கர
அப்டின்னு ஒரு ராபின் ஹுட் படம். இதை கான் மூவி இல்ல கிரைம் திரில்லர் மூவின்னு எப்டி ஜானர்ல வகைப் படுத்தினாலும் கடைசில ராபின் ஹுட்ல தான் வந்து நிக்கும். கர அப்டிங்கறது கரசாமியோட பெயர்ச்சுருக்கம். நடிகர்கள்னு பாத்தா தனுஷ், மாமிதா பைஜு, கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ப்ரித்விராஜ், சூராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம் மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. சரி இந்தப் படத்தைப் பாத்த அனுபவம் எப்படியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி கரசாமி ஒரு திருடன். உண்மையில சொல்லிக்கக்கூடிய விஷயம் கதைங்கற வகையில அவ்வளவு தான். கதையில தனுஷ் தனக்காக திருடறதுல இருந்து மத்தவங்களுக்காக திருடறதுல தான் கதை ராபின் ஹுட் வகைக்குள்ள போயிடுது. இதை எப்டி வேணும்னாலும் சொல்லிருக்கலாம். ஒரு இட்டாலியன் ஜாப் மாதிரியோ, ஒரு பேங்க் ஜாப் மாதிரியோ இல்லன்னா நவ் யூ சீ மீ மாதிரியோ எப்டி வேணும்னாலும் சொல்லிருக்கலாம். அவ்வளவு ஏன், தீரன் அதிகாரம் ஒன்று மாதிரி கூட சொல்லிருக்கலாம். ஆனா பாருங்க இதுல காதநாயகனே ஒரு திருடன்ங்கறதால அதுவும் அடிப்படையில திருடறதுக்கான காரணம் எத்துக்கற மாதிரியும் இருக்கணும், அதுவே அவனை ஒரு ராபின் ஹுட்டாவும் ஆக்கணும். அதுவும் ஏத்துக்கற மாதிரி இருக்கணும். இதுதான் பர்ப்பஸ். அதை சரியா ரெஜிஸ்டர் பண்ணிட்டா அடுத்து திருடற காட்சிகள எடுத்துடலாம்ல. அதைத்தான் இந்தப் படத்துல பண்ணிருக்காங்க. ஆனா அதுக்கான காட்சிகள் தான் நம்மள வேற எதோ ஒரு படத்த இந்த திருட்டுக்கு நடுவுல பாக்க வச்ச மாதிரி ஆக்கிடுது. ஒரு ஃபுல் பேக்கேஜா பாக்கறதால, ரெண்டு படம் இல்ல ஒரே படம் தான்னு நாமளே கதை போற போக்குல கனெக்ட் பண்ணி, நாமளே கனவின்ஸ ஆகிருவோம்ங்கறதால பிராப்ளம் சால்வ்ட்.
அடுத்ததா குறிப்பிட வேண்டிய விசயம்ன்னா அது கே. எஸ். ரவிக்குமாரோட நடிப்பு தான். இது வரைக்கும் அவர் பல படங்கள்ல நடிச்சிருந்தாலும், பல கேமியோக்கள பண்ணிருந்தாலும், இது தான் அவர் நடிச்சதா அவரே பெருமைப் பட்டுக்க முடியும். நம்மாலேயும் ஏத்துக்க முடியும். என்ன வர வர அப்பா ரோல்ல நடிக்கிறவங்க எல்லாம் படத்துக்குப் படம் ஒரு பென்ச்மார்க் செட் பண்றளவுக்கு அசத்தறாங்க? அமேஸிங்! போன பதிவுல தான் ஜார்ஜ் மரியான் அப்பா ரோல்ல நடிச்சதப் பத்தி சிலாகிச்சிருந்தேன். அடுத்த நாளே கர கே. எஸ். ரவிக்குமார் நடிப்பைப் பத்தி சிலாகிச்சிருக்கேன். முதல்ல அது கே. எஸ். ரவிக்குமார்ன்னு தெரியவே எனக்கு கொஞ்சம் டைம் எடுத்தது. அப்புறம் தான் இந்த அட அண்ட் அடடே எல்லாம். அதே போலாம் இன்னொருத்தர் எம். எஸ். பாஸ்கர். அதுவும் செம. ஆனா அதுக்கு அவர்தாணான்னு இப்ப வரைக்கும் ஒரு டவுட்டு.
