அப்டின்னு ஒரு கன்னட டப்பிங் ஆக்சன் திரில்லர் படம். நான் ஈ வில்லன் கிச்சா சுதீப் அண்ட் விஜய் கார்த்திகேயாவோட இந்த வருச இன்ஸ்டால்மெண்ட். ஆமா, போன வருசம் மேக்ஸ்ன்னு கைதி படம் மாதிரியே ஒரு படம் வந்து ஹிட்டாச்சே, அதே ஹீரோ, அதே டைரக்ட்டர் - அதே டெய்லர், அதே வாடகை. வாங்க அது எப்டியெல்லாம் இருக்குன்னு ஒரு கை பாத்துடலாம்.
கதைப்படி, ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல உள்ள சி.எம்ம அவங்களோட மகனே கொன்ன வீடியோதான் கதை. கதையோட மையப்புள்ளி அதான். அத வீடியோ எடுத்தவரோட மகன் அந்த மொபைலோட காணாம போனது அதுக்கடுத்த லேயர். அவனோட சேர்த்து மொத்தம் பதினெட்டு கொழந்தைங்களக் கடத்தின சைக்கோ ருத்ரா அதுக்கு மேல உள்ள லேயர். அந்த ருத்ரா தன்னோட காதலிக்காகத்தான் வீட்டை விட்டு அவளோட ஓடி வந்து டாலர்ல சம்பாரிச்சு தன்னோட அண்ணனுக்கு தானும் ஒரு பெரிய இவன்தான்னு காட்டனும்னு இந்தக் கடத்தலைப் பண்ணது அதோட சேர்ந்த இன்னொரு லேயர். அவனோட அண்ணன், ஒரு பாச வெறி பிடிச்ச, தன் நெனப்புக்கு எதிர் ஏதாவது நடந்தா, அதைத் தனக்கு அசிங்கம்னு நினைக்கிற கொடூர வில்லன் பத்ரா அதுக்கு மேல உள்ள லேயர். பத்ரா பண்ணிட்டிருக்கற கோலப்பொடி யாவாரம் இன்னுமொரு லேயர். அந்தக் கோலப்பொடி யாவார சூப்பர்வைசரா அடுத்த நாள் கல்யாணத்த வச்சுகிட்டு இன்னிக்கி போலீஸ்கிட்ட மாட்டிகிட்ட ரெண்டாயிரங்கோடி சரக்க வெளியே கொண்டு வர அடியாட்கள அனுப்புற ஸ்டீஃபன் ராஜ் அதுக்கு மேல உள்ள இன்னொரு லேயர்.
அடியாட்கள் ஸ்டேசனுக்குள்ளயே வந்து போலீஸயெல்லாம் கட்டுபாட்டுக்குள்ள உக்கார முட்டிப் போட்டு வைக்க, அங்க உள்ள அடியாட்கள்ல ஒருத்தன் சம்பந்தமேயில்லாம மார்க்கைப் பத்திக் கொடுத்த பில்டப் வசனங்கள் கட்டியம் கூற, அப்பேர்ப்பட்ட பெரிய வஸ்தாத் மார்க் யார்றாதுன்னு அவன் முழிக்க, சொல்லி வச்ச மாதிரி மார்க் ஆல்ரெடி அங்கயேதான் உள்ளேன் அய்யான்னு பாட்சா அக்கா கிச்சா சுதீப் அக்கா அஜய் மார்க்கண்டேயன் அக்கா மார்க் அக்கா சஸ்பெண்டட் எஸ்.பி அட்டண்டண்ஸ் போட...
ரொம்ப சுமாரான ஒரு எண்ட்ரி சாங்கோட மார்க் எண்ட்ரி. அப்புறம் ஹீரோ தம்மடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு ஃபைட் சீன். அப்புறம் தம்மடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு ஃபைட் சீன். தம்மடிக்கிறார். ஃபைட் சீன். தம்மடிக்கிறார். ஃபைட் சீன். அப்பப்ப ஒரு சேஞ்சுக்காக, ஃபைட் பண்ணிகிட்டே தம்மடிக்கிறார். அப்புறம் மறுபடியும இன்னொரு சேஞ்சுக்காக, தம்மடிக்கிற கேப்ல ஃபைட் பண்றார்.
இதுக்கெல்லாம் நடுவுல, சி.எம்மைக் கொன்னவன், மார்க்கைக் கொல்ல அடியாட்களை அனுப்புறான். கோலப்பொடியைப் பறிகொடுத்த பத்ராவோட ஆள் ஸ்டீஃபன் ராஜ், மார்க்கைக் கொல்ல அடியாட்களை அனுப்புறான். தம்பி ருத்ராவைக் காப்பாத்த பத்ரா, மார்க்கைக் கொல்ல அடியாட்களை அனுப்புறான். வெய்ட்டீஸ்... இருங்க, இன்னும் மார்க்கைக் கொல்ல இன்னும் யார்லாம் அடியாட்களை அனுப்பிருக்காங்கன்னு அட்டெண்டன்ச பார்த்துட்டு வந்துடறேன்.
ஆமா, இதுக்கெல்லாம் நடுவுல வேற அடியாட்கள அனுப்பலேன்னா, மார்க்கே இவங்க ஏரியாவுக்கெல்லாம் வாண்டடா போய் ஹலோ நேத்து அடிக்க ஆளனுப்புவீங்கன்னு பாத்தேன், ஆளையே காணோம்னு இவரே போய் பந்தாவா அடிச்சிட்டு வருவாரு. இந்த ஃபைட்டுகளுக்கெல்லாம் கேப்ல அப்பப்ப, பதினெட்டு கொழந்தைங்களோட காணாமப் போன அக்கா புள்ள அர்ச்சனாவையும் தேடி, துப்பித் துலக்குவாரு.
ஒரு மாதிரியா டயர்டாகி, ஒரு எடத்துல ஓரமா உக்காந்திருக்கறப்ப, என்ன சார், என்ன ஆச்சுன்னு ஒரு சைடு ரோல் கேரக்ட்டர் கேக்க, மந்தகாசமா சிரிச்சு, ரொம்ப தம்மடிச்சிட்டேன் போல, இனிமே, கம்மி பண்ணனும்னு சோசியல் அவேர்னஸ் கிரியேட் பண்ணிட்டு, அப்புறம் அந்த மந்தகாசத்தைக் கண்டினியூ பண்ணுவாரு. ஆனா, சும்மா சொல்லனும்னெல்லாம் இத நான் சொல்லல. சுதீப் ரொம்பவே சார்மிங்கா தான் இருக்காரு படம் முழுக்கவே. நல்ல ஹைட் வேற. யாரையாவது துணி துவைக்கிற மாதிரி தூக்கிப் போட்டு துவைச்சாலும், அது நம்புற மாதிரிதான் இருக்கும். ஆனா ரெஸ்ட்லிங்ல கூட யாரும் அப்டியெல்லாம் தூக்கிப் போட்டு, பந்தாடிருக்க மாட்டாங்க. அது ரியாலிட்டி சோ. வேற டிபார்ட்மெண்ட்.
மொத்தமா படம் நல்லாருக்கு. உங்களுக்கு மேக்ஸ் பிடிச்சிருந்தா இந்த மார்க்கையும் பிடிக்கும். அடுத்த வருச தவணையா வரப்போற இந்தக் காம்பினேசன்ல என்ன டைட்டில் வப்பாங்கன்னு எதாவது கெஸ் பண்ணா, அத கமெண்ட்ல சொல்லுங்க. மார்வெல் யுனிவர்ஸ் ஸ்டோரிக்கு மாதிரி இதுக்கும் ஸ்பெக்குலேட் பண்ணுவோம். அது படத்த விட செமயா டைம் பாஸாகும்.
அடுத்த பதிவுல சந்திக்கலாம்!
Boss your writing is really good. Enjoyed reading it :).
ReplyDelete