Sunday, September 28, 2025

The Man in My Basement (2025) - திரில்லர்?!

 


The Man in My Basement

 

அப்டின்னு ஒரு திரில்லர் படம். ஹாட்ஸ்டார்ல இருக்கு. இங்லிஷ்ல மட்டும்தான். தமிழ் டப்பிங்ல இல்ல. நான் இந்தப் படத்தை வில்லியம் டாஃபோவுக்காக பாக்க ஆரம்பிச்சேன். ஒரு வேள அவர் வில்லனா நடிச்சிருந்திருப்பார்னு நெனச்சேன். வில்லியம் டாஃபோ யார்ன்னா கேக்கறீங்க? ஸ்பைடர்மேன்ல நார்மன் ஆஸ்பார்னா நடிச்சிருந்திருப்பாரே அதாங்க கிரீன் காப்லின் – அவரேதான். சரி வாங்க இந்தப் படம் எப்டியிருந்ததுன்னு பாப்போம்.

கதைப்படி படத்துல ரெண்டே மெயின் கேரக்ட்டர்கள்தான். ஒருத்தன் பேரு சார்லஸ் ப்லாக்கி. அவனுக்கு அவன் மட்டும்தான். பேச்சிலர். நோ பேரண்ட்ஸ். மொத்தத்துல நோ ஃபேமிலி. பெத்தவங்க விட்டுட்டுப் போன வீட்டுல ஊதாரியா வாழ்ந்துகிட்டிருக்கற ஒரு நாதாரி. கூடப் பழகற ஃப்ரெண்ட்ஸ் மேல கூட பொறாமைல அவங்கள டீஸ் பண்ணித் தன்னோட ஆற்றாமைய ஒரு கெத்துன்னு நெனச்சு வாழ்ந்துகிட்டிருக்கற ஒரு வெத்து. சரக்கடிக்கவும் சூதாடவும் தன்னோட வீட்டுல நண்பர்களை அலவ் பண்ணிட்டு அவங்ககிட்ட வெட்டி வீராப்பா, அவங்கள டீஸ் பண்ணி தன்கிட்ட சம்பாதிக்க துப்பில்லங்கறத மறைச்சி ஓசிக் குடி குடிச்சிட்டிருக்கறவன். சில சமயங்கள்ல தன்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காரியமாகனும்னு, அவங்க பொண்ணுங்களக் கூட்டிட்டு வந்து எஞ்சாய் பண்றதுக்கு மாடியில தன்னோட பெத்தவங்க இருந்த அறையை யூஸ் பண்ணிக்க அலவ் பண்ணுவான். மொத்தத்துல கேவலமானவன். அன்ஃபார்ச்சுனேட்லி இந்த கேரக்ட்டர்தான் ஹீரோ.

அடுத்ததா படத்துல ரெண்டாவது மெயின் கேரக்ட்டர் மொத பாராவுல சொல்லிருந்த வில்லியம் டாஃபோ. அவர் யாரு என்னன்னு ஹீரோவுக்குத் தெரியாது. ஆனா, அவன் வீட்டுக் கதவைத் தட்டி, உன் வீட்டு பேஸ்பெண்ட்டை எனக்கு ரெண்டு மாசத்துக்கு, வாடகைக்குக் கொடுக்க முடியுமான்னு கேப்பாரு. ஆரம்பத்துல அவன் அதுக்கு சம்மதிக்க மாட்டான். ஆனா, ஆல்ரெடி அவனோட அந்த வீடு, ஏலத்துக்குப் போகுற கண்டிசன்ல இருக்கும். ஆல்ரெடி அத அடகு வச்சிருப்பான். இத்தனைக்கும் அவனோட குடும்பம் எட்டு தலைமுறையா அந்த வீட்டுலதான் வாழ்ந்திருப்பாங்க. இப்பத்தைக்கு சார்லஸ் பிளாக்கிதான் கடைசித் தலைமுறை. கடன் கழுத்தை நெரிக்கவும், அந்த பேஸ்மெண்ட வாடகைக்கு விட சம்மதிக்கிறான்.

இப்ப ரெண்டு விசயம் நடக்குது. ஒன்னு வில்லியம் டாஃபோக்கு வாடகைக்கு விட்டதால கிடைச்ச 65000 டாலர். ரெண்டாவது, ஆல்ரெடி பேஸ்மெண்ட்ல இருந்த அவனோட முன்னோர்களோட பழங்காலத்துப் பொருட்கள். ஆனா அவனைப் பொறுத்தவரைக்கும் அதெல்லாம் பழைய எடத்த அடச்சுகிட்டிருக்கற சாமான்கள். இவனோட குடும்பம் ஆஃப்ரிக்காவுல இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்க. ஆனா, அந்தப் பொருள்கள்ல சிலது நல்ல விலைக்குப் போகும்னு தெரிஞ்சிக்கிறான். ஆனா, நெனச்ச மாதிரி டக்குன்னு விக்க முடியலைன்னாலும், அதுக்குன்னு ஒரு வொர்த் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டான். நிற்க.

மறுபடியும் புதுசா வில்லியம் டாஃபோ குடிவந்த அவனோட வீட்டு பேஸ்மெண்டுக்கு வருவோம். புதுசா குடி வந்த ஓல்டு மேன் என்ன பண்றாருன்னு போய்ப் பாக்கலாம்னு எறங்கி கீழ வந்து பாத்தா, செமயான ஷாக் அவனுக்கும் படம் பாக்கற நமக்கும்.

வில்லியம் அங்க குடி வர்றதுக்காக வரல. தன்னையே சிறை வச்சிக்கறதுக்காகத் தான் அந்த பேஸ்மெண்ட வாடகைக்கு எடுத்திருக்காரு. ஒரு பத்துக்குப் பத்து கம்பிச் சிறைய உருவாக்கி, சார்லஸ் கீழ வரட்டும்னு வெய்ட் பண்ணிக் காத்துகிட்டிருப்பாரு. சார்லஸும் வந்து, ”யோவ் பெர்சே, என்ன இதெல்லாம்? ஏன் இந்த மாதிரி”ன்னு கேக்க, அவரும், “நா இப்டி இருக்கறதுக்காகத் தான் உன் பேஸ்மெண்ட ரென்ட்டுக்கு எடுத்தேன். எனக்கு மூனு வேளயும் சாப்பாடு மட்டும் கொண்டு வந்து கொடுத்துரு, ஏன்னா அதுக்கும் சேர்த்துத் தான் உனக்கு அறுவத்தஞ்சாயிரம் கொடுத்திருக்கேன்”னு சொல்ல, அவனுக்கு இது பெரிய பிரச்சினையில போயித்தான் முடியப் போகுதுன்னு அப்ப இருந்து அந்தாள வெறுக்க ஆரம்பிக்கிறான்.

ஏன்னா, சார்லஸ் ஒரு கருப்பினத்தவன். இப்படி தன்னோட் வீட்டு பேஸ்மெண்ட்ல ஒரு வெள்ளை இனத்து ஆளை சிறையில வச்சிருக்கான்னு தெரிஞ்சா, கன்ஃபார்ம் களிதான் ஜெயில்ல. அதுவுமில்லாம, அதை கருப்பினத்தவர்களே ஏத்துக்க மாட்டாங்கன்னு செமயா டர்ராவறான்.

ஆனா, வில்லியம்க்கு அதைப் பத்தியெல்லாம் கவலையில்ல. அப்டிலாம் எதுவும் நடக்காம நீதான் உன்னைக் காப்பாத்திக்கனும், எனக்கு இப்ப கட்டங்காப்பி கலக்கி எடுத்துட்டு வான்னு சொல்லி ஆர்டர் போடுறாரு. ஏன்னா காசு கொடுத்திருக்காரு. அந்த டீல் படி, தனக்கு மூனு வேளை கிடைக்க வேண்டிய அத்தியாவசியங்கள மட்டும்தான் கேக்கறாரு.

ஆரம்பத்துல பயந்துகிட்டு எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறான். ஆனா, வில்லியமோட காசு இனிமே தேவையில்ல. நமக்கு அந்த பேஸ்மெண்ட் பழய பொருட்கள வெலைக்கி வித்தாலே சமாளிச்சிடலாம்ங்கற நெலமயும் நெனப்பும் வர்றப்ப, ஆல்ரெடி தன்னை சிறைப்படுத்திகிட்டு அதோட சாவிய சார்லஸ் கையில கொடுத்த வில்லியம என்ன பண்ணிருப்பான்னு நெனச்சுப் பாருங்க.

ஆல்ரெடி, அவன் கையில காசில்லாதப்பவே தன்னோட ஸ்பான்சர்களான நண்பர்கள டீஸ் பண்ணி, அவங்க கடுப்பாகறதப் பாத்து, தான் ஜெயிச்சிட்ட்தாவும், தான் இப்பவும் அவங்களுக்கு மேலதான் அல்லது ஈக்வல் தான்னு நெனைக்கிற ஆளு. இப்ப அவனால வேற வழியிலயும் காசு பாக்க முடியும்ன்னா வில்லியம்ம என்னென்ன பண்ணிருப்பான்னு யோசிச்சுப் பாருங்க.

ஒன்னுமில்ல. சில காட்சிகள் குமட்டலெடுக்கறளவுக்குத் தான் இருக்கும். அதெல்லாம் பரவால்ல பாக்கலாம்ன்னு நினைக்கிறவங்க ட்ரை பண்ணுங்க. மத்தபடி, யாரும் ட்ரை பண்ண வேண்டாம். (இவ்ளோ தெளிவா சொன்னதுக்கப்புறமும், நல்லாருக்கா – நல்லால்லியா, பாக்கலாமா – கூடாதான்னு பூட்டை ஆட்ட வேண்டாம்.

இதே தலைப்புல வந்த ஒரு நாவலைத்தான் படமாக்கிருக்காங்கங்கற தகவலையும் தெரிஞ்சுகிட்டு முயற்சி பண்ணவும்.


Friday, September 26, 2025

Based on a true story (2023) - சைக்கோ கொலைகாரன்


 

Based on a true story - Season 1

அப்டின்னு ஒரு திரில்லர் வெப்சீரிஸ், ஹாட்ஸ்டார்ல. இதுவும் சீரியல் கில்லர் கதைதான். ஆனா பாட்காஸ்ட்தான் இதுல மெயினான விசயமா பிளே பண்ணிருக்கு. ஏற்கனவே வெஞ்சன்ஸ் அப்டின்னு ஒரு மிஸ்டரி காமெடி கதையைப் பத்தி நேத்துப் பாத்தோம்ல, ஹூடன்னிட் கதையை பாட்காஸ்ட் கண்டெண்டா வச்சு காமெடியா சொல்ல ட்ரை பண்ணிருந்தாங்கன்னு. இதுல அதுக்கெல்லாம் பல படிகள் மேல போயி, கொடூர அடல்ட் கண்டெண்டா எடுத்திருக்காங்க. இதுல ரெண்டு சீசன் இருக்கு. அதுல மொதல் சீசனைப் பத்தி மட்டும் இங்க பாக்கலாம்.

கதைப்படி ஹீரோ ஒரு டென்னிஸ் கோச். மிடில் ஏஜ்ங்கறதால அவர அங்க வேலை செஞ்சுகிட்டிருந்த கிளப்புல இருந்து டீபுரமோட் பண்ணிடறாங்க. இது அவருக்கு ரொம்பவே மன உளைச்சலா ஆகிடுது.  அதுல வர்ற இன்கம்மை நம்பி நெறய பிளான் வேற பண்ணி வச்சிருந்திருப்பாரு பாவம், இப்ப ரொம்ப நொந்து போயிடறாரு.

அவரோட மனைவி ஏழு மாச கர்ப்பிணி வேற. அவங்களும் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கரா வேலை செஞ்சுகிட்டிருக்காங்க. அவங்களுக்கும் அவங்க வேலையில பெருசா ஒன்னும் வருமானமில்லாம இருக்காங்க. இப்ப ரெண்டு பேரும் என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டிருக்கறப்ப, வீட்டுல உள்ள டாய்லெட்ல தண்ணி தாறுமாறா ஓவர்ஃப்ளோ ஆகி அதுவும் ரிப்பேராகிடுது.

அப்ப ஒரு ப்ளம்பரைக் கூப்ட்டு ரிப்பேர் பண்றாங்க. அவன் நல்லவனாத்தான் இருக்கான்னு காசுக்கு பதிலா, அவனுக்கு வாரம் ரெண்டு நாள் டென்னிஸ் கோச்சிங் கொடுக்கறேன்னு பண்டமாற்று முறையில அதைச் சரிகட்டப் போயி, அவனோட நல்ல ஃப்ரெண்டா ஆகிடறாரு நம்ம ஹீரோ.

ஆனா சில நாட்கள்ல அவங்க ரெண்டு பேருக்குமே தெரிய வருது, அவன்தான் அந்த ஊர்ல சமீபத்துல நடந்த பல கொலைகளைச் செஞ்ச வெஸ்ட்சைட் ரிப்பர் சைக்கோ கொலைகாரன்னு.

நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்?

நூறுக்கு காலடிச்சிருப்போம்ல? அதுவே அமெரிக்காங்கறதால 911க்கு காலடிச்சு விசயத்த சொல்லிருக்கனும்ல? ஆனா இவங்க அதெல்லாம் பண்ணாம, அவன்கிட்ட டீல் பேசறாங்க – இந்த மேறி இந்த மேறி, நாங்க ஒரு பாட்காஸ்ட் நடத்தலாம்னிருக்கோம் உன்னைப் பத்தி. கவலைப்படாத, உன்னோட ஐடெண்டிட்டிய வெளிய நாங்க சொல்ல மாட்டோம். அதனால நீ இதுக்கு ஒத்துழைச்சா, வர்ற அமவுண்ட்ல ஆளுக்கு இவ்ளோன்னு ஷேர் பண்ணிக்கலாம்னு.

