Predator-BADLANDS
அப்டின்னு ஒரு மாஸான குடும்பப்படம். ஆமாங்க. நடிகர்கள்னு பாத்தா, மேல் கீழ் உதடுகள்ல ரெவ்வண்டு பல்லுக மொளச்ச ஒரு ஜந்துதான் ஹீரோ, இடுப்புக்குக் கீழ எல்லாத்தையும் தொலச்சிட்டு, இடுப்புக்கு மேல உள்ள அவையங்கள மட்டுமே வச்சுகிட்டு, கீழ்ப்பகுதிய தேடக்கூட நகர முடியாம தேமேன்னு கெடக்கற ஒரு ரோபோ பொண்ணுதான் ஹீரோயினி. அப்றம் முழுசா முடி கூட மொளைக்காத பளபளான்னு பெப்பெரிய கண்ணுள்ள ஒரு குட்டி ஜந்து தான் சப்போர்ட்டிங் ரோல் இவங்கள வச்சு நடக்கற ஒரு டிராவலிங் ஸ்டோரிதான் இந்தக் குடும்பச் சித்திரம். வாங்க அந்த சித்திரத்த எப்டி வரஞ்சிருக்காங்கன்னு பாத்துடலாம்.
கதப்படி, தன்னோட ரெண்டாவது மகனைக் கவுரவக் கொல பண்ணச் சொல்லி, தன்னோட பெரிய மகன்கிட்ட சொல்லி வுடறான் ஒரு அப்பன்காரன். அச்சச்சோ அமுல்பேபிய அடிக்காதிங்கப்பான்னு சொன்னதும் கோவம் வந்த அப்பன்காரன், என்னயவே எதுத்தாடா பேசறன்னு தலைய வெட்டிக் கொன்னுடறான். அச்சச்சோன்னு நாம வாயப் பொளந்து பாத்துக்கிருப்பறப்ப, அந்த அண்ணன்காரன் சாகும் முன்ன தன்னோட தம்பிய தொட்டில் மாதிரி ஒரு கியூ ஷிப்புல வச்சு வேற ஒரு கிரகத்து பாதுகாப்பா அனுப்ச்சிடறான். அவன் போயி விழுந்த எடம் ஒரு கொடூரமான தாவிர விலங்குகள் உள்ள காடுகள் நெறஞ்ச ஒரு கிரகம். அதாவது எந்த மிருகமோ மனுசனோ கிட்டப் போனா லபக்குன்னு கடிச்சு முழுங்கிரும். இப்ப ஒரு டவுட்டு. அதாவது தாவரங்கள நாம தின்னா அதுக்குப் பேரு சைவம். இப்ப அது நம்மளப் புடிச்சித் தின்னா அதுக்குப் பேரு என்ன? தெரிஞ்சவங்க கமெண்ட் பண்ணுங்க.
இப்ப ஒரு குடும்ப சண்டையப் பாத்தமா? அடுத்து அந்த ரோபோ ஏமி, இவன ஒரு தாவரக்காட்டுல இருந்து காப்பாத்தி வுடுது. அதுக்கு உபகாரமா, இந்தப் பல்லவனும், அவ காலத் தேட, அவள உப்பு மூட்டை தூக்கிட்டு, நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா? காட்டுக்குள்ளே என்னான்னான்னு சொல்ல முடியுமான்னு ரைமிங்கா பாடிக்கிட்டே சுத்துறான்.
அப்ப வழில மேல சொன்ன குணச்சித்திரம் வந்து அடிக்கடி இவங்க வழியில குறுக்கிடுது. கடசீல அந்தப் பல்லவன் வந்தது எதுக்குன்னு பாத்தா, அவங்க வம்சமே அழிக்கனும்னு துடியா கொலவெறியோட தேடி அலைஞ்சிக்கிருக்க ஒரு பெரிய சைஸ் முள்ளம்பன்னி. அத ஒரு கோதால ஒட்டே அடியில ரெண்டா பொளந்துடறான் பல்லவன். ஆனா அங்கதான் ஒரு டுஸ்ட்டு. பல்லிக்கு வால் திரும்பவும் மொளச்சிக்கற மாதிரி மறுக்காவும் குயிக்காவும் அது ஒட்டிக்கிது. நமக்கெல்லாம் ஏ இங்க பார்றா ஜவ்வு மாதிரி என்னமோ திரும்பவும் வந்து ஒட்டிக்கிதுன்னு தான் தோனுது. ஆனா கிராஃபிக்ஸ் எல்லாம் நல்லாத்தான் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.
அடுத்து இன்னொரு ஃபேமிலி. அதாவது அந்த ரோபோ பொண்ணுக்கு, ஒரு சகோரதரி இருக்கா. அதுவும் ஒரு ரோபோதான். இவங்க ரெண்டு பேர்த்தையும் ஒரு கம்பெனி ஹயர் பண்ணி, அங்க உள்ள விசித்திர ஜந்துக்களோட சாம்பிள்ஸ் எடுத்துட்டு வர்ற வேலையில இருக்காங்க. இதுல அக்கா செத்துட்டான்னு தங்கச்சியும், தங்கச்சி செத்துட்டான்னு அக்காளும் நெனச்சுகிட்டு பிரிஞ்சிடறாங்க. ரோபோவா இருந்தாலும் அது பொண்ணாருந்தா அழுவாச்சி சீன் வச்சே ஆவனும். ஆ!
அடுத்ததா ஒரு ஃபேமிலி. அது ஒரு எச்சப்பய குடும்பம். அதுதான் கதையில மிகப்பெரிய டுஸ்ட்டே. இப்பவே நான் இந்தப் படத்தப் பத்தி லேட்டா எழுதறதால கோச்சுக்கிடாதிங்க. இப்பதான் டீம் லீடருக்குத் தெரியாம டைப் பண்ண வாய்ப்பு கெடச்சது. மத்தபடி இந்தப் படத்தப் பாத்ததும் இன்னிக்கிதான்.
இந்தப்படத்தப் பத்தி சொல்லனும்ன்னா, கடைசிவரைக்கும் ஒரு மனுசப்பயலுகளும் இல்லாத ஒரு படம்னு இத சொல்லிக்கலாம். மத்தபடி பாக்கறதெல்லாம் மனுசங்கதான். பாத்தவங்க மறுபடியும் ஒருக்கா பாருங்க. பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க.
வர்ட்டா!
No comments:
Post a Comment