Tuesday, June 30, 2026

Vantage Point - கிளாசிக்


Vantage Point

அப்டின்னு 2008ல வெளிவந்த ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரில்லர் படம். இதை நான் பலமுறை ரிலீசானப்பவே பாத்திருந்தாலும், உங்கள்ல பலரும் இதை ஏற்கனவே பாத்திருந்தாலும், இங்க நான் இருக்கற இடத்துல ஒரு பங்களாதேஷ் நண்பர்கிட்ட பர்செப்சனைப் பத்தி பேசிட்டிருந்தப்ப, உதாரணமா வேண்டேஜ் பாய்ண்ட்ங்கற வார்த்தையை உபயோகப்படுத்தறப்ப கடைசில அப்டின்னா என்னன்னு விளக்க முயற்சி செஞ்சு ஹெல்ப்புக்கு இந்தப் படத்தைப் பத்தி சொல்லி அவரும் அதை டவுன்லோட் பண்ணிப் பாத்துட்டு செமயா இருக்கு. இன்னும் இந்த மாதிரி வேற படம் எதாவது இருந்தா சொல்லுங்கன்னு கேக்கறளவுக்கு ஆகிருச்சு. கடைசில இன்னொருவாட்டி நானும் பாக்க ஆர்வம் மேலிட பாத்தேன். இத்தனை வருசங்கள் ஆனப்புறமும் திரும்பத் திரும்பப் பாக்கனும்னு தோனிச்சின்னா, அதுக்குக் காரணம் சிம்பிளா படம் நல்லா இருக்கு அப்டின்னு மட்டும் இல்ல. அது இந்தப் படத்தோட திரைக்கதை அமைப்பும், எடிட்டிங்கும், கதையைச் சொல்லும் முறையும் தான்.

பொதுவா ஒரு த்ரில்லர் படத்தை ஒருவாட்டி பாத்துட்டோம்ன்னா, அடுத்த வாட்டு பாக்குறப்ப சஸ்பென்ஸ் ஆல்ரெடி தெரிஞ்சிட்டதால அதே தாக்கம் இருக்காது.
ஆனா Vantage Point அப்டியில்ல.
இதுல யார் செஞ்சது? அப்டிங்கற கேள்விய விட, அது எப்படி நடந்தது? ங்கற கேள்விக்கு பதில் சொல்றதுல தான் ஃபோகஸ்டா இருந்திருப்பாங்க. ஒரே சம்பவத்த பலரோட பார்வையில காட்டுறப்போ, ஒவ்வொரு முறையும் பார்க்குறப்போ புதுசா ஏதாவது ஒன்னு தெரியும். முதல் முறை பிரசிடெண்ட்டை யார் சுட்டது? ரெண்டாவது முறை அட... இந்த ஆள் முதல் சீன்லயே இருந்தானே மூனாவது முறை இந்த விஷயத்த நான எப்டி மிஸ் பண்ணேன்? அப்டின்னு பல மாதிரியா ஃபீல் பண்ண வைக்கும். இதனாலதான் இந்தப் படம் ஒவ்வொரு ரீவாட்ச்லயும் புது அனுபவம் தருது.

இத்தனைக்கும், படம் சுமார் 90 நிமிசங்கள் தான். ஆனா அந்த 90 நிமிசங்களும், உண்மைல அப்ராக்சிமேட்டா அந்த 25 நிமிசங்கள்ல நடந்த ஒரே சம்பவத்த பல கோணங்கள்ல விவரிக்கிது. ஒவ்வொரு முறை கதை ரீவைண்ட் ஆகும்போதும், முன்ன தெரியாத தகவல்கள் நமக்கு அட ஆமால்லன்னு நமக்கு ஃபீலாகும். அதனால, ஒவ்வொரு ரீவைண்ட்லயும் ஒரு பஸில் பீஸ் சேர்றது போல இருக்கும்.

