Anomie
அப்டின்னு ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லர் மிஸ்டரி மலையாளப் படம்... இருங்க மூச்சு விட்டுக்கறேன். அனோமி தான், அனாடமி அல்ல. அனோமின்னா சமூக விதிமுறைகள், மதிப்புகள், ஒழுக்க வழிகாட்டுதல் ஆகியவை சிதைந்து போகும் நிலை. நடிகர்கள்னு பாத்தா, லவ் டார்ச்சர் பாவனா, சங்கமம் ரகுமான், அப்றம் அவ்ளோதான். வேற யாரையும் தெரியாது ஒரு சீன்ல வந்துட்டுப் போன சத்யா படத்து வில்லன் கிட்டியத்தவிர. இந்தப் படம் பார்த்த அனுபவம் எப்டியிருக்குன்னு பார்க்கலாம் வாங்க.
கதைப்படி ஃபாரன்சிக்ல வொர்க் பண்ற ஜாராவோட தம்பி ஜயான் காணாம போயிடறான். ரொம்ப கஷ்டப்பட்டு தன்னோட காதலன் ஆல்பி கூட சேர்ந்து அவனை எங்க தேடியும் கெடைக்காம போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்றாங்க. ஜயானுக்கு மனச்சிதைவு பிரச்சினை இருக்கு தன்னோட பெத்தவங்க ஆக்சிடெண்ட்ல இறந்ததுல இருந்து. கொஞ்சம் கேப் விட்டு போலிஸ் தேடினப்ப ஜயானோட டெட் பாடி கிடைக்குது. அவன் சூசைட் பண்ணிகிட்டான்னு ஏசிபி ஜிப்ரான் கேஸை முடிச்சிடறாரு. ஆமா அவரை பொருத்தவரைக்கும் அவன் அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ற மனச்சிதைவு உள்ளவன்ங்கறதால சிம்பிளா முடிச்சிடறாரு. ஆனா, ஜயானோட போஸ்ட் மார்ட்டம்ல ரத்தத்துல ஒரு வித மயக்க மருந்து கலந்திருக்குன்னு தெரிய வருது. ஆல்ரெடி ஃபாரன்சிக்ல உள்ளதால, ஜாராவுக்கு இந்த சாவுல பெரிய சந்தேகம். ஏன்னா ஜயானோட ட்ரீட்மெண்டுக்கு கொடுத்த எந்த மருந்துகள்லயும் அந்த மயக்க மருந்தோட காம்பினேசனே இல்ல. பின்ன இது எப்டி சாத்தியம்னு அந்த தகவல்கள சேகரிக்க ஆரம்பிச்சு, கடைசில அது தற்கொலை இல்ல. கொலைன்னு முடிவுக்கு வர்றா.
இதனால சிம்பிளா கேஸை முடிச்ச ஜிப்ரானுக்கு வேலைல மிகப்பெரிய பிரஷ்ஷர் உருவாகுது. ஆனா அதை அவர் கையாண்ட விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அந்த சீன்ல இருந்து ஜிப்ரானா நடிச்ச ரகுமான் உண்மையிலேயே இவருக்கு இப்டியெல்லாம் நடிக்க வருமான்னு ஆச்சர்யமா இருந்தது. ஷ்பெசலாவெல்லாம் எதுவும் இல்லங்க. அந்த சீன்கள் எதுலயும் நமக்கு ரகுமான் தெரியல. ஜிப்ரான் தான் தெரிஞ்சாரு. அதனாலதான் அதைப் பாராட்டத் தோனுச்சு. படத்தோட இண்டர்வெல் கார்டுக்கு முன்னாடிதான் டைட்டிலே போட்டாங்க. அதாவது டைட்டில் போட்டதும் அது அழிஞ்சு இண்டர்வெல்னு கார்டு போட்டாங்க. அதுக்கப்புறம்தான் கொலைகாரன் யாரு என்னன்னே கொஞ்சம் கொஞ்சமா கதை நகர்ந்து கிளைமாக்ஸ்ல தான் யார்னு தெரிய வரும்.