அதுக்கு அவன் சரின்னு ஒத்துக்குறான். ஆனா இது புலி வாலைப் புடிச்ச கதைன்னு போகப் போகத்தான் அவங்களுக்கே புரிய வருது. ஆரம்பத்துல அந்த டீல்ல பல கண்டிசன்களும் போட்ருந்தாங்க. அதுல முக்கியமான கண்டிசன் என்னன்னா, இனிமேல் புதுசா எந்தக் கொலைகளையும் பண்ணக் கூடாதுன்னு. ஆனா சைக்கோ கொலைகாரன் அந்த மாதிரியெல்லாம் இயங்க மாட்டானே.

எப்பவெல்லாம் ஒரு ஸ்மோக்கருக்கு அந்த டெம்ப்ட்டேசன் வருதோ, அப்பவெல்லாம் ஸ்மோக் பண்ணுவான் இல்லையா? அந்த மாதிரிதான் சைக்கோ கொலைகாரங்களும். எப்பவெல்லாம் அந்த டெம்ப்ட்டேசன் வருதோ அப்பவெல்லாம் கொலை பண்ண ஆரம்பிச்சிருவாங்க. இதுல இவங்க தங்களையும் காப்பாத்திக்கனும். ஆபத்துன்னா அவனைக் காட்டிக் கொடுக்கவும் முடியாம, தங்களோட ஃப்ரெண்ட்ஸையும் காப்பாத்திக்க முடியாம படாதபாடு படறாங்க.

இதுல அவன் சரக்கடிக்கப் போலாம்னு கூப்ட்டா இவங்க வரமாட்டோம்னு ஒரு வாட்டி சொல்லலாம். ஓயாமா அவன் சொல்றதுக்கெல்லாம் மறுப்பும் சொல்ல முடியாது. அப்டிக் கூடப் போனா, அவன் சொல்றதைத் தான் இவங்க செய்யனும். பொசுக்குன்னு கொலை பண்ணிட்டு அதை டிஸ்போஸ் பண்ணிடுங்கன்னு சொல்லுவான். இவங்க அதைச் செய்யனும்.

இதெல்லாம் கூட பரவால்ல. ஒரு மாதிரி காமெடியா போய்ட்டிருக்கும். அடிக்கடி அடல்ஸ் ஒன்லி டயலாக்ஸும் காட்சிகளும் வரும். அதுலயும், குடிபோதையில மனசுல உள்ள டீப் டிசையர்ஸ் எல்லாம் பச்ச பச்சயா பேசுவானுக வேற. இத்தனைக்கும் இந்த சீரிஸோட புரொடியூசர் யார்ன்னு தெரியுமா? பிக் பேங் தியரி கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த சிட்காம்ல ஹீரோயினா நடிச்ச கேலே குவாக்கோ தான் இதோட எக்சிக்யூட்டிவ் புரொடியூசர். இந்தம்மாவும் மேற்படி சொன்ன மாதிரி தான் நடிச்சிருக்கு.

ஒரு சீசன் எட்டு எபிசோடுகள். ஒவ்வொன்னும் ஒரு மணி நேரம். ரொம்ப அறுக்காம இண்ட்ரஸ்ட்டிங்கா தான் போகுது. பாக்கனும்னு நெனைக்கிறவங்க ஹெட்ஃபோன் யூஸ் பண்ணிட்டுப் பாருங்க. அப்புறம் நான் சொல்லலன்னு சொல்லிட்டு வந்து சண்டைக்கி நிக்காதிங்க.

அப்புறம் ஒரு வேண்டுகோள். பதிவு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. 

இது மாதிரி பதிவுகள் எல்லாத்தையும் படிக்கனும்னு விரும்பினா ரைட் டாப் கார்னர்ல FOLLOW பட்டன் இருக்கு, அதை கிளிக் பண்ணுங்க!


சுமதி வளவு (2025) - ஹாரர்

 


சுமதி வளவு

அப்டின்னு ஒரு மலையாளப் பேய்ப்படம். வளவுன்னு டைட்டில் இருக்கறதால, தமிழ்ல அப்டி ஒரு பதம் இருக்கு, இது அதில்ல. அவங்களுக்கு தமிழ்ல வளைவு (பெண்ட் – திருப்பம்)ங்கறத சரியா சொல்ல வரல. அதனால, சுமதி வளவுன்னே வச்சிட்டாங்க. உண்மையில இதுல பேசியிருக்கற தமிழ் டப்பிங் கூட அப்டித்தான் இருக்கு. தமிழ் பேச வரும்ங்கற ஆட்கள வச்சு டப் பண்ணிருக்காங்க. அது நீங்க படத்தப் பாக்கும் போது புரியும். சரி இன்னும் எனக்கு என்னென்ன இந்தப் படத்துல புரிஞ்சதுங்கறத பாக்கலாம் வாங்க.

கதைப்படி, இது தமிழ்நாடு பார்டர்ல உள்ள ஒரு கேரளா ஊர். அங்க ஒரு எஸ் பெண்டு இருக்கு. எஸ்ன்னா, சரியாவே அது எஸ் தான். அது ஆங்கிலேயர்கள் காலத்துல இருந்து ஒரு மித்தோட இருக்கற ஊர். அங்க ஒரு பேய் இப்பவும் இருக்கு. அந்தப் பேயோட பேருதான் சுமதி. அதனாலயே அந்த திருப்பத்துக்கு மட்டும் சுமதி வளவுன்னு பேரு. நைட்டு எட்டு மணிக்கு மேல அங்க உள்ள செக்போஸ்ட்டைக் கூட தெறக்க மாட்டாங்க. ஊருக்குள்ள போகனும்ன்னா அதுதான் ஒரே வழி. செக் போஸ்ட் தாண்டி இருக்கற சுமதி வளவைக் கடந்தே தான் போயாகனும்.

மீறிப் போனா…

அவ்ளோதான். நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குற காட்டு வழியில இருக்கற எஸ் பெண்ட் அது. மீறி ராத்திரி நேரங்கள்ல போனவங்களுக்கு நிச்சயம் எதாவது ஒரு சம்பவம் அல்லது திகில் அனுபவங்கள் நடந்தே தீரும். அதைத் தெளிவா படத்துல ரெஜிஸ்ட்டர் பண்ணிருக்காங்க. இது மட்டும்தான் கதையா? படத்துல கடைசி வரைக்கும் பயமுறுத்திட்டே தான் இருப்பாங்களா?ன்னு கேட்டா, இல்ல - இது போக ஊருக்குள்ள தனிப்பட்ட முறையில நிறைய கதை, காதல், காமம், போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள்னு நெறய இருக்கு.

ஹீரோ ஒரு பயந்தாங்கொள்ளி. தனியா பாத்ரூம் கூட போக பயப்படற ஆம்பள. அதை மொத ஹீரோ அறிமுகக் காட்சியிலயே நமக்கு சரியா புரியிற மாதிரி பதிவு பண்ணிடறாங்க. இதனால, ஊர்ல எல்லார்கிட்டயும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிட்டிருக்கற ஒரு சாதாரண ஆள். ஆனாலும், அவனுக்கு இதைப் பத்தியெல்லாம் கவலையில்ல. கவலைப்படறளவுக்கு பெரிய பிரச்சினை ஒன்னு இருக்கு. அது யுனிவர்சல் பிரச்சன. அவன் யாரை லவ் பண்ணாலும், அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணமாகிடும். அந்தக் கல்யாணத்துல பந்தி பரிமாறிகிட்டிருப்பான் சோகமா. இதுவே ஒரு கட்டத்துல நாம ஃபீல் பண்றளவுக்கு அந்தக் காட்சிகள அமைச்சிருக்காங்க.

ஹீரோயின் ஒரு ஸ்கூல் டீச்சர். ஜோ படத்துல ரியோவுக்கு ஜோடியா நடிச்ச மாளவிகா மனோஜ் தான் அந்த ஹீரோயின். ஹீரோ ரோமாஞ்சம் படத்துல நடிச்ச அர்ஜுன் அசோகன். ஒரு ஃபைட்ல வில்லன அடிக்கப் போறப்ப, அவன் குனிய, அந்த அறை ஹீரோயின் மேல விழுந்துடுது. அதை வச்சு செமயா லவ் பண்ண வச்சிருக்காங்க. சினிமால மட்டுந்தாண்டா, அடிச்சாக் கூட காதல் வருது. நாமெல்லாம், கண்ணே பொன்னேன்னு கொஞ்சினாக்கூட காதல் வர்றதில்ல. நம்ம டிசைன் அப்டி.

இதெல்லாம் போக, ஹீரோ மேல ஹீரோயினோட மொத்தக் குடும்பமும் ஒரு தீராத கோபத்துல இருக்கு. அதாவது, அவங்க வீட்டுப் பொண்ணு ஒருத்தங்க ஓடிப் போறதுக்கு ஹீரோதான் ஹெல்ப் பண்ணிருக்கான்னு. அதுல நெஜமா நடந்தது என்னன்னு படத்தோட கடைசி சீன் வரைக்கும் சஸ்பென்ஸ்லயே வச்சிருந்தது செம.

இது யூஸ்வல் பேய்ப்படம் இல்ல. பேய்ங்கறது இந்தப் படத்துல வெறும் மித் மட்டும் இல்ல. அதையும் தாண்டி, படத்துல அது ஒரு முக்கியமான கேரக்ட்டர். அதனாலதான், அதோட பேரை அந்த எஸ் பெண்டுக்குன்னு மட்டும் இல்லாம, படத்தோட டைட்டிலாவும் வச்சிருக்காங்க.

இதுபோக எனக்குப் படத்துல ஒரு ஒவ்வாமையும் இருக்கு. அதாவது, படம் பாக்கற ஆடியன்ஸான நமக்கு, செண்டிமெண்ட் ஃபீலாகனும்ங்கறதுக்காக, கொழந்தைங்களைக் கொல்லுறது, புள்ளத்தாச்சியக் கொல்லுறதுன்னு ஏன் இவ்ளோ டீப்பா எறங்கிப் போறாங்கன்னு புரியல. இதையெல்லாம் நார்மலைஸ் பண்ணாதிங்க ப்ளீஸ். இதைப் பாக்கற நமக்கு செண்டிமெண்ட் ஃபீலாகறதுக்கு பதிலா, டிஸ்ஸப்பாய்ண்ட்டாவும், அதிருப்தியாவும்தான் ஃபீலாகுது.

மொத்தத்துல இந்தப் படத்தை பகல்ல பார்த்தா அவ்வளவா எஃபெக்ட்டாகாது. முடிஞ்சவரைக்கும், பொழுது சாஞ்சதுக்கப்புறமா பாருங்க. ஹார்ரை ஃபீல் பண்ணுவீங்க.


Thursday, September 25, 2025

Vengeance (2022) - காமெடி/மிஸ்டரி

 


Vengeance

அப்டின்னு ஒரு காமெடி கலந்த மிஸ்டரி ஜானர் படம். நாமதான் மிஸ்டரின்னு எழுதியிருந்தாலே அந்தப் படத்தையோ, வெப்சீரிஸையோ பாத்துருவமே, அப்டிப் பார்த்ததுதான். அதுவும் டைட்டில் கார்டுல ப்ளம்ஹவுஸ்னு பார்த்ததும் எனக்கு அவ்ளோ சந்தோசம். அடடே எப்பவும் பாக்கறதுக்கு எந்தப் படமும் கெடைக்கலேன்னா, ப்ளம்ஹவுஸ் மூவிஸ்னுதான் தேடிப் போய் பார்ப்பேன். இப்ப நான் இது தேடாமயே கெடச்சது வேற. செம குஷியா பாக்க ஆரம்பிச்சா, கொஞ்ச நேரத்துல டொய்ங்ன்னு ஆகிருச்சு. வாங்க அது என்னன்னு பார்க்கலாம்.

கதைப்படி ஹீரோ ‘பென்’ ஒரு எழுத்தாளர். ஜர்னலிஸ்ட்டா இருந்துகிட்டே, பாட்காஸ்ட்டும் பண்ணிட்டிருக்கறவரு. அவனுக்கு ஒரு சமயம் ஒரு அன்னோன் நம்பர்ல இருந்து ஒரு ஃபோன் கால் வருது. அதுல அழுதுகிட்டே ஒரு குரல், உங்க கேர்ள் ஃப்ரெண்ட் எறந்துட்டா. நா அவளோட அண்ணன் பேசறேன்னு சொல்லுது. பென்னுக்கு செம ஷாக்கு – 'அய்யய்யோ... என் கேர்ள் ஃப்ரெண்ட் எறந்துட்டாளா’ன்னில்ல, யாரு அந்த கேர்ள் ஃப்ரெண்டுன்னு. ஏன்னா இப்பக் கூட ஒரு ஹூக் அப்ல தான் ஒரு பொண்ணு கூட படுத்து தூங்கிட்டிருக்காரு பென். இந்த நவீன டேட்டிங் வாழ்க்கையில கேர்ள் ஃப்ரெண்ட் செத்துட்டான்னு நட்ட நடு ராத்திரி கால் பண்ணி அழுதா, யார்ன்னு கன்ஃப்யூஸ் ஆகுமா, ஆகாதா?

வேண்டா வெறுப்பா, அவளோட இறுதிச் சடங்குக்கு நியூயார்க்ல இருந்து டெக்சாஸ் வர சம்மதிச்சு அங்க போறாரு பென். எல்லாரும் அவளோட சவப்பெட்டிக்கு முன்னாடி அழுதுகிட்டும் அவளைப் பத்தி இறுதி மரியாதை ஸ்பீச் குடுத்துகிட்டும் இருக்காங்க. ஆனா, பென்னுக்கு அவ மூஞ்சி கூட நியாபகத்துல இல்ல. பார்த்துகிட்டிருக்கற நமக்கு இது காமெடியாக் கூட எலவேட்டாகல. அஃப்கோர்ஸ் செண்டிமெண்டாவும் இல்ல. தேமேன்னு ஸ்கிரீன்ல படம் ஓடிட்டிருக்கு, அதே தேமேன்னு நாமளும் எந்த ரியாக்சனும் இல்லாம என்னடா இதுன்னு பென்னோட ஃபீல்லயே படத்தைப் பார்த்துகிட்டிருக்கோம்.

