CASHERO
அப்படின்னு ஒரு கொரியன் ஆக்சன் ஹீரோ, சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸ். அன்பார்ச்சனைட்லி தமிழ்ல அவைலபில் இல்ல. அதனால கொரிய மொழியிலேயே ஆங்கில சப் டைட்டில்களோட பார்க்க வேண்டியதாயிடுச்சு. நடிகர்கள்னு நாம யாரையும் பெருசா சொல்லிக்க முடியாது. அதனால ஸ்ட்ரெயிட்டா வெப் சீரிஸ்குள்ள இறங்கிடலாம் எப்படி இருக்குன்னு பார்த்துடலாம் வாங்க.
கதைப்படி ஹிரோ ஒரு சாதாரண அப்பாவி குடிமகன். ஹீரோயின் ஒரு டாமினேட்டட் கேரக்டர். இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருப்பாங்க. அதுல அந்த பொண்ணு தான் அடிக்கடி கோவப்படும். அதாவது ஒரு அம்மா மாதிரி. வீட்ல அம்மா எப்படி பையனை மிரட்டுவாங்களோ, அதே மாதிரி ஹீரோயின் நம்ம ஹீரோவை எல்லாம் வேலையும் வாங்குவாங்க சில விஷயங்களை சம்மதிக்க, சம்பாதிக்க வைப்பாங்க. அது ஏன் சம்பாதிக்க வைப்பாங்க அப்படின்னு சொன்னேன்னா, ஹீரோயினுக்கு ஒரு ஆசை. ஒரு வீடு வாங்கணும் அப்படின்னு. அதுக்காக அவங்க காசு சேர்த்துக்கிட்டே இருப்பாங்க. இல்ல இல்ல நம்ம தமிழ் படம் சமீபத்தில் வந்த கதை மாதிரி எல்லாம் இல்ல இது டோட்டலா வேற. ஹீரோவுக்கு அப்பா அம்மா தனியா இருப்பாங்க ஹீரோயின்க்கும் அப்பா அம்மா தனியா அவங்க வீட்ல இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் லிவின்ல இருப்பாங்க. இதுவரைக்கும் கல்யாணத்தைப் பத்தின பேச்சு கிடையாது. ஆனா ரெண்டு பேருக்குள்ளேயும் அந்த ஆசை இருக்கும் சொல்லிக்கணும், கல்யாணம் பண்ணிக்கனும்னு.
அந்த மாதிரி ஒரு சமயத்துல, ஹீரோ தன்னோட அப்பா அம்மா வீட்டுக்கு போவாரு. அப்ப ஹீரோவோட அப்பா, தன்னோட மகனோட கைய வாங்கி ஷேக் ஹாண்ட் குடுத்து அவரோட முழு சக்தியையும், தன்னோட வாரிசான மகனுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவாரு. அப்படி என்ன சக்தி என்று பார்த்தீங்கன்னா, கையில கேஷ் இருந்தா இவர் ஒரு சூப்பர் ஹீரோ. அப்படியே சூப்பர் மேன் செய்கிற எல்லாத்தையுமே இவராலயும் செய்ய முடியும். குறிப்பு - சில விஷயங்களை தவிர. அதாவது தூரத்தில் நடக்கிறது கேட்கிறது, எக்ஸ்ரே ஸ்கேனிங் பார்வை, லேசர் பீம் ஐஸ் தவிர. மத்தபடி ஓல்வரினுடைய ஹீலிங் கெபாசிட்டியும் உண்டு. இது எல்லாம் கையில கேஷ் இருந்தா அவரால் செய்ய முடியும். அவர்கிட்ட கேஸ் இல்லைன்னா சாதாரண மேற்கூறிய அந்த நபர், அவ்வளவுதான். இதுல ப்ராப்ளம் என்னன்னா, இந்த சக்தியை வச்சுக்கிட்டு, இவர் முன்னாடி சிலருக்கு பிரச்சனை அப்படின்னா, சாதாரண குடிமகன் யாருக்கும் காப்பாத்தணும் தான் தோணும். அப்படி காப்பாற்றினால் அந்த சக்தியை உபயோகப்படுத்தினா அந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம், சில்லறையா மாறி உருண்டு ஓடும். அதாவது அந்த சக்தியை பிரயோகப்படுத்தினால் நோட்டு சிலரையா மாறிடும். இந்த லட்சணத்துல எப்படி வீடு வாங்க காசு சேர்த்தறது? இது கதையோட மையக்கரு.
ஒரு ஹீரோன்னு ஒருத்தர் வந்தாச்சு. அடுத்து வில்லன் குரூப்புன்னு ஒன்னு வரணும் இல்லையா ஹீரோவுக்கு பிரச்சனை ஒன்னு வேணும் இல்லையா? அதுக்காக எக்கச்சக்கமான பிரச்சனைகள். ஏன்னா ஹீரோ, சூப்பர் ஹீரோ இல்லயா! இங்க நான் பிரச்சனைகள்னு குறிப்பிடறது வில்லன்கள. அதுவும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாம எல்லாரும் வில்லன்கள். அதுல ஒரு குடும்பமே இந்த மாதிரி சூப்பர் ஹீரோக்களை கடத்திக் கொண்டு போய் தன்னோட லேப்ல வச்சு, அவங்களோட சக்தியை எக்ஸ்ட்ராக்ட் பண்ணி, ஏதோ பெருசா பண்ண போறாங்க அப்படின்னு கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் இப்பவே கதையை முழுசா சொல்லிக்க வேண்டாம். சூப்பர் ஹீரோக்களைன்னு குறிப்பிட்டது, இவர் கேஸ் வச்சிருந்தா ஹீரோ அதனால கேஸ் ஹீரோ, இது மாதிரி பன்னு சாப்பிட்டா சக்தி வர ஒரு பொண்ணு, சரக்கு அடிச்சா சூப்பர் ஹீரோ வாங்குற ஒரு சரக்கு ஹீரோ. சோ இந்த மாதிரி நிறைய பேர் இருப்பாங்க இல்லையா? கோபப்பட்டா உடம்பெல்லாம் நெருப்பா கொதிக்கிற ஒரு பொண்ணு இந்த மாதிரி கதையில ஹைலைட் பண்ணாத நிறைய கேரக்டர்கள் தான் அவங்க கடத்தி வச்சு எக்ஸ்ட்ராக்ட் பண்ணிகிட்டு இருப்பாங்க. அப்படி ஒரு தடவ ஹீரோ கிட்ட டீல் பேசுவாங்க உன் சக்தியை கொடுத்து விடுகிறாயா? உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு கொடுத்துடறோம் அப்படின்னு. அதுக்கு ஹீரோவும் ஒத்துக்குவாரு. ஆனா பாருங்க அப்படி அவரு போனதுக்கு அப்புறம் தான் அவருக்கு தெரியவரும், அவங்க எக்ஸ்ட்ராக்ட் பண்ணதுக்கு அப்புறமா செய்யறது அவன கொன்றுவாங்கன்னு. இதையெல்லாம் கொடுத்துட்டு நார்மலா வாழனும் தாண்டா ஆசைப்பட்ட சாவறதுக்குடா வந்த அப்படின்னு கத்தி முடையில உட்கார்ந்து அய்யய்யோ தப்பு பண்ணிட்டேன் மேடம் அப்படின்னு தப்பிக்கிறதுக்கு ஓடுனம்னு நெனச்சா கையில பணம் இருக்காது அங்கிருந்து அவர் விலங்குகளை உடைத்து விட்டு வெளியே ஓடி வர முடியாது. அவ்வளவு ஏன் நகரக் கூட முடியாத அளவுக்கு மாட்டி இருப்பாரு.
இந்த மாதிரி ஹீரோ எதையாவது செய்யணும் நினைக்க போயி, கடைசில அவரோட உயிருக்கே உலை வச்ச மாதிரி மாட்டிகிட்டு முழிக்கிறது அதிலிருந்து தப்பிச்சு வர்றது தான் கதையே. கதை சீரியஸா தான் இருக்கும், ஆனா நமக்கு தான் ரொம்ப டார்க் ஃபீல் இல்லாம ஒரு லைட் ஃபீல் மட்டும் இருக்கும் இதை பார்க்கும் போது.
ஹீரோயின் டாமினேட்டர் கேரக்டர் தான். ஆனா எல்லா எபிசோட்லையும் ஹீரோ தான் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட மாதிரி டாமினேட் பண்ணிக்கிட்டு இருப்பாரு. நமக்கே இந்த ஹீரோயின் எல்லாம் தேவையா அப்படிங்கற மாதிரி கோபம் எல்லாம் வரும். இதையெல்லாம் சரி கட்டுகிற மாதிரி கிளைமாக்ஸ்க்கு முன்னாடி எபிசோட்ல, செம கூஸ் பம் மொமண்ட் வெச்சிருப்பாங்க. அந்த சீன்ல அவங்க அழுகிறது நமக்கு ரொம்ப இயல்பாவும், நெருடல் துருத்தல் இல்லாம ரொம்ப அழகா அமைஞ்சிருக்கும் அந்த சீன். ஆரம்பத்தில் இருந்து ஹீரோவுக்கு பண்ணதெல்லாம் அந்த சீனோட கம்பேர் பண்ணா அதுதான் கூஸ்பம் மொமென்டா இருக்கும். சரி இப்போ ஹீரோயினுக்கு ஒரு கூஸ்பம் மொமெண்ட் கொடுத்தாச்சா, அதை சரி கட்டி தூக்கி சாப்பிடுற மாதிரி ஹீரோவுக்கு ஒரு கூஸ்பம் மட்டும் குடுக்கணும்ல? அப்படி ஒரு சீன் கிளைமேக்ஸ்ல வச்சிருப்பாங்க நல்லா முருகதாஸ், ஷங்கர் படத்துல வர்ற சீன் மாதிரி செமையா அது ஒரு வொர்க் அவுட் ஆகி இருக்கும். அத சொன்னா ஸ்பாய்லர் எடுத்துக்குவிங்களான்னு தெரியல, ஆனா நம்மளே கணிக்க கூடிய ஒரு விஷயம் தான். இருந்தாலும் வேண்டாம் நான் சொல்ல விரும்பல.
சொல்ல நிறைய இருக்கு, ஆனா நான் இங்கேயே நிறுத்திக்கிறேன். மொத்தம் ஏழு மணி நேரம். பாக்குறதுக்கு ஒர்த்தான நல்ல டைம் பாஸிங் வெப் சீரிஸ் தான். அடுத்த பதிவுல சந்திப்போம்.
No comments:
Post a Comment