பரதநாட்யம்
அப்டினு ஒரு காமெடி ஃபேமிலி டிராமா. மலையாளப் படங்கறதால நடிகர்கள விட்ருவோம். நேரா விஷயத்துக்கு வருவோம். இது ஒரு சீக்வலோட முதல் பாகம். இதை நான் எப்டி பாத்தேன்னா முதல்ல ரெண்டாவது பாகத்த பாத்துட்டு அப்புறம் தான் முதல் பாகத்தைப் பாத்தேன். அதனால அந்த வகையிலேயே வரிசையிலேயே பதிவையும் கொண்டு போயிறலாம் வாங்க. சோ முதல்ல...
மோகினியாட்டம்
கதைப்படி சசியோட குடும்பமே மொத்தமா சேர்ந்து கோவிந்தராஜனைக் கொன்னுடுது. சம்பவம் நடந்த சமயத்துல சசி வீட்டுல இல்ல. ஆனா வந்த பின்னாடி பொறுப்பா ஒரு கேப்ட்டனா இருந்து தலைமை தாங்கி, தன் குடும்பமே சேர்ந்து செஞ்ச கொலையை மறைக்க படாத பாடு படறாரு. அதேதான் அப்டியே திருஷ்யம் கதைக்கு ஸ்பூஃப் பண்ணா எப்படியிருக்குமோ அதான் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம். கூட குடும்பத்தைக் கொஞ்சம் பெரிய கூட்டுக் குடும்பமா காட்டிருக்கறது தான் இதுல மிகப்பெரிய சவாலே. அது நல்லாவும் இருக்கு.
இதுல சசியோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டிகள் வேற. அதுவும் முதல் மனைவியோட மகன் தான் சசி அண்ட் கோ. இவங்களுக்குத் தெரியாம சேர்த்தலையில இந்தக் குடும்பத்தை மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டே ஸ்ரீகண்டபுரத்துல இன்னொரு குடும்பத்தை மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருந்திருப்பாரு. இவர் சாகற நிலைமையில தான் இந்த உண்மையே சேர்த்தலை குடும்பத்துக்கு தெரிய வரும். அது ஒரு தனிக்கதை. அதுதான் பரதநாட்டியம் முதல் பாகம். ஆனா இந்தப் படம் மோகினியாட்டம் முழுக்க முழுக்க திரில்லர் தீம். அது எப்டின்னா,
ஊரே பயந்து நடுங்குற, அதாவது அய்யயோ இவனா, இவன் எப்படியாவது பேசியே நம்மள ஏமாத்திருவான்னு பயந்துகிட்டிருக்கற ஒருத்தன் தான் கோவிந்தராஜன். ஊருக்குள்ள எல்லார்கிட்டயும், நம்ப வச்சு பணத்தை வாங்கி வேலை நடக்கற மாதிரி பாவலா காட்டி ஒண்ணுமே பண்ணாம லட்ச லட்சமா சாம்பாதிக்கிற ஆளு. அதாவது ஸ்கேம் பண்ணிக்கிருக்கறவரு. அப்டி சசி ஃபேமிலிய ஸ்கேம் பண்ண ட்ரை பண்ணப்ப கோவத்துல குடும்பமே சேர்ந்து கோ. ரா. வை கோழி அமுக்குற மாதிரி அமுக்கி, கோழி தலையை திருப்புற மாதிரி திருப்பி கொன்னுடுது. இனி சசி தான் ஜார்ஜ் குட்டி. ஜார்ஜ் குட்டி தான் சசி. திருஷ்யத்தையே காமெடியா எடுத்தா எப்படியெல்லாம் இருக்குமோ அப்டியே எடுத்திருக்காங்க.
சும்மா சொல்லக்கூடாது. மழையாளிகளுக்குன்னு ஒரு நேட்டிவிட்டி இருக்கு. அதோட சேர்த்து கதையையும் சொல்லும்போது அதுக்கு வேற ஒரு பரிமாணத்துல பிரகாசிக்கும். அதுதான் எல்லா மலையாளப் படங்களும் நம்மை வசீகரிக்கறதுக்குக் காரணம். இதுல கோவிந்தராஜனா நடிச்சிருக்கறது சூராஜ். முதல் கால்வாசிப் படம் வரைக்கும் தான் உயிரோட. அதுக்கப்புறம் பொணமா முக்கால்வாசிப் படத்துல நடிச்சிருக்காரு. அதுலயும் சில காட்சிகள்ல பொணம் சரிஞ்சு பக்கத்துல உள்ள டேபிள்ல தலை போய் டொம்ன்னு அடிக்கும். அந்த சீன்ஸ் எல்லாம் நிச்சயம் வலிய தாங்கிகிட்டு தான் மனுசன் நடிச்சிருப்பார்னு நினைக்கிறேன்.
