வியாழக்கெழம கொலைக் குழு
அப்டின்னு ஒரு கிளப். இங்கிலிஷ்ல – இங்கிலாந்துல. அதுவும் ஒரு மேன்சன்ல. மேன்சன்னா எக்ஸ் மென்ல சார்லஸ் சேவியர் மியூட்டன்ட்ஸ்க்காக ஒரு ரிசர்ச் செண்டர் வச்சிருப்பார்ல அதே மாதிரி உள்ள ஒரு கோட்டை தான் இந்த மேன்சன். பேரு கூப்பர் சேஸ். இதுல உள்ளவங்க எல்லாரும் வயசானவங்க. சீனியர் சிட்டிசன்ஸ். அதாவது கூப்பர் சேஸ் ஒரு முதியோர் இல்லம்.
இதுல உள்ள வயசானவங்க தங்களோட ஓய்வு கால வாழ்க்கைக்காக டெய்லரிங், ஆர்ச்சரி, பெயிண்டிங் இந்த மாதிரி நிறைய கிளப்புகள ஆரம்பிச்சு அதுல தங்கள ஈடுபடுத்திகிட்டிருக்காங்க. இதுல உள்ள ஒரு குழு தான் The Thursday Murder Club.
அதுக்காக இவங்க வியாழக்கிழமைகள்ல போய் கொலை பண்ணிகிட்டிருக்காங்கன்னு அர்த்தம் இல்ல. வியாழக்கிழமைகள்ல இதுவரை முடிக்கப்படாத கொலை வழக்குகள, இவங்களோட முன் அனுபவத்த வச்ச்சி அலசி ஆராய்ஞ்சி அந்த வழக்குகள – முடிப்பாங்கன்னு சொல்ல முடியாது, அதைப் பத்தி பேசுவாங்க, அவ்வளவுதான். அப்டி இவங்கநேரடியா கொலை வழக்குகள விசாரிச்சி முடிக்க நிஜமான போலிஸ் இல்ல. சோ ஒன்லி டிஸ்கசன்ஸ். அதுவே இண்டரஸ்ட்டிங்கா இருக்கு. சீனியர் சிட்டிசன்ஸ் தான. அவங்களுக்கு இதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.
ஆனா இந்த முடிவு பெறாத வழக்குகளோட ஃபைல்களையெல்லாம் கொடுக்கறது, முன்னால் காவல் அதிகாரி ஒருத்தங்களோட குடும்பம். அவங்களும் இதே கூப்பர் சேஸ்ல தங்கியிருக்கறவங்கதான்.
அப்டி இந்தக் குழு மெம்பர்ஸா நடிச்சிருக்கற சீனியர் சிட்டிசன்ஸ் யார் யாரெல்லாம்னு பார்த்தா, பியர்ஸ் பிராஸ்னன், பென் கிங்ஸ்லி, கெலன் மிர்ரென் அண்ட் செலியா இம்ரீ. எல்லாருமே பழைய ஃபேமஸ் நடிகர்கள். இப்ப இவங்களுக்கு நெஜமாவே ஒரு கொலை வழக்கு கிடைச்சா எப்டி அதை சால்வ் பண்ணுவாங்க அப்படிங்கறதுதான் கதை.
அப்டி ஒரு கொலையில இவங்க சம்பந்தப்படுறாங்க. ஒன்னில்ல. ரெண்டு. அந்தக் கொலை வழக்குகளையும் இவங்க அலசி ஆராய்ஞ்சி உண்மை என்னன்னு தோண்டி எடுக்கலாம்னு பார்த்தா, அதுல இருந்து இன்னொரு கொலையா தோண்டி வச்சிருக்கற பிணத்தோட எழும்புக்கூடுன்னு ட்விஸ்ட்ஸ்.
இவங்களே பிரஸ்சர், சுகர் மாத்திரையெல்லாம் போட்டுக்கிருக்க வயசானவங்க. இவங்க அக்கடான்னு இங்க வந்து தங்களோட மிச்ச வாழ்க்கைய ஓட்டிக்கிருக்காங்க. அந்த எடத்தையும் நல்ல வெலைக்கி விக்கலாம்னு அந்த எடத்தோட ஓனர்ஸ்களுக்குள்ள வேணும் வேணாம்னு சர்ச்சை. இதுல இதை விக்க வேண்டாம்னு சொன்ன ஆள் மொதல்ல கொலை செய்யப்பட அதுல ஆரம்பிக்கிது இவங்களோட நேரடிக் கொலை வழக்கு விசாரணை.
உண்மையில இந்தப்படம் எனக்கு எங்கயும் போரடிக்கல. ஒரு மர்டர் மிஸ்டரி படம் பாக்கறதையும் தாண்டி, ஒரு நாவலா வாசிச்சா என்ன அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம்தான் எனக்கு இந்தப் படத்தைப் பாக்குறப்பவும்.
நல்லாருக்கும் – பாருங்க கய்ஸ்!
நெட்பிளிக்ஸ்ல அவைலபிள்.

No comments:
Post a Comment