Sunday, June 28, 2026

கான் சிட்டி - தமிழ் ஹீஸ்ட் மூவி


Con City

அப்டின்னு ஒரு கிரைம் காமெடி வகைப் படம். நடிகர்கள்னு பாத்தா அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி மற்றும் பலர். இந்தப் படத்தோட டிரெய்லர் பாத்துட்டு எக்ஸ்பெக்ட் பண்ணிட்டிருந்தேன் ரிலீஸானா பாக்கனும்னு. நான் இத ஏற்கனவே சொல்லிருக்கேன். எந்த ட்ரெய்லரும் ஏன் டீஸர் கூட பாக்கற பழக்கம் எனக்குக் கிடையாது. கடைசியா அப்டிப் பார்த்த படம் போர்த்தொழில். அந்த ஒரு திருப்தியே போதும். ஏன்னா நான் அந்தப் பழக்கத்தை நானே ப்ராக்ட்டிஸ் பண்ணிகிட்டேன். அப்புறம் நான் யூட்யூப்ல அடிக்கடித் தேடித் தேடி வீடியோஸ் வந்திருக்கான்னு பாக்குற ஒரு சேனல் இருக்கு. அதுல வீடியோஸ் எதுவும் வந்திருக்கான்னு பார்க்கப் போனப்ப இந்தப் படத்தோட தம்நெய்ல்ல டைட்டில் பாத்ததும் வெரல் என் கன்ட்ரோல்ல இல்ல. செலக்ட் பண்ணிருச்சு. அப்புறம் டிரெய்லரைப் பாக்க வேண்டியதாகிர்ச். டிரெய்லர் என்னைப் படம் பாக்கத் தூண்டிருச்சு. இப்ப பார்த்தும் முடிச்சாச். வாங்க அந்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்க்கலாம்.

கதைப்படி ஒரு குடும்பம், மங்களூர்ல ஒரு ஓட்டல் வச்சு நடத்திட்டிருக்கு. புருசன், மனைவி, ஒரு சின்னப்பையன், மனைவியோட அண்ணன் அப்புறம் அவங்கம்மா. ஆனா அவங்க பின்புலம் பாட்சா மாதிரியானது. கேங்ஸ்டர்ஸா இல்ல, ஸ்கேமர்ஸா. பின்கதைன்னாலே வெய்ட்டு. வெய்ட்டுன்னாலே அது பாட்சா தானே! ஆனா அந்தப் பின்கதையில நாலு பேர்ல மூனு செட் தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொருத்தரும் ஸ்கேம் பண்ண பணத் தேவை அவங்களைத் தூண்டுது. அப்டி ஸ்கேம் பண்ணிட்டிருந்தப்ப நல்லா காசு வருது. அப்ப அவங்களோட கடன்களெல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் க்ரீடினஸ்ல மாட்டிக்கிறாங்க. க்ரீடினஸ் வந்துட்டா எத்தனை வாட்டி வெளிய வர அண்டாகாகசம் அபூகாகசம்னு மந்திரம் சொன்னாலும் குகை திறந்து வழிய விடாதில்லையா. வசம்மா மாட்டிக்கிறாங்க. உண்மையில படத்துல என்னை ரொம்ப மயங்க வச்சது இண்டர்வெல் சீக்வென்ஸ் தான். அதுதான் யுனிவர்சல் மாரல்.

ஒரு லெவல் வரைக்கும் செய்யிற தப்பு அவங்களக் காப்பாத்தவே செய்யுது. அந்தத் தப்பையே அவங்க தேவைக்கு மேலயும் செஞ்சுகிட்டிருந்ததால அந்தத் தப்பே அவங்கள மாட்டி விட்ருது. மொதல்ல அவங்க செஞ்சது நெசசிட்டி. ஆனா இப்ப இருக்கறது மியர் க்ரீடினஸ். அதுல ஒரு மெதப்பும் கூட சேர்ந்து பணத்துக்காக அவங்க யார்ங்கறதயும் ஏன் இதப் பண்றோம்ங்கறத எல்லாத்தையும் மறந்து அதுல டீப்பா தொடர்ந்து செஞ்சுகிட்டிருக்க சறுக்கிடுது. அப்புறந்தான் ஏழு வருசமா இந்த ஓட்டல் வாழ்க்கை. அதுல அவங்க மகன் கடத்தப்பட அவங்க வேற வழியே இல்லாம அது அவங்க பழைய வாழ்க்கைக்குள்ள தள்ளுது. இப்ப அவங்க என்ன பண்ணப் போறாங்க, என்ன பன்றாங்கங்கறது மீதிக்கதை.