அதே போல முதல் பாகத்துல படுத்துக்கிட்டேவும் உக்காந்துகிட்டவும் நடிச்சிருக்காரு சசியோட அப்பா. அதுல அவர் படுத்துக்கிட்டே வெளிய நடக்குற சாம்பாசணைகளுக்கு கொடுக்குற ரியாக்சன்ஸ் எல்லாம் காமெடி உச்சம். அதுவும் மொத்த பொண்டாட்டி சேர்த்தலையில உயிரோட இருக்கும் போதே அவளுக்கு மைண்ட் சரியில்லைன்னு பேப்பர்ல ரெண்டாவது கல்யாணத்துக்கு விளம்பரம் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிய வர்றப்ப கொடுக்குற ரியாக்சன்ஸ் எல்லாம் வேற லெவல்.
அதுலயும் முதல் மனைவியோட குடும்பம் ரெண்டாவது மனைவியோட குடும்பத்தை தன் வீட்டுலயே மறைச்சு வச்சுக்கிட்டு வெளிய தெரியாம இருக்க படுற பாடெல்லாம்னு சொல்றத விட, முதல் மனைவின்னு வெளிய நிரூபிக்க எந்த சாட்சியும் இல்லன்னும் ரெண்டாவது மனைவி மட்டுமே அவரோட ஒரே மனைவின்னு நிரூபிக்க மட்டுமே ஆதாரங்கள் இருக்குன்னு தெரிய வர்றப்ப. மொத்த குடும்பமும் சொத்துக்கள அவங்க கையில விட்டுடக் கூடாதுன்னு தவிக்கிறதெல்லாம் கதையோட முக்கிய ஹைலைட் காட்சிகள். இதுல மொத மனைவிக்கும் ரெண்டாவது மனைவிக்கும் பொறந்த பசங்க ரெண்டு பேர் ஒரே மாதிரி இருக்க அதுல ஒருத்தனை கடைசி வரைக்கும் மறைச்சே வைக்க போராடுறதெல்லாம் பயன்கக்கற வெடிச்சிரிப்பு வகைகள்.
இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில கொலை வேற. அதையும் எதிர்த்த வீட்டுக்காரன் கண்டுபுடிச்சிருவான். அதை அவன்கிட்ட இருந்து மறைக்க இவங்க ரெண்டு குடும்பமும் ஒன்னா சேர்ந்து போராட, பொணத்தை மறைக்கப் போராட, ஒரே மாதிரி உள்ள தம்பிங்கள மறைக்கப் போராட, பொணத்தை டிஸ்போஸ் பண்ணப் போராட, ஒரே ஃபன்னு தான் போங்க.
முதல் பாக்காம யூடியூப்லயே இருக்கு, ஆனா சப்டைட்டில் இல்லை. எனக்கு மலையாளத்துக்கு சப்டைட்டில் தேவையில்லைங்கறதால அப்டியே பாத்தேன். உங்களுக்கும் புரியும் அவ்ளோ கஷ்டமெல்லாம் இல்லங்க மலையாளம். அதேபோல ரெண்டாவது பாகம் மோகினியாட்டம் நெட்பிளிக்ஸ்ல இருக்கு. பாருங்க. குடும்பத்தோட பாக்கலாம். அப்புறம் இன்னொரு விசயம் இப்போதான் நியாபகத்துக்கு வந்தது. ரெண்டு பார்ட்லயும் சசிக்கு ஜோடியே இல்ல. அதாவது ஹிரோயினே இல்லன்னு சொல்ல வந்தேன். ஒருவேள தேர்டு பார்ட்ல வரலாம். ஏன் தேர்டு பார்ட் வருமான்னு தெரியல. ஆனா வந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்.
வர்ட்டா!
No comments:
Post a Comment