இந்தப் படத்தோட உண்மையான ஹீரோன்னா அது எடிட்டிங்தான். ஒருவாட்டி நடந்த அதே ஸ்னைப்பர் சாட் அசாசினேசன் தான். ஆனா ஒவ்வொரு முறை பார்க்கறப்பவும் அதோட அர்த்தம் மாறிகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு காட்சிகளை இணைத்த விதம் அற்புதம்.

படம் ஆரம்பிச்சு சில நிமிசங்கள்லயே சம்பவம் நடந்துரும். அதுக்கப்புறம் படம் ஒரு செகண்ட் கூட நிக்கவே நிக்காது. மிஸ்டரி, பொலிட்டிகல் திரில்லர், ஆக்சன், சேஸிங், கான்ஸ்பைரசி எல்லாம் ஒன்னா கலந்து படம் பாக்கற ஆடியன்ச சலிக்காம ஸ்க்ரீன்ல ஃபோகஸ் பண்ண வச்சிருது.

நா யேன் இத திரும்பத் திரும்ப ரீவாட்ச் பண்றேன்? எனக்கு விருமாண்டி, அந்த நாள், சோர்ஸ் கோட், தேஜா வூ, மெமன்டோ, ரன் லோலா, மாநாடு, டிரையாங்கிள், ஹேப்பி டெத் டே இதெல்லாம் பிடிக்கும். அதே மாதிரிதான் இந்தப் படமும். சரி இதெல்லாம் ஏன் பிடிக்கும்? ஏன்னா எனக்கு புதிர் மாதிரி கட்டமைக்கப்பட்ட கதைகள் பிடிக்கும். ஒரே சம்பவத்தை பல கோணங்கள்ல பார்க்குற அனுபவம் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கு. கதைல சின்ன சின்ன டீட்டெய்லிங்ஸ கவனிக்கிற பழக்கம் மேபி எனக்கு இருக்கலாம். அப்புறம் ஒவ்வொரு வாட்டியும் புதுசா ஏதாவது ஆடியன்சை டிடெக்ட் பண்ண வைக்கிற உத்தி உள்ள படங்கள் பிடிக்கும்.

அப்டி இந்தப் படத்தைத் தாண்டி நான் கண்டுபுடிச்சது, இந்தப்படம் முழுசும் ஸ்பெயின் சலமங்கா நகரத்துல நடக்கறதா காட்டிருப்பாங்க.
ஆனா அதெல்லாம் மெக்சிகோல சூட் பண்ணது. ஏன்னா இந்தப் படத்துக்காக அந்த சலமங்காவோட முக்கியமான பிளாஸாவைச் சுத்தி மூனு மாசத்துக்கு மூட அனுமதி கிடைக்காததால, அதே மாதிரி அச்சு அசலா ஒரு செட்டை உருவாக்கி சூட் பண்ணிருக்காங்களாம். அடுத்து அந்த பாம் வெடிக்கிற சீக்வன்ஸ் ரெண்டு. ஆமா ஆனா அது ஒருவாட்டி மட்டுமே வெடிக்க வச்சு பதினஞ்சு ஆங்கிள்ல சூட் பண்ணதுதானாம். படம் பாக்குறப்ப ஒவ்வொரு வாட்டியும் அந்த் சீன் ரீவைண்டாகும் போதும் புதுப்புது ஆங்கிள்ல காட்டிருக்காங்க.

