்ன்ல ஒருத்தர் கன்ஸ் வித்துகிட்டிருப்பாரு, ஒரு கன் ஐயாயிரம்னு. அதைப் பார்க்கவே அங்க இருக்கற பயணிகள் பயந்துகிட்டிருப்பாங்க. அந்த ஆள், ஒரு பொண்ணு முகத்துகிட்ட காட்டிக் காட்டி வேணுமா வேணுமா இது ஐயாயிரம்தான்னு சொல்லிட்டிருக்க, அந்தப் பொண்ணு அவ்ளோ மிரண்டுகிட்டிருக்கும். அப்புறம்தான் அந்த ஆள் அதை ஒரு சிகரெட் லைட்டர்னு ட்ரிகர் பண்ணி நெருப்பு வர வச்சுக் காட்டுவாரு.
இதையெல்லாம், அதே டிரெய்ன்ல பயணிச்சிகிட்டிருக்கற ஒரு மியூசிக் ஸ்டூடண்ட் கிட்டார் பேக்க மாட்டிக்கிட்டு கவனிச்சுகிட்டிருப்பாரு. அப்ப அதையும் தாண்டி, அம்பி மாதிரி நிறைய கோபம் ரூல்ஸ மீறுறவங்க மேல இருக்கும். அவன் டிரெய்ன்ல இருந்து இறங்கி, தன்னோட கிளாசுக்குப் போவான். அங்க கிளாஸ் ஆல்ரெடி நடந்துகிட்டிருக்கும். போனவன் தன்னோட கிட்டார் பேக்கை ஓபன் பண்ணி அதுல இருந்து கிட்டார எடுத்து செமயா வாசிப்பான்னு பாத்தா, அதுல இருந்து ஒரு பெரிய கன்ன எடுத்து அந்தக் கிளாஸ்ல இருக்கறவங்க எல்லார்த்தையும் டமடமன்னு சுட்டுக் கொன்னுட்டு விரக்தியா ஆ…ன்னு கத்துவான்.
அப்புறம்தான் அது அவன் மண்டைக்குள்ள ஓடின கோபத்தோட காட்சின்னு நமக்குக் காட்டுவாங்க. இந்த மாதிரி சாதாரண மனுசங்கள்ல இருந்து கேங்க்ஸ்டர்ஸ் வரைக்கும் எல்லார்க்கும் அது இருந்துகிட்டே தான் இருக்கும். அதாவது அவங்கள சுட்டுக் கொல்லனும்ங்கற அளவுக்கு.
கோபத்துக்கு அளவுவிருக்கான்னா, நிச்சயம் இருக்கு. அதுக்கு சில எக்ஸ்டண்ட்ஸ் இருக்கு. ஒன்னு இந்த மாதிரி கொடூரமா கொல்லுறளவுக்குப் போகும். ரெண்டாவது மன்னிக்கிறளவுக்குப் போகும். ரெண்டாவது லெவலுக்குப் போக பக்குவம் மட்டும் போதும்னு இல்ல இயலாமையும் ஒரு காரணமா இருக்கலாம், இல்லையா? அதாவது, அவனை நம்மாள எதுவும் பண்ணிடவே முடியாது, காயப்படுத்தவே முடியாதுன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் வேற வழியே இல்லாம மன்னிக்கறது.
என் புரிதல் என்னன்னா, இந்த ’இயலாமை’ வகையிலதான் பலரும் மன்னிக்கப் பழகிருக்காங்கன்னு தான் நான் ஹெவிய்யா நம்பறேன். தவிர அது பக்குவத்தினால பண்றதில்ல.
அப்டித்தான் இந்தக் கதையில சிலர் மேல நமக்கே கோபம் வரும் அவ்ளோ டார்ச்சர் பண்ணுவாங்க. நமக்கே டார்ச்சர் அனுபவிக்கறவங்க மேல ஒரு பரிதாபம் வரும். அப்ப ஆட்டோமேட்டிக்கா அவன் கையில துப்பாக்கியும் கிடைச்சு அவன் அதைப் பாக்குறப்ப, இப்பப் போய் சுடுடா அவனைன்னு நமக்கே தோன ஆரம்பிச்சிடும் இல்லையா?
அப்டி கஷ்டப்படுற எல்லாருக்கும், ஃப்ரீயா கொரியர்ல கன்ஸ் சப்ளை ஆகுது, கந்தசாமி படத்துல பணம் கவர்ல டோர் டெலிவரி ஆகற மாதிரி. இப்ப என்ன நடக்கும்? துப்பாக்கி யூஸ் பண்ண தடை இருக்கற நாட்டுல, யாரோ எவனெவன் கஷ்டப்படுறான்னு தெரிஞ்சே அவன் வீட்டுக்கு ஃப்ரீயா துப்பாக்கி டெலிவரி ஆனா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாருங்க.
இந்த சீரிஸ்ல ஒரு டயலாக் வரும். அது ரொம்ப சாதாரணமானது தான். ஆனா, பார்த்து முடிக்கும் போது அதோட வீரியம் உங்களுக்கே புரிஞ்சிருக்கும். அந்த டயலாக்,
“அஞ்சு மில்லி மீட்டர், ட்ரிகர அழுத்தினா அதோட சத்தம் ஐநூறு மீட்டருக்குக் கேட்கும். ஆனா அதோட பின் விளைவுகள்?”
ரொம்ப சாதாரணமா இருக்கில்ல? இத்தனைக்கும் இது பன்ச் டயலாக் கூட இல்ல. இத சொல்லுறப்ப ஹீரோ கூட சாதாரணமா தான் சொல்லிட்டிருப்பாரு. அவரும் நல்லவர்னு சொல்லிக்க முடியாத ஒரு கில்ட்லதான் வாழ்ந்துகிட்டிருப்பாரு. எப்டின்னா, இதுக்கு முன்னாடி ராணுவத்துல இருந்தப்ப 99 பேர சுட்டுக் கொன்னிருக்காரு. இனி லைஃப்லயே கன்ன தொடுறதில்லன்னு வைராக்கியமா வெறும் டேசர் கன்ன மட்டும் வச்சே சிச்சுவேசன கண்ட்ரோல் பண்ணிட்டிருப்பாரு.
ஆனா, நாட்டுல துப்பாக்கி இலவசமா எல்லாருக்கும் டெலிவரியாகி சகஜமா கொலைகள் நடக்க ஆரம்பிச்சா?
நெட்பிளிக்ஸ்ல இருக்கு. நிச்சயமா வொர்த்தான கொரியன் வெப்-சீரிஸ் தான். பத்து எபிசோட்ஸ். கொஞ்சம் ஸ்லோ பர்ன் தான். பார்த்துட்டு வாங்க, பேசலாம்.

No comments:

Post a Comment