Tuesday, March 3, 2026

தடயம் 2026


தடயம்

அப்டின்னு ஒரு கிரைம் திரில்லர் வெப்சீரிஸ். இல்லேல்ல. இது 1997ல ராம்கி நடிச்சி வெளியான சினிமா இல்ல. இது மொத்தமா வேற. தவிர இது சினிமா இல்ல, வெப்சீரிஸ். நடிகர்கள்னு பாத்தா சமுத்திரக்கனி அண்ட் ஷிவதா மற்ரும் பலர் நடிச்சது. ஷிவதா யாருன்னா, அதே கண்கள்னு ஒரு படம் 2017ல ரிலீஸ் ஆச்சில்ல அதோட வில்லிதான் இந்த ஷிவதா. இதுல ஹீரோயின் இல்ல, அதவாது சமுத்திரக்கனிக்கு ஜோடியா இல்லாம அவங்களுக்கு மேலதிகாரியா நடிச்சிருக்கற பெண் முதன்மை கதாபாத்திரம். சரி இந்த வெப்சீரிஸ் எப்டியிருக்குன்னு பார்க்கலாம் வாங்க.

கதைப்படி கதை நடக்கறது எல்லாமே 1999ல. அதாவது மொபைல் ஃபோன் புழக்கத்துல இல்லாத காலத்துல நடக்கற கதை. ஆந்திராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பார்டர்ல ஒரு கிராமம். ரோட்டுக்கு இந்தப்பக்கம் தமிழ்நாடு, அந்தப்பக்கம் ஆந்திரா. அப்ப ரெண்டு பக்கமும், ரெண்டு போலிஸ் ஸ்டேசன் இருக்கும்ல. அதுல இந்தப்பக்கம் தமிழ்நாட்டுல ரெண்டு ரெண்டு கொலைங்க விழுகுது. ரெண்டுமே புருஷன் பொண்டாட்டிங்க. வீடு புகுந்து அடிச்சே கொன்னிருக்கானுக. அக்கம்ப்பக்கத்துல வந்து, ஏய்யா இங்க ரெண்டு பேர்த்த அடிச்சே கொன்னிருக்காங்க, உங்களுக்கு எதாவது விவரம் தெரியுமான்னு விசாரிச்சா, இல்லங்க அப்டி எதுவும் சத்தமே கேக்ககலேங்கன்னு ஊர் மக்கள் சொல்லவும், அப்பவும் ஒரு விசயத்த போலிஸ் கன்பார்ம் பண்ணுது. அதாவது வீடு புகுந்து அவங்களயெல்லாம் அடிச்சுக் கொன்னது நல்லா அசந்து தூங்கிட்டிருக்கற விடிகாலைக்கு முந்தின சமயம்னு. இப்டியே ஒன்னொன்னா கண்டுபுடிச்ச போலிஸ்க்கு சில தடயங்கள் கிடைக்க, அதை வச்சு ஆந்திரா போலிஸ் ஷ்டேசன்ல போய் விசாரிச்சா, ஓ அங்க நாலுதானா இங்க எழுவத்தாறுங்கன்னு கவுண்டிங்ல நாங்கதான்லு ஒசத்துலுன்னு சொல்ல பார்த்துகிட்டிருக்கற நம்ம எல்லாரும் சேர்ந்து ஷாக்காவுறோம். ஆச்சா, இதுக்கு மேல ஒரு விசயம். அதைக் கடைசில சொல்றேன்.

இதுல தடயங்களக் கண்டுபுடிக்கிற சாதாரண காவல்துறை அதிகாரியா நடிச்சிருக்காரு சமுத்திரக்கனி அண்ணன். அவருக்கே உரித்தான ரெண்டு மேனரிசங்கள் இருக்கும் பார்வை உட்பட. அதாவது நல்லவனா நடிச்சா, அதுல அநியாயத்துக்கு நல்லவனா இருப்பாரு. வில்லனா நடிச்சா அநியாயத்துக்கு வில்லனா மேனரிசம் காட்டுவாரு. எனக்குத் தெரிஞ்சி அவர் வில்லத்தனத்துல நச்சுன்னு ரெண்டு படம் எப்பவுமே மனசுல டக்குன்னு ஞாபத்துக்கு வரும். மைண்ட்ல இல்ல. மனசுல. ஏன்னா அதெல்லாம், மைண்டைத் தாண்டி மனசுல போய் உக்காந்த கேரக்ட்டர்ஸ். ஒன்னு சுப்ரமணியபுரம்ல கனகுவா நடிச்சிருப்பாரு. அதுக்கடுத்தப்டியா அல வைகுந்தபுராமுலூவுல அப்பள நாயுடுவா காத்த உறிஞ்சு எடுத்திருப்பாரு. அது படம் பாத்தவங்களுக்குப் புரியும். இதுல என்ன, அநியாயத்துக்கு நல்லவனா நடிச்சிருக்காரா, அதுவுமில்லாம போலிஸ் வேறயா, அப்டியே வாரி வழங்கற வள்ளலா, அதாவது தன் கூட ட்யூட்டில ஒன்னா ஜாய்ன் பண்ண அதிகாரிகளுக்கெல்லாம், இவரால முடிஞ்சளவுக்கு ஹெல்ப் பண்ணி அவஙக் எல்லாரும் இவருக்கே மேலதிகாரியா படிப்படியா மேல முன்னேறி கடைசில இவருக்கே வந்து ஆப்பு வைப்பாங்க. அப்பக்கூட சைலண்ட்டா சிரிச்சுகிட்டே, வாலண்டரி ரிட்டயர்மெண்ட் கொடுத்துட்டு மிச்ச நாட்கள்ல ட்யூட்டியப் பாத்துகிட்டு, மத்த நேரங்கள்ல ஸ்கூல் பசங்களுக்கு ட்யூசன் எடுத்துகிட்டிருப்பாரு. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. அப்டி ஓரமா போய் நான் ஃபீல் பண்ணிட்டு வந்துட ஷிவதாவப் பத்தி சொல்றேன்.

ஷிவதா - என்னமோ கால்ஷீட் கொடுத்துட்டோம்ங்கற மாதிரியான முகபாவனையில நடிச்ச மாதிரியே ஒரு ஃபீல். அப்புறம் எதையோ தொலைச்ச மாதிரியே மூஞ்சிய வச்சுக்கறாங்க ஏன்னு தெர்ல. அப்புறம் அவரைக் காதலிக்கிற டிமாண்டி காலனி பேயா நடிச்சவர். பேர் தெர்லீங். அவரையும் ஷிவதாவுக்கு ஜோடியாக் காட்டனும்னு என்னென்னமோ டிசைன் டிசைனா தாடியெல்லாம் ஷேவ் பண்ணி ஃப்ரேம்ல நிக்க வச்சாலும், ஒரு பெரிய மனுசன் ஃபீலிங்கே வரல. அப்டி ஒரு சின்னப்புள்ள முகத்த வச்சுகிட்டு எப்டித்தான் ஓ சரி சரி இவர்தான் அந்த டேட்ல ஃப்ரீயா இந்த லொக்கேசன்ல நடிக்க ஆப்ட்டா இருந்திருப்பாரு. விடுங்க.

அடுத்து முக்கியமான விசயம் என்னன்னா, 1995 மற்றும் 1999ல நடக்கற மாதிரி காட்டனும், அவ்வளவுதான் விசயம். எவ்ளோ செமயா காட்டிருக்கலாம். ஆனா, என்னமோ மிஸ்ஸான மாதிரியே ஒரு ஃபீல். இத்தனைக்கும் இது ஒரு கிரைம் திரில்லர் மட்டுமில்லாம, ரிவெஞ்ச் கலந்த ஹூடன்னிட் மற்றும் இரட்டை சைக்கோ கொலைகாரர்கள் கதை. அதை எப்டியெல்லாம் எடுத்திருக்கலாம். ஆனா எப்டியோ எடுத்திருக்காங்க.

கடைசியா சொல்றேன்னு சொன்னேன்ல. அது என்னன்னா, அந்த ஹூடன்னிட்ல ஹூ ஹூன்னும், அது இவங்க இவங்கன்னும் மொத எபிசோட்லயே சொல்லிடறாங்க. அவ்ளோதான். அதுக்கப்புறம் அவங்கள எப்டியெல்லாம் காட்டனும்னு இவங்களுக்குத் தெரிஞ்சாலும், காட்டக்கூடாததைத் தான் மொதல்லயே காட்டியாச்சே... சோலி முடிஞ்சது அப்பவே!

No comments:

Post a Comment