Saturday, January 24, 2026

Bou Buttu Bhuta - ஆட்டுக் களவாணி

Bou Buttu Bhuta

அப்டின்னு ஒரு ஒடியா மொழி பேய்ப்படம். பவ்ன்னா அம்மா, புட்டுங்கறது பேரு. பூதான்னா பேய். நடிகர்கள்னு இதுல யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு யாரையும் தெரியாதுங்கறதால நேரடியா படத்துக்குள்ள போயிடலாம் வாங்க.

மேற்கூறிய இந்த மூனு பெயர்களும், கதாபாத்திர அறிமுக அத்தியாயங்களா ஒன்னுக்கொன்னு இண்டர்லின்க் வச்சு நமக்கு அறிமுகப்படுத்தப் படுது. இது உண்மையிலேயே நமக்கு வேற மொழிப் படத்தைத்தான் பார்த்துகிட்டிருக்கோம்ங்கற ஃபீலிங்கை வர விடாம, கதைக்குள்ள மட்டும் நம்மள ஃபோகஸ் பண்ண வைக்குது. அப்டி மொதல்ல காட்டப்பட்ற பவ் அத்தியாயத்துல ரத்னமாலாங்கறது யாரு, அவங்க எப்டிப்பட்டவங்க, அவங்க எந்த எல்லை வரைக்கும் போகக் கூடியவங்க அப்டின்னு நமக்குத் தெளிவு கிடைச்சதுக்கப்புறம் பவ் அத்தியாயம், தலைப்போட முடியுது. அதுக்கப்புறம் அந்தக் காட்சியோட தொடர்ச்சியா, அடுத்த அத்தியாயம். ஆனா இது மிஸ்கம்யூனிகேட்டாகவும் வாய்ப்பிருக்குதான். அதாவது பவ் தான் படத்தோட டைட்டில்னு நினைக்க வாய்ப்பிருக்கு. அந்த எண்ணம் கண்டிப்பா வந்தது. ஆனா அது ரெண்டாவது அத்தியாயத்தோட தலைப்பு வந்ததும், ஓ, இது எபிசோட் டைட்டிலான்னு நமக்கு ஒரு தெளிவு கெடச்சதுக்கப்புறம், அடுத்த மூனாவது எபிசோட் முடிவும், தலைப்பும் ஒன்னா இண்டர்வெல்ல ரிவீல் செய்யப்படுது.

பவ் தான் நான் எழுதின பிடாரி நாவல்ல வர்ற பிடாரி. புட்டு தான் ஆதி. இதுவே எனக்கு மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. கதையும், களமும் மொத்தமும் வேறன்னாலும், நான் மேல சொன்னது மாதிரிதான் அவங்க ரெண்டு பேரும். அதனாலேயே எனக்கு இந்தப் படம் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது. நம்மள மாதிரியே இன்னொருத்தரும் யோசிச்சிருக்காங்கன்னும், நாம அந்தளவுக்கு வொர்த்தா தான் எழுதிட்டிருக்கோம்ங்கற ஒரு கர்வமும் வந்தது! சரி, தற்பெருமை போதும், கதைக்குள்ள போவோம்.

ரத்னமாலா தான் புட்டுவோட அம்மா. அதாவது பவ். அவங்க ஒரு பேயோட்டி. அவங்க மகனுக்கும் அவங்களுக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருக்குது. அது நமக்கு புட்டு மேல ஒரு எரிச்சலை உருவாக்குது. இது எல்லாமே அம்மா மகன் காட்சிகள்ல மட்டும்தான். அதுவே புட்டு தனியா ஊருக்குள்ள வெளியே உலாவும் போது, புட்டு மேல நமக்கு வர்றதில்ல. அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை வடிவமைச்சது நல்ல விசயம். ரத்னமாலா ஒரு பேயோட்டி, அம்மா கேரக்ட்டரா இருந்தாலும், மொத்தக் கதையும் அவங்க ஷோல்டர்ல தான். என்னதான் கதையில ஹீரோ அண்ட் ஹீரோயின்னு இருந்தாலும், இந்த மொத்தக் கதைக்கும் ரத்னமாலாதான் ஹீரோ அண்ட் ஹீரோயின். அதனாலயே அவங்க மேல ஒரு மரியாதை கலந்தபடிதான் நாம பாக்க முடியுது. புட்டுவுக்கு அம்மாவைப் பத்தியோ, வீட்டு நிலை பத்தியோ எந்த அக்கறையும் இல்லாம விட்டேத்தியாதான் சுத்திட்டிருக்கான். ஆனா அதெல்லாம் ஆணி புடுங்கற வரைக்கும்தான். அதுக்கப்புறம் மொத்தமும் இன்னொரு தளத்துக்கு மாறிடுது. 

