The 100
அப்டின்னு ஒரு தெலுங்கு டப்பிங் படம். இதுல ஹீரோவா நடிச்சிருக்கறவர் உண்மையிலேயே அந்த கேரக்டருக்கு, அதாவது போலிஸ் கதாபாத்திரத்துக்கு ரொம்பவே ஆப்ட்டான ஆள். அதனால அவர் நடிச்ச முந்தைய படங்கள் எதையும் பாக்கலேன்னாலும் அது ஒன்னும் துருத்திகிட்டு பெருசா தெரியல. படத்த எடுத்த டைரக்டரும் பெருசா மசாலாப்பொடியெல்லாம் நம்ம கண்ணுல தூவாம இருந்தது ஒரு மிகப்பெரிய ஆறுதல்.
மத்தபடி படத்தோட கதை, தனி ஒருவன் மாதிரியும், தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியும், கே.வி.ஆனந்த் டைரக்ட் செஞ்சிருந்தா எப்டியெல்லாம் ட்விஸ்ட் இருந்திருக்குமோ அப்டியெல்லாம் அடன்னு ரசிக்க வச்சிருந்தது உண்மைதான். அதுக்காக தனி ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று அல்லது கே.வி.ஆனந்த் படங்களோட காப்பின்னு அர்த்தமில்ல.
கதைப்படி, ஹீரோ புதுசா அப்பாய்ண்ட்டான ஐ.பி.எஸ் அதிகாரி. அந்த சமயத்துல தீரன் அதிகாரம் ஒன்றுல வர்ற மாதிரி ஒரு வடக்கு கொள்ளைக் கும்பல், வீடுகள்ல புகுந்து டக்கோய்ட் நடத்தறாங்க. அதுவும் சரியா ஒவ்வொரு அமாவாசை அன்னைக்கும். இந்த பேட்டர்ன வச்சுகிட்டு கொஞ்ச நேரத்துலயே அந்த கேங்க புடிச்சிடறாரு. ஆனா, அது மட்டும் படமில்ல. அதுக்கும் உள்ள நிறைய கிளைக் கதைகள் இருக்கு. அப்புறம் மெயின் வில்லன் வேற ஒரு ஆள்.
இதுல வந்த ட்விஸ்ட்ஸ் அண்ட் டெக்னிக்கல் விசயங்கள் எல்லாம் பார்த்தா எனக்கென்னமோ எழுத்தாளர்களான சுரேஷ், பாலாஜி அலயஸ் சுபா எழுதின கதையோன்னு ஒரு டவுட் இருந்துகிட்டே இருந்தத தவிர்க்க முடியல. அந்தளவுக்கு சுவாரஸ்யமான ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ். சமயத்துல நான் ஒரு தெலுங்குப் படத்தோட டப்பிங் வர்சனத்தான் பாத்துகிட்டிருக்கேன்ங்கற எண்ணமே என்கிட்ட இல்ல. உண்மையில படம் என்கேஜிங்கா இருந்தது ரொம்பவே பிடிச்சிருந்தது.
தெலுங்குப்படம்ன்னதும் படத்தோட ஆரம்பத்துல ஒரு அரசியல்வாதி கேரக்ட்டரும் வருது. ஆனா, அதை அப்டியே அங்கயே, பொல்லாதவன் கிஷோர் சொன்ன மாதிரி அவனையெல்லாம் அப்டே போக வுட்றனும்னு போக வுட்டு, பேருக்கு ஒரு மாஸ் ஃபைட் வச்சு அத்தோட அவனை ஆஃப் பண்ணது ஒரு மிகப்பெரிய ஆறுதல்.
கோ படத்துல கூட, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ்னு ரெண்டு நடிகர்கள அரசியல்வாதியா காட்டிட்டு அவங்கதான் வில்லன்னு நம்மள நினைக்க வச்சிட்டு கடைசில அஜ்மல வில்லனா காட்டுவாரே கே.வி.ஆனந்த், அந்த மாதிரி, ஒரு வேள அந்த எம்.எல்.ஏவா இருக்கும்னு நம்மள யோசிக்க வச்சி அதில்ல இது வேற ஆள்னு காட்டினதெல்லாம் செம.
என்ன இருந்தாலும் ஒரு தெலுங்குப்படம். அதுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கும், அதுக்குண்டான ஆடியன்ச திருப்திப்படுத்துதல்னு ஒன்னு இருக்கும், சிலபல செண்டிமெண்ட்ஸ் இருக்கும். அதெல்லாம் இதுலயும் இருக்கத்தான் செய்யிது. அதெல்லாம் நார்மலைஸ் ஆகிருச்சு நம்ம மைண்டுக்கு. சோ அதைப்பத்தியெல்லாம் பெருசா அலட்டிக்காம, என்னால இந்தப்படத்த ரசிக்க முடிஞ்சது. அதுலயும் அயிட்டம் டான்ஸெல்லாம் இல்லாதது உண்மையிலேயே அதிசயம்தான்.
இதே டைட்டில்ல, ஒரு வெப்சீரிஸ், ஒரு தமிழ்ப்படம் (அதர்வா நடிச்சது), ஒரு கன்னடப்படம் (ரமேஷ் அரவிந்த் நடிச்சது) இருக்கு. இது அதே டைட்டில் கொண்ட வேற ஒரு புதுப்படம்.
உங்களுக்கும் பிடிக்கலாம். அமேசான் பிரைம்ல இருக்கு. புதுப்படம்தான் போல. பார்த்துட்டு வாங்க. பேசலாம்.

No comments:
Post a Comment