அடுத்து பென்னை அங்கிருந்து செண்ட் ஆஃப் பண்ண அவளோட அண்ணன் (கால் பண்ணி விசயத்தை சொன்னவன்) கார்ல போறப்ப, அபிலின் சாகல. அவள யாரோ கொன்னிருக்காங்கன்னு சொல்ல, பென்னும், ஓ அப்டியான்னு தான் ரியாக்ட் பண்ணுவான். இன்ஃபாக்ட் நமக்கும் அப்டித்தான் இருக்கும். அதுக்கப்புறம், நாம ரெண்டு பேரும் அவன் யாருன்னு கண்டுபுடிச்சு அவனைக் கொன்னு பழிவாங்கனும்னு சொல்லுவான். பென், இதுக்கு திருதிருன்னு முழிச்சுகிட்டே, ‘ஙே…’ அதெல்லாம் எனக்கு பழக்கமில்லப்பான்னு இதுல இருந்து இவனை சமாளிச்சி ஊர் வந்து சேந்தா போதும்னு சமாளிச்சுகிட்டிருப்பான்.

ஆனா அந்த எடத்துல அவனுக்கு இன்னொரு யோசனையும் தோணும். இது ஒரு செம கண்டெண்ட். இத வச்சு நாம பாட்காஸ்ட் பண்ணா நல்லா ரீச்சாகும்னு தன்னோட கலீக் கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டதும், அவளும் நல்ல ஐடியான்னு சொல்ல, “சரி இனி நான் அவளைக் கொன்னது யார்ன்னு கண்டுபுடிக்காம என் ஊருக்கு போக மாட்டேன்”னு அவங்க வீட்டுலயே தங்கி, பாட்காஸ்ட்டுக்கு ரெக்கார்ட் பண்ணிட்டே திரியறாப்ல.

கடைசில அவன் கொலைகாரனக் கண்டுபுடிச்சானா, இல்லையான்னு விசாரணையெல்லாம் பண்ணுவான்னு பாத்தா, எல்லார்கிட்டயும் போய் பேட்டியெடுத்துகிட்டே இருக்கான். நமக்கு என்னடாது, இந்தப் படம் முடிஞ்சா போதும், இல்லன்னா இப்பவே ஆஃப் பண்ணிறலாமான்னு தோன வக்கிது. ஆனாலும், உள் மனசுல, இவன் எங்கயாவது போய் வசமா ஒத வாங்குறதப் பாத்துட்டு ஆஃப் பண்ணிடலாம்னு அப்டியே படம் முழுக்க பார்க்க வச்சிடுச்சு. ஆனா இந்த எண்ணமெல்லாம் கொஞ்ச நேரத்துல காணாமப் போயி, வேற என்னமோ இருக்குன்னு நம்மள ஃபீல் பண்ண வச்சு முழுசா படத்தைப் பார்க்க வச்சிடுச்சு. அதான் உண்மை.

உண்மையில, நான் என்ன நினைச்சுகிட்டு படத்தைப் பார்த்துகிட்டிருந்தேன்னா, நெசமாவே அபிலின்னு ஒரு பொண்ணே கெடயாது. இது மொத்தமும் இத்தன பேர்த்த வச்சு இறுதிச்சடங்கு மாதிரி பென்னை நம்ப வக்கிறதுக்காக ஸ்டேஜ் பண்ணிட்டிருக்காங்க.

எதுக்காக?

அப்டின்னு யோசிச்சிட்டிருக்கும் போதே, இது சாதாரண சாவில்ல. கொலை. கொலைகாரனைக் கண்டுபுடிச்சு பழிவாங்கனும்னு அவளோ அண்ணன் சொன்னதும் – ஓகே இதான் ரீசன். ஒரு கொலையைச் செய்ய அல்லது அந்தப் பழியை ஏத்துக்க ஒரு பலியாடு தேவை. அதுதான் பென். அப்டின்னு நெனச்சுகிட்டேதான் பாத்தேன். ஏன்னா படத்துல பென்னும் அபியும் ஒன்னா இருக்கற மாதிரி எந்த ஃப்ளாஸ்பேக் சீனும் கெடயாது. அவளோட டெட் பாடியக் கூடக் காட்டியிருக்கலன்னா, நாம வேற எப்டிதான் நெனப்போம்.

ஆனா இப்பவும் சொல்றேன். ப்ளம்ஹவுஸ் இஸ் த பெஸ்ட். சும்மா ஒன்னும் அவங்க இந்தப் படத்தை எடுக்கல. கதையில ஒரு விசயம் இருக்கப் போய்த்தான் இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. அது படம் முழுக்கப் பார்த்ததுக்கப்புறம்தான் ஆடியன்ஸ் ஃபீல் பண்ணனும்னு அவ்ளோ பர்ப்பஸா பண்ணிருக்காங்க. ரொம்ப ட்ரைய்யா லேகிங்காத்தான் படம் போகுது. இன் சம் பாய்ண்ட் உள்ள போயிடுறோம். உண்மையில படத்தைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம்தான் ஹூடன்னிட்டா இதுன்னு – பாஸ் என்கிற பாஸ்கரன்ல, சொல்ற “டீச்சரா அவுங்க?”ங்கற மாதிரி ஃபீலாகுது.

ஹாட்ஸ்டார்ல இருக்கு. பார்க்கனும்னு நினைக்கிறவங்க பார்த்துட்டு வாங்க.


Wednesday, September 24, 2025

Marvel Zombies (2025) - Web series

 


Marvel Zombies

அப்டின்னு நாலு எபிசோடுகள் மட்டுமே உள்ள ஒரு வெப்சீரிஸ். கூட்டிக் கழிச்சுப் பாத்தா மொத்தமே ரெண்டு மணி நேரங்கள் மட்டுமே ஓடக் கூடியது தான். இதை ஒரு படமாவே ரிலீஸ் பண்ணிருந்திருக்கலாம். அதுவும் தியேட்டரிக்கலா. ஆனா இவங்களுக்கே இது மேல ஒரு பயம். ஏன்னா இது ஆர் ரேட்டட்ங்கறதால, அண்டர் எய்ட்டீன் ஆடியன்ஸ் அதிகமா உள்ள மார்வலுக்கு அதைக் கெடுத்துக்கற எண்ணம் இல்லாததனால அனிமேட்டடா மட்டுமே ரிலீஸ் பண்ணிருக்காங்க அதுவும் ஹாட்ஸ்டார்ல. உண்மையில இது ஒரு லைவ் ஆக்சனா வந்திருந்தா செம ட்ரீட்டா இருந்திருக்கும். மார்வெல் மேல இதுவரைக்கும் இருந்த ’தீம் பார்க்’ விமர்சனங்களுக்கு நல்ல பதிலா அமைஞ்சிருக்கும். ஆனா, நமக்கு வாய்ச்சது இந்த அனிமேசன் ட்ரீட் மட்டும் தான். சரி வாங்க அது எப்டி இருக்குன்னு பாத்துடலாம்.

கதைப்படி, இது போன வாட் இஃப் சீரிஸ்ல வந்த ஜோம்பி அபாகலிப்ஸ் எபிசோடோட ஒரு தொடர்ச்சி அல்லது நீட்சி தான். அதாவது இதோட காலவரிசைப்படி 2018ல இருந்து 2023 வரைக்குமான கதை. அதாவது, தானோஸோட ஸ்னாப் நடக்கல. ஆனாலும், இந்த குறிப்பிட்ட அஞ்சு வருசத்துல உலகம் ஜோம்பி அபாகலிப்ஸ்ல கொடூரமா அழிஞ்சிட்டிருக்கு. ஆக மொத்தம் மார்வெல் கதைப்படி இந்த அஞ்சு வருசமும் எதோ ஒரு கெட்ட சம்பவம் நடந்தே தீரனும்ங்கறது ஒரு பாய்ண்ட். ஒன்னு தானோஸோட ஸ்னாப்பால இல்லன்னா இந்த ஜோம்பி வைரஸால.

இந்த வைரஸ் எப்டி வந்ததுன்னா, ஜேனட் வான் டைன் இருக்காங்க இல்லையா, அவங்க ஒருமுறை ஒரு ஆட்டம் பாம செயலிழக்க வைக்க ஆட்டம் ஃபார்ம்ல அதைச் சுருக்கி தன்னையும் சுருக்கி, குவாண்டம் ரியால்முக்குள்ள போயி மறைஞ்சிருப்பாங்க. அவங்கள திருப்பிக் கொண்டு வர ஹேங்க் பிம் குவாண்டம்க்குள்ள போனப்ப, அவங்க ஆல்ரெடி ஜோம்பி வைரஸால அஃபெக்ட்டாகிருப்பாங்கன்னு போன வாட் இஃப் ஜோம்பி அபாக்கலிப்ஸ் எபிசோட்லயே பாத்தோம். அதோட தொடர்ச்சி தான் இந்த சீரிஸ். அதனால, மொத்த உலகமும் ஹேங்க் பிம்மோட எறும்புகளால ஈஸியா பாதிக்கப்பட்டிருக்கும். இதுலாம் சரியாச்சா இல்லையாங்கறதுதான் இந்த சீரிஸோட கதை.

சரி அப்ப, இந்த அவெஞ்சர்ஸ் என்ன ஆனாங்க?

இந்தக் கேள்வி நமக்கு அயன்ல பொன்வண்ணன், சூர்யாகிட்ட கேக்கற மாதிரி நம்ம மனசுலயும் ஒரு கேள்வி கேக்குதில்லையா? சரிதான். இந்த ஆறு அவெஞ்சர்ஸ்ல ஹல்க்கையும் தோரையும் தவிர மத்த நாலு பேரும் காலி. செத்தாலும், ஜோம்பியா சுத்திட்டிருப்பாங்க. ஆனா அதுலயும், டோனி ஸ்டார்க்க, விண்டர் சோல்ஜர் ஷீல்டால தலைய வெட்டி ரெஸ்ட் இன் பீஸாக்கிருப்பான். அதுல ஹாக் ஐ ஜோம்பியானதுக்கப்புறமும், ஒரு ஊரையே தன்னோட கட்டுப்பாட்டு சர்வைலன்ஸ்லதான் வச்சிருப்பான்.

இப்ப நாம மெயின் கதைக்கு வருவோம். இப்ப கதையில ஒரு டைம் ஜம்ப். அதாவது தானோஸோட ஸ்னாப்ப ‘டெசிமேசன்’னு சொல்லுவாங்க. அந்த டெசிமேசனுக்கப்புறம் நிறைய புது அவெஞ்சர்ஸ் உருவாகிருப்பாங்க. இல்லன்னா, அவெஞ்சராகனும்னு ட்ரை பண்ணிட்டிருப்பாங்க. மார்வெலும், இந்த மாதிரி உள்ளவங்களோட கதையைத்தான் படமா வெப்சீரிஸா எடுத்து நம்மள கொலையா கொன்னுக்கிருந்தாங்க. அதுல ஒரு மூனு மெயின் ஹீரோஸ் இருக்காங்க. உண்மையில இந்த மூனும் வயசுப்பொண்ணுங்க. மேபி இன்னும் பதினெட்டாகாதவங்க. ஹாக் ஐ சீரிஸ்ல வந்த ’கேட் பிசப்’, மிஸ் மார்வெல்ல வந்த ’கமாலா கான், அப்புறம் அயன் ஹார்ட்ல வந்த ’ரீரி வில்லியம்ஸ்’ – இந்த மூனு பேரும்தான் மெயின் லீட் இந்தக் கதையில. ஆனா கொஞ்ச நேரத்துலயே கமாலா கான் மத்த ரெண்டு பேர்த்தையும் ஓவர் டேக் பண்ணி, உலகத்தக் காப்பாத்த ஒரு ட்ராவல் பண்றாங்க.

இது உண்மையில, ஒரு ரோட் மூவி அல்லது ஒரு வார் மூவின்னும் சொல்லிக்கலாம். கதை மூவ் ஆகிட்டே இருக்கு. அதுல கமாலா கூட வந்து ஜாய்ன் பண்றவங்க யார்னு பாத்தா மொத கேரக்ட்டரே செம சர்ப்ரைஸ் – அது பிளேடு. (லாங்குவேஜ்) அடுத்து மெலினா பெலோவா, யெலினா பெலோவா, அலெக்சீ, சேங்ச்சீ, கேட்டின்னு, பீட்டர் பார்க்கர், ஸ்காட் லேங், கிங் டச்சாலா, வால்க்கிரீ, ஜிம்மி வூ, ஃப்ரைடேன்னு அங்கங்க ஒரு பெரும்படையே வந்து சேருது. இதுல இவங்க கையில ஒரு ட்ரான்ஸ்மீட்டர் கெடைக்கிது. அது ஒரு குவீன் ஜெட்ல உள்ள ஒரு ஜாம்பிகிட்ட இருந்து கிடைக்குது. அது என்ன செய்யும்னு ரீரியும், மெலினாவும் ரிசர்ச் பண்ணி, அது நம்ம கிரகத்துக்கு வெளிய நோவா கிரகத்துக்கு சிக்னல்ஸ் அனுப்பும். அத வச்சு அவங்க வந்து நம்ம உலகத்த இந்த ஜோம்பி அபாகலிப்ஸ்ல இருந்து காப்பாத்துவாங்கன்னு கண்டுபுடிக்கிறாங்க. ஆனா, பூமிக்கி வெளிய பறக்கற ஜெட் மாதிரி கிடைக்க கொஞ்சம் அலையிறாங்க.

