அப்டின்னு ஒரு இதுக்கு நா என்ன சொல்றதுன்னே தெரியாத ஒரு படம். நடிகர்கள்னு பாத்தா, கவின், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. ஆனா, அதிகமா பேசறதுன்னு பாத்தா நெல்சன் திலீப்குமார்தான். ஆமா வர்தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்காரு. உண்மையில அது ரொம்ப நல்லாவே இருக்கு. வாங்கு அது எந்தளவுக்கு நல்லாருக்குன்னு பாக்கலாம்.
கதைன்னு பாத்தா, நெல்சன் வாய்ஸ் ஓவர்ல, வேலுவும், பூமியும் உயிர் போறளவுக்கு ஒரு பிரச்சினையில மாட்டிகிட்டிருக்காங்கன்னு ஆரம்பிக்கிது. வேலுதான் சி.இ.ஓ. ஆனா எந்தக் கம்பெனிக்குன்னு கேக்காதிங்க. அது ஒரு செல்ப் எம்ப்ளாய்மெண்டா டைம் பாஸிங்கா இல்லாம, அப்பப்ப ஒரு ஒழுங்கில்லாம ஸ்பை வேல பாக்கற எத்திக்கல் ஹேக்கர்னு அவரே சொல்லிக்குவாரு. ஆனா போற வழியில ஒரு தட்டுக்கடையில பஜ்ஜி சாப்ட்டுக்கிருக்க நெர்டுகிட்டு கொடுத்து ஹேக் பண்ணச் சொல்லிட்டு அவர் அடுத்த சீன் வர்ற வரைக்கும் ரெஸ்ட் எடுக்கப் போயிடுவாரு. உண்மையில தன்கிட்ட வேலை கொடுக்கறவங்களோட அந்தரங்கங்கள வச்சு அவங்களையே ப்ளாக் மெயில் பண்ணி, அவங்ககிட்டயே பணம் புடுங்கற வேலைதான் அவ்ளோ ஸ்மார்ட்டா காட்டிருக்காங்க. அதே போல இந்தப் பக்கம் பூமி ஆதரவற்ற பெண் கொழந்தைங்களக் காப்பாத்துறேன் பேர்வழின்னு, அவங்கள வளத்து வி.ஐ.பிக்களுக்கு சப்ளை பண்ற கெக்கேவலமான ஒரு ஜந்துதான் பூமி. என்ன கருமமோ இதெல்லாம் ஒரு கதையா எழுதி நடிகர்கள் நடிகைகள்கிட்ட சொல்லி படமா எடுத்து பின்னணி இசையமைச்சு, கலர் கிரேடிங் பண்ணி, தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி, பத்தாதுன்னு ஓடிடிலயும் ரிலீஸ் பண்ணி.... போங்கடா டேய்.
அதுக்காக திருட்டுத்தனம் பண்ற ஹீரோவ மய்யமா வச்சு வர எல்லா படங்கள்லயும் இந்தப் பிரச்சினை இருக்கும்ன்னு சொல்ல முடியாது. இதுல மட்டும்தான் இவ்ளோ கேவலமான பாத்திரப் படைப்புக்கள். எதோ வில்லனுக்கு அப்டி எழுதினது ஓகே தான். தொலையிதுன்னு விடுற பிரச்சினை இல்ல. அதாவது வில்லன். அப்ப ஹீரோ வில்லனை ஜெயிச்சாலே போதுமா? அப்ப ஹீரோன்னு ஒருத்தன் நாம கேட்டோம்ன்னா உன்ன யார்றா அவன் ஹீரோவா பாக்கச் சொன்னான்னுதான் டிஃபண்ட் பண்ண முடியும் டைரக்ட்டரால. இதைத் தவிர வேற எதுவும் பண்ணிக்க முடியாது.
இதுல மணி ஹீஸ்ட் பாதிப்பு வேற. எம். ஆர்.ராதா மட்டும் இருந்திருந்தா பச்ச பச்சயா கேட்ருப்பாரு. இதுல ஹெராயின் மாதிரி ருஹானின்னு ஒரு ஹீரோயின். இன்ஸ்டாகிராம்ல நெம்ப பேமஸ். ஆல்ரெடி ஒரு வெப்சீரிஸ்ல நடிச்சவங்கதான். அதுலயாச்சும் போலிஸா நடிச்சிருந்தாங்க. இதுல அவங்களயும் ராஜராஜ சோழன் மோகனா ஹீரோ மாதிரியே ஆல்ரெடி கல்யாணமானவங்க. ஹஸ்பெண்ட் இல்லாத நேரம் இந்த வேலுவுக்கு கால் பண்ணி, அவர் வீட்ல இல்ல, வா ரீல்ஸ் சூட் பண்ணலாம்ன்னு கூப்டறாங்க. வேலுவும் ராஜராஜ சோழன் பாட்டுல வர்ற மோகன் தான். சோ நய்ஸ் ஆப் யூங்க.
கவின் கொஞ்சமாச்சும் மனசாட்சியோட கதைகளை செலக்ட் பண்ணுஙக. நல்ல வளர்ற பருவத்துல தான இருக்கீங்க. எதுக்கு இந்த வேண்டாத வேலை?
இன்னும் இதுல இதுக்கு மேல எழுத ஒன்னுமே இல்ல. பாக்கறப்ப நல்லாத்தான் இருந்தது. எழுத உக்காந்ததும் மனசுல நல்லாருக்குன்னு எழுத சத்தியமா தோனல. உண்மையில மனசாட்சிக்கி விரோதமா எழுத முடியல. அவ்ளோ கேவலமான பாத்திரப்படப்புகள். இதுக்கு முன்னாடி கூட இப்பேர்ப்பட்ட கெக்கேவலமான பாத்திர வடிவமைப்புக்கள தமிழ் சினிமா பாத்ததில்ல. அதுல மொத பரிசு... ஆம் அது வேற குடுப்பாங்களாக்கும்?
போங்கடா டேய்!
நானும் நல்லத பொறுக்கி எடுத்து போஸ்ட் பண்ணலாம்னுதான் ட்ரை பண்ணேன். அப்டி ஏதாவது இருந்தாத்தான எழுத :/
No comments:
Post a Comment