Patriot
அப்டின்னு ஒரு மலையாள ஆக்சன் திரில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா, மம்முட்டி, ரேவதி, ராஜீவ் மேனன், நயன்தாரா, மோகன்லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், அப்றம் ஜரீன் ஷிஹாப் அப்டின்னு ஒரு புது நடிகை. சத்தியமா இவங்க பேரை மட்டும் கூகுள் பண்ணிட்டு தான் சொன்னேன். ஏன்னா இந்தப் படத்தைப் பத்தி சொல்றப்ப இவங்களைப் பத்தியும் சொல்லியே ஆகனும். ஏன்னா படத்தை பார்த்து முடிக்கிற வரைக்கும் யாரிவங்க யாரிவங்கன்னு தான் மண்டைக்குள்ள தேடிகிட்டே இருந்தேன். ஒருவாட்டி பாத்தா பார்வதி மாதிரி தெரியிது, அப்டியே இன்னொரு ஆங்கிள்ல ராதிகா ஆப்டே மாதிரி தெரியிது. இப்டி பலபேர்த்த அவங்களா இவங்கன்னு கன்ஃப்யூஸ் பண்ணிக்கிட்டே பார்த்ததால, அந்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாத்துடலாம் வாங்க.
கதைப்படி, கேபினெட் மினிஸ்ட்டரான ஜே.பி.சுந்தரம் பண்ற தில்லு முல்லு வேலைகள்தான் பிரச்சினையே. அவர் சக்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் நடத்துறவரும் கூட. அதை நடத்துறது தன்னோட எக்ஸ் ஆர்மி பைலட் சக்தி. இது பல வருசமா கேபினெட் மினிஸ்டரா அதே கட்சியில உள்ள நளினிக்கு தெரிஞ்சிடுது. அவங்களுக்கு பதில் சொல்ற எடத்துல தான் ஜே.பி இருக்காரு. பதில் சொன்னாலும் மாட்டிக்குவாரு, சொல்லலைன்னாலும் மாட்டிக்குவாரு. அது என்ன பிரச்சினைன்னா, ஸ்டூடண்ட்ஸ்க்கு இலவசமா கொடுக்கற லேப்டாப்புகள்ல ஆர்மியில யூஸ் பண்ற ஸ்பைவேரை வச்சு மக்கள்ல யாரெல்லாம் தனக்கெதிரா பேசுறாங்க, சோசியல் மீடியால என்ன சொல்றாங்கன்னு கண்காணிக்கிறதுக்காகத் தான். இதுல உள்குத்தா பல விசயங்கள் நடக்குது. ஒரு ஸ்பைவேரை வச்சு கண்காணிக்க மட்டுமா முடியும்? அவங்க அந்தரங்கங்களுக்குள்ளயும் நுழையலாமே. இதுதான் பிரச்சினையோட மையக்கரு.
இப்ப இதுக்கு எதுக்குடா பதில் சொல்லிகிட்டுன்னு நளினி ராமகிருஷ்ணன போட்டுத் தள்ளிட்டு, அந்த ஸ்பைவேர தன்னோட சக்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு எப்டி வேணும்னாலும் பிரயோகப்படுத்திக்கலாம்னு அதை வச்சு செய்யிற அத்துமீறல், ஆரம்பத்துலயே இது இப்டித்தான் போய் முடியும்னு புரிஞ்சுகிட்ட நளினி, தன்னோட சைன்ஸ் அட்வைசர் கம் எக்ஸ் கமேண்டரான டேனி கிட்ட இதைக் கண்டுபுடிக்கச் சொல்லிட்டுதான் மர்மமான முறையில செத்துப் போயிடறாங்க. இதேபோல சக்தி குருப் ஆஃப் கம்பெனியால இந்த ஸ்பைவேர் வச்சு மானிட்டர் பண்ணிகிட்டிருந்தவங்க பலர் உயிரோட இல்ல. டேனிக்கு சின்ன வயசெல்லாம் இல்ல. அபவ் அம்பதுகள்.
ஆக்சன் சினிமா. அதுல இதுக்கு மேல என்ன கதை சொல்லிட முடியும்னு இல்லாம சில லேயர் கதைகள ஒன்னோட ஒன்னு தொடர்புடையதா கதை சொல்ல ஆரம்பிச்சுப் பல கதாபாத்திரங்கள உள்ள கொண்டுவந்து, அதை ஹீரோ மட்டுமே எல்லாத்தையும் பண்றாருன்னு இல்லாம மல்ட்டி ஸ்டேரிங்ல, அதுவும் மலையாள சினிமா கதை சொல்லல்ல நல்லாவே இருந்தது. டெல்லியில ஆரம்பிச்சு, கேரளாவுக்குள்ள ஒன்னு ரெண்டு சீன்ஸ் மட்டுமே வச்சுட்டு, முழுப்படத்தையும், லண்டன், கர்நாடகான்னு கதை பயணிக்கிது. இதுல வில்லன் ரெண்டு பேர், நாயகர்கள் மூனு பேர், நாயகிகள் மூனு பேர். அதுல எல்லாருமே நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு இந்த கமர்சியல் சினிமால கூட தன்னால ஆன பங்களிப்பை நல்லாவே கொடுத்திருக்காங்க.
வில்லன்கள் எரியால ராஜீவ் மேனன் அண்ட் ஃபகத் ஃபாசில். அப்பா பையன். ஜே.பி.சுந்தரமா வில்லனா நடிச்சிருக்காரு. ராஜீவ் மேனன் நடிக்கிறாருங்கறதே புதுசு. விடுதலைல ஆல்ரெடி பண்ணிட்டாருன்னாலும் இந்தளவுக்கு இல்ல. இதுல அவர் தன்னோட நடிக்கிற ஃபகத் ஃபாசிலுக்கு இணையான வில்லத்தனத்தைக் காட்டனும். எனக்கு ரெண்டு பேர்த்துல ராஜீவ் மேனனோட வில்லனிசம் தான் கவர்ந்தது. என்ன காரணம்ன்னா ஃபகத்தைப் பத்தித் தெரியும் ஆல்ரெடி. அவருக்கு தமிழ்நாட்டுல நிறைய ரசிகர்களும் அதிகம். குறிப்பா அவரோட சைக்கோத் தனமான வில்லனிசத்துக்கு. அப்டி ஒரு நடிகர் கூட நடிக்கிறப்பவும் கூட தன்னோட கேரக்ட்டரோட மீட்டர் என்னவோ அதுல ஒரு வித்தியாசத்தை உணர வைக்கனும். அதை நிஜமா நல்லா பண்ணிருக்காரு.
அடுத்து நடிகைகள் ஏரியால, நான் ஆல்ரெடி முதல் பத்தியில சொல்லிருந்த ஜரீன் ஷிஹாப். முதல்ல இவங்க எதோ துணை நடிகர் போலத்தான் ஜஸ்ட் லைக் தட்ல காட்னாங்க. அப்டியே கதை போற போக்குல திடீர்னு டேனிக்கு வொய்ஃப்ன்னு சொல்றாங்க. டேனி கடத்தப்பட்ட விசயம் தெரிஞ்சு நிஜமாவே அதுக்கு சரியா ஒரு வொய்ஃப் போலவே ரியாக்ட்டும் பண்ணிருந்தாங்க. அதைத் தொடர்ந்த காட்சியில தான் ராஜீவ் மேனன் ஜரீன்கிட்ட தன்னோட வில்லத்தனத்தைக் காட்டினாரு. அதுல தான், இவங்க ரெண்டு பேர்த்தோட நடிப்பும் அவங்வங்க கேரக்ட்டர்க்கு ஏத்த மாதிரியா இருந்தது. திடீர்னு லத்திகாவைக் காட்டி இதுதான் டேனியோட லீகல் வொய்ஃப்னு சொன்னப்ப அதே நடிப்பு ஒரு ஆர்ப்பாட்டமில்லாம போனதுல ஒரு ஏமாற்றம்.