இவ்வளவுக்கும் நடுவுல, இந்த ஜோம்பி அட்டாக்ல இருந்து ஒரு மெயின் வில்லன் உருவாகிருக்கனுமே? ஆகிருக்காங்க. அது நம்ம வாண்டா. அவதான் இதுல குவீன் ஆஃப் டெத். அவ தன்னோட மைண்ட் கண்ட்ரோல் பவரால, மொத்த ஜாம்பிக்களையும் டேக் ஓவர் பண்ணிடறா. இதுல இவளுக்கு ஒரு தளபதி வேணும் இல்லையா? அதுதான் டோரா மிலாஜேக்களின் தலைவியான ’ஒகோயே’.

அப்ப தானோஸ் வர மாட்டாரான்னு கேட்டா, வருவாரு. அவரும் இதுல ஒரு ஜாம்பியா இருக்காரு. அப்பவும் அவர் கையில இன்ஃபினிட்டி காண்ட்லெட்டும் இருக்கு, அதுல இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ்ல அஞ்சும் இருக்கு. ஒரே ஒரு ஸ்டோன் மட்டும் இல்ல. அது நம்ம பீட்டர் பார்க்கர், ஸ்காட் லேங் அண்ட் பிளாக் பேந்தர்கிட்ட இருக்கு. அத வச்சுத்தான் அவங்க பெருசா ஜாம்பிகள்கிட்ட மாட்டிக்காம தப்பிச்சிட்டிருக்காங்க. அதுதான் விசன் மண்டையில இருந்த மைண்ட் ஸ்டோன். விசன் சாகாம தப்பிச்சிருந்தாலாவது வாண்டா விசனேன்னு இருந்திருப்பா. ஆனா உலகத்தக் காப்பாத்த தன்னோட மண்டையில இருந்து மைண்ட் ஸ்டோன எடுத்துக் கொடுத்துட்டு, விசன் மண்டைய போட்ருப்பான். அதனால ‘விசனே’ன்னு இருந்திருக்க வேண்டியவ ‘அய்யோ விசனே’ன்னு வில்லியாகிட்டா வாண்டா.

அந்த வாண்டாவ கமாலா கான் அண்ட் கேங் ஜெயிச்சாங்களா இல்லையான்னு ரெண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்த வெப்சீரிஸ் மொத சீசனைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க. இதுல நிறைய பெஸ்ட் மொமண்ட்ஸ் இருக்கு. அதுல பாதி எல்லாமே, ஆல்ரெடி வந்த பெஸ்ட் மொமண்ட்ஸ இந்த ஜாம்பி அபாக்கலிப்ஸ் கதைக்கு ஏத்த மாதிரி திரும்பவும் அழகா ரீகிரியேட் பண்ணிருக்காங்க. பாத்து எஞ்சாய் பண்ணிட்டு வாங்க மக்களே!


Tuesday, September 23, 2025

The Mystery of Moksha Island (2025) - திரில்லர் வெப்சீரிஸ்

 


The Mystery of Moksha Island
அப்டின்னு ஒரு மிஸ்டரி ஜானர் வெப்சீரிஸ். இத ஒரு தெலுங்கு வெப்சீரிஸோட தமிழ் டப்பிங்ல பார்த்தேன், ஹாட்ஸ்டார்ல. நமக்கு பொதுவாவே மிஸ்டரி ஜானர்ன்னா அதை நிச்சயம் பார்த்துடுவேன். அவ்ளோ புடிக்கும். ஆனா எல்லா படங்களும் வெப்சீரிஸ்களும் அந்த ஜானர்ல நம்மள திருப்திப் படுத்திடாதுதான். அதுக்காக அதைத் தவிர்க்கறது மட்டும் நம்மகிட்ட நடக்காது. எப்டின்னாலும் பாத்துடுவேன். உண்மையில ஃபீல்குட் அண்ட் லவ் ஜானர்ன்னா தான் கொஞ்சம் பயப்படுவேன். நானெல்லாம் ‘காதல்’ படத்த முழுசா பாக்க பயந்துகிட்டு இண்டர்வெல்லுக்கு அடுத்த ஒரு சீன்ல தியேட்டரை விட்டே வெளிய ஓடி வந்தவன். படம் நல்லால்லேங்கறதுக்காக இல்ல. அதுல பரத்தும் சரண்யாவும் தங்க இடம் இல்லாம நைட்ஷோ தியேட்டர்ல ரெண்டு ஷோவுக்கு போயிட்டு அடுத்து கிடைக்கற பஸ்ல ட்ரிப் அடிச்சிட்டே இருக்கனும் விடியிற வரைக்கும்னு பரத்தோட நண்பரா வர்ற சுகுமார் சொன்னதும், நம்மால தாங்க முடியல அவங்க படப்போற கஷ்டத்தை நெனச்சு. அவ்ளோதான் அன்னிக்கி தியேட்டரை விட்டு வெளிய ஒடியாந்தவன் தான். இன்னிக்கி வரைக்கும் அந்தப் படத்தை அதுக்கு மேல பார்க்க தைரியம் வரல. ஆனா, இதுவே எவ்ளோ கொடூரமான ரத்தம் சதைகள் தெறிக்கிற படம்னாலும் எறங்கி தூர்வார்ற வரைக்கும் பாத்துகிட்டிருப்பேன். என்ன ஒரு மானங்கெட்ட மனசோ நமக்கு. சரி நாம இந்த வெப்சீரிஸ் எப்டியிருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி, விஷ்வாக் சென் அப்டின்னு ஒரு சைண்டிஸ்ட் எறந்துடறாரு. அவரோட லேப் கம் மொத்த அசெட்ஸும் ஒரு தீவுதான். அதுல இருந்து அவரோட வாரிசு ப்ளஸ் மிச்சம் மீதி சொந்தங்களுக்கு சொத்துல பங்கு எழுதி வச்சிருக்காரு வாங்கன்னு ஒரு இன்விட்டேசன் வருது. உண்மையிலேயே ஒரு இன்விட்டேசன் ப்ரிண்ட் பண்ணி வருது. நவ் யூ சீ மி-ல டாரோட் கார்ட வச்சு ஃபோர் ஹார்ஸ்மேன் டீமுக்கு இன்விட்டேசன் வர்ற மாதிரி.
அப்டியே டிசைன் டிசைனான வயசுல பல சொந்தங்களும் வாரிசுகளும் ஒரு யாஹ்ட்ல அழைச்சிட்டு போகப் படறாங்க. அங்க அந்த சைண்டிஸ்ட்டோட காரியதரிசி தான் இப்போதைக்கி இவங்கள இந்தத் தீவுக்கு அழைச்சிட்டு வந்ததுன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிறா. அவதான் அவரோட தற்போதைய மனைவியும் கூட. அதே மாதிரி அவரோட லைஃப்ல எக்கச்சக்க ரிலேசன்சிப்ஸ் இருந்திருக்கு. அதனாலதான் இத்தன பேரு அவரோட வாரிசுகளா இருக்காங்க. ஏகத்துக்கும் வெளயாடிருக்காப்ல. எந்த ரிலேசன்சிப்லயும் நிரந்தரமா இருந்ததே இல்ல. அப்டி எல்லாருக்கும் சரிசமமா பங்கு தர்றளவுக்கு சொத்து இருக்கு தான். ஆனா அதுக்கு ஒரு வாரம் அந்தத் தீவுலயே தங்கியிருக்கனும். நடுவுலயோ, இல்ல இப்பவேவோ தீவை விட்டுப் போயிட்டா, சொத்து வேணாம்னு ஒரு அஃபடவிட்ல சைன் பண்ணிட்டுத்தான் போகனும். அப்ப சொத்தும் கிடைக்காது. ரெண்டு பேர் மட்டும் ரொம்ப நல்லவங்களா மொதல்ல எடுத்த எடுப்புலயே இல்லேல்ல எங்களுக்கு இந்த சொத்தெல்லாம் வேணாம்னு கெளம்பிடறாங்க.
அடேங்கப்பா, ஒரு வாரம் தங்கினா ஆயிரம் கோடியான்னு ஆளாளுக்கு சரின்னு தங்க ஆரம்பிச்சாலும், மொதல்ல இருந்தே எல்லாருக்கும் மனசுல ஸ்குவிட் கேம்ல வர்ற மாதிரி, யார் செத்தாலும், அவங்க சொத்தும் சரி பாகமா நமக்கு ஆட் ஆகும்னு ஆளாளுக்கு அடுத்தவங்களக் கொல்றதுக்கும் டயம் பாத்துக்கிருக்காங்க. ஆனா அந்தத் தீவுல மொதல்ல ஒருத்தர் காணாமப் போறாரு. அடுத்து ஒருத்தர் செத்துக் கெடக்கறாரு. சரி போலீஸ கூப்புடலாம்னு பாத்தா அங்க டவரே சுத்தமா இல்ல.
அவரோட மனைவிகள்ல ஒருத்தங்க, இல்ல இவன் சொத்து நமக்கு வேணாம். அதுல நிச்சயமா வில்லங்கம் இருக்கு. அவனை நம்பாதிங்க. அவனை நம்பினா சாவுதான் நிச்சயமான்னு அடிக்கடி எச்சரிக்கறாங்க. ஆனா அவங்களே நெனச்சாலும், அங்க இருந்து போகவும் முடியாது. ஏன்னா ரொம்ப வயசானவங்க. தவிர அங்க இருந்து போகனும்னு நெனக்கிறவங்க போகலாம்னு சொல்றாங்கதான். ஆனா அதுக்கு அங்க ஒரு சின்ன துடுப்புப் படகு கூட இல்ல. ஏற்கனவே எடுத்த எடுப்புலவே சொத்தெல்லாம் வேணாம்னு போனவங்க ரெண்டு பேரும் பொணமா கெடக்கறதப் பாக்கறாங்க. அதுவும் இடுப்பு வரைக்கும் தான் இருக்கு. மீதி பாடியக் காணோம்.
உண்மையில மிச்சம் இருந்தவங்களுக்கு சொத்தெல்லாம் கெடச்சதா, அவங்க திரும்ப ஊருக்குப் போயி சேர்ந்தாங்களா, உண்மையில சொன்னபடி சொத்தையெல்லாம் கொடுக்க விஷ்வாக் சென் அவ்ளோ நல்லவனெல்லாம் கெடயாதேன்னு சொல்லிட்டிருந்த அந்த ஆண்ட்டி என்னானாங்கன்னு ரொம்ப சுத்தாம, அடிக்கடி நாம நினைக்கறதே ஸ்க்ரீன்ல வர்ற மாதிரி தான் பெரும்பாலும் காட்சிகள் ஓடுது இந்த வெப்சீரிஸ்ல. பல இடங்கள் ரொம்பக் கொடூரமாவும் இருக்கும். ரொம்ப கிளாமராவும் இருக்கும்.
ரொம்ப கிரீடியா இருந்தா என்னாகும்னு மாரலெல்லாம் சொல்லிட்டு இந்தக் கதைக்கான முடிவு மட்டும் என்னால ஏத்துக்க முடியல தான். இருந்தாலும் பாக்கனும்னு நினைக்கிறவங்க பாருங்க. பாக்கலேன்னாலும் பெருசா எதையும் மிஸ் பண்ணியிருக்க மாட்டிங்க.

சக்தித் திருமகன் (2025)

 