ரத்னமாலா இளம் வயது, முதிர் வயதுன்னு ரெண்டு பேரைக் காட்றாங்க. எனக்கு என்ன டவுட்டுன்னா, அதெப்டி இவ்ளோ அக்யூரட்டா ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்கன்னுதான். ஒருவேள இந்தியன் சுகன்யா கெட்டப் மாதிரி வயசான கேரக்ட்டருக்கு மேக்கப் போட்டாங்களா இல்ல, அம்மா பொண்ணையே நடிக்க வச்சிருக்காங்களான்னு செம ஷாக்கிங் சர்ப்ரைசா இருந்தது. இன்னொரு இளம் கேரக்ட்டரும் படத்துல இருக்கு. ஆனா அது கடைசி வரைக்கும் இளம் கேரக்ட்டர் மட்டும்தான். அவங்க ஒருவேளை ரத்னமாலாவோட ஸ்கூல்டைம் கேரக்ட்டரான்னு கூட நினைக்க வச்சதென்னமோ உண்மைதான். எனக்கு மட்டுந்தான் இப்டியெல்லாம் தோனுதா இல்ல எல்லாருக்குமான்னு தான் கேக்கத் தோனுது.

அப்புறம் புட்டு பல வேரியேசன்ல நிறைய வெரைட்டியான கண்ணசைவுகளால மட்டுமே நடிச்சிட்டுப் போயிருக்காரு. இதெல்லாம் கதையோட மீட்டருக்குள்ள மட்டும் தேவையான அளவுக்கு நடிச்சதா, இல்ல பொதுவாவே இவர் இப்டித்தானான்னு தெரிஞ்சிக்க, இவர் நடிச்ச மற்ற படங்களைப் பார்க்கனும் போல. ஆனா ஆக மொத்தத்துல கொஞ்சம் நடிங்க பாஸ் தான் சொல்ல வைக்குது. ஹீரோயினா, ஃப்ரெண்டா, வில்லனா, சைடு வில்லனா நடிச்சவங்க எல்லாரும் அவ்ளோ பர்ஃபார்ம் பண்றாங்க, உங்களுக்கு மட்டும் என்ன பாஸ்? அதுவும் அந்த நாக்கைக் கடிச்சுத் துப்புற ஒத்தநாடி சரீர லேடியெல்லாம் சில நொடிதான்னாலும், அப்டி ஒரு அக்ரஸிவ்னஸ் அவங்க நடிப்புல. இன்னொரு காதல் ஜோடியும் செம பர்ஃபாமென்ஸ். 

இது ஒரு பேய்ப்படம்ன்னாலும் கூட, படம் பார்த்து முடிச்சதுக்கப்புறம், நமக்கு பேய்ப்படம் பார்த்த மாதிரி எந்த ஃபீலும் இருக்காது. இத்தனைக்கும் படத்தைப் பார்க்கறப்ப பயந்திருப்போம், ஆச்சரியப் பட்டிருப்போம், அசந்திருப்போம். ஆனா படம் பார்த்த பின்னாடி எதுவும் பெருசா மனசுல நிக்காது. காரணம் புட்டுவோட லெத்தார்ஜிக் லெப்ட் ஹாண்டில் பர்ஃபாமென்ஸ் தான். மத்தபடி படம் நல்லாத்தான் இருக்கு. பாட்டு டான்ஸ் எல்லாமே தமிழ்ப் படத்தைத் தான் ஒடியா மொழியில டப் பண்ணிப் பார்த்துகிட்டிருக்கோமான்னு ஒரு ஃபீல் கொடுத்தது. டான்ஸ் கொரியோகிராஃபி கூட ராஜு சுந்தரமோன்னெல்லாம் நினைக்க வச்சது. 

ஒருவாட்டி பார்க்கலாம். ஓகேதான். பாருங்க. அப்றம் அடுத்த பதிவுல சந்திக்கலாம்!

1 comment: