Sunday, June 14, 2026

29

29

அப்டின்னு ஒரு லவாங்கி நெறஞ்ச ரொமான்ஸ் மூவி. நடிகர்கள்னு பாத்தா ப்ரீத்தி அஸ்ரானி, ஜில் ஜங் ஜக் படத்துல ஜக்கா நடிச்சவர், அப்புறம் நான் ஒரே ஒரு தம்மாத்துண்டு சீன்ல நடிச்ச மலையாளப் படத்துல ஹீரோயினா நடிச்ச லியோனா லிஷோய் மற்றும் பலர். இப்பவரைக்கும் ஹீரோ பேர் தெரியாது. ஜக்கையும் தெரியாது. கூகுள் பண்ண இஷ்டமில்லை. கேரக்ட்டர் நேம்லயே மெய்ண்டெய்ன் பண்ணிக்கிறேன். சத்யா, சத்யா ஃப்ரெண்டுன்னு. சரி வாங்க இந்தப் படத்தைப் பார்த்த அனுபவம் எப்டி இருந்ததுன்னு பாத்துடலாம்.

கதைப்படி, தன்னோட அடையாளம் என்னன்னு தெரியாம, 29 வயசு வரைக்கும் வாழ்ந்து இதுக்கு மேலயும் அதைத் தேடாம நம்மகிட்ட ஒரு பொண்ணு கூட எக்ஸ்க்யூஸ்மிங்கறதத் தவிர பேச யாருமே இல்லையேன்னு அந்தத் தேடல்ல பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிச்சிட்டு சேலத்துல இருந்து சென்னை வந்து ஐடி கம்பெனியில வேலை பாக்குற ஒரு ஆளுதான் இந்தக் கதையின் நாயகன். பேரு சத்யா. அதே ஐடி கம்பெனியில பின்னாடி ரோவுல வேலை பாக்குற விஜி தான் நாயகி. ஆனா சத்யா மாதிரி இல்லாம விஜிக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு. அது ஐ.ஏ.எஸ் ஆகறது தான். இப்பவே சத்யா சக்திவேலாகி விஜிய தேவயானியா பாவிச்சு நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாத்திருந்தா விஜி ஐ.ஏ.எஸ் ஆகிருப்பாங்க. சத்யாவும் பஸ் கம்பெனி ஓனராகிருப்பான். ஆனா பாருங்க. சத்யா சக்திவேல் இல்ல. டிபிகல் நைண்டிஸ் கிட். சரி இப்டி பொத்தாம் பொதுவா இவங்கள வகைப்படுத்தாம இயல்பா என்னவா இருந்தாங்க அண்ட் ஆனாங்கன்னு பாக்கலாம்.

சத்யாவும் விஜியும் கலீக்ஸ்ல இருந்து காதலர்களா ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகற காட்சிகள் நல்லாவே இருந்தது. அதுல அந்த பஸ் ஸ்டாப் மழைக்காட்சி ஓவர் சினிமாத்தனம். ஆனா அதுவே பெயிலியராகி அடுத்த அட்டம்ப்ட் விஜியோட் முறை. அது அவ்வளவு அழகான கடற்கரைக் கவிதை. இப்டி படம் முழுக்க அழகழகான குட்டிக் குட்டி எபிசோட்ஸ். அதாவது ஒரு காட்சி இயல்பா ஆரம்பிச்சு அது தன்னோட வழக்கத்துல இருந்து தடம் மாறி முடிவுல ஒரு நிறத்தை நம்ம மைண்ட்ல பூசி அழகா நம்ம முகத்துல ஒரு புன்சிரிப்பை ஒட்ட வச்சிட்டு கடந்து போயிருக்கும். இதையெல்லாம் ஏற்கனவே நான் மேயாத மான்ல அனுபவிச்சிருக்கேன். அது உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அதோட பாடல்கள் உட்பட. ஆனா இந்தப் படம் அதைத் தாண்டி ஒரு அனுபவம். ஆனா சந்தோஷ் நாராயணன் மிஸ்ஸிங்.