அடுத்து பாவனா. இதுல ஜாராவா நடிச்சிருக்காங்க. எனக்கு எல்லா சீன்லயும் பாவனா மட்டும்தான் தெரிஞ்சாங்க. ஜாரான்னு யாராவது கூப்ட்டா மட்டுந்தான் ஓ இவங்க பேர் இந்தப் படத்துல ஜாராவான்னு நினைக்கத் தோனும். ஆனா, எப்பயாவது, ஏண்டா என் தம்பியக் கொன்னவன கண்டுபுடிக்காம, தற்கொலைன்னு கேச முடிச்சன்னு எங்க ரகுமான் சட்டையய் புடிச்சிருவாங்களோன்னு நெனச்சுகிட்டே இருந்தேன். ஆனா, ரகுமான் தான் அவளயெல்லாம் அப்டே போக வுட்றனும்ங்கற மாதிரி டீல் பண்ணாரு.
படம் கொஞ்சம் ஸ்பானிஷ் ஹூடன்னிட் மாதிரி ரிச்சா காட்ட ட்ரை பண்ணிருக்காங்க. கதையும் சரி ப்ளாட்டும் சரி. எல்லாமே நமக்கு அடன்னு சொல்லிக்கிற மாதிரி தான் இருக்கு. உண்மையில இதைக் கொலைன்னே சொல்லிக்க முடியாதளவுக்கு தான் இருக்கு. ஆனா அதைக் கொலைன்னு கன்ஃபார்ம் பண்ணப்ப இது ஒரு கொலையல்ல. மூனுன்னு தெரிய வருது. மூனு பேருக்கும் ஒரே ஒற்றுமை மெடிக்கல் ஹிஸ்டரி தான். ஒருத்தருக்கொருத்தர் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனா கொலைகள நடத்தின எம்.ஓ சேம். அதுவும் பாவனா ஃபாரன்சிக் அதிகாரிங்கறதால அதுக்கான புள்ளிகளை இணைக்கறது சுலபமாயிருது. கதைப்படி பாவனாவே எல்லாத்தையும் செய்ய முடியாது. அதனால ரகுமான் மாதிரி ஒரு கேரக்ட்டர் வேணும். சரிவர எக்ஸிகியூட் செய்யப்பட்ட ஸ்கிரீன்ப்ளே தான். சில காட்சிகள் பாக்க சிம்பிளா இருக்கும் ஆனா அதோட பின்னணி ரொம்ப வலுவா அமைஞ்சிருக்கும். உதாரணத்துக்கு ஜயான் கடைசியா வாட்சப்ல அனுப்பியிருந்த ஆடியோ மெசேஜ். ரொம்ப சாதாரணமான விசயம் அது. ஆனா அதுக்குள்ள என்னவோ இருக்குன்னு அதுக்கான மெனக்கெடல் ரொம்ப தூரத்துக்கு கொண்டு போகும். அதெல்லாம் படம் பாக்கும்போது ஆடியன்சை சுவாரஸ்யப்படுத்தற சமாச்சாரங்கங்கறதால அதைப் பத்தின ஹிண்ட்டோட முடிச்சிக்கறேன்.
மலையாளத் திரைப்படங்கள், கொரியன், ஸ்பானிஷ், ஜப்பானியத் திரைப்படங்கள் மாதிரி, அதுவும் தேடித் தேடிப் படங்களைப் பார்க்க வைக்கிற ஒரு தொழிற்சாலையா மாறிக்கிட்டு வர்றது ஒரு சந்தோசமான விசயம்தான். அதுவும் கம்மி பட்ஜெட்ல, சீப் அண்ட் பெஸ்ட்டா அசத்திடறாங்க. நிச்சயம் பாக்கலாம்.

No comments:
Post a Comment