சரவணனா அர்ஜுன் தாஸ். கடத்தப்படற அந்தப் பையனோட அப்பா. உண்மையில அர்ஜுன் தாஸுக்கு இது ஃபர்ஸ்ட் பால்ல செஞ்சுரி. ரொம்ப ரெஸ்பான்ஸிபிள் ஹீரோ. முதல் பாதியில வந்தது மட்டுமே சரவணன் கதாபாத்திரம். ரெண்டாவது பாதி முழுக்கவே சினிமாத்தனம் கலந்ததால நடிக்க வாய்ப்பு குறைஞ்சிடுச்சு. ஒரு சீன்ல தான் காதலிக்கிற பொண்ணும் அவங்க அப்பாவும் இவரை வீட்ல முதல் முறையா வந்து சந்திக்க வந்தப்ப வீட்டு வாசல்ல வீட்டு லோன் கலெக்சனுக்கு வந்து கண்டபடி பேச அப்ப காதலியோட அப்பா தன்னைப் பத்தி என்ன நினைப்பாரோ, அந்தப் பொண்ணு தன்னைப் பத்தி என்ன நினைப்பாளோன்னு இவர் நிலைமை அந்த ரியாக்சன்ஸ்னு அந்தக் கலவை தான் உண்மையான சரவணன். இப்பக் கேவலமா மாட்டிக்கிட்டதெல்லாம் ஒரு மேட்டரே இல்லங்கற மாதிரி இண்டர்வெல்ல மாட்டிகிட்டு காட்டப்படுற அந்த காட்சிகள்ல கொடுத்த ரியாக்சன்ஸ் எல்லாம் நம்மையே இவ்ளோ நேரம் தப்பு பண்ணிகிட்டிருந்த ஹீரோ மாட்டிக்கிட்டானேன்னு நம்மள அய்யய்யோன்னு ஹெவிய்யா கவலைப்பட வச்சு, நம்ம கண்களை அகல விரிய வச்சிருக்காங்க. நீங்க கூட இந்தப் படம் பாக்குறப்ப இண்டர்வெல் சீக்வென்ஸ்ல உங்க கண்கள் அகல விரிஞ்சதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிப் பாருங்க.

சரவணனைத் தவிர, மித்ராவா நடிச்சிருக்கற அன்னா பென் ஸ்கேம் பண்ணக் காட்டின காரணக் காட்சிகள் அவ்வளவு ஏற்புடையதா இல்லை. ஆனாலும் அவங்களும் ஸ்கேம் பண்றாங்க. அது அவ்ளோ பெருசா நம்மள ஈர்க்கவும் செய்யல. உண்மைல அன்னா பென் நடிச்சாலே அந்தப் படங்களுக்கு முதல் ஆளா தியேட்டருக்குப் போன ஆள் நான். ஆனா நாரதன் படத்துக்கப்புறம் அதையும் நிறுத்திட்டேன். ஏன்னா அப்ப டபுள் டிஸ்ஸப்பாய்ண்ட்மெண்ட். ஒன்னு டொவினோ தாமஸ்ன்னால. இன்னொன்னு அன்னா பென்னால. இப்ப இந்தக் கதைல மீண்டும் ஆரம்பிச்சிருச்சுன்னு பதிவு பண்ணிக்கிறேன். இதுக்கு முன்னாடி அவங்க சூரி கூட நடிச்ச படம் கூட நான் இன்னும் பாக்கல. இனி பார்க்கலம்னிருக்கேன். சரி விசயத்துக்கு வருவோம். மித்ரா ஸ்கேம் பண்ற காரணிகள் மட்டும்தான் எனக்கு ஏற்புடையதா இல்லைன்னு தோணுச்சு. ஆனா அவங்க மித்ராவா நடிச்சிருக்கறது சுமார்தான். இதுல அவங்களுக்கு ஸ்கோப் கம்மிதான்.

