ஈசா
அப்டின்னு ஒரு தெலுங்கு பேய்ப்படம். நடிகர்கள்னு பாத்தா ஹீபா பட்டேல் அப்றம் நம்ம மர்ம தேசம் ரமணி வெர்சஸ் ரமணியில நடிச்ச பப்லு பிரித்திவிராஜ் தவிர மற்ற ஏனைய முகங்கள் எல்லாருமே அந்நிய முகங்கள்தான். இந்தப் படமே ஒரு மீம் மாதிரி வடிவேலுவோட காமெடியா போனதுதான் வருத்தம். இதைப் பெருசாக் கொண்டாடி 9+ ரேட்டிங்ல வச்சிருக்கானுக ஐ.எம்.டி.பில. சரி, இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி ரெண்டு பொண்ணுங்,. ரெண்டு பசங்க. சின்ன வயசுல எல்கேஜி படிக்கறப்பலேர்ந்தே ஃப்ரெண்ட்ஸ். இதுல ஒரு ஜோடிக்கி கல்யாணமாயிடிச்சு. இன்னொன்னு காதல சொல்லிக்கல. பையன் காதலிக்கிறான். பொண்ணுகிட்ட இன்னும் சொல்லிக்கல. ஒன் சைடுதான். இந்த நாலு பேருக்கும் என்ன வேலைன்னா, போலி சாமியார்கள் மாதிரி பேயோட்டறேன் அதப் பண்றேன் இதப் பண்றேன்னு காசைப் புடுங்குறவங்கள எக்ஸ்போஸ் பண்ற ஜர்னலிஸ்ட்ஸ். அப்டித்தான் ரெஜிஸ்டராச்சு எனக்கு படத்தைப் பாக்கறப்ப. தவிர அவங்க இதைத் தான் பண்றாங்கன்னு எதுவும் குறிப்பிட்டு காட்டல. ஒருவேளை சொல்லிருக்கலாம் டயலாக்ஸ்ல. ஆனா அந்த பெத்த தெலுங்கு ரா லேது நாக்கு. அதனால த ஒரு சைடுல வச்சுடுவோம். இவங்க ஒரு கேஸை முடிச்சு அந்த சாமியாரை எக்ஸ்போஸ் பண்ணதும், அடுத்த மிசன்ல எறங்கறாங்க. இந்த மொத மிசன் எல்லாமே கொட்டாவி வரவைக்கிற ரகங்கள். பேசாம பேசாமயே இருந்திருக்கலாம்னு தான் தோனுச்சு இந்த சீன்களெல்லாம் முடியறவரைக்கும். அதுக்கப்புறம்தான் முக்கியமான விசயத்துக்குள்ள எண்டராகுது கதை. மொத சீன்ல இருந்தே கதைக்குத் தேவையான காட்சிகள் தான். நமக்குத்தான் அது படத்தப் பாக்குற நம்ம பொறுமைய சோதிக்கிது.
அடுத்த மிசன். பப்லு பிரித்திவிராஜ் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர். அவர் மனைவியோட மரணம் ரொம்ப ஷாக்கிங்காவும், டிஸ்டர்பிங்கான சிசிடிவி ஃபுட்டேஜா வெளியானதால அவர் செஞ்சுகிட்டிருந்த மனிதர்கள் மீதான மூளைக்கான மருந்து கண்டுபிடிப்பு சோதனை வெளிய தெரிய வந்து அவர் அமெரிக்கா ஓடிப்போயிட்டதா ஒரு வதந்தி. ஆனா அவர் பின் லேடன் கெட்டப்ல, ஆந்திராவுல ஒரு மலைக் கிராமத்துல நெத்தியில பட்டயப் போட்டுகிட்டு சாமியாரா பேயோட்டிகிட்டிருக்காரு. நாலு பேரும், பப்லுவோட ஃபோட்டோவ வச்சு மிசன் ப்ளானிங் போட்டப்ப எனக்கு தோனுனது என்னன்னா, ஆக்ஹா பப்லு சமீபத்துல நடிச்ச விஜய் சேதுபதி படத்து வில்லன் மாதிரி எதாவது வில்லத்தனம் பண்ணி தெறிக்க வுடப் போறாருன்னு தான். ஆனா அவர் வில்லன் இல்லங்க. உண்மையிலயே சாமியாரா மாறிட்டாப்ல. இது ஒரு குட்டி டிஸ்ஸப்பாய்ன்மெண்ட்னாலும், அவரோட கெட்டப் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுனாலும், அவருக்கு கொடுத்திருந்த வேசத்தை ரொம்ப இயல்பாவே பண்ணிருந்தாரு. அது நல்லாருந்தது.
இப்ப நண்பர்கள் இந்த மலைக்கிராமத்துக்கு கார்ல வர்ற வழியில, ஒரு குடும்பம், பைக்ல கல்யாணத்துக்கு போய்ட்டிருந்தது. ஒரு எஸ் பெண்டுல மோதற மாதிரி வந்து ரெண்டு வண்டியும் போயிடுது. இதுல அந்த பைக்ல வந்த ஃபேமிலியில பில்லியன்ல உக்காந்திருந்த லேடி மட்டும் பள்ளத்துல விழுந்து மண்டயில அடிபட்டு சனி போயிந்தி. அப்றம் அவங்க ஒரு ஆணோட ஒடம்புல பேயா வர்றாங்க. ஆனா இது மெயின் பேயில்ல. இன்னும் நெறய பேயிருக்கு. சமயத்துல எது பேய், எது மனுசன்னே தெரியாதளவுக்கு என்னத்தையோ கிண்டி வச்சிருந்தாங்க. எனக்கு டேய் என்னடா இதெல்லாம்னு தான் கேக்கத் தோனுச்சு.
உண்மையில பேய்ன்னு காட்னதெல்லாம் பேய்தான். ஆனா மனுசங்களா காட்னதுல சிலதுக மனுசங்க இல்ல. நாம படத்துல பாத்தமே அது இந்த லோகம் லேதண்டி. ரெண்டாவது உலகம். இவ்ளோ நேரம் பேய் இருக்கா இல்லையான்னு மூனு நாள்ல காட்றேன்னு பப்லு அவங்க நாலு பேர்த்தையும் ஒரு வீட்ல தங்கச் சொல்றாப்ல. அப்டி அவங்க அங்க இருந்த நேரத்துல ஜம்ப் ஸ்கேர் சீன்ஸ் எல்லாம் இருக்குதான். ஆனா இந்த நாலு பேரும் அதுக்கு இந்த போலிச்சாமியார் எதோ ட்ரிக் பண்றான்னு தான் சொல்லிட்டிருப்பாங்க. நாலு பேர்ல சிலர் அதயெல்லாம் உண்மைன்னு கூட நம்ப ஆரம்பிக்கிறளவுக்கு அந்த ட்ரிக்ஸ் எல்லாம் போகுது.
ஆனா கிளைமேக்ஸ்ல பேய் இருக்கா இல்லையா, நாலு பேரும் அந்த வீட்ல பேய பாத்துருக்காங்களான்னு வெளிய வெய்ட் பண்ணிட்டிருந்த பப்லுவும் அவரோட சிஷ்ய கோடிகளும் உள்ள போய்ப் பாத்தா அந்தக் கொழந்தையே நீங்கதான் சார்னு படத்தை ஒரு உலக சினிமா ரேஞ்சுக்கு உருட்டுனத மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா!
No comments:
Post a Comment