Wednesday, June 17, 2026
Raakh - ஹிந்தி வெப்சீரிஸ்
Raakh
அப்டின்னு ஒரு ஹிந்தி கொடூர திரில்லர் அடல்ட் வெப்சீரிஸ். நடிகர்கள்னு தெரிஞ்ச முகங்கள் சோனாலி பேந்த்ரே, மிர்ஸாபூர்ல நடிச்ச அலி ஃபஸல், அப்றம் இந்த ரெண்டு பேர்த்தத் தவிர தேடிக் கண்டுபுடிச்சிகிட்டது திவ்யா சர்மா அண்ட் அன்ஸுல் சவுகான். அடல்ட்ன்னா ரத்தக்களறியாவும், அர்த்தங்கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் நெறஞ்சது. சரி வாங்க இந்த வெப்சீரிஸைப் பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி ரஜோ அண்ட் பாபுன்னு ரெண்டு பேர். அவங்க சின்ன வயசுல இருந்தே மத்தவங்க எல்லார்த்தையும் ட்ரீட் பண்ண விதமே முகம் சுழிக்க வச்சு ஒரு அருவருப்பைத் தரக்கூடியது. அப்றம் இந்தக் கதை நடக்கற காலகட்டம் எண்பதுகள்ல. செல்ஃபோன்கள், தடவியல், சிசிடிவின்னு எதுவுமே இல்லாத காலகட்டத்துல இந்த மாதிரி ரெண்டுபேர் தான் இப்டி கொலை கொள்ளைச் சம்பவங்களைப் பண்ணிட்டிருக்காங்கன்னு கண்டுபுடிக்கிற விசயங்கள் உண்மையாவே ஆச்சர்யப்படுத்துற விதமா இருந்தது. ஒரு ஆர்மி மேன் அண்ட் ஸ்கூல் டீச்சரோட பையனும், பொண்ணும் ரேடியோ ஸ்டேசன்ல பாடறதுக்காக வீட்டை விட்டுக் கிளம்பினவங்க திரும்பி வரல. அவங்க பாடுவங்கன்னு எதிர்பார்த்து காத்துகிட்டிருந்த அந்தப் பொண்ணோட குரலும் ரேடியோல வர்ல. என்னடா இன்னும் கானோமேன்னு போய் விசாரிச்சா, அவங்க ரெண்டு பேரும் ரேடியோ ஸ்டேசனுக்கே வரல. அவங்களுக்கு என்ன ஆச்சுங்கறதக் கண்டுபுடிக்கறதுதான் கதை.
ஆப்வியஸ்லி நாம பயந்து எதிர்பார்த்த மாதிரி அவங்க ரெண்டு பேரும் பல ரத்தக் காயங்களோட ஒரு காட்டுக்குள்ள செத்துக் கிடக்க, புது இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் என்ட்ரி. அவராலயே அந்தக் குழந்தைகள் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சபடி ரத்த வெள்ளத்துல செத்துக் கெடக்கற கோலத்தைக் கண்டு ஜீரணிக்க முடியலன்னா, அவங்களப் பெத்தவங்க நிலைமையக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இப்டி எதுக்காக அந்தக் கொழந்தைங்களக் கொல்லனும்? என்ன காரணம்? முன் விரோதமா? பழிவாங்கலா? ஏன் என்னன்னு கண்டுபுடிக்க காவல் துறை ரொம்பவே மெனக்கெட, அப்பதான் இந்தியாவுக்குள்ள தடவியல் துறையோட என்ட்ரி. அந்தத் துறை எப்டி காவல்துறைக்கு உதவிகரமா அமைஞ்சதுன்னு ப்ராக்ட்டிகலாவே இந்த வழக்குல மர்டர் வெப்பன்ல இருந்து என்ன கலர் கார்ல அவங்க அந்தக் கொழந்தைங்களக் கடத்திட்டுப் போனாங்கங்கற வரைக்கும் ஒரு ஐடியா கிடைக்க ரொம்பவே உதவியா இருந்தது.
ஆனா கடைசி வரைக்கும் பாபு அண்ட் ரஜோவைத் தவிர மத்த எல்லார்த்தையும் போலிஸ் நெருங்க முடிஞ்சது ஆனா இதப் பண்ண ரெண்டு பேர்த்தோட பேரைக் கூடக் கண்டுபுடிக்க முடியல. ஏன்னா அவங்க ரெண்டு பேர்த்துக்கும் சொல்லிக்கிற மாதிரி அன்னாடங்காய்ச்சி வேலைக்கிப் போற வேலை கூட இல்ல. அப்றம் எப்டி ஐடெண்டிட்டி இருக்கும்? போற போக்குல கொலையும் கொள்ளையும் செஞ்சுகிட்டுப் போய்ட்டே இருக்கறதுதான் அவங்க ஐடெண்டிட்டியும் வேலையும். அதுலயும் அவங்க அடுத்தவங்கள அணுகற முறையே ரொம்ப முகம் சுழிக்க வைக்கக் கூடியது. என்னைப் பொறுத்தவரை இவங்க வாயைத் திறந்தாலே அல்லது இவங்கள ஸ்க்ரீன்ல வந்தாலே நரகலை மிதிச்ச ஃபீல். அவ்ளோ மோசமான மிருகங்கள். அப்டி இவங்க பண்ண கொலைகளும் வழிப்பறிகளோ நமக்குக் காட்டப்படுறப்ப எப்படா இந்த சீன் முடிஞ்சு அடுத்து போலிஸ் துப்பு துலக்கற சீன் வரும்னு நம்மள முகம் சுழிக்க வச்சிருக்கும். ரசிக்கும்படியா இல்ல. ராவா இருக்கும்.
இறந்து போன ரெண்டு சிறுவர்களோட அம்மாவா மோனாங்கற கேரக்ட்டர்ல சோனாலி பேந்த்ரே நடிச்சிருக்காங்க. எனக்கு அவங்களுக்கு இவ்ளோ வயசாயிடுச்சுன்னு நினைக்கவே ரொம்ப வருத்தமா இருந்தது. இதுக்கு முன்னாடி இவங்க நடிச்ச படங்கள் எதுவும் பாத்ததில்ல. ஆனா அர்ஜுன் கூட இவங்க நடிச்ச படத்தோட டூயட் சாங்ஸ் பாத்திருக்கேன். அதுல இவங்க பேரைத் தெரியும். அவ்வளவா ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்ல. இருந்தவரைக்கும் இயல்பா இருந்தது அவங்க நடிப்பு. ஒரு சில சீன்ஸ்ல ப்ரேக்கவுட்டாகி கத்திருவாங்களோன்னு பயந்துகிட்டே தான் பாத்தேன். அதுவும் நடந்தது ஆனா நான் எதிர்பார்க்காத ஒரு சீன்ல.
இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷா நடிச்சிருக்கற அலி ஃபஸலை மிர்ஸாபூர்ல பாத்திருக்கேன். வேற எதுலயும் பாத்ததா ஞாபகமில்ல. ரொம்ப சின்னப் பையனோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு ஒரு யங்கான முகம். அதுல மிடுக்கான போலிஸோட தோரணை. கொஞ்சம் அஜீரணத்தை ஏற்படுத்தற காம்பினேசன் தான். அப்பப்ப சுப்பீரியர்ஸுக்கு மரியாதை கொடுக்கற கெஸ்ச்சருக்கு மாறுறப்பவும், அப்பாகிட்ட கோச்சுக்கிறதுல இருந்து பாசத்தைப் பொழியிறப்பவும், நமக்கு தில்லுமுல்லு படத்துல தேங்காய் சீனிவாசனுக்கு வம்படியா மரியாதை கொடுக்கற ரஜினியோட வம்படி மரியாதை ரெஜிஸ்ட்ரேசன் கெஸ்ச்சருக்கு தேங்காய் சீனிவாசன் சொல்ற, என்னது? ஓ இதுவா!ன்னு அந்த மரியாதை கொடுக்கற கெஸ்ச்சர புரிஞ்சுக்கிறாப்ல, நாமளும் என்னது? ஓ இதுவா!ன்னு அந்த நடிப்பை மரியாதை அண்ட் பாசம்னு புரிஞ்சிக்கனும்.
அடுத்ததா ஜெயப்பிரகாஷ்க்கு ஜோடி நிசார். எனக்கு இவங்களைப் பாக்கறப்ப முன்னறியிப்பு படத்துல ஹீரோயினா நடிச்ச அபர்ணா கோபிநாத் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க. அதே மாதிரி டாம் பாய் ஹேர்கட். அதே மாதிரி கண்ணாடி. அப்புறம் தேடிப் போய்ப் பாத்ததுல அன்ஷுல் சவுகான்னு தெரிஞ்சிகிட்டேன். இண்டஸ்ட்ரிக்கே புதுசு போல. வேற எந்தத் தகவலும் இல்ல. இந்த சீரிஸ்ல ரசிக்கிற மாதிரி டீசண்ட் ரொமான்ஸ் டயலாக்ஸோட நல்லா நடிச்சிருந்தாங்க. அடன்னு சொல்லிக்கிற மாதிரி யாரோட நடிப்புமே இதுல இல்ல. எல்லாமே ஒரு இயல்பு நிலையிலயே மெய்ண்டெய்னாகிட்டிருக்கும் வில்லன்களா நடிச்ச அந்த ரெண்டு பேர்த்தைத் தவிர.
அடுத்து சுமன் அண்ட் சாஹில். கொலை செய்யப்படற அந்த இரண்டு சிறுவர்கள். இதுல சாஹில் மட்டும்தான் பத்து வயசுப் பையன். ஆனா சுமன் அரோராவுக்கு பதினாறு வயசு. பொதுவாவே சிறுவர்கள் மீதான வன்முறை சினிமாவுல நடிப்பா வந்தாலும் அது எனக்குப் புடிக்காத விசயம். அதுல இவங்க ரெண்டு பேர்த்துக்கும் நடந்த கொடூரம் ஃப்ளாஸ்பேக்கா கடைசி ஒரு எபிசோட் முக்கால்வாசி அதை மட்டுமே காட்டியிருந்தாங்க. நான் நிறைய ஓட்டி ஓட்டி பாத்தேன். ரெண்டு பேர்த்தையும் நமக்கு கண்ல காட்டி இப்டி ரெண்டு பேர் கதையில இருந்தாங்கன்னு நமக்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டு, அடுத்த எபிசோட்லயே இறந்துட்டாங்கன்னும் அது இப்டித்தான்னு ஒரு எபிசோட் முழுசுக்குமாவும், சீசன் முழுசுக்குமே யாராலன்னும் ரெஜிஸ்டர் பண்ணி மறுபடியும் எனக்கு அஜீரணத்தை ஏற்படுத்திருக்காங்க. உங்களுக்கு சிறுவர்கள் மீதான வன்முறைக் காட்சிகளெல்லாம் ரசிப்பிங்கன்னா நீங்களும் பாக்கலாம்.
மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் மக்களே.
வர்ட்டா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment