சிறை
அப்டின்னு ஒரு தமிழ் சினிமா படம். நடிகர்கள்னு பார்த்தா, விக்ரம் பிரபுவத் தவிர பி.எல்.தேனப்பன் ஜட்ஜாவும், புதுப்பேட்டைல தனுஷ்க்கு அப்பாவா நடிச்சிருந்த மூணார் ரமேஷும் மட்டும்தான் தெரிஞ்ச முகங்கள். ஆனா இந்தப் படத்த பாத்து முடிக்கிறப்ப பல புது முகங்கள் நமக்கு பரிச்சயமாகியிருக்கும். சரி வாங்க. இந்தப் படம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி விக்ரம் பிரபு இதுல கதாநாயகன் அல்ல. ஆனா ஸ்டார் வேல்யூ அதாவது நமக்கு தெரிஞ்ச முகம் இவஎ மட்டுந்தான். எதுக்குன்னா, இவரோட பார்வை வழியாத்தான் நமக்கு கதை சொல்லப்படுது. கதையில நாம எப்டியோ அப்டித்தான் விக்ரம் பிரபுவும். இந்தக் கதைக்கு இவர்தான் முதல் ஆடியன்ஸ். இவர் ஒரு கான்ஸ்டபிள். கைதிகளை வாய்தாக்களுக்காக சிறையிலேர்ந்து, கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போற எஸ்கார்ட் டியூட்டிதான் இவரோட முக்கியப் பணி. அப்டி ஒரு முறை போறப்ப தப்பிக்க முயற்சி செஞ்ச கைதிய சுட்டுக் கொன்னுட்டு, மேலதிகாரிங்ககிட்ட திட்டுக்களையும் முறைப்புக்களையும் வாங்கிட்டு இப்பவும் ட்யூட்டி பாக்கறவர். அதாவது இன்னும் வேலை போகல. அது இப்பவோ அப்பவோன்னு எப்ப வேணும்னாலும் போயிடக் கூடிய சூழல்ல தான் இருக்குன்னு நமக்கு சொல்லாம சொல்லப் படுது. அவர் கூட்டிட்டுப் போற ஒரு சிறைக் கைதிதான் கதையே.
அந்தக் கைதி ஒரு புதுமுகம். அந்தக் கைதிய சுத்தி சுத்தி பின்னப்பட்ட அல்லது எழுதப்பட்டதுதான் இந்தக் கதையே. அவனோ எந்நேரம் வேணும்னாலும் தப்பிச்சிடக் கூடிய விதத்துலதான் அவனோட வாழ்க்கையே. கேங்ஸ்டரெல்லாம் இல்ல. காதலன். நீங்க ஒரு பொண்ண காதலிக்கிறீங்கன்னா அவங்களப் பாக்காம இருக்க முடியாதில்லையா, அப்படி ஒரு உந்துதலோடதான், அதுவும் அஞ்சு வருசமா விசாரணைக் கைதியாவே கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் ஷட்டிலடிச்சுகிட்டு இருக்காப்ல. அப்டித்தான் அவனோட வழக்கை விசாரிக்கறாங்களான்னா அதுவும் கெடயாது. நீதிபதிகள் பெரும்பாலும் வழக்கு தன் பார்வைக்கு வந்ததும், அதுக்கு ஒரு அடுத்த தேதிய அறிவிச்சிட்டு அனுப்பிடுவாங்க. இதுல எங்கயிருந்து அந்த வழக்கை விசாரிச்சு தண்டனைய வழங்கி, அவன் அனுபவிச்சிட்டு, வெளிய போய் அவன் காதலியப் பாத்து கல்யாணம் காட்சின்னு செட்டிலாகறதாம். அது சரி. அப்டி என்ன வழக்கு அது? அது ஒன்னுமில்லங்க. அது ஒரு கொலை கேஸ். ஆமாங்க, அந்தக் காதலிச்ச பொண்ணோட அப்பாஸ தவறுதலா தள்ளி விட்டதுல அவருக்கு உயிர் போயிடுது. அப்பக் கூட அது யார்னு தெரியாமையே கூட போயிருக்கக் கூடிய கேஸ் தான். ஆனா, தன்னோட காதலிக்கும், நாட்டுக்கும் உண்மையானவனா இருக்கறதால, தானே சரண்டராகிட்டாப்ல.
காதலியும் அப்பாவைக் கொன்னவனை எப்டி காதலிப்பான்னு நமக்கும் ஒரு சந்தேகத்தோட விசாரணைக்கு கோர்ட்டுக்கு அவனை அழைச்சிட்டுப் போன விக்ரம் பிரபு மாதிரியே தான் இருக்கோம். அந்த சீனெல்லாம், நமக்கு புல்லரிக்கவெல்லாம் இல்ல. விக்ரம் பிரபு எப்டி அந்தக் கைதி மேல ஒரு படி மரியாதையும் அன்பும் கூடுதோ அப்டித்தான் நமக்கும் கூடுது. அதுக்கப்புறம் நடக்கறதெல்லாம் தாண்டித்தாண்டி வர வேண்டிய திக் திக் நிமிடங்கள் தான். ஒவ்வொரு சீக்வென்ஸும் நமக்கு கத்தி மேல நடக்கற மாதிரியே ஃபீலாகுது. அந்தப் பொண்ணு கலையரசியும், தமிஉக்கு மட்டுந்தான் புதுமுகம். ஆல்ரெடி மலையாளப் படங்கள்ல நடிச்சவங்கன்னு கூகுள்ல தேடிப் பாத்துதான் ஆச்சர்யப்பட்டேன்.
இந்தப் படத்தைப் பாக்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல எனக்கு ஒருவேளை மைனாவோ ரீமேக்கைத் தான் பாத்துகிட்டிருக்கறமோங்கற ஒரு ஃபீல் வந்தது என்னவோ உண்மைதான். ஆனா அயோத்தி படத்துல சசிக்குமர் சொல்ற அந்த டைலாக்கோட மறுபக்கம்தான் இந்தக் கதைனு படத்தை முழுசா பாத்து முடிச்சப்ப புரிஞ்சுகிட்டேன். அயோத்தி எப்டி நம்ம நாட்டுக்கு ரொம்பத் தேவையான படமோ அதே மாதிரி சிறையும் நமக்கு ரொம்பவே தேவையான ஒரு படம்தான். எந்த ஒரு தர்க்கத்துக்குள்ளயும் எறங்காம இதை சினிமாங்கற லிஸ்ட்ல சேர்க்கலாம். உண்மையிலேயே வொர்த்து!
No comments:
Post a Comment