ஆனா ஸ்கோப் நிறைய இருந்த இன்னொரு செட் ஸ்கேமர்ஸ் யோகிபாபு அண்ட் வடிவுக்கரசி. இதுல ஒன்னு ரெண்டு சீன்ஸ் மட்டும்தான் அந்த ஸ்கோப். அதுக்கப்புறம் படம் முழுக்கவே யோகிபாபு ஜாக்கியாவோ வடிவுக்கரசி ஜாக்கியோட அம்மாவாவோ தெரியல. யோகிபாபு யோகிபாபுவாவே தான் தெரிஞ்சாரு. வடிவுக்கரசி ஜாக்கியோட அம்மாவா இல்லாம, யோகிபாபுவோட அம்மாவா தான் தெரிஞ்சாங்க. சுத்த சினிமாத்தனம். அப்பப்ப வடிவுக்கரசி நடிப்புல ஊர்வசி வேற வந்துட்டுப் போறாங்க. இதுதான் படத்துல இருந்த மிகப்பெரிய பிரச்சினை. பலரும் எழுதியிருந்த பதிவுகள் முதல் பாதி லேக்கா இருந்ததுன்னு தான். ஆனா ரெண்டாவது பாதியில தான் கதாபாத்திரங்கள் ஹீரோயிசம் ஹீரோயினிசம் பன்ச் டயலாக்னு சினிமாவோட கட்டுக்குள்ள போனதே. அப்ப அப்டியிருந்தாலே போதும்னு நினைச்சிட்டாங்க போல. எனக்கு முதல் பாதியில தான் அர்ஜுன் தாஸையும், யோகிபாபுவையும், வடிவுக்கரசியையும் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆனா அன்னா பென் இப்பவும் சுமார் தான். அந்த முடிவுல மாற்றமில்லை.

முதல் பாதியில அர்ஜுன் தாஸ் சினிமத்தனமா பண்ற காட்சிகள் இருந்தது. ஆனா அது அவ்ளோ கன்வின்சிங்கா இருந்தது. ரஜினின்னாலே அது மாஸ் தான் அந்த சீன்ல ரஜினி நடிக்கவே இல்லன்னாலும். ஸ்க்ரீன்ல வந்தாலே ஸ்க்ரீமிங்கெல்லாம் யாருக்கு வேணும்னாலும் இருக்கலாம். ஆனா அந்த காந்த வசீகரம் ரஜினிக்கு மட்டும்தான். நான் உண்மைல ரஜினி ஃபேனெல்லாம் இல்லங்க. ஆனா இன்னிக்கி இந்தப் படத்துல இதை நான் ஃபீல் பண்ணேன். எனக்குள்ளயும் ஒரு ரஜினி ஃபேன் இருந்திருக்கான்னு.

படம் செம. தமிழ்ல ஹீஸ்ட் மூவிக்கள் ரொம்பவே குறைவுதான். சதுரங்க வேட்டை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ராஜதந்திரம், சூது கவ்வும் இதெல்லாம்தான் ஃபர்ஸ்ட் கிரேட் ஹீஸ்ட் மூவிக்கள். மங்காத்தா, ஜெண்டில் மேன், கந்தசாமி, தானா சேர்ந்த கூட்டமெல்லாம் செகண்ட் கிரேட். வித்தியாசம் இருக்கு. முதல்ல சொன்ன நாலு படங்கள்லயும் க்ரீடினஸ்தான் ஹீஸ்ட்டுக்கான காரணங்கள். கன்வின்ஸிங். ஆனா மத்ததெல்லாம் ஹீரோயிசம், ராபின் ஹுட்டிசம்தான் தூக்கலா இருக்கும். ஹீஸ்ட் படங்களா இதை நாம அணுகியிருக்கவே மாட்டோம். உங்க மனசாட்சியில கையை வச்சு சொல்லுங்க, இதெல்லாம் இப்ப நான் வகை பிரிச்சப்புறம் தானே நாம இதெல்லாம் நினைச்சே பாத்தோம்? இன்னும் கூட ஹீஸ்ட் படங்கள் இருந்திருக்கலாம். ஆனா அது எதுவும் எனக்கு இப்ப பதிவெழுத யோசிச்சப்ப மைண்ட்லயே இல்ல. அப்டி எதாவது உங்க மைண்ட்ல ஸ்ட்ரைக்கானா கமெண்ட் பண்ணுங்க.

ஆமா யாரு கமெண்ட் பண்றா? ப்லாக்ல ஆறு பேரும், ஃபேஸ்புக்ல ரெண்டு பேரும்தான் எனக்குத் தெரிஞ்சு இதயெல்லாம் படிக்கவே செய்யிறீங்க. உங்களுக்காக நான் எழுதிட்டே இருப்பேன். அது ஒரே ஒரு ஆளா இருந்தாலும். உங்களுக்கு என் நன்றிகள். இப்ப நாம பால் வாக்கர் அண்ட் வின் டீசல் மாதிரி ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சு போய் ட்ரைவ் பண்ணுவோம். அடுத்த பதிவுல மீண்டும் சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment