ஹாய் மார்வல் ஃபேன்ஸ், அசெம்பிள்
எல்லாரும் டூம்ஸ்டே டீசர் பாத்திருப்பீங்கன்னு நம்பறேன். பார்க்காதவங்க பார்த்துட்டு வாங்க. நம்ம போஸ்ட் இங்கனக்குள்ளயே தான் இருக்கும்.
பார்த்தாச்சா! ரைட்டு இப்ப ஸ்பெக்குலேசனுக்குள்ளாற போவமா?
சரி. கேப்டன் அமெரிக்கா, பெக்கி கார்ட்டர் வீட்டுக்கு பைக்ல போற சீன் பாத்திருப்பீங்களே, அதுதான் ஆல்ட்டர்னேட் டைம்லைன். அதாவது, தானோஸ போட்டுத்தள்ளுன அடுத்த நாள் கதை. அப்ப ஸ்டீவ் ரோஜர்ஸ், எல்லா கல்லையும் திரும்ப எடுத்த எடத்துலயே வைக்க கெளம்பினார்ல, அங்க இருந்து தான் இந்தக் கதை. இந்த டைம்லைன். அந்த கல்லையெல்லாம் எடுத்த எடத்துல வச்சிட்டு பெக்கி கார்ட்டரோட தான் வாழனும்ன்னு ஆசைப்பட்ட அந்த லைஃப வாழ்ந்துகிட்டு இருக்கறதாகத்தான் எண்ட்கேம்ல கதைய முடிச்சிருப்பாங்க.
இப்ப அப்டியே அந்த லைஃப்ல அவருக்கு ரெண்டு பசங்க இருக்கறதா காட்றாங்க. அப்டியே கட் பண்ணி சிவில் வார் கதைக்குள்ளாற முக்கியமான ஒரு விசயத்த பாப்போம். அங்க பெக்கி கார்ட்டர்க்கு இன்னொருத்தரோட கல்யாணமாகி அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்கறதா காட்டிருப்பாங்க. அஃப்கோர்ஸ் அதுல பெக்கி இறந்து போறதாகவும் ஒரு காட்சி இருக்கும். நிற்க.
இங்க அவங்க கல்யாணம் பண்ணி இறந்து போன பெக்கியோட அந்த ஆள் ஏன் யார்னு நாம யோசிக்கவே இல்ல?
அது வேற யாருமில்ல. அதுவும் ஸ்டீவ் ரோஜர்ஸ் தான்.
ஆனா அப்ப அதை நமக்கு காட்டியிருக்க மாட்டாங்க. எப்பவுமே ரெண்டு கேப்டன் இந்த டைம்லைன்ல இருந்திருக்கறதாகத்தான் இந்தக் கதை போகப் போகுது. பெக்கிய கல்யாணம் பண்ணதும் ஸ்டீவ் தான். இதுல எந்த மாத்தமும் இருக்காதுன்னு நான் ஹெவ்விய்யா நம்பறேன்.
அப்ப அந்த ரெண்டாவது கேப்டன் என்னவா இருந்தாருன்னு நீங்க கேக்கறது புரியிது. எல்லாத்துக்கும் மேல அவர் ஏன் தானோஸ் கூட போராட. வரலன்னும் நீங்க கேக்கறதும் கேக்குது.
அவர் தன்னோட ஐடெண்டிட்டிய காட்டினா அந்த டைம்லைன்ல மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தும்ன்னு கேப்டனுக்கு நல்லாவே தெரியும். அந்த எச்சரிக்கையோடதான் அவர் பாஸ்ட்க்கு எண்ட் கேம்க்கு அடுத்த நாள் பிரயாணப் படுவாரு. அதனால கேப்டனை பொட்டில வச்சு பூட்டி வச்சிட்டுதான் பெக்கியோட குடும்பம் நடத்தி கொழந்த பெத்திருப்பாரு. ஆச்சா.
அப்ப அவர் இத்தன நாள் குடும்பஸ்தனா மட்டும் தான் இருந்திருப்பாரான்னா இல்ல. அவர் அப்பவும் இன்னொரு ஐடெண்டில தான் ஒரு சூப்பரா இருந்திருப்பாரு. அது ஹீரோ இல்ல. வில்லன். ஆமா. அது என்னன்னு பாக்கலாம் வாங்க.
அது வேற யாருமில்ல. கேப்டன் ஹைட்ரா தான். அதுக்கான ஃபோர்ஷேடோ தான், எண்ட்கேம்ல வந்த லிஃப்ட் சீன். கேப்டன் ரம்லோவ் அண்ட் கோகிட்ட சொல்ற 'ஹெய்ல் ஹைட்ரா' சீன். அப்ப அங்க சண்டை போட்ட ரெண்டு கேப்டன்ல ஒருத்தர்தான் இவரான்னு கேட்டா, இல்ல. அது பாஸ்ட்க்கு போய் தன்னோட செல்ஃப்கிட்ட தனக்குத்தானே போட்டுக்கிட்ட செல்ஃப் ஃபைட் தான்.
அப்ப அந்த ரெண்டு பசங்க இத்தன காலம் என்ன பண்ணாங்க, அவங்க ஏன் எதுலயுமே கலந்துக்கலன்னா அதுக்கும் ஒரு பதில் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் டூம்ஸ்டேல ஒரு முக்கியமான ரோல் பிளே பண்ணப் போறாங்க. அதுக்குதான் டீசர் கடைசில வர்ற அந்த டாக்டர் டூம் பெக்கி வீட்டுக்கதவ தட்ற சீன்.
இந்த டூம் லைஃப நல்லா உத்துப்பாத்திங்கன்னா அது அப்டியே ஐடில வந்த பென்னிவைஸ் லைஃப் மாதிரியே தான் இருக்கும். அதே புள்ளபுடிக்கி கேரக்ட்டர்தான் டாக்டருக்கும். அவன் கேப்டன் பசங்கள மட்டுமில்ல. அடுத்த வாரம் ரிலீஸாகப் போற தோர் டீசர்லயும் வந்து தோர் வீட்டுக்க்கதவத் தட்டுவான். தோருக்கு புள்ள ஒன்னு இருக்குன்னு தோர் லவ் அண்ட் தண்டர் பாத்த எல்லோருக்கும் தெரியும். அதுல அவருக்கு கோரோட பொன்னு லவ்வ இவர் தன்னோட பொன்னா தத்தெடுத்திருப்பாரு. அவளையும் புடிச்சிட்டுப் போயிருப்பான். அங்க இருந்துதான் இந்த டீசரே தொடங்கும் நீங்க வேணா பாருங்க.
டூம்ஸ்டே டைரக்டர்ஸ் ரூசோ பிரதர்ஸ் நம்மள விட பெரிய அவெஞ்சர்ஸ் ட்ரையோ ஃபேன்ஸ். ஸோ அதுல இருந்துதான் இந்த டீசருக வரும். மொதல்ல கேப்டன். அடுத்து தோர். அதுக்கடுத்து அயன்மேன் லேது. அந்த கேரக்டர்ல வந்த ஆர்டிஜேயோட டாக்டர் டூம் டீசர் வரும். அதுக்கப்புறந்தான் இந்தக் கதைல வரப் போற மத்த நாலு பெரிய டீம்ஸோட டீசர். ஆக மொத்தம் இந்த மூனு ப்ளஸ் மூனு ஆக ஆறு டீசருக்குப்பறந்தான் மெயின் டிரைலரே!
அடுத்த பதிவு அடுத்த டீசருக்கப்புறம்!