Sunday, February 1, 2026

சர்வம் மாயா - இந்தப் பேய் வேணும்

சர்வம் மாயா

அப்டின்னு ஒரு மலையாள சூப்பர் நேச்சுரல் பேய்ப்படம். இதுக்கு மேல அதை ஃபீல் குட், காமெடி அப்டி இப்டினு எப்டி சொன்னாலும் தகும். நடிகர்கள்னு பாத்தா நிவின் பாலி, அஜு வர்கீஸ், ரியா ஷிபு மற்றும் பலர் நடிச்சது. லைஃப்ல இப்டி ஒரு பேய்ப்படத்தை நான் பார்ப்பேன்னு சத்தியமா எதிர்பார்த்ததில்ல. மொத்தத்துல ஓஹெச் டிஹெச்ஏஏ ன்னு இருந்தது. அது எப்டினு சொல்றேன் வாங்க.

கதைப்படி பிரபேந்துவுக்கு சாமி நம்பிக்கையில்ல. ஓ மை காட்னு சொன்னாக் கூட நாக்கைக் கடிச்சுக்கற நாத்திகன். சாமி மேல நம்பிக்கையெல்லாம் போயி, கிராஸ் பெல்ட்ட கழட்டி எறிஞ்சிட்டு, தன்னோட பேஷனான கித்தார் கலைஞரா கிடைக்கற சம்பளத்துல ஜீவனம் நடத்திகிட்டிருக்காரு. அப்பவும், விதி வெளையாடி, அந்த வேலையும் ஒரு ரெண்டு மாசம் இல்லாத நிலை. வேற வழியே இல்லாம புடிக்காத சொந்த வீட்டுக்கே போறாரு. அங்க போனதுக்கப்புறம் கூட கைச்செலவுக்கு காசில்லாம, வீட்ல கேட்டா, யாரும் மதிச்சு கொடுக்கறதும் இல்ல. வேற வழியே இல்லாம தன்னோட சொந்தக்காரன் ரூபேஷ்கிட்ட அசிஸ்டெண்ட் குருக்களா, புரோகிதம் பண்ணப் போறாரு, கிராஸ் பெல்ட்ட வேண்டா வெறுப்பா மாட்டிக்கிட்டு. பழையபடிக்கி கையில காசு தாராளமா புரள ஆரம்பிக்கிது. அப்ப பேய் பிடிச்ச ஒரு பையனோட வீட்டுக்கு புரோகிதம் பண்ணப் போன எடத்துல அகஸ்மாத்தா அந்தப் பையன் குணமடைய, அதுக்கப்புறம் பல கான்சிக்வென்சுகள்.

இந்த கான்சிக்வென்சுகளுக்கு நடுவுல ஒரு பொண்ணு திருட்டுத்தனமா இவரோட ஃபோன இவர் வீட்டுல இவரோட ரூமுக்கே வந்து எடுத்து யூஸ் பண்றா. அதுவும், அவர் ரூம்ல இருக்கும்போதே. அவளா யாரு என்னன்னு விசாரிக்கலாம்னு பாத்தா டக்குன்னு காணாமப் போயிடறா. ஆனா அடிக்கடி வந்து பயமுறுத்தவும் மறக்கறதில்ல. இதுக்கப்புறம் அவ நிதானமா பிரபேந்துகிட்ட பேசறப்ப இருந்துதான் படமெ வேற தளத்துக்கு மாறுது. இந்த சீன் வரைக்கும் படம், என்னமோ பரவால்லன்னு குட்டிக் குட்டிக் காமெடி காட்சிகளோட ஓடிகிட்டிருந்தது. அதுக்கப்புறம், இந்தப் படத்து மேல எனக்கு ஒரு தனி மரியாதையே வர ஆரம்பிச்சு, கண்கள் அகல விரிஞ்சதென்னமோ சத்தியம்னு ஒத்துகிட்டே ஆகணும். அப்டி அவ சொன்ன அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா? ஐ தின்க் அயம் அ கோஸ்ட். மே பி. அயம் நாட் ஷ்யூர். எனக்கே அந்த டவுட் இருக்கு அப்டின்னு. அப்ப படம் பார்த்துகிட்டிருந்த என் முகத்துல ஒட்டிக்கிட்ட ஒரு குறுஞ்சிரிப்பு, படம் முடியிற வரைக்கும் இருந்தது.