சக்தித் திருமகன்
அப்டின்னு ஒரு ஆக்சன் திரில்லர் படம். மொதல்ல இந்தப் படத்தை பராசக்தின்னு டைட்டில் வச்சு, அதே டைட்டில சிவகார்த்திகேயனும் வச்சு ரெண்டு அறிவிப்பு வந்து, கடைசில விஜய் ஆண்டனி விட்டுக் கொடுத்து சக்தி திருமகன்னு வெளியாகிருக்கற இந்தப் படம் எப்டியிருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி, விஜய் ஆண்டனியோட பேரு கிட்டு. என்ன வேலை பாக்கறார்னா பாலிட்டிக்ஸ்க்குள்ளயே பாலிட்டிக்ஸ் பண்ணி அதுல நல்லது பண்ற ஒரு மீடியேட்டர். ஊர் வழக்கப்படி புரோக்கர். நாமளாச்சும் பரவால்ல. இவ்ளோ டீசண்டா அந்த வேலைக்குப் பேர் வச்சிருக்கோம். ஆனா, வில்லன் இந்த வேலைக்கு வச்சிருக்கற பேரு பிம்ப். இதுல அயர்னி என்னன்னா, அந்த வில்லனும் அதே வேலைதான் பாத்துக்கிருப்பாரு. ஆனா பாருங்க, அவனுக்கு, ஹீரோ கிட்டுவப் பாத்தாலே ஆசனவாயெல்லாம் எரியும். ஏன்னா, அவா பண்ணா அது எதிக்ஸ். அதுவே அடுத்தவா பண்ணா எரியத்தானே செய்யும்.
படம் ஆரம்பிச்சு, கொஞ்ச நேரம் வரைக்கும் வில்லன் ஹீரோ, ஹீரோவோட சைடு கிக், ஹீரோயின் அப்டி இப்டின்னு ஒரு மாதிரியா அறிமுகங்கள் முடிஞ்சப்புறம், அட போட வக்கிற மாதிரி சில காட்சியமைப்புக்கள். உண்மைல சில சீன்ஸ் எல்லாம் அடேங்கப்பான்னு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனா அது எல்லாம் ஒரு ஸ்டேஜ்ல, என்ன பிரச்சினை, எதனால இவ்ளோ காண்டுன்னு படம் பாக்கற நம்மளே கேக்கறளவுக்கும், “தாய்க்கெழவி நீளமா பேசாத மூச்சு வாங்கும்”னு சொல்ற மாதிரி நாட்டுல உள்ள பிரச்சினைகள எல்லாத்துக்கும் ஒரே படத்துல சொல்யூசன் சொல்ல ஆரம்பிச்சதும், நமக்கே லைட்டா நெளியிற ஃபீல்.
படத்தோட ஆரம்பத்துல இருந்து, உண்மையிலயே இது அருவி படம் எடுத்த டைரக்டரோட படம்தானான்னு வியக்க வச்ச மாதிரி நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. இது இடைவேளை வரைக்குமே தொடர்ந்துகிட்டிருந்தது. அதுக்கப்புறந்தான் டைரக்டர் இல்லேல்ல, அவ்ளோ ஆச்சரியப்பட வேண்டாம். நான் அருவி படத்தோட டைரக்டர்தான்னு சொல்ற மாதிரி அதிதி பாலன் கேரக்ட்டரையே பாவம் விஜய் ஆண்டனிய பண்ண வச்ச மாதிரி ப்ரூவ் பண்ணிருக்காரு. டியர் டைரக்ட்டர் சார். ஒரு நேரத்துல எங்களுக்கு ஒரு டாஸ்க் குடுங்க. நாட்டுல இருக்கற மொத்தப் பிரச்சினைக்கும் ஒரே படத்துல சொல்யூசன் குடுக்கறேன்னு அவ்ளோ பெரிய டாஸ்க்கெல்லாம் குடுக்காதிங்க. ஓவர்டோஸாகிருச்சு.
விஜய் ஆண்டனியெல்லாம் பாவம் சார். அவர் பேட்டிகள்ல எப்டி பேசறாரோ, அதே டோன்லதான் படத்துல நீங்க கொடுக்கற கேரக்ட்டர்கள் வழியாவும் பேசறாரு. அவர் வாய்ஸ சிட்டிசன் அஜித் மாடுலேசன்ல கடைசில பேச வச்சதெல்லாம் ஏத்துக்கவே முடியாத டாஸ்க். லைஃப்ல மொத மொறையா ஒரு படத்தப் பாத்து அஜீரணமாகி, ஜெலுசில் குடிக்கனும்னு நெனைக்கிறளவுக்கா கதையெழுதி படமா எடுப்பிங்க. எல்லாத்துக்கும் ஒரு மீட்டர் இருக்கு. அதுக்கு மேலயும் போக வேணாம். கீழயும் போக வேணாம். மீட்டர்லயே படம் எடுங்க.
படத்துல எல்லா சீன்களுக்கும் வர்ற விஜய் ஆண்டனியே பாவம்ன்னா, அந்த ஹீரோயின் நெலமையக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எவ்ளோ அழகா இருக்காங்கன்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்தடுத்த பிரச்சினைகளுக்குள்ள தாவிட்டே இருக்கு படம். உங்களுக்குப் புரிஞ்சதா, படத்துல இருந்த பிரச்சினையே இதுதான். உங்களோட படத்துல சொல்யூசன் சொல்றேன்னு சொல்லிட்டு எடுத்த கதைய வச்சு, நீங்க பத்துக்கும் மேல படம் பண்ணிருக்கலாம். அவசரப்பட்டுட்டீங்களே குமாரு!
ஹீரோயினை விடவும் படத்துல ஹீரோ கூட அதிகப்படியான சீன்கள்ல வந்து ஸ்கோர் பண்றது, செல் முருகன் தான். உண்மையிலேயே இவங்க ரெண்டு பேர்த்தையும், வாகை சந்திர சேகரையும் வச்சுகிட்டு, நீங்க தெகட்டறளவுக்கெல்லாம் படம் எடுத்திருக்க வேணாம்.
படம் நல்லால்லேன்னு நான் சொல்லல. நல்லாருந்திருக்கலாம்னு தான் சொல்றேன்.

Kiss (2025)

 


Kiss
அப்டின்னு ஒரு ஃபேண்டஸியுடன் கூடிய ஒரு ரொமாண்டிக் காமெடிப்படம். கவின், ப்ரீத்தி அஸ்ரானி, பிரபு, ராவ் ரமேஷ், தேவயானி, கவுசல்யா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் நடிச்ச உண்மையிலயே செம எண்டர்டெயின்மெண்ட் படம். சமீபத்துல நான் ஒரு ரொமாண்டிக் படத்த இவ்ளோ எஞ்சாய் பண்ணிப் பாத்தது இந்தப் படத்தைத்தான். அது எப்டியிருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி கவினுக்கு ஒரு சாபமிருக்கு. அதுவும் பல ஜென்மத்துக்கு முன்னாடியில இருந்தே. ஒரு காலத்துல காதலை வெறுக்கற மன்னனா இருந்தப்ப, லவ் பண்றவங்களையெல்லாம் சேர விடாம, கொன்னுடுவாரு. அவ்ளோ கொடூர மன்னன். அதுல பிரிஞ்சவங்க கடைசில சாகறப்ப ஒரு சாபம் கொடுத்துட்டு சாகறாங்க – உனக்கும் லவ் வரும். உனக்கும் ஆவனும்டாங்கற மாதிரி. அதுக்கப்புறம் கதை நிகழ்காலத்துல, ஒரு மவுனம் பேசியதே கவுதமா வாழ்ந்துக்கிருக்காரு கவின். என்ன ஒன்னு அவரு ரெஸ்டாரண்ட் வச்சிருப்பாரு. இவரு மியூசிக் பேண்ட் வச்சிருப்பாரு. அவ்ளோதான் வித்தியாசம். மத்தபடி லவ் பண்றது தன்னோட சகோதரனா இருந்தாலும் சரி, தகப்பனா இருந்தாலும் சரி – பிரிச்சு விட்ருவாரு அல்லது சேர வுட மாட்டாரு. நய்ஸ்ரா எலேய் – நீயெல்லாம் நல்லாவே இரு!
ஹீரோயின் பிரீத்தி அஸ்ரானி ஒரு பால்ரூம் டான்ஸ் டீச்சரா ஸ்கூல் வச்சு நடாத்திகிட்டிருக்காங்க. இவங்க கையால ஒரு புக் கவின் கையில வந்து சேருது. அப்ப இருந்து அவருக்கு ஒரு ஸ்பெசல் பவர் வந்து சேருது. அதாவது யாராவது லிப் டு லிப் கிஸ் பண்ணிட்டிருக்கறதப் பாத்தா, இவருக்கு அவங்களோட லவ்ல என்ன முடிவுங்கறது தேஜாவூ மாதிரி விசுவல்ஸ் வரும். இது ஏன், எதற்கு, எப்படின்னு அலசி ஆராயிறதுதான் மீதிப் படம்.
விடிவி கணேஷும் கவினும் அவர் நண்பரும் வர்ற எடங்களெல்லாம் சரவெடிப் பட்டாசுதான். குபீர் குபீர்னு சிரிக்க வச்சிருக்காங்க. கவின் அண்ட் விடிவி கணேஷ் காம்போ காமெடிப் பட்டாசுன்னா, கவின் அண்ட் பிரீத்தி காம்போ செம கியூட் காமெடிகள் கலந்த ரொமாண்டிக் மொமண்ட்ஸ். இந்த மொமண்ட்ஸ் எல்லாமே தியேட்டர்ல எக்ஸ்பீரியன்ஸ் பண்றது இன்னும் சிறப்பு. இதுல ஆச்சரியம் என்னன்னா, குக்கு வித் கோமாளியில ரெண்டு சீசன்ல வந்து காமெடி பண்ண முடியாம திணறின சக்தி இதுல கவின் கூட அழகா காமெடி பண்ணி நடிச்சிருக்கறதுதான். இதுல கவினோட சகோதரனா நடிச்சிருக்காப்ல. டேய் சக்தி, உன்னால கூட காமெடி பண்ண முடியுமா? இட்ஸ் அ மெடிக்கல் மிராக்கிள்.
அடுத்த ஆச்சரியம், கவுசல்யா! சத்தியமா இவங்கள நான் இப்டி ஒரு கேரக்ட்டர்ல எதிர்பார்க்கல. செம கியூட்டா இருந்தது கவின்-பிரீத்தி காம்போவை விட, இவங்க ஸ்கிரீன்ல வர்ற சீன்ஸ் எல்லாம். அது கொஞ்சமே கொஞ்சம்னாலும் செம.
மவுனம் பேசியதேவ மாடர்னா எடுத்து, அதுல அந்த கிளைமாக்ஸ் சீனை மட்டும் படம் முழுக்க எடுத்திருந்தா எப்டி இருந்திருக்குமோ அப்டியேதான் இருக்கு இந்தப்படம். நிச்சயம் இதெல்லாம் தியேட்டர் மெட்டீரியல். அடிக்கடி யூட்யூப்ல சாப்டறப்ப பாக்கற சூப்பர் சீன்ஸ்க்கு ஆச்சு இன்னொரு படம்.

இந்திரா (2025)

 


இந்திரா
அப்டின்னு ஒரு திரில்லர் படம். வசந்த் ரவி, மெஹ்ரீன் பிரசீதா, அனிகா சுரேந்திரன், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இவங்கெல்லாம் நடிச்ச தமிழ்ப்படந்தான். சன் நெக்ஸ்ட்ல இருக்கு. எப்டி இருந்துச்சுன்னு பாக்கலாம் வாங்க. ஹெவிய்யா கடுப்புல எழுதறதால, ஹெவிய்யா ஸ்பாய்லர்ஸ் இருக்கும். அதனால, படத்தைப் பாத்து கடுப்பாகியே தீருவேன்னு நெனைக்கிறவங்க மேற்கொண்டு பதிவைத் தவிர்க்கவும்.
கதைப்படி ஹீரோ வசந்த் ரவி, சஸ்பெண்டாகி திரும்ப ஆர்டர் கிடைக்காம, தெனம் கமிசனர் ஆபிஸ்க்கு ட்ரிப் அடிச்சி, எதுவும் கெடைக்காம விரக்தியில வீட்டுக்கு ரிட்டர்னாவுற ஒரு காவல்துறை அதிகாரி. சரி அப்டி சஸ்பெண்டானதுக்கப்புறம் என்ன பண்ணிட்டிருக்காருன்னு பாத்தா, பாருக்குப் போயி சரக்கடிக்கிறாரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், மறுபடியும் வீட்டுக்கு வந்து மொடக் மொடக்ன்னு குடிக்கிறாரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், அப்டே டக்கீலா ஷாட்சா போட்டுத் தாக்கிட்டிருக்காரு. அடுத்த சீன் கமிசனராபிஸ் ப்ளஸ் ஏமாத்தம், பாட்டிலோட போட்டுக் கல்ப்பா குடிச்சுத் தாக்குறாரு. சரி அப்டி ஏன் சஸ்பெண்டானாருன்னு பாத்தா, குடிச்சிட்டு போலிஸ் ஜீப்ப எடுத்துட்டுப் போயி ஆக்சிடெண்ட் பண்ணதனால. ஙே!
அடுத்ததா சுனில். ஒரு தேட்ரியில பழைய சாக்கி சான் படம் பாத்துக்கிருக்காரு. பக்கத்து சீட்ல ஒருத்தன், ஒரு லேடிய கூட்டிட்டு வந்து இங்கயே வேணும்ங்கறான். அந்த லேடி வேணாம் எல்லாரும் இருக்காங்க ரூம் போட்டுக்கலாம்ங்கறா. இதையே மேற்படி பாரா மாதிரி ரிப்பீட்டடா பேசி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்ததுல கடுப்பானவரு, அந்த லேடி போனதுக்கப்புறமும், அவனும் பாத்ரூம் போனதுக்கப்புறமும், செவனேன்னு தான் இருக்காரு. ஆனா பாருங்க, அடுத்ததா அவர் கடுப்பாகிப் போயி அவனை பாத்ரூம்லயே போயி கொன்னுடறாரு. ஏண்டா கொன்னாருன்னு பாத்தா, அதை அடுத்த சில சீன்கள்ல அவரே சொல்றாரு, என்னை யாராவது கடுப்பேத்துனா கொன்னுடுவேன்ங்கறாரு. அப்டி ஏன் அவன் பேசாம போயிக் கூட, தேடிப் போயி கொன்னாருன்னு பாத்தா, பாத்ரூம் போனவன் அவன்ற ஃபோன மிஸ் பண்ணிட்டுப் போயிருப்பான். அது ரிங்கானதுல கடுப்பாயிப் போயி கொன்னிருப்பாரு. ஙே!
மேற்படி பாரா சுனில்தான் சைக்கோ கொலைகாரன்னு அடுத்தடுத்த சீன்ல குடிச்சுக் குடிச்சுக் கண்ணு அவிஞ்சு போன போலிஸ் வசந்த் ரவி கண்டுபுடிக்கிறாரு. என்னடா அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டிங்க? அப்ப அவ்ளோதானா, கத ஓவரான்னு பாத்தா, ஏற்கனவே நாம ஹீரோ மேலயும் சுனில் மேலயும் ஓரளவு கடுப்புலதான் இதுவரைக்கும் படத்தைப் பாத்துகிட்டிருந்திருப்போம். அது நமக்கு எப்டி இருக்கும்ன்னா, ”நாம கண்ட காட்சி எல்லாம் உண்மதானா”ங்கற மாதிரி நெஜமாவே நாம கடுப்புலதான் இருக்கமாங்கற,” சந்தேகத்தோட. அப்டியே போனா எப்டின்னு டைரக்டர் அதுக்கு மேல நமக்கு ஒரு டாஸ்க் வச்சிருக்காரு – “ஏன் சும்மா கன்ஃப்யூசன்ல போற? அத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுப் போ”ன்னு. ஙே!
ஹீரோயின் மெஹ்ரீன் ப்ரசீதா, முன்ன விட ரொம்ப லீனா ரொம்ப அழகாத்தான் இருக்காங்க. தெரிஞ்சோ தெரியாமயோ இந்தப் படத்துல நடிச்சு, நமக்கு அவங்க மேல வரவேண்டிய பரிதாபம் போயி, கடுப்புதான் மிஞ்சுது. மொத்தப் படத்துலயும் கடுப்பு இல்லாத நார்மல் ஃபீல்ங்கறது யார்மேலயும் இல்ல. அனிகா அண்ட் அனிகாவோட ஜோடி சுமேஸ்னு நெனைக்கிறேன் (’கள’ன்னு ஒரு மலையாளப் படத்துல வில்லனா நடிச்சிருப்பாப்ல) இவங்க ரெண்டு பேர் மேலயும் ஆரம்பத்துல ஒரு கடுப்பு வரும். ஆனா, அதுவே போகப் போக, மத்தவங்கள விட உங்கமேல அவ்ளோலாம் கடுப்பாகலன்னு தோணும்.
மேல மொத பாராவுல சொன்னதுதான் இங்கயும். அப்டி கடுப்பெல்லாம் ஆக மாட்டேன்னு இந்தப் படத்த பாத்தே தீருவேன்னா, நாந்தடுக்க முடியுமா?

Eenie Meanie (2025) - காமெடி திரில்லர்

 


Eenie Meanie
அப்டின்னு ஒரு ஹீஸ்ட் வகைத் திரில்லர் படம். அடேங்கப்பா… திரில்லர் படம் அதுவும் ஹீஸ்ட் ஜானர் வேறயா! நாம எத்தன படங்களப் பாத்திருப்போம். அதுல நம்மள எப்பவுமே ஏமாத்தாம எண்டர்ட்டெய்ன் பண்ண ஜானர்கள்ல ஒன்னுதான் இந்த ஹீஸ்ட்டுன்னு நம்பி ஹாட்ஸ்டார்ல பாக்க ஆரம்பிச்சேன். இருக்கறதுலயே செம கான்செப்ட்டை எடுத்துகிட்டு அதை எவ்ளோ - சுமாராக்கூட வேணாம் சொதப்பலா எடுக்காம இருக்கலாம்ல. அவ்ளோ படுத்தி எடுத்திருக்காங்க. வாங்க அதை என்னான்னு பாக்கலாம்.
கதைப்படி ஹீரோயின் ஈடி ஒரு வங்கி ஊழியர். ஆனா பாருங்க அதை நமக்கு ரெஜிஸ்ட்டர் பண்ணனுமேன்னு வச்ச மாதிரி ஒரு பேங் ஹீஸ்ட் சீனை வச்சு அதுல ஹீரோயின அந்த பேங்க்ல ஒரே ஒரு சீன்ல பேங்க் ஸ்டாஃபா காட்டி, அத்தோட அதை அம்போன்னு விட்டுட்டானுக. ஆக, ஹீரோயின் ஒரு பேங்க் ஸ்டாஃப். அப்புறம் எப்டி ஹீஸ்ட்? அந்த பேங்க்ல நடக்கற ஹீஸ்ட்டைத் தடுக்கற மாதிரியான கதையா? இல்ல ஹீரோயினே அந்த பேங்க்க கொள்ளையடிக்கப் போறாளான்னு நமக்குள்ள ஆயிரம் கேள்விகள் வருதில்லையா? அப்டித்தான் எனக்கு ஒரே கொழப்பமா இருந்தது. ஷீ ஈஸ் குட்டு பட் நாட் தட் மச் குட்டு அப்டிங்கற மாதிரி ஒரு காரக்ட்டர்.
அந்த பேங்க் கொள்ளைய ரெண்டு அமெச்சூர் கொள்ளைக்காரங்க நடத்திட்டிருக்கறப்ப, அதைத் தடுக்க அதுல ஒருத்தன் பின்னாடி பேண்ட்ல சொருகிருந்த துப்பாக்கிய எடுக்கலாம்னு போக, டமால்னு மண்டையில ஒரே போடா இன்னொருத்தன் போட, அடுத்த சீன் ஆஸ்பத்திரியில கண்ணு முழிக்கிறா ஈடி. அத்தோட அவ பேங்க்ல வேலை செஞ்சாங்கற ரெஜிஸ்ட்ரேசன் சீனும் முடிஞ்சது. இப்ப டாக்டர் அவள ஒரு கேள்வி கேக்கறாரு. அது என்னான்னா? கொழந்தைய என்ன பண்ணப் போறன்னு. கொழந்தையான்னு நாமளும் ஹீரோயின் ஈடியோட கொழம்பிட்டிருக்கறப்ப, ஆமாம்மா கங்கிராஜுலேசன் நீ அம்மாவாகப் போறன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போடறாரு டாக்டர். அத்தோட கதையில இருந்த மொத்த சோலியும் முடிஞ்சது.
அடுத்து, அவ கர்ப்பத்துக்குக் காரணம், ஒரு வெத்துவேட்டு நாதாரி லவ்வர். அவன் அடிக்கடி எதாவது ஒரு பெரிய பிரச்சினையில மாட்டிக்கிட்டு அதுக்கு கப்பம் கட்ட ஏற்கனவே பேங்க் எம்ப்ளாயியா இருந்தும் இதுவரைக்கும் பன்னண்டு வாட்டி கொள்ளையடிக்கப் போயி, அதுல சக்சஸ்ஃபுல்லா தப்பிச்சும் வந்திருக்கா. ஆக இவளோட முந்தை எஸ்டீடிப்படி, அவ ஒரு செம டிரைவர். அதாவது, கொள்ளையடிச்சவுடனே, தப்பிச்சுப் போக அவ்ளோ வேகமா காரை ஓட்டுறதுல ஜித்தி!
இந்த ஒரே காரணத்துனால, ஹீரோ ஜான் இப்ப மாட்டிட்டிருக்கற பிரச்சினையில இருந்து காப்பாத்த ஒரு ஹீஸ்ட்ல ’கெட் அவே’ டிரைவரா காரோட்ட சம்மதிச்சுப் போறா.
இல்ல மேல நான் சொன்ன கதை எவ்ளோ செமையா இருந்திச்சு! அதை அப்டியே பரபரப்பா எடுத்திருந்தாலே ஒரு செம ஆக்சன் திரில்லர் ஹீஸ்ட் மூவி நமக்குக் கெடச்சிருக்கும்ல. ஆனா செய்தார்களா? அப்படிச் செய்தார்களா? நல்லா செஞ்சாங்க படம் பாக்கற நம்மள – ஷப்பா!
டேய் அவ்ளோ அழகான ஒரு கதாநாயகி. அவ்ளோ செமையான கதையமைப்பு. அதை வச்சு உருப்படியா எதுனா பண்ணிருக்கலாம்ல. சேஸிங் சீன்ல கூட கேமராவத் தூக்கி காருக்குள்ளயே ஏண்டா வச்சு சாவடிக்கிறீங்க? இதனால நான் இவ்ளோ பொலம்பி, சொல்ல வர்றது என்னான்னா – அதுல ஒன்னுமில்ல. கீழ போட்ருன்னுதான்!

House Mates (2025)

 


House Mates
அப்டின்னு ஒரு ஹாரர் ஃபேண்டசி படம். தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி நடிச்ச ஒரு சைன்ஸ் ஃபிக்சன் படம். ஆரம்பத்துல ரொமான்ஸ் படம் மாதிரி ஆரம்பிச்சு, அப்டியே ஹாரர் ஜானருக்குள்ள டிராவல் பண்ணி, அந்த ஹாரருக்கான காரணத்தைப் புரிய வச்சப்புறம் ஃபேண்டசிப் படமா மாறி ஓடி முடியுது. எப்டி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி, தன்னோட காதலி அனுவ கல்யாணம் பண்றதுக்காக, ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டை கஷ்ட்டப்பட்டு வாங்குறாரு கார்த்திக். அதுக்கப்புறம் அந்த வீட்டுக்குக் குடி வந்த பின்னாடி சில அமானுஷ்ய நிகழ்வுகள் – தானா சுவத்துல சிறுவர்களோட கிறுக்கல்கள் மாதிரி படங்கள் வளர்ந்துட்டே போகுது, தானா கிச்சன் சின்க்ல டேப் ஆன் ஆகி ஆஃப் ஆகுது, தானா கதவு தெறந்து மூடிக்குதுன்னு இப்டி பல விசயங்கள் அனுவுக்கு மட்டும் எக்ஸ்பீரியன்ஸ் ஆகுது. இதைச் சொன்னா கார்த்திக்கு கோபம் வருது, ஏன்னா அது அவங்க கல்யாணத்துக்காகன்னே, கஷ்ட்டப்பட்டு வாங்கின வீடு. அதுல பேயிருக்கு, பிசாசிருக்குன்னா யாருக்கா இருந்தாலும் கோவம் வரும்தானே?
இதே போல, இன்னொரு வீட்டுலயும் ஒரு பையனுக்கும் இந்த மாதிரி அமானுஷ்யங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆகி அவனுக்கு காய்ச்சல் வர்றளவுக்குப் போகுது. டாக்டர்கிட்ட, எங்க வீட்ல பேயிருக்குன்னு சொல்லவும், அதுகிட்ட யாரு என்னன்னு கேளு. அப்டி அது பதில் சொன்னா, நாங்க அத பேய்ன்னு நம்புறோம்னு வெளயாட்டா சொல்ல, அவனும் அதே மாதிரி வீட்டுக்கு வந்து யாராவது இருக்கீங்களான்னு கேக்க, அந்தக் கேள்விக்கு அமானுஷ்யமான முறையில ஆமான்னு பதில் வருது. அதை அவனோட பேரண்ட்ஸ்கிட்ட காட்ட, அவங்களும் அதே மாதிரி சில கேள்விகள் கேக்க, லைவா பதில் வருது, இவங்க கேள்வி கேட்ட அதே மெத்தட்ல.
டாக்டர்கிட்ட போற வரைக்கும் அமானுஷ்ய ஹாரரா இருந்த படம், கேள்வி கேட்டு பதில் வந்ததும் சை-ஃபை ஃபேண்ட்சியா மாறுது. கடைசிவரைக்கும் அது ஏன் எப்டின்னு அவங்களுக்குள்ளயே தெரிஞ்சிக்க ஓடறாங்க. உண்மையில அது பேய் இல்ல. ரெண்டு காலகட்டத்துல அந்த வீட்டுல வாழ்ந்துகிட்டிருக்கறவங்க, ஒருத்தரையொருத்தர் காண்டாக்ட் பண்ணிக்க முடிஞ்சா ஏற்படுற குழப்பங்கள்தான் இந்தப் படம். இதே போல ஏற்கனவே ஒரு சைனீஸ் படம், How long will I love you-ன்னு 2018லயே வந்திருக்கு. ஆனா அந்தப் படத்துக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அதுல ரெண்டு காலகட்டத்துல வாழ்ந்தவங்களும், ஒருத்தரையொருத்தர் பாத்துக்கவோ, தொட்டுக்கவோ முடியும். இன்னும் ஒரு படி மேல போய், ஒருத்தர் இன்னொருத்தரோட காலகட்டத்துல ஃப்ரீயா உலாவக் கூட முடியும். ஆனா, இந்த ஹவுஸ்மேட்ஸ்ல அப்டி எதுவும், இயற்கைக்குப் புறம்பான விதிகள் மீறப்படல. மொத்த கம்யூனிகேசனும், ஒரு காலிங் பெல் அண்ட் ஒரு வால் மெசேஜ்னு மட்டும்தான். ஆனாலும், பாக்கறளவுக்கு சுவாரஸ்யமாத்தான் இருக்கு.
காமெடின்னு பெருசா எதையும் எக்ஸ்பாண்ட் பண்ணாம, கதைக்குள்ள கிளைவிட்டு வளந்துகிட்டிருக்கற செண்டெமெண்ட்ஸ மட்டுமே டெவலப் பண்ணி, அதுக்காகவே இந்த ஃபேண்டசி எலிமெண்ட கதைக்குள்ள கொண்டுவந்து அழகா உக்கார வச்சிருக்காங்க. எத்தனை காலம்தான் டைம் டிராவல் படங்களைப் பாக்கறது. ஒரு சேஞ்சுக்கு இது போல மத்த அறிவியல் புனைவுகளும் நமக்குத் தேவை. அதுக்கு நிறைய கற்பனை வளங்களும், ஆடியன்ஸ் ஆதரவும் தேவை.

தணல் (2025)

 


தணல்
அப்டின்னு ஒரு ஆக்சன் திரில்லர் படம். ஒரு படம் பாத்துகிட்டிருக்கறப்ப அடுத்து என்னாகுமோங்கற ஒரு படபடப்பு ஃபீல ஆடியன்ஸுக்கு வர வச்சிட்டா அது நல்ல படம். அதுவே, அடுத்த சீனைப் பத்தி யோசிக்க விடாம, அய்யய்யோ இப்ப என்னாகும்னு ஒரு திக் திக் ஃபீல் வர வச்சா அது செம படம்ல்ல? இந்தத் தணல் நான் மேல சொன்ன ரெண்டாவது வகை. ஆனா, அதை வச்சி படம் பாத்த ஆடியன்ச சேட்டிஸ்ஃபை பண்ணிருக்காங்களான்னு பாக்கலாம் வாங்க.
காலேஜ் பசங்க மாதிரி உள்ள சிலரோட போலிஸ் சூட் அவுட் நடக்குது. அதுல அந்தப் பசங்க எல்லார்த்தையும் போலிஸ் போட்டுத் தள்ளிடுது. அதுல மெயினா இருக்கறவரு நம்ம மெட்டி ஒலி ‘போஸ்’ வெங்கட். அடுத்து இன்னொரு சீன்ல அவர் நைட்டு ரோந்து போயிட்டிருக்கறப்ப, மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால நடிச்ச அஸ்வின் காக்குமானி (இத்தனை படம் நடிச்சும் இவர இன்னும் நாம அறிமுகப்படுத்த வேண்டியிருக்கு பாருங்க) சிலரோட வந்து அட்டாக் பண்ணி ஆக்சிடண்ட் மாதிரி செட்டப் பண்ணி அதுல இருந்த ஆறு பேர்த்தையும் கொன்னுடறாங்க.
அதர்வா, ஃபைனலி பரத், சாரான்னு மொத்தம் நாலு வெட்டிப்பசங்க. எந்த நோக்கமும் இல்லாம தண்டச்சோறா கிரிக்கெட் வெளயாடிக்கிட்டும், எதித்த வீட்டு லாவண்யா திரிபாதிய லவ் பண்ண அதர்வாவுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டும் திரிஞ்சுகிட்டிருக்காங்க. ஒரு கட்டத்துல தன்னோட அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லன்னு வேலைக்குப் போக நினைச்சு, அந்த நாலுல மூனு பேர் போலிஸ் கான்ஸ்டபிளா ட்யூட்டில ஜாயின் பண்ண ஆர்டர் காப்பிய வாங்கறதுக்கு ஒரு ஸ்டேசனுக்கு வர்றாங்க. அங்க இன்னும் மூனு பேர், நம்ம நாடோடிகள், பிக்பாஸ் சீசன் 1ல எகிறிக் குதிச்சு தப்பிச்சுப் போன பரணியும் அதுல ஒருத்தர். இந்த ஆறு பேர்த்தையும் ஆர்டர் காப்பிய கொடுக்காமயே அன்னிக்கி நைட்டு அந்த ஏரியாவுல ரோந்து போகச் சொல்றாங்க.
மேல நான் ரெண்டாவது பாரால ஆறு பேரைக் கொன்னாங்கன்னு சொன்னேன்லயா, அந்த ஆறு பேருக்கு பதிலாதான் இந்த மூனாவது பாரால சொன்ன ஆறு பேறும் டியூட்டில ஜாயின் பண்ண வந்திருக்காங்க. அப்டி இவங்க ஆறு பேரும் நைட்டு ரோந்து போயிட்டிருந்தப்ப, ஒருத்தனோட நடவடிக்கையில சந்தேகப்பட்டு அவனைத் தொரத்த அவன் ஒரு ஸ்லம்முக்குள்ள போயி ஒளிஞ்சிக்கறான். இவங்களும் அவனை ஃபாலோ பண்ணிப் போயி அங்க தேடினா, அந்த எடமே ஒரு அமானுஷ்ய மர்மமா இருக்கு. அந்த ஸ்லம்ல இருந்த வீடுகள்ல யாருமே இல்ல. சட்டப்படி வழக்கு நடந்துகிட்டிருக்கற ஒரு ஏரியா. ஆனா அங்க அஸ்வின் கண்ல படவும், அவரை போலிஸ் தோரணையில பரணி நெருங்கவும், அங்க ஒரு திடீர் திருப்பம். அங்க இருந்து தான் நான் மொத பாராவுல சொன்ன மாதிரி இப்ப என்ன நடக்குமோங்கற படபடப்பு ஃபீல் தொத்திக்கிது. நிற்க.
இவ்ளோ செமயா, டைட்டா, கிரிப்பா கதை எழுதிருக்கிங்க வாழ்த்துக்கள் சொல்லலாம்னு பாத்தா, எதோ ஒன்னு ஹெவிய்யா என்னைத் தடுக்குது. அது என்னான்னு நல்லா யோசிச்சுப் பாத்தா, கதைப்படி அஸ்வின் வில்லன். அதர்வா ஹீரோ. ஆனா உண்மையில அஸ்வின் தான் ஹீரோவா போர்ட்ரே பண்ணப்பட்டிருக்கனும். அதர்வாவ உண்மையிலேயே வில்லனா போர்ட்ரே செஞ்சிக்கனும். கதைப்படி அதுதான் முறை. இது அப்டியே எந்திரன் 2.0ல வந்த அதே பிரச்சினை இந்தப் படத்துலயும் பொருந்தும்.
மேல சொன்ன பிரச்சினை இல்லாம, இன்னும் சில காரணங்கள் உண்டு. அஸ்வின் ஒரு சோல்ஜர், விவசாயி, சுரங்கத் தொழிலாளின்னு அவரோட கதாபாத்திரம் பக்காவா ஸ்கெட்ச் பண்ணி - வில்லன். அதுவே, அதர்வா, வெட்டி, தண்டச்சோறு, அம்மா அப்பா செல்லம், திடீர் கான்ஸ்டபிள் - ஆனா ஹீரோ.
இதுல ரெண்டு பேர்த்தோட முன்கதையும் தெளிவா ஆடியன்ஸுக்குக் காட்டப்படுது. அதுல அதர்வா, அந்தப் புள்ளைய லவ் பண்ணா என்ன பண்ணலேன்னா நமக்கென்னன்னும், ’இது யார்னு கண்டுபுடிங்க பாக்கலாம்’ன்னு எதாவது சில ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டாயமா வர்ற பெரும்பாலான கமெண்டுகளான, ‘ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம்’ங்கற மாதிரியும் தான் நமக்குத் தோணும். அதுவே அஸ்வினோட பின்கதையை காட்டுறப்ப நமக்கே ஒரு கோபம் வரும். அந்தளவு ஈஸியா நம்மால கனெக்ட் பண்ணிக்கவும் முடியிற, நாம தெளிவா தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் அது.
ஆனா அறிமுக இயக்குனர்னு நினைக்கிறேன். கேரக்ட்டர் ஸ்கெட்ச் நல்லாவே பண்ண வருது இவருக்கு. அதை எந்தக் கேரக்ட்டருக்கு என்ன போர்ட்ரேயல் கொடுக்கனும்ங்கற வித்தியாசம் புரியல பாவம். அதெல்லாம் என்னென்னன்னு நீங்களும் படத்தைப் பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

Detective Chinatown 1900 (2025) - காமெடி ஹூடன்னிட்

 


Detective Chinatown 1900
அப்டின்னு ஒரு காமெடி கலந்த ஹூடன்னிட் மற்றும் ஹிஸ்டரி படம். கதை நடக்கறது 1900ங்கள்ல. அப்ப சான் ஃப்ரான்சிஸ்க்கோவை உருவாக்க, அங்க சைனாவுல இருந்து வந்து அதோட அடிப்படைக் கட்டுமானங்கள்ல ரொம்ப கஷ்ட்டமான ப்ளூ காலர் வேலைகளெல்லாம் சீனர்கள் வேலை செஞ்ச காலம். நான் இந்தப் படத்தை கம்போடியாவோட தலைநகரமான ஃப்னோம் பென்ல எயான் தியேட்டர்ல பாத்தேன். எப்டி இருந்தது இந்தப் படம்னு பாக்கலாமா?
ஆரம்பத்துல கதையோட ஒரே பெண் கதாபத்திரமான ஆலிஸ், ஒரு தெருவோட மறைவான எடத்துல, கொலை செய்யப்பட்டுக் கிடக்கறாங்க. அங்க என்ன சத்தம்னு பாக்க, அந்த வழியாப் போயிட்டிருந்த, சீனாவுல இருந்து மேற்படி பாராவுல குறிப்பிடப்பட்டிருந்த சீனர்கள்ல ஒரு பெரியவர், கிட்டப் போய்ப் பாக்க, அங்கயிருந்த ஆலிஸைக் கொன்ன கொலைகாரன் இவரை ஒரு ஐ விட்னஸ்ங்கறதால அவரையும் கொன்னுட்டுப் போயிடறான். ஆலிஸைக் கொன்னவன் சும்மா வெறுமனே கொன்னிருக்கல. அவளைக் கத்தியால குத்தி வயித்த வர்ட்டிக்கலா ஒரு கிழி கிழிச்சு, வயித்துக்குள்ள என்னென்ன அயிட்டங்கள் இருக்குமோ அது மொத்தத்தையும் எடுத்துட்டுப் போயிடறான்.
அது அடுத்தடுத்த நாட்கள்ல ஜாக் த ரிப்பர் திரும்ப வந்துட்டான், அதுவும் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்குன்னு ஊர் மக்களும், நியூஸ் பேப்பரும், கதறிட்டுக் கெடக்கு. இதுல ஹைலைட்டான நியூஸ் என்னன்னா, அதை செஞ்சது ஒரு சீனாக்காரன் தான். ஜாக் த ரிப்பர் ஒரு சீனாக்காரன். சைனீஸ் ஜாக் த ரிப்பர்னு ஆளாளுக்கு கெளப்பி விட, இப்ப இந்த மேட்டர் ஏற்கனவே கொஞ்சம் கூட நன்றியே இல்லாம சீனர்கள் எல்லார்த்தையும் வந்தேறிகள்னு அடிச்சுத் துரத்துற கலவரப் படலங்கள் சான் ஃப்ரான்சிஸ்கோ முழுக்க நடக்குது.
அடுத்த சில நாட்கள்ல போலிஸுக்கு ஜாக் த ரிப்பர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வருது. அதுல அவன், ’ரொம்ப டேஸ்ட்டா இருந்தது. பெண்களே ஜாக்கிரதை’ன்னு அவன் கைப்பட எழுதியிருக்கு. இது எரியிற நெருப்புல எண்ணெய ஊத்துன மாதிரி அந்தக் கலவரம் இன்னும் வெறித்தனமா மாற ஒரு காரணமா அமைஞ்சிருது.
இப்பதான் ஹீரோ என்ட்ரி. யாரந்த ஹீரோன்னா, செர்லாக் ஹோல்ம்ஸ்க்கும் வாட்சனுக்கும், சீன காரியதரிசி ஒருத்தன் இருந்தான். அவன் பேரு சின் ஃபு. உண்மையில செர்லாக்கையும் வாட்சனையும் தான் வரச் சொல்றாங்க இந்த வழக்கை விசாரிச்சு யாரு கொலையாளின்னு கண்டுபுடிக்க. ஆனா, அவங்க ரெண்டு பேர்த்துக்கும் இந்த வழக்குல அவ்வளவா ஈடுபாடில்லாம, தங்களோட காரியதரிசியான சின் ஃபுவை, டிடெக்ட்டிவ் ஃபுன்னு புரமோட் பண்ணி, ட்ரெய்ன்ல சான் ஃப்ரான்சிஸ்கோ வரைக்கும் வந்து வழியனுப்பிட்டுப் போறாங்க. அதுக்கப்புறம் அந்த இளம் காரியதரிசி இந்த வழக்கை விசாரிச்சுக் கண்டுபுடிச்சாராங்கறதுதான் மீதிக் கதை.
இதுல இன்னொரு ஹீரோவும் இருக்கான். அது சீனப் பூர்வக்குடிகள், சான் ஃப்ரான்சிஸ்கோவோட ஆதியிலிருந்து அதோட கட்டுமானத்துல இருக்கறதால அவங்க எல்லாரும் சிவப்பிந்தியர்களோட கலாச்சாரத்துல கலந்து இன்னமும் பழங்குடிகளா செவ்விந்தியர்கள் மாதிரியே உடைக் கலாச்சாரத்த ஃபாலோ பண்ற ஒரு கூட்டமா வாழ்ந்துகிட்டிருக்காங்க. இப்ப மேற்படி பாராவுல ஒரு பெரியவர் சத்தம் கேட்டு வந்து ஜாக் த ரிப்பரால ஐ விட்னஸா இருந்தவர கொன்னானில்லையா, அந்தப் பெரியவரோட மகன்தான் அந்த இன்னொரு ஹீரோ. அவன் பேரு கோஸ்ட் என்கிற ஆ குய். குய்ன்னா கோஸ்ட். இவங்க ரெண்டு பேர்ல காமெடிக்கும் அதிரடிக்கும் இந்த குய்தான் ஃபுல் ஸ்பான்சர். டபில்யூ டபில்யூ எஃப்ல வர்ற டட்டாங்கா மாதிரி.
இது போக பெய்ஜிங் மகாராணி அனுப்பின ஒரு சீன அதிகாரியும் அவரோட ரெண்டு பாடி கார்ட்ஸும் இதே வழக்குக்காக, சீனாவுல இருந்து அனுப்பப்பட, அவங்களுக்கு அமெரிக்காவுல நடக்கற இந்த அரசியல் எதுவும் புரியாம யிங்வென்னும் தெரியாம ஜுங்வென்ல மட்டுமே பேசிகிட்டு செம காமெடியா போகுது முதல் பாதி. அதென்ன யிங்வென், ஜுங்வென்? யிங்வென்னா இங்லிஷ், ஜுங்வென்னா சைனீஸ். நம்ம தமிழ் மொழி மட்டுமில்லை. சீன மொழியும் ரொம்ப ஆழமானதும் தனித்துவமானதுதான். நாம தமிழ்ல எப்டி பஸ்ஸுக்கு பேருந்து, ட்ரெய்னுக்கு புகைவண்டின்னெல்லாம் சொல்லாடலை ஏற்படுத்தி அதை உபயோகப்படுத்துறோம். இதுல சீனர்கள் ஒரு படி மேல. அடுத்த நாடுகளுக்கும் மொழிகளுக்கும் அவங்க மொழியில ஒரு சொல்லாடல் உருவாக்கி வச்சு அதைத்தான் உபயோகப் படுத்தறாங்க. அப்புறம் நாம எல்லாரும் சொல்ற மாதிரி அது சைனா கெடயாது. அவங்க தங்களோட நாட்டை ஜுங்குவோன்னு தான் சொல்லுவாங்க. ஜுங்குவோவைத்தான் நாம சீனான்னு சொல்லிட்டிருக்கோம் உலகம் முழுக்க.
இடைவேளை வரை சிரிப்பும் சேஸிங்குமா ஓடிட்டே இருக்கற படம், அடுத்த ரெண்டாவது கொலையில சீரியஸாக ஆரம்பிச்சு, கடைசில சீரியஸோட எல்லைக்கே போயிருக்காங்க. உண்மையிலேயே ரொம்ப நல்ல படம். குழந்தைகள் தவிர்க்கவும். நான் மேல முதல் பாராவுல சொன்னேன்லயா, இதை நான் தியேட்டர்ல பாத்தேன்னு. அப்ப நான் இடைவேளை வரைக்கும் தான் பாத்திருந்தேன். என்னைத் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போனவங்களுக்கு எங்க ரெண்டு பேருக்கும் வேலை இருக்குன்னு கால் வரவும் பாதியில படத்தை விட்டுட்டு வர மனசே இல்லாம, வெளிய வந்துட்டோம். இப்ப வேற வழியே இல்லாம டவுன்லோட் பண்ணித்தான் பாத்தேன். நீங்களும் பாருங்க.

