Dacoit
அப்டினு ஒரு தெலுங்கு ஆக்சன் கலந்த காதல் படம். நடிகர்கள்னு பாத்தா, அதி விசெஷ், மிர்னால் தாகூர், சுனில், பிரகாஷ்ராஜ், அதுல் குல்கர்னி, அனுராக் காஷ்யப் அண்ட் ஜயின் கான். என்னா கேஸ்ட்டிங் பாருங்க... செமல்ல! சரி இந்தப் படம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி ஹீரோ ஹரி, ஜெயில் கைதி. அதுல இருந்து தப்பிக்கிறான். கதை நடக்கறது கோவிட் காலகட்டம்ங்கறதால, முகமூடியெல்லாம் இல்லாம கேசுவலாவே மாஸ்க் போட்டுகிட்டு தலைமறைவா சுத்திக்கலாம். அப்டி வெளிய வந்த ஹரி, தன்னோட ஜூலியட்ட பழிவாங்க நினைக்கிறான். ஏன்னா அவதான் ஹரி ஜெயிலுக்குப் போகக் காரணம். ஏன்னா, ஹரி ஜூலியட்டோட அண்ணன அடிச்சே கொன்னுட்டான். ஆமா அவன் ஏன் ஜூலியட்டோட அண்ணனக் கொன்னான்னா, அவன் தன்னோட ஹவுஸ் ஓனர் பொண்ண ரேப் பண்ணிட்டிருந்ததால. அவன் ஏன் ரேப் பண்ணான்னா, தன்னோட தங்கை ஏழைப் பையனான ஹரிய காதலிக்க காவலா இருந்ததால. ஆமா அது எப்டி ஜூலியட்டோட அண்ணனுக்குத் தெரிஞ்சது? அதான் சரஸ்வதியோட புருசன் அதைப் பாத்து போட்டுக் கொடுத்துட்டானே. சரி இதுல சரஸ்வதி யாரு? அதான் ஜூலியட். ஜூலியட்ங்கறது சரஸ்வதிக்கு ஹரி வச்ச செல்லப் பேரு. ஙே!
இல்லேல்ல. இதைப் போட்டுக் கொடுத்தப்ப சரஸ்வதிக்கும் அவங்கண்ணனோட ஃப்ரெண்டுக்கும் கல்யாணமாகல. அவ மேல இவனுக்கு ஒரு கண்ணு. ஆனா சரஸுக்கு ஹரி மேல. ஆனா பாருங்க. ஜெயில்லேர்ந்து வெளிய அவன் தப்பிச்சு வர்றதே ஜுலியட் அலைஸ் சரஸ்வதிய பழி வாங்கத்தான். ச்சே கொலை பண்ணியில்ல. அவளும் ஜெயில்ல வந்து, தான் அனுபவிச்ச வலிய அனுபவிக்கனும்ங்கறதுதான் அவன் எண்ணம். ஆனா, அவளுக்கோ கல்யாணமாகி, அதே அண்ணன்கிட்ட போட்டுக் கொடுத்த அண்ணன் ப்ரெண்டத்தான் கட்டிகிட்டு இப்ப சின்னின்னு ஒரு கியூட் பாப்பாவே இருக்கு. ஆனா இப்ப அவன் ஒடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல கெடக்கான். அவனுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்றதுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல போராடிக்கிருக்கா சரஸ்வதி அலயஸ் ஜூலியட். ஆனா அடிக்கடி ஆஸ்துமால அவளும் மூச்சு வுட முடியாம போராடிட்டுதான் இருக்காங்கறது குறிப்பிட வேண்டிய விசயம்.
படத்துல அதி விசேஷே ரொம்ப விசேஷமான ஒரு ஆளு. ஆமா அவர் நடிக்கிற எல்லா படங்களுக்கும் அவர்தான் ஸ்கிரிப்ட் எழுதுவாரு பாகுபலி மட்டும் விதிவிலக்கு. அதனாலேயே அவரோட படங்களுக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு எப்பவுமே உண்டு. அப்படி அவர் பண்ண படங்கள்தான் எவரு, க்ஷணம், கூடச்சாரி எல்லாமே. அவரைத் தாண்டி படத்துல நான் பாத்ததுமே அடடே பரவால்லியே இவங்களுமான்னு நெனச்ச நடிகர்கள், அதுல் குல்கர்னி, பிரகாஷ்ராஜ் அண்ட் அனுராக் காஷ்யப். இதுல பிரகாஷ்ராஜ் மட்டும் எதோ வந்தமா போனமான்னு வந்துட்டு போயிருக்காரு. அதுல் குல்கர்னி கூட ஓகே ரக ஸ்க்ரீம் ஸ்பேஸ்தான். ஆனா அனுராக் காஷ்யப், மனுசன் பின்னிட்டாப்ல. சபரிமலைக்கு மாலை போட்டுகிட்டு, யூனிபார்ம் போட மாட்டேன், துப்பாக்கிய தொட மாட்டேன், கெட்ட வார்த்தை பேச மாட்டேன் சாமி சரணம்னு படம் முழுக்க செம ஸ்க்ரீன் ஸ்பேஸ் இவருக்கு. வெறும் சினிமாவா மட்டுமே பாத்தா இவரோட கேரக்ட்டர் ரைட்டிங் செமன்னு தான் சொல்லனும். அதுவே லாஜிக் பாத்தா அல்லது ரியாலிட்டியோட கனெக்ட் பண்ணி கம்பேர் பண்ணா, போங்க ஜீ காமெடி போலீஸ் இவருன்னு தான் சொல்லத் தோனும்.
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் மிர்னால் தாகூர் நடிச்ச ஒரு படத்தைக் கூட இதுவரைக்கும் பாத்ததில்லை. அப்டி வேற ஏதாவது படத்தைப் பாத்திருக்குறனான்னு கூகுள் பண்ணதுல, அட ஆமா, சீதா ராமம்னு ஒரு படத்துல பாத்துருக்கேன்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன். அடேங்கப்பா, கூகுள் லெவலுக்கு பேமஸாகிருச்சு என்னோட மெமரி லெவல். படம் முழுக்கவே சரஸ்வதி அலயஸ் ஜூலியட்டா நடிச்சிருக்கற மிர்னாலுக்கு எப்ப வேணும்ன்னாலும் மயக்கமடையிற மாதிரி ஒரு முகம். ஆமா அவங்க மூக்குல கொஞ்சம் முன்னாடிதான் அனஸ்தீசியா வச்ச மாதிரியும், எப்ப வேணும்ன்னாலும் தும்மப் போற மாதிரி முகத்தையும் கண்ணையும் வச்சுகிட்டிருக்காங்க. ஏன்னு தான் தெரியல.
படத்துல காதல் காட்சிகள், ஆக்சன் காட்சிகள், சேஸிங் சீன்ஸ் எல்லாமே அதுக்குண்டான ஷ்பெசல் வசனங்களோட நம்மள அடுத்து என்னன்னு எதிர்பார்க்க வச்சு பாக்க வச்சிடுது. ஆனா முழுசா படம் முடிஞ்சப்புறம் தான் நமக்குப் புரியிது இது அதி விசேஷோட முந்தைய படங்களோட தரத்தைக் கம்பேர் பண்ணா இது ஒரு தேவையில்லாத ஆணின்னு. நான் தெலுங்குல தான் பாத்தேன். தமிழ் டப்பிங்ல பாக்கற ஐடியா இல்ல. அந்தந்த பொழிப் படங்கள அந்தந்த மொழியிலயே பாக்கறது ஒருவிதமான அசவுகரியம்தான். ஆனா அந்த கம்ஃபர்ட் ஸோனுக்குள்ளயே இருந்ததாலத்தான் பல இடங்கள்லயும் தேவைப்படுற பாஷை தெரியாம அவஸ்தைப் பட்டிருக்கேன். அதை பட்டுத்தான் புரிஞ்சுகிட்டேன். ஒரு படத்தைப் பாக்குறதால ஒரு பாஷை முழுமையும் நமக்குப் புரிஞ்சிடாது. அட்லீஸ்ட் அதுல கொஞ்சம் நாம கத்துக்கறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். அப்டித்தான் நான் மலையாளமும் குறிப்பா ஆங்கிலமும் கத்துகிட்டேன். இப்ப எதோ சப்டைட்டில்களோட உதவியோடதான் பாக்குறேன்னாலும், காலப்போக்குல சப்டைட்டில்கள் இல்லாமயே பாக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு. இதையெல்லாம் சொல்லி உங்களையும் பாருங்கன்னு நான் சொல்லல. பாத்தா நல்லதுன்னு தான் சொல்ல வந்தேன். மத்தபடி உங்க லைஃப், உங்க கம்ஃபர்ட். எப்டி பாக்க வசதியோ அப்டி பாருங்க. ஆனா இந்தப்படம் டைம்பாஸ் ஆகலேன்னா பார்க்கலாம். அவ்வளவு தான்.
வர்ட்டா!
No comments:
Post a Comment