அகைன் படத்துக்குள்ள வருவோம். ரொம்ப நேரம் படம் ஓடிட்டிருக்க இன்னும் எவ்வளவு பாக்கி இருக்குன்னு செக் பண்ணப்ப படம் பாதியைக் கூடத் தாண்டியிருக்கல. ஆத்தாடியாத்தா. என் பொறுமையை ரொம்பவே சோதிக்குதேன்னு அத்தோட நிறுத்திட்டு மறுபடியும் தைரியத்தை வரவழைச்சுகிட்டு இன்னிக்கி மறுபடியும் பாக்க ஆரம்பிச்சேன். இந்த முறை அந்த குறி சொல்ற சீன். எதோ ஃபெஷேடோயிங்கா கெட்டது நடக்கப் போறதா சொன்னப்ப அது பாக்குற நமக்கா இருந்துடக் கூடாதுன்னு ரொம்பவே பயந்தேன். ஏன்னா என்னால ஒரு லெவலுக்கு மேல ஹெவி சென்டிமெண்ட் சீனெல்லாம் பாக்க முடியாது.  ஆல்ரெடி காதல் படத்துல பாதியில தியேட்டரை விட்டே வீட்டுக்கு ஓடினதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துட்டுப் போச்சு. ஆமாங்க, அதுல சுகுமார், பரத் அண்ட் சந்தியாகிட்ட நைட் ஃபுல்லா டைம் பாஸ் பண்ண செகண்ட் சோ முடிஞ்சதும் பஸ் ஏறி காலைல வரைக்கும் ட்ரிப் அடிக்கச் சொன்னப்பவே அந்தக் கஷ்டத்தை மனசளவுல தாங்கிக்க முடியாம அய்யோ எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு வெளிய ஓடி வந்துட்டேன் அழுதுகிட்டே. இத்தனைக்கும் அது ஒரு சண்டே ஈவினிங் ஷோ. நான் அனுஷம் தியேட்டருக்கு வெளிய வந்தப்ப இன்னும் இருட்டியிருக்கல.

அதே மாதிரி எதாவது ஆகிடக் கூடாதுன்னு நான் பயந்துகிட்டே தான் அடுத்து படத்தைக் கண்டின்யூ பண்ணேன். ஆனா அப்டி எதுவும் நடக்கல. ஆனா அதைத் தொடர்ந்த காட்சிகள்ல சத்யாவோட முட்டாள்த்தனம் என்னைக் கொஞ்சம் கோபப் படுத்தினதென்னமோ உண்மைதான். அவளே நாளைக்கி ஃபைனல்ஸ் எக்ஸாம் இருக்குன்னு தான் இப்பவரைக்கும் ஃபோன் எடுக்கல. இப்ப உன் பேரண்ட்ஸுக்கு அவளைப் பாக்க முடியலன்னா தான் என்னவாம். அவங்களே ட்ரெய்னுக்கு டயமாச்சுன்னு போய்ட்டாங்கள்ல. அப்டே விட்ருந்தா அவளாச்சும் படிச்சு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணியிருந்திருப்பா. அப்பப் பாத்துத்தான் அவகிட்ட ஹர்ட் பண்ற மாதிரி வார்த்தைய விடனும்? எனக்குன்னா எந்திரிச்சுப் போயி சத்யா மூஞ்சியில ஸ்டூல் போட்டாவது நாலு குத்து வுடனும் போல இருந்தது. ஆமா பின்ன அந்த வளந்து கெட்டவன் மூஞ்சியில படுத்துகிட்டிருக்கும் போதா குத்த முடியும்?

காதல்னாலே அது இதயத்தோட அதிகப் பிரசிங்கித்தனம்னு எபிசோட் டைட்டிலே வச்சு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் நாம ஏன் வன்முறைய கைல எடுத்துகிட்டு. ஆனா இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் நம்ம இதுக்கு என்ன ரியாக்ட் பண்ணிருப்போம்ங்கற சுயமதிப்பீடு செய்யிற அளவுகோலா வச்சுக்கற வரைக்கும் நல்லது. அதைத் தாண்டி நிஜம்ங்கற மாதிரி ஃபீல் பண்ண வக்கிறது டைரக்ட்டரோட கதை சொல்லல் சாமர்த்தியம் அண்ட் ஆடியன்ஸோட முட்டாள்த்தனம். எம்ஜியார் அடி வாங்கறாரேன்னு கையிலிருந்த அறுவாள ஸ்க்ரீன் மேல வீசி ஹெல்ப் பண்ண நெனச்ச நாடு சார் இது. இது நெஜமா மித்தான்னு தெரியாது. ஸ்க்ரீன்ல அஜீத்தைப் பாத்ததும் கையில பேப்பரைக் கட் பண்ணி தியேட்டர்ல செதற வுட்டவன் தான் நானு. நான் இந்த எம்ஜியார் அறுவா சீனை நம்பாம இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.