இதெல்லாம் கொஞ்ச நேரத்துல ஒரு ஏக்கமாவும், கன்ணீராவும் மாறிடுச்சு. இப்டி ஒரு பேய் நமக்கு கிடைக்காதான்னு தான். இந்த எண்ணம், சூது கவ்வும் பாக்கறப்ப, ஷாலுவப் பத்தி தெரிஞ்சதும் பாபி சிம்ஹா, என்ன பண்ணா இப்டி எனக்கு ஷாலு கண்ணுக்குத் தெரிவான்னு கேக்குறது ஒரு வகையில ஆடியன்ஸோட அடிமனசு ஆசையைத் தான் பாபி சிம்ஹா கேரக்ட்டர் வழியா அதைக் கடத்திருப்பாங்க. நமக்கும் ஷாலு செத்துப் போற சீனுக்கு பெருசா ஃபீல் பண்ண வைக்காம, அதுக்காக அழுதுகிட்டிருக்கற தாஸைப் பார்த்து சிரிப்பு வர்ற மாதிரிதான் அதைக் கடந்திருப்போம். ஆனா இந்தப் படத்துல நமக்கு இந்த டெலுலு பேயை நமக்கு ரொம்ப புடிச்சுப் போகும். எனக்கு இதையெல்லாம் தாண்டி இப்டியெல்லாம் கூட பேயைக் காட்டலாமான்னு அதிர்ச்சிகராமான ஆச்சர்யமா இருந்தது. ஆனா இது ஒரு புது விசயம்னதும் உடனே கமல் பண்ணிருக்கனுமே இதெல்லாம் ஆல்ரெடின்னு மனசு மூளையக் கொடஞ்சு அட அது ஜப்பானில் கல்யாணராமன்!


அதை மாதிரி இதுவும் ஒரு பேய்தான். பேய்ன்னு கன்பார்மானதுக்கப்புறமா நமக்கு தோணுற சந்தேகங்களான, ஜம்ப் ஸ்கேர் சீன்களான, ரெகுலர் கிளிஷே காட்சிகளை ஒடச்சு, அப்டியெல்லாம் எதுவும் இல்லாம, அப்டி யாராவது திடீர்னு கிராஸானா இந்த டெலுலுவே பயப்படும். அப்டி ஒரு அழகான பேய். கொஞ்ச நேரத்துல, இது பேசாம லவ்வுல போய் முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்னு ஒரு எண்ணம் வந்து இம்சை பண்ணுறதை நம்மால தவிர்க்கவோ தடுக்க இயலாது. அவ்ளோ அழகான ரொமாண்டிக்கலான போர்சன்ஸ். ஒரு கட்டத்துல ப்ரீத்தி முகுந்தன் அறிமுகமாகி அவங்ககூட சிரிச்சுப் பேசிகிட்டிருக்கறப்ப, டெலுலு முகத்தைப் பாத்ததுமே நமக்கே புரிஞ்சிடுது, இது பொசசிவ்னஸ்ல போய்த்தான் முடியப் போகுதுன்னு. இந்த எக்ஸாக்ட் மொமண்ட்ல இருந்து டெலுலுவுக்காக நம்ம கண்கள்ல கண்ணீர் துளிர்க்கறதையும் நம்மால தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது. அதையெல்லாம் தாண்டிம், ஒரு ஹாண்டிங் எக்ஸ்பீரியன்ஸை கடக்கறப்ப நமக்குள்ள திக்குன்னு ஒரு ஃபீல் வந்து அதுக்கப்புறமா வர்ற தானோஸ் ஸ்னாப் டெசிமேசன் மாதிரியான ஒரு சீனை நாம பார்க்க, லைட் ஹார்ட்டடா இருந்தா தயவு செஞ்சு படத்தோட கிளைமேக்ஸ் வரைக்கும் போகாம, பொசசிஸ்வ்னஸ் ஃபீல் வர்றப்பவே படத்தை நிறுத்திட்டுப் போயிடுங்க.

இதெல்லாம் காலத்தையும் கடந்து நிற்கக் கூடிய ஒரு அழகான அருமையான அனுபவம். இந்தக் கதையை எழுதினவர்க்கு அன்பு முத்தங்கள்!

அடுத்த படத்துல சந்திப்போம்

No comments:

Post a Comment