லத்திகாவா நயன்தாரா. வெறும் போர்வை சைஸ்ல சால்வைய மேல சேலைக்கு மேட்சிங்கா போர்த்திக்கிட்டாலே அறுபது வயசு டேனிக்கி மனைவின்னு ஆகிடாது. கொறஞ்சது நரையாவது வேணாமா? ஏன் இன்னும் லேடி சூப்பர்ஸ்டார் ஈகோ இல்லாம நடிக்க மாட்டாங்களா? எள வயசுல தான் நயன்தாராவ பாக்கனும்னு நாங்க கேட்டமா? இல்ல உங்களுக்கு ஜோடியா நடிக்கிறவருக்கு அறுவது வயசு. உங்களுக்கு என்ன நாப்பது வயசுன்னு நாங்களே நெனச்சுக்கனுமா? அப்பக் கூட முகத்துல வயசானதுக்கான சிம்டமே இல்லியே, ஹவ்? பாக்கிஸ்தானி இல்லீகல் வொய்ஃப்னு முத்திரை குத்தப்படற ஆயிசா தான் டேனியலோட மனைவின்னு சொன்னாக் கூட தகும். எப்டியோ போங்க. மூனாவதா ஜோதி. இவங்க கூட நடிச்சதாலயே குஞ்சாக்கோ போபன் இளமையா தெரியிறாப்லயா, இல்ல நெஜமாவே அவர் இன்னும் யங் தானான்னு ஒரு கொழப்பம் இருக்கு. அடங்கொக்கமக்கா அந்தாளுக்கே அம்பது வயசாச்சு. ஆனா பாத்தா அப்டி சொல்லவே முடியாது. சாக்கோ தர்ஷனா ஜோடி ஒரு லிவின் ரிலேசன்ஷிப்ல தான் இவ்ளோ நேரம் இருந்தாங்கன்னு ஒரு சீன்ல தெரிய வர்றப்ப, என்னது அப்ப ரெண்டு பேரும் கல்யாணமானவங்க இல்லியான்னு ஆன ஷாக்கை விட, மைக்கெலுக்கு ஆல்ரெடி ஒரு குடும்பமே இருக்குன்னு வொய்ஃப், ஸ்கூலுக்குப் போற பெண் குழந்தைன்னு காட்டினப்ப ஆன ஷாக்குதான் பெருசு.
இவ்வளவையும் வச்சுகிட்டு, ஜோதிய விட்டா கொன்னுடுவாங்கன்னு தெரிஞ்சே விட்டுட்டு, அப்புறம் லேட் பிக்கப்பா கில்ட்டாகி அதுக்குப் பழிவாங்க புதுசா மகிந்திரா தார் வாங்கிட்டு கெளம்பறதெல்லாம், போங்க ஏட்டா நீங்க, உங்களப் பாத்தா ஒரு ஹீரோ ஃபீலே வரல, எப்டிப் பாத்தாலும் வில்லன் ஃபீல் தான்னு சொல்லத் தோனுது.
எப்டி ஃபகத் வந்ததுமே இவரு வில்லன் தான்னு நமக்கு நினைக்கத் தோனுச்சோ, அதே போலதான் மோகன்லால் எண்ட்ரி. எவன் வந்தாலும் அடிக்கத் தான் போறாப்ல, அப்றம் அதுல என்ன பெருசா ஆச்சரியப்படுத்திறப் போறாப்லன்னு நாம நெனச்சிடக் கூடாதுன்னு, போர்ல ஒரு கால் போச்சு. அது ஆம்ப்யுடேட் செய்யபட்ட ஆர்ட்டிபிசியல் காலு அப்டி இப்டின்னு என்னென்னமோ ட்ரை பண்ணிப் பாத்தாங்க. கடைசில கண்ல மோர்ஸ் கோட தந்தியடிச்சிகிட்டே லிஃப்ட்ல சாகற மாதிரி சீனெல்லாம் வச்சுப் பாத்தாங்க. ம்ஹும். ஏட்டா, இந்த கேரக்ட்டருக்கு எதுக்கு மோகன்லால்? கேரக்ட்டர் ஆர்ட்டிஸ்ட் யார் வேணும்னாலும் பண்ணிருக்கலாம். எப்டி ஒரு மிடில் ஏஜ் தாண்டின ஒரு நடிகையோட சான்ஸ் நயன்தாராவுக்குப் போச்சோ, அதேபோல தான் மோகன்லால் கேரக்ட்டருக்கும். அவங்க ரெண்டு பேர்த்து சம்பளம் போச்சு.
படத்தப் பாத்தா உங்களுக்கே புரியும். மீண்டும் அடுத்த பதிவுல் சந்திப்போம்.
வர்ட்டா!
No comments:
Post a Comment