The door
அப்டின்னு ஒரு படம். பேய்ப்படம். மலையாளத்துல எடுத்து தமிழ்ல டப் பண்ணிருப்பாங்கனு நெனச்சு தான் பார்த்தேன். ஆனா இல்ல. இது நேரடி தமிழ்ப்படம் தான் போல. காரணம். பாவனா அண்ட் அவரோட அப்பாவா நடிச்ச நடிகர். மத்தபடி எல்லாருமே தமிழ் நடிகர்கள் தான்.
படத்தோட மொத சீன்லயே பேய காட்டிடறாங்க. அது பாவனாவோட அப்பாவ கொலை பண்ணிடுது. அப்பவே நமக்கு புரிஞ்சிடுது, அவர் எதோ பண்ணிருக்காரு. பதிலுக்கு அந்தப் பேய் கொலை பண்ணிட்டிருக்குன்னு. அது மட்டுமில்லாம ரேண்டமா கன்ஸ்ட்ரக்சன் பில்டிங்ல தொடர்ச்சியா அங்க வேலை செய்யிறவங்க மேல இருந்து குதிச்சு சூசைட் பண்ணிக்கிறாங்க. இதுல இருந்து அந்தப் பேய் என்னமோ கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணுதுன்னு நமக்குப் புரிய வருது.
அப்டி யார்ட்ட கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணுதுன்னு பாத்தா, அந்த கன்ஸ்ட்ரக்சன்ல ஒரு டிசைனிங் என்ஜினியரா வேலை பாத்துகிட்டிருக்கற பாவனாகிட்ட தான். ஒன்னில்ல ரெண்டு பேய். அப்றம், அதோட பின்கதையைத் தேடி பாவனா அண்ட் கோ ஊட்டி கொடைக்கானல்னு அலையிறாங்க. அப்டி கதை போகுது.
பேய்ப்படம்ன்னதும், சில ஜம்ப் ஹாரர் சீன்ஸ் இதுலயும் வருது. ஆனா அதெல்லாம் பெருசா துருத்திகிட்டுத் தெரியல. இன்ஃபாக்ட் அதெல்லாம் வந்துதான் இது ஒரு பேய்ப்படம்னே நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துது.
ஒரு பேய்ப்படமா ஆரம்பிச்சு, ஒரு கிரைம் ஸ்டோரியா மாறி அதைத் தேடி அலையிற மிஸ்டரி ஜானரா மாறி ஒரு மாதிரியா கதை பயணிக்கிது. இதுல முசுடு உம்மணாமூஞ்சி ஹவுஸ்மேட்டா ஒரு பொண்ணு வருது. அது ஏன் வந்தது, ஏன் அப்டி ஒரு கேரக்ட்டர்ன்னு சத்தியமா இன்னும் எனக்குப் புரியல. ஒருவேள, அவ டைவர்சன் காரணமா திணிக்கப்பட்டிருக்கலாம். அதாவது இவதான் எதோ பண்ணிருப்பா போல அந்தப் பேய்களுக்குன்னு நம்ம மைண்ட அவ மேல ஃபோகஸ் பண்ண வைக்க, ஆனா பெயிலு பெயிலு பெயிலு.
ஒரு ஆள் இன்னொருத்தரப் பத்தி யாரோ ஒரு சம்பந்தமில்லாத ஆளா நேர்ல பாத்த மாதிரி கதைய நேரேட் பண்ணப்பவே தெரிஞ்சிருது, அவந்தான் அந்த பிரகஸ்பதின்னு. இந்த எடத்திலயும் பெயிலு. ஆனா பின்கதை நிஜத்துல நடக்கற மாதிரி செமயா பண்ணிருந்தாங்க.
இன்னும் கூட கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒரு நல்ல ஹாரரா வந்திருக்க நெறய சான்ஸ் இருந்தது. பட் ப்ச். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர்.
ஒருவாட்டி பாக்கலாம்.
You know where to find this movie guys.
பி.கு: எதுக்காக the doorனு டைட்டில் வச்சாங்கன்னு எந்த ஆங்கிள்ல இருந்து யோசிச்சுப் பாத்தாலும் புரியல.

No comments:
Post a Comment