அடுத்து மாமிதா பைஜூ. பிரேமலு, ட்யூட், கர எல்லாத்துலயும் செம டிரான்ஸ்ஃபர்மேசன். ஒவ்வொரு கேரக்டடரும் நாயகி கதாபாத்திரங்களோட ஒவ்வொரு டைமென்சன்ஸ். இதே போல ஒரு நாயகி ரோல்ல இன்னொரு படத்துல நடிப்பாங்களான்னா அதுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா ஒரு சின்ன வருத்தம் என்னன்னா, இவ்ளோ சிறப்பா கெட்டப் பண்ணி, கதையில ஒரு சின்ன துரும்பைக் கூட நகர்த்துற காரணியா அவங்க இல்லங்கறதுதான். வெறுமனே ஒரு துணைக் கதாபாத்திரம். ஹய்யோ பேபிமா ப்ளீவ் மீ, நாட் ஒன்லி மாமிதா. சேம் தனுஷ் மம்மி ஆல்சோ டீலிங் திஸ் சேம் ப்ராப்ளம். அவங்களுக்கும் இவங்களுக்கும் ஒன்னும் பெருசா வித்யாசம் இல்ல.
அடுத்ததா, தனுஷ் நடிப்பைப் பத்தி புதுசா சொல்ல ஒன்னும் இல்ல. அது எப்பவும் செம தான, சிறப்பு தான். ஆனா ஜெயராம் அண்ட் சுராஜ் நடிப்பைப் பத்தி இங்க சொல்லியே ஆகணும். அவங்க இதுக்கு முன்னாடி தமிழ் படங்கள்ல நடிச்சதுக்கும், இந்தப் படத்துல நடிச்சதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ரெண்டு பேருமே அவங்க கேரள நடிகர்கள்ங்கற நினைப்பே நமக்கு வராதபடி முழுக்க முழுக்க தமிழ் நடிகர்களாவே நடிச்சிருக்காங்க. இது புதுசு அண்ட் சிறப்பு!
இங்க தான் அந்த முக்கியமான விஷயத்தைப் பத்தி மென்சன் பண்றேன். இந்தப் படத்தைப் பாக்க முக்கியமான காரணம் - அதுதான் போர் தொழில் டைரக்ட்டரோட படம்ங்கற எதிர்பார்ப்பு. அது தெரிஞ்சதுக்கப்புறம் தான் கர பாத்தே ஆகணும்ங்கற ஆர்வம் கூடுச்சு. சத்தியமா டிரைலர் எதையும் பாக்கல. ஸ்ட்ரைட்டா படத்தைத் தான் பாத்தேன். போர் தொழில் பாக்க வச்சது அதோட ட்ரைலர் தான். ஆனா இப்ப ட்ரைலர் கூட தேவையில்லையே, விக்னேஷ் ராஜாங்கற பேர் ஒன்னே போதுமே படத்தைப் பாக்க! ஆனா சத்தியமா போர் தொழிலை, கர படத்துல நான் எதிர்பார்க்கல. அப்படி இல்லாததே ஒரு பெரிய திருப்தி, தமிழுக்கு ஒரு நல்லா இயக்குநர் கிடைச்சிட்டார்னு. ஒரு படத்துல மற்றும் ஒன் டைம் வொண்டர் பண்ணிட்டுப் போகாம பலவிதமான முயற்சிகளையும் அடுத்தடுத்த படங்கள்ல பண்ணாத்தானே அந்த இயக்குநர் பேர் மனசுல நிக்கும்! பொல்லாதவனோட அடுத்து பொல்லாதவன் மாதிரியே ஆடுகளம்னு எடுத்திருந்தா வெற்றிமாறன் நமக்கு கிடைச்சிருப்பாரா? ஏன்னா பொல்லாதவன் வேற, ஆடுகளம் வேற.
இப்போதைக்கு விக்னேஷ் ராஜாவோட அடுத்த படத்துக்கு ஈகர்லி வெயிட்டிங். வர்ட்டா 🙏
No comments:
Post a Comment