இதுக்கு முன்னாடி இந்தப் படத்தோட ட்ரைலரோ டீசரோ போஸ்ட்டரோ எதயுமே பாத்திருக்கல. அதனால எந்த எதிர்பார்ப்புமில்ல. டைரக்சன் ரத்னகுமார் அப்டின்னு படம் பாத்துகிட்டிருந்தப்ப தான் பாத்து ஷாக்கானேன். ஏன்னா ஆல்ரெடி அவரோட சோசியல் மீடியா போஸ்ட்ஸ். அதெல்லாம் ஒரு மாதிரி பீதியைக் கெளப்பியிருந்தாலும், மேயாத மான் அண்ட் குளுகுளு படங்களோட இயக்குநர் தானே அப்டின்னு ஒரு நம்பிக்கை. அதக் காப்பாத்திட்டாப்ல. ஆனா திடீர்னு ஏரியைத் தூர்வார்றது, பாலியல் கொடுமை செய்யிறவன்னு ஜெயில்ல அடைக்கிறதுன்னு போனதெல்லாம் கொடூரம். இதுல தன்னைப் பாக்க வந்த தன்னோட அம்மாகிட்ட வெளிய மீடியா முன்னாடி விழுந்துடுன்னு ஜெயில்ல இருந்துகிட்டே சொல்றதெல்லாம் கொடூரக் குபீர். இந்த சீன்ஸ் எல்லாம் தான் டைரக்டர் டச். இதுக்குத்தான் பயந்தது பேரைப் பாத்து. ஆடையெல்லாம் மறந்துருங்க. அப்டி ஒரு படம் வந்ததையும் பாத்ததையும்.

ப்ரீத்தி அஸ்ரானி, விஜி கேரக்ட்டர்ல ஒரு அக்மார்க் தமிழ்ப்பொண்ணா ரொம்பவே நல்லா நடிச்சிருந்தாங்க. இதுக்கு முன்னாடி கிஸ்லயும் அயோத்திலயும் அவங்க நடிப்பைப் பார்த்திருந்ததை விட அவங்க கதை சொல்ற ரீல்ஸ்ல தான் ரொம்ப அதிகமா பாத்திருக்கேன். அந்த ரீல் எவ்ளோ கியூட்டோ அந்தளவுக்கு அவங்களும் கியூட். ஆனா அயோத்தியில வடநாட்டுப் பொண்ணாவே நடிச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் கிஸ்ல கூட கொஞ்சம் எலைட்த்தனமுள்ள ஹீரோயின். ஆனா இதுல விஜிங்கற மல்லிகைப்பூவுக்கு அடம்புடிக்கிற தமிழ்ப் பொண்ணு. செம! ஆனா அயோத்தியில பாத்த ப்ரீத்தியை இதுல ரொமான்ஸ் நெருக்கமான காட்சிகள்ல பாக்குறப்ப கொஞ்சம் மனசு வலிச்சது. ஏன்னா நம்ம லைஃப்ல சில பெண்களோட ப்ரைவஸி பக்கங்களைப் பாக்க நமக்குப் பிடிக்கதில்லையா, லைக் நம்ம அம்மா, அக்கா, தங்கச்சி, சித்தி, அத்தை இந்த மாதிரி. அப்டி ஒரு பொண்ணாதான் மனசுல நிக்கிறாங்க ப்ரீத்தி அயோத்தி பாத்ததுலேர்ந்து.

ஆனா ஹீரோவை இதுக்கு முன்னாடி சில கார்த்திக் சுப்புராஜ் படங்கள்ல நடிச்சிருந்ததா மீம்ஸ் பாத்தேன். அதுல எதுவும் நான் இவரைப் பார்த்ததா ஞாபகமில்லை. அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் படத்துல இருந்துதான் சத்யா கணக்கு. இதுல செகண்ட் ஆஃப்ல வர்ற ஹிந்தி டீச்சர் என் கண்கள அகல விரிக்க வச்சிட்டாங்க. ஆமா இவங்க எப்டி தமிழ்ல அப்டின்னு ஆச்சர்யப்பட வச்சிட்டாங்க. ஆமாங்க மலையாள நடிகை லியோனா லிஷோய். இவங்க நடிச்ச அகத்தொக்கெகொலாஜிகல் அப்டிங்கற மலையாளப் படத்துல நானும் ஒரு சீன்ல நடிச்சிருந்தேன். அதனால! ஆனா அந்தப் படத்தை நான் இப்பவரைக்கும் பாத்ததில்ல. ஹிஹி!

அடுத்து ஒரு பதிவுல சந்திப்போம் நண்பர்களே, வர்ட்டா!

No comments:

Post a Comment