குமாரசம்பவம் (2025)

 


குமாரசம்பவம்
அப்டின்னு ஒரு செம காமெடிப் படம். இந்த ”ஹிலேரியஸ்’ அப்டின்னு ஒரு பதம் இருக்கில்லையா, அதுக்கு அப்புறம் ஈஸ் ஈக்வல் டூ சிம்பல் போட்டு அதுக்கு அடுத்ததா ஒரு ஸ்பேஸ் விட்டு இந்த டைட்டில எழுதலாம். அவ்ளோ வொர்த்து. பல வருசம் கழிச்சு நான் அவ்ளோ ரசிச்சு, மனசு வாயெல்லாம் விட்டு சிரிச்ச ஒரு படம்.
மொத சீன்லயே குமாரவேல் செத்துக் கெடக்கறாரு. அவரு எப்டி செத்தாருங்கற ஹூடன்னிட் தான் மொத்தப் படமுமே. நியாயமா இதை ஒரு திரில்லராவோ, மர்டர் மிஸ்ட்டரியாவோ தான் எடுத்திருக்கனும். ஆனா அதை வேற மாதிரி ட்ரீட் பண்ண விதம் ‘யப்பா!’
இதை காமெடிப்படமா எடுத்ததுக்கே ஒரு வாழ்த்து சொல்லனும். ஆனா அதையும் அப்பப்ப தலை தூக்கற ஃபீல்குட் எஃபெக்ட்டை அடக்கி வாசிச்சு, அதை ஃபீல்குட்டுக்குள்ள தள்ளாம விட்டதுக்கு இன்னொரு வாழ்த்து. ரெண்டாச்சா. இன்னும் இருக்கு நெறய காரணங்கள் இந்த மாதிரி பொக்கே & அவார்டு. அதை எல்லாத்தையும் பாப்போம் வாங்க.
ஹீரோன்னு பாத்தா, குமரன் தங்கவேல்னு ஒரு சீரியல் நடிகர். ரொம்ப தைரியமா ஒரு வெல் நோன் சினி ஆக்ட்டர் ஹீரோவ யூஸ் பண்ணாம, ஒரு சீரியல் நடிகர அதுவும் ஹீரோவா நடிக்க ஏத்துக்கிட்டதுக்கு ஒரு மிகப்பெரிய தைரியமும், அவர் கதை மேல நம்பிக்கையும் இருந்திருக்கனும். அதுக்கும் ஒரு வாழ்த்து. மூனு.
அடுத்ததா, ஹீரோயின் பாயல் ராதாகிருஷ்ணா. நான் கூகுள் பண்ண வரைக்கும் கன்னட நடிகை. அது சரியான தகவல்ன்னா, அதுல சொல்லிருக்கற படி இவங்க ஆல்ரெடி சில படங்கள்ல நடிச்ச அனுபவமுள்ளவங்க தான். ஆனா தமிழுக்குத்தான் புதுசு. என்னைப் பொறுத்தவரை புதுசு பழசுன்னெல்லாம் இந்த இன்ஸ்ட்டாகிராம் காலத்துல சொல்லிட்டிருக்க முடியாது. எதாவது ஒரு வகையில நாம அவங்கள ஃபாலோ பண்ணிட்டிருந்திருக்கலாம். நானும். அப்டிப் பாத்தா புதுமுகம்னு ஒன்னு இப்பெல்லாம் இல்லவே இல்ல. படத்துல இவங்களோட கேரக்ட்டர்படி இவங்க அதுக்கு ஆப்ட்.
அடுத்ததா ஜி.எம்.குமார் அண்ட் குமாரவேல். இந்த ரெண்டு கேரக்ட்டர்களையும் இப்ப இவங்களைத் தாண்டி வேற யாரையும் யோசிக்க முடியாதளவுக்கு கச்சிதமா நடிச்சிருந்தாங்க. உண்மையில கதையோட மெயின் லீட் இவங்க ரெண்டு பேரும்தான். இவங்களைச் சுத்தித்தான் மொத்தக் கதையும். கதைய நகர்த்துர காரணிகளும் இவங்கதான். இவங்க அதை ரொம்பவே உணர்ந்து நடிச்சிருக்கறதாலதான் அது சாத்தியம். சோ இதுக்கும் ஒரு வாழ்த்து. நாலு.
அடுத்ததா இந்தப் படத்துல நடிச்சிருக்கற ரெண்டு வினோதங்கள். ஒன்னு ராட்சசன்ல இன்பராஜ் டீச்சரா நடிச்சி மெரட்டிருந்த வினோத் சாகர். இன்னொருத்தர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால பட்டி பாபுவா நடிச்சிருந்த வினோத் முன்னா (அப்டித்தான் கூகுள்ல போட்ருக்கு. எனக்கும் அவரோட பேர் இன்னிக்கித்தான் அதுவும் கூகுள்ல பாத்துத்தான் தெரியும். வேற எதாவதா இருந்தா கமெண்ட்ல சொல்லித் தெளிவு படுத்துங்க). இதுல என்ன வினோதம்ன்னா, இதுவரைக்கும் காமெடி பண்ணி நடிச்சிருட்டிருந்த வினோத் முன்னாவ, இதுல சீரியஸ் ரோல்லயும் (அதை முழுசா சீரியஸ் ரோல்னு சொல்ல முடியாது. ஆனா அது சம்ஹவ் சீரியஸ் ரோல்தான்), இதுவரைக்கும் டெரரா நடிச்சிட்டிருந்த வினோத் சாகர அதிரிபுதிரி காமெடியனாவும் நடிக்க வச்சிருந்தது. ஷாக்கிங்கா அது ரெண்டுமே செமயா வொர்க்கவுட்டும் ஆகிருக்கு. ஆகவே அதுக்கும் ஒரு வாழ்த்து. அஞ்சு.
அடுத்ததா, இதுவரை காமெடிப்படங்கள்ன்னா நான், பல கமல் மற்றும் இதர நடிகர்களோட படங்களுக்கு வசனம் எழுதின கிரேசி மோகன், சுந்தர்.சி அப்டின்னு தான் நெனச்சுகிட்டிருந்தேன். இப்டி அதையெல்லாம் அசால்ட்டா ஹேண்டில் பண்ணி ஒரு காமெடிப்படம் எழுதி இயக்கினதுக்காக பாலாஜி வேணுகோபாலுக்கு நெறய வாழ்த்துக்கள்.
உண்மையிலயே செம படம். எத்தனவாட்டி வேணும்ன்னாலும் ரீவாட்ச் பண்ணலாம். அவ்ளோ வொர்த்து.

Blackmail (2025)

 


Blackmail
அப்டின்னு ஒரு கிரைம் திரில்லர் படம். கோயம்பத்தூர்ல நடக்கற கதைன்னு சொல்லிட்டு, கோயம்பத்தூர் வட்டார வழக்கே துளி கூட இல்லாம வெளி வந்திருக்கற படம். ஒருசில எடங்களத் தவிர வேற எந்த லோக்கேசனையும் கோயம்பத்தூர்ன்னே சொல்லிக்கக் கூட முடியாத ஒரு படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.
பிஸ்னஸ்மேனான ஸ்ரீகாந்த், மற்றும் அவரது மனைவி பிந்து மாதவியோட மகளான குட்டிப் பொண்ணு அனுவோட கார்ல வந்துட்டிருக்கறப்ப ஒரு சின்ன விபத்து. அனு அதுல மிஸ்ஸிங். ரேன்சம் காலெல்லாம் எதுவும் வரல. சோ இது கிட்னாப் இல்ல. அப்புறம் என்னாச்சு? படம் முடியிற வரைக்கும் அந்தப் பொண்ணத் தேடிட்டே இருக்காங்க.
இதுக்கு நடுவுல மிஸ்ஸிங்கான அனு, கிட்னாப் செய்யப்படுது. அச்சச்சோ அப்புறம்? கிட்னாப் செய்யப்பட்ட அனு கடத்தப்படுது. அப்புறம்? கடத்தப்பட்ட அனு கிட்னாப் ஆகுது. அய்யய்யே அப்புறம்? அப்புறம் கடைசி வரைக்கும் இதே அய்யய்யே தான். ஆக இதுல ஒரு கிட்னா நாய் இல்ல. ஏகப்பட்ட கிட்னா நாய்கள்.
இதுக்கும் நடுவுல பிந்து மாதவியோட முன்னாள் காதலால, அப்ப எடுக்கப்பட்ட வீடியோஸ் ப்ளஸ் இமேஜஸை வச்சுக்கிட்டு அவளோட முன்னாள் காதலனோட பிளாக் மெய்ல். அப்புறம் தான் டெலிவரி செய்யிறது கோக்கெயின்னே தெரியாம அதை டெலிவரி வேனோட தொலச்சிட்டு அதுக்கு பணயமா, தன்னோட கற்பமான காதலிய கிட்னாப் பண்ணி வச்சுகிட்ட முதலாளி முத்துக்குமாருக்கு, அந்த சரக்கோ அல்லது அதுக்கு ஈடா அம்பது லட்சம் பணமோ கொடுக்கணும்னு மிரட்டப்பட்டு அலையிற ஹீரோ ஜீ.வி.பிரகாஷ்குமார்ன்னு கதை போகுது வகை தொகையில்லாம.
டைரக்ட்டர் ஜீ, எதாச்சும் ஒன்னுல கான்சென்ட்ரேட் பண்ணி படம் எடுக்கலாம்லன்னு கேக்கறளவுக்கெல்லாம் இல்ல. இதையெல்லாம் கலந்தடிச்சு எல்லாம் ஒரே புள்ளியில பயணிக்கிற மாதிரி தெளிவாத்தான் எடுத்திருக்காரு.
மேல ஏகப்பட்ட கிட்னா நாய்கள்னு சொன்னேன்லயா, அப்டி யாரு ஃபோன் பண்ணி அனு எங்ககிட்டதான் இருக்குன்னு சொன்னாலும், ஸ்ரீகாந்த் அவங்களுக்கு அம்பது லட்சம், ஒரு கோடின்னு கொடுத்துட்டு, பதிலுக்கு அனு மட்டும் கிடைக்காம நல்லா நடிச்சிருக்கீங்க ஸ்ரீகாந்த். இவர் நடிச்சிருக்கறதால சந்திரிகா ரவியும் ஒரு குத்தாட்டத்துல போனஸா வந்து ஆடிட்டுப் போறாங்க. அவ்ளோ நல்லால்லாம் இல்ல. இன்ஃபாக்ட், சீரியஸ் ப்ளஸ் நல்லா விறுவிறுப்பா போய்ட்டிருந்த இந்தப் படத்துக்கு அது ஒரு ஸ்பீடு பிரேக்கர்தான். தயவு செய்து எடிட்டர்கிட்ட சொல்லி, அதையெல்லாம் தாட்சண்யம் பாக்காம எடிட் பண்ணி, டெலீட் பண்ணி ஒரு ஃபைல் ரெண்டர் பண்ணி அத ரிலீஸ் பண்ணுங்க டைரக்ட்டர். தேவையில்லாத அந்த ஆணியப் புடிங்கீட்டு.
அப்புறம் இந்தப்படத்துல எதுக்கு இவர் குறுக்கா மறுக்கா ஓடிக்கிருக்கார்னு கேக்க வச்ச ஒருத்தர் – ரமேஷ் திலக். இது சொல்லிக்கிற மாதிரி கேரக்ட்டரும் கெடயாது. அவரே சொல்லிக்கிட்ட மாதிரி, கதைக்கு அவ்ளவா முக்கியத்துவமுள்ள கேரக்ட்டரும் கிடையாது. பின்ன எதுக்கு நடிச்சாருன்னு தான் புரியல. இத்தனைக்கும் ரொம்ப சாதாரணமான சப்போர்ட்டிங் ரோல். இவரே தான் பல பேட்டிகள்லயும் சொல்லிருந்தாரு, கதைல அவரோட முக்கியத்துவத்தைப் பொறுத்து, அது ஒரு சீனா இருந்தாலும், யோசிக்காம, தயங்காம நடிப்பேன்னு. ஆனா இதைப் பாத்தா, அவர் பேட்டிகள்ல சொன்னத, அவரே யோசிக்காம ஒத்துக்கிட்டு நடிச்ச மாதிரிதான் தோனுது. கூடவே ரெடின் கிங்ஸ்லி – சிரிப்பு வரல. ஆனா கதைக்கு அப்டி ஒரு கேரக்ட்டர் தேவைதான் போல. அதனால ஓக்கே. அக்சப்ட்டபிள்.
படம் உண்மையிலயே நல்லாத்தான் இருக்கு. காலத்துக்கும் நெலச்சு நிக்குமான்னு சொல்லத் தெரியல. அது கொஞ்சம் கொழப்பம் தான். அதனால கிரைம் திரில்லர் விரும்பிகள் ட்ரை பண்ணலாம். படம் விறுவிறுப்பாத்தான் இருக்கு.