ம்ருத்யுஞ்ஜெய்
அப்டின்னு ஒரு தெலுங்கு டப்பிங் க்ரைம் திரில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா ரேபா மோனிகா ஜான், வேட்டைக்காரன் வில்லன் ஐயப்பா சர்மா, லட்சுமி பொண்ணு ஐஸ்வர்யா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வில்லன் அனீஸ் குருவில்லா இவங்களைத் தவிர வில்லனா நடிச்ச வீர் ஆர்யன் அண்ட் ஹீரோ ஸ்ரீ விஷ்ணுவைக் கூட தெரியாது. சரி வாங்க இந்தப் படத்தைப் பார்த்த அனுபவம் எப்படியிருந்ததுன்னு பார்க்கலாம்.
கதைப்படி ஜெய் ஒரு நியூஸ் பேப்பர்ல ஓபிச்சுவரி காலத்துக்கு ஆள் புடிக்கிற வேலை பாக்குறவரு. என்னடா டிசைன் டிசைனா வேலை பாக்கறீங்க? அதாவது செத்தவங்க வீட்டு டெத்துக்கு போயி அதுவும் அவங்க என்ன ஆளுங்களோ அதே போலாம் கேட்டப்ல போயி அவங்களைப் பத்தி தகவல்கள சேகரிச்சு, அங்க டெத்துக்கு வந்தவங்ககிட்ட இவர் ஒரு ஸ்பீச் கொடுப்பாரு பாருங்க, இவர் எனக்கு ரொம்ப கால நண்பர், நாங்க இந்த எடத்துல தான் சந்திச்சுக்கிட்டோம். இவர் இறந்த நீயுஸே எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும் இன்னும் இது மாதிரி எத்தன நண்பர்களுக்கு தெரியுமோ தெரியாம இருக்கோ, பாவம் அவங்க எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னா இவர் இறந்த தகவலை நியூஸ் பேப்பர்ல விளம்பரப் படுத்தலாம்னு சொல்லி எல்லார் முன்னாடியும் இவர் ஒரு ஐநூறு ரூவாய எடுத்து எல்லார் முன்னாடியும் வப்பாரு. அப்ப அங்க உள்ள பலரும் தன்னோட பங்குன்னு ஒரு அமௌன்ட்ட எடுத்து அதுக்கு கூட வப்பாங்க. இப்டி மாசம் 1000 + நியூஸ்க்கு அமௌன்ட் கொண்டு வந்து தர்றவறு இவரு.
ஆனா பாருங்க இவருக்கு கிரைம் ரிப்போர்ட்டரா வேலை பாக்கணும்ங்கறது தான் குறிக்கோள். ஆனா இவர அந்த டிபார்ட்மென்ட்ல போட்டா இந்த இன்கம் போயிடும்னு ஓபிச்சுவரி நியூஸ்லயே வச்சிருப்பாங்க. அப்படி உள்ள ஹீரோ ஜெய் எப்டி கிரைம்க்குள்ள வந்தாருன்னு தான் மீதிக்கதை.
இப்ப கதைக்குள்ள உள்ள இன்னொரு கதை. கதையில ஆரம்பத்துல இருந்தே சாவுகளை பாத்துகிட்டே தான் இருப்போம் ஹீரோவோட வேலையினால. அதுல சில சாவுல சந்தேகம் வருது. அது ஆக்சிடென்ட்டா இல்ல கொலையான்னு. இந்த டவுட்டு ஹிரோவுக்கே வருது. அதை போலீஸ்கிட்ட சொல்ல ட்ரை பன்றாரு. ஆனா அவங்க நம்ப மறுக்கறாங்க. இந்த சூழ்நிலையில கொலைகாரனோட பேட்டர்ன ஹீரோ கண்டுபுடிக்க, கதை டாப் கியர் போட்டு தனி ஒருவன் மாதிரி ஹீரோ வில்லன் மோதல்ல போகுது. ஏன் தனி ஒருவனை மென்சன் பன்னேன்னா, அது படத்தைப் பாத்தா புரியும். ஆனா அந்தப் படத்துக்கும் இதுக்கும் ஒரு சில விஷயங்களைத் தவிர எதுவும் சம்பந்தமில்லை. அது எப்டி அவ்ளோ பரபரப்பான திரைக்கதையோ அதே போல தான் இதுவும்.
இதுல ஹீரோ வில்லன் கதை. ஹிரோயின் அப்டின்னு ஒரு பொண்ணு உண்டு ஆனா ஹிரோவுக்கு ஜோடியில்லை. அதுவும் இருக்கும் அவ்ளோதான். ஆனா மத்தபடி ஹீரோ வில்லனை கண்டுபிடிக்க தடையா அடிக்கடி வந்து தடை போடுவாங்க வேணும்ன்னா. அவ்ளோதான் ஹிரோவுக்கும் ஹிரோயினுக்கும் உள்ள தொடர்பு. இந்தப் பொண்ண வீட்டுக்குள்ள இருந்து வெளிய வாம்மான்னு கூட்டுட்டிட்டு வந்துருக்கவே வேணாம் பிகிலே. வேற யாருமில்ல, அதே ரெபா மோனிகா ஜான் தான் அந்த ஹிரோயின். ஆனா ஹீரோ கூட உள்ள காமெடியன்ஸ் கூட அதாவது அவரோட நண்பர்கள் கூட கடைசி வரைக்கும் ஹீரோ வில்லனைக் கண்டுபுடிக்க ரொம்பவே ஹெல்ப் பன்றாங்க. இதுல ஹிரோயின் காதப்பாத்திரத்தைத் தவிர எல்லா காதப்பாத்திரமும