ஒவ்வொருவாட்டி ரீவாட்ச் பண்றப்பவும் நான் புதுசா கண்டுபுடிக்கிற விசயங்கள்ல இந்தவாட்டி ரொம்ப முக்கியமானது என்னோட புத்தி எவ்ளோ மடத்தனமா புவர் மெமரியா இருந்திருக்குங்கறதத் தான். ஏன்னா இந்தவாட்டிதான் அந்த நியூஸ் ஆன்கர் ஆஞ்சியா நடிச்சிருக்கறது ஜோ சல்டானாதான்னு. அடச்சே  இத எப்டி இத்தனவாட்டி மிஸ் பண்ணேன். அவங்க யாருன்னா, அவதார் ஹீரோயினி நேட்ரி. எம்.சி.யுல கமோரா. இதுபோக இப்ப பாத்தப்ப தெரிஞ்சிகிட்ட இன்னொன்னு வெரோனிகாவா நடிச்சிருக்கற அய்லெட் ஜுரர். இவங்கதான் டேர்டெவில் சீரிஸ்ல கிங்பின் ஜோடி. இன்னும் பின்னாடி போனா ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்ல ப்ரொபெசர் ராபர்ட் லேங்டன் ஜோடி. இவங்களக் கண்டுபுடிச்சப்ப கூட இவங்கள எங்கயோ பாத்திருக்கனே அப்டிங்கறத ஃபீல் பண்ணதால. ஆனா ஜோ சல்டானா விசயத்துல கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நேட்ரி ஃபுல்லா ப்ளூ பெய்ண்ட். கமோரா ஃபுல்லா பச்சை பெய்ண்ட். கழுவிட்டு பாத்தாத்தான தெரிஞ்சிருக்கும். இது என் தப்பில்லையே? அப்பாடா ஒரு வழியா சமாளிச்சாச்சு!

இந்தப் படத்தோட கிளைமாக்ஸ் மட்டும் பெரிய விஷயம் இல்ல. அதை அடையிற சேஸிங்தான் பெரிய விஷயம். நல்லா கவனிச்சா புரியும், இதுல பார்ன்ஸ், கென்ட்ட தொரத்திட்டுப் போற சீக்வன்ஸ் ரொம்ப லென்த்தி. ஏன்னா அது முடிஞ்சதென்னமோ கிளைமாக்ஸ்ல. ஆனா ஆரம்பிச்சது எப்பன்னா, ஜஸ்ட் படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துலதான். அப்ப இருந்து தொரத்த ஆரம்பிச்சவன் கிளைமாக்ஸ்ல தான் அவனை ரீச் பண்ணிருப்பான். ஆனா பாருங்க அவன் மொத்தமா எஸ்கேப்பாகிருப்பான் ஆள விடுங்கடா டேய்ன்னு இந்த ஒலகத்த விட்டே.

ஒரே நிகழ்வ எட்டு பேரோட பார்வைல காட்டி, முடிவுல எல்லா துண்டுகளயும் ஒன்னா எணச்சு, முழு உண்மையை காட்டின விதம், ரொம்ப நார்மலா இருக்கு. இருங்க இதையே வேற விதமா சொல்ல ட்ரை பண்றேன். ஒரு சம்பவத்த படம் பாக்கற ஆடியன்ஸ எட்டு வித கோணங்கள்ல நம்மள அணுக வச்சு, ஆடியன்ஸையே டிடெக்ட்டிவ்ஸா ஃபீல் பண்ண வச்ச விதம். ஆங் இப்ப ஓகே!  வித்தியாசமான கோணத்துல ஆடியன்ஸை எங்கேஜ் பண்ண வச்ச விதத்துக்கு இந்தப் படம் இப்பவும் ஒரு மிகப்பெரிய உதாரணம். ஏன் இப்பவும்ன்னா இதுக்கப்புறம் இந்தளவு கதையை பல கோணங்கள்ல ஒரு விசயத்தைச் சொல்லனும்ன்னா அதுக்கு டைம் லூப் கதைதான் எடுக்கறாங்க. இதை யாரும் டச் பண்றதில்ல. அதனால தான் Vantage Point ஒரு முறை மட்டும் பார்க்குற படமல்ல. திரும்பத் திரும்ப எத்தனவாட்டி பார்த்தாலும் சலிக்காத ரேர் த்ரில்லர்கள்ல ஒன்னு. ஒவ்வொரு ரீவாட்சிலயும் நாம கதையை பார்க்கல, திரைக்கதையோட புதுமையையும், அத நாமளே கண்டுபுடிச்ச மாதிரி நம்ம புத்திசாலித்தனத்தையும் ரசிக்கிறோம்.

சரிங்க, அடுத்த பதிவுல மறுபடியும் சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment