Friday, June 26, 2026

பைங்கிளி - மலையாளம்

பைங்கிளி

‎அப்டின்னு ஒரு மலையாளக் காமெடிப் படம். ரோமாஞ்சம் டைரக்ட்டர் ஜித்து மாதவன் எழுதின கதை. ஆனா டைரக்சன் மட்டும் ஸ்ரீஜித் பாபு. ஹீரோவா நடிச்சிருக்கறது அதே ரோமாஞ்சம்ல அந்த வீட்ல உள்ள பசங்கள்ல கொஞ்சம் லீடர்ஷிப்பா நடந்துக்கற அதே சஜின் கோபு தான். ஹீரோயினா நடிச்சிருக்கறது அனஸ்வரா ராஜன். இன்னும் பலரும் நடிச்சிருந்தாலும் குறிப்பா சொல்ல வேண்டியது நம்ம கட்டதொர ரியாஸ் கானைத் தான். படமே ஒரு மாதிரி அபத்த நகைச்சுவைல தான் ஓடிட்டிருக்கும். அதுல ரியாஸ் கான் காட்டிருக்கற முரட்டுத்தனமெல்லாம் ஒரு அதிசயம். சரி நாம நேரடியா படம் பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்க்கலாம் வாங்க.

‎கதைப்படி சுகு தன்னோடே ரெண்டு நண்பர்களோட ஊருக்குள்ள ஒரு ஸ்டிக்கர் கடை நடத்திகிட்டு இருக்காரு. இதுநாள் வரைக்கும் தன்னோட அப்பாவையே அப்பான்னு பேர் சொல்லிக் கூடக் கூப்ட்ருக்காத, சுஜித் குமார்ன்னு பேர் சொல்லி மட்டுமே கூப்ட்டுகிட்டிருக்கறவர். சுகுவோட வீட்ல அவனுக்கு ஒரு பொண்ணு கிடைக்கலையேங்கற ஏக்கத்துல அவனை பரிதாபமா ஹேண்டில் பண்ணிகிட்டிருக்காங்க. அப்டியே கட் பண்ணா ஹீரோயினுக்கு இன்னும் பதினெட்டு வயசு பூர்த்தியாகல. அப்டியிருந்தும் அவங்க வீட்ல அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிகிட்டே இருக்காங்க. அவளும் முதல் மாடியில உள்ள அவளோட ரூம் ஜன்னல் வழியா கீழ எகிறி குதிச்சு வீட்டை விட்டு ஓடிகிட்டே இருக்கா.

‎அப்டி ஓடிப் போனாலும் வந்து புடிச்சிடறாங்க. அடுத்து இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும். எகிறி குதிச்சு ஓடுவா. தேடி வந்து புடிச்சிடுவாங்க ரிப்பீட்டு. இப்டி சும்மா ஓடினா புடிச்சிடறாங்கன்னு யாரையாவது காதலிச்சு ஓடிப் போகனும்னு பக்கத்து வீட்டுப் பள்ளித் தோழி ஐடியா கொடுக்க, அடுத்து காதலன் தேடும் படலம். அதுலயும் முதல் நிலை சிரிப்பு. ரெண்டாவது நிலை நம்பர் வாங்கறது. மூனாவது நிலை கால் பண்ணிப் பேசறது. நாலாவது நிலை ஓடிப் போறது. எதே? இந்த குபீர் ஐடியாவையும் கொடுக்கறது அந்த பக்கத்து வீட்டுப் பள்ளித் தோழிதான். யேம்மா அவ என்ன சொன்னாலும் நம்பிகிட்டு நடப்பியா? அப்டின்னு தான் கேக்கத் தோனும். அவளே ஒருமுறை இப்டி ஓடிப் போயி அடுத்து என்ன செய்யன்னு ஒரு குழப்ப மனநிலைல இருக்கறப்ப, அவளே கால் பண்ணி எனக்கே அவ்ளோ அனுபவம் கெடயாது. நான் சொல்லிட்டு இருக்கறத எல்லாம் கேட்டு நடந்துகிட்டிருக்காத அப்டின்னு சொல்ல அப்ப தான் ஷீபாவுக்கு உலகமே புதுசா புரிய ஆரம்பிக்கிது. அப்படியே ஒடஞ்சு போய் கதறி அழுகுறா. அந்த சீன்லயெல்லாம் தான், நமக்கு மனசு இவங்களும் மனுசங்கதான் அப்படின்னு தோணும்.

‎சுகு என்ன பன்றார்ன்னா, வீட்ல விடுமுறை நாட்கள்ல குடிக்கிறாரு. கடையை மூடிட்டு நண்பர்களோட குடிக்கிறாரு. டீக்கு பதிலா கட்டன் சாயா குடிக்கிறாரு. அப்புறம் கடையில ஸ்டிக்கர் ஒட்டுறேன்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்து ரூம் போட்டு குடிக்கிறாரு. நண்பனை குடிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு, இந்த மாதிரி சமயங்கள்லதாண்டா குடிக்கணும்னு சொல்லி, அவன வற்புறுத்தி குடிக்க வைக்கிறாரு, கூட குடிக்கிறாரு. நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு பொண்ணு எப்படி கிடைக்கும்? ஆனா இவனையும் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து காதலிக்கிற ஒரு தோழனோட சகோதரி இருக்கா. அவகிட்டயும் ஸ்ட்ரிக்டா சுதாகரோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான் அப்படின்னு அவளை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்றாரு.

‎இதுல காமெடின்னு எதையும் தனியா குறிப்பிட்டு சொல்றதுன்னா, அவ்வளவு இருக்கு நிறைய சொல்லணும். ஆனா சில விஷயங்கள ஹின்ட்டா சொல்லலாம். ஹீரோ ஸ்டிக்கர் ஒட்ட கோயம்புத்தூர் போறது, போற வழியில கூட இருக்கிற நண்பன் ராஜஸ்தான் ராஜா சிலைய வாங்குறது, அது பேசாம பண்ற காமெடிகள் எல்லாம் அதுவும் சிறப்பா இருக்கும். ரூம் போட்டு சரக்கடிச்சு அதுக்கப்புறம் நைட்டு அவனோட புல்லட்ட திருட்டு கொடுக்கிறது, அப்புறம் அதை தொடர்ந்து வர சம்பவங்கள் அதுதான் மொத்த படமும். அந்த சம்பவத்தோட முடிவுல ஹீரோயின் ஹீரோ பக்கம் வந்து, அதை தொடர்ந்து வரும் மிச்ச கதைதான் மொத்த படமும். இதுக்கு நடுவுல எக்கச்சக்கமான கேரக்டர்ஸ் இருக்காங்க. அவங்க பண்ணுறது பேசுறது எல்லாமே ஒரு அபத்த நகைச்சுவைல தான் வரும். இதுல இவங்க பண்ற கூத்தெல்லாம் வேடிக்கை பார்க்கிற அந்த ஊர் மக்கள் தான் நாம.

‎எனக்குத் தெரிஞ்சு, மலையாள சினிமா எதையாவது புதுசா ட்ரை பண்ணிகிட்டே இருக்கு. நீங்க பைங்கிளிய பாக்க ட்ரை பண்ணுங்க. நாம அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment