Mandala Murders
அப்டின்னு ஒரு வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ்ல. உத்திரப்பிரதேசத்துல உள்ள சரந்தாஸ்பூர்ல நடக்கற கொடூரமான கொலைகள்தான் கதை.
(ஸ்பாய்லர்ஸ் உண்டு)
வெக்கேசனுக்கு ஒரு அப்பாவும் மகனும் சொந்த ஊரான சரந்தாஸ்பூருக்கு ட்ரெய்ன்ல போறாங்க. அப்ப கூடவே டிரெய்ன்ல வந்த ஒரு சக வயசு ஆளோட பிணம், அந்த ஊர் ஆத்துல இவங்க குளிச்சிட்டிருக்கறப்ப மிதந்து வருது. பிணமான்னா சாதாரணமா இல்ல. அவன் தலையோட, அவனோட ரெண்டு கைகளும் கால்களும் பிணைச்சுத் தைக்கப்பட்டு, ஒரு மாதிரி பிணம் மிதந்து வருது. அப்ப ஆத்துல, இவனோட அப்பா குளிச்சிட்டிருக்காரு. அங்க இருந்தவங்க எல்லாருமே அந்தக் காட்சியப் பாத்து வெலவெலத்துப் போயிடறாங்க.
இவன் ஒரு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி வேற. பேரு விக்ரம். இந்தப் பிணத்தைப் பாத்ததும் அவனோட போலிஸ் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிது. கூட, அந்த ஊர்லயே வாழ்ந்துகிட்டிருக்கற தன்னோட காவல்துறை நண்பனோட பேசிட்டிருக்கறப்பதான் இந்த டெட் பாடி மிதந்து வருது. அதிர்ச்சியில நடுங்கிட்டிருக்கற அவங்கப்பாவ வீட்டுக்கு அனுப்பிட்டு, அந்த பாடிய செக் பண்ணப்ப, அதோட நெத்தியில ஒரு சிம்பல் கத்தியால கீரப்பட்டிருக்கு.
விக்ரமுக்கு அந்த சிம்பல ஏற்கனவே எங்கயோ பார்த்த ஞாபகம். அந்த சிம்பலுக்குப் பின்னாடி போனா, அவங்கம்மா இருவத்து ரெண்டு வருசத்து முன்னாடி காணாம போன வரைக்கும் கதை முன்னாடியும் பின்னாடிம் பல திகிலான மர்மங்களோடவும் நிறைய பிணங்களோடவும், நிறைய கட்டை விரல்களோடவும் போகுது.
அது ஒரு கல்ட் கும்பல். பெண்கள் நடத்துற ஒரு கல்ட். கிட்டத்தட்ட மிட்சாமர்ஸ் படத்துல காட்டப்படுற பேகன் இனத்துல நடத்துற கொடூர உயிர்ப்பலிகள் மாதிரி, ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யிறாங்க, அவங்க உடல் பாகங்களுக்காக. அப்டி அந்த உடல் பாகங்கள வச்சு, ஒன்னா சேத்து, தங்களோட கடவுள் ‘யஸ்ட்’ட உயிர்த்தெழ வைக்கிற முயற்சியில தான் அந்த ஊரே மர்மமான சுடுகாடா மாறிட்டு வருது.
இதைக் கண்டுபுடிக்க வர்ற சி.ஐ.பி (ஆமா சி.ஐ.பி தான். சிபிஐ இல்ல) அதிகாரிதான் வாணி கபூர்.
இவங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கு. இதுக்கு முன்னாடி நடந்த ஒரு போலிஸ் மிசன்ல, ஒரு குழந்தை செத்துடுது. அந்த கில்ட்டியிலயே இருக்கறவங்க. ஆனா, இந்தக் கல்ட்டை, இந்தக் கதையைப் பொறுத்தவரைக்கும், இந்தக் கல்ட்டுல அதோட கடவுள் யஸ்ட் தேர்ந்தெடுக்கப்படாதவங்களோ, சம்பந்தமில்லாதவங்களோ இதுல சம்பந்தப்பட மாட்டாங்க. சோ சம்பந்தமேயில்லாம வந்த இந்த ரியா (இதுல வாணி கபூர் பேரு) சம்பந்தப்பட்டிருக்காங்க. அதுவும் ஆதியில இருந்தே.
மொத்தம் எட்டு எபிசோட்ஸ். எட்டும் எனக்கு போரடிக்கல. ஏன் இதை சொல்றேன்னா, சில நாட்களுக்கு முன்னாடி ஒரு நண்பரோட போஸ்ட்ல படிச்சேன், இது எதிர்பார்த்து ஏமாந்த சீரிஸ்ன்னு. எனக்கு இதுல நிறைய எதிர்பார்ப்பும் இல்ல. ஏமாற்றமும் இல்ல. எனக்கு போரடிக்கல. இன்ஃபாக்ட் கியூரியஸ்சா தான் இருந்தது அடுத்தது என்னன்னு.
எனக்கு அந்த முகமூடி ஆள் யார்ன்னு முதல் சீன்லயே தெரிஞ்சிருச்சு. கன்பர்மேசனுக்காக அந்த ஆள்தானான்னு கூகுள் பண்ணேன். ஆனா, அதை கடைசி எபிசோட்ஸ் வரைக்கும் சஸ்பென்ஸ் எலிமெண்டா ஹைட் பண்ணிருக்கு இதோட டீம்னு புரிஞ்சது. ஆனா, என்ன செஞ்சும் அந்தக் கண்கள மட்டும் காட்டிருக்கக் கூடாது. பாத்தவுடனே தெரிஞ்சிருச்சு இது அந்த ஆள்தான்னு. மொதல்ல அது ஆ இல்ல பொ. அடுத்து அது ஆ.பொ. அவ்ளோதான் மேட்டர்.
திகில் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம். நெட்பிளிக்ஸ்ல அவைலபிள்.

No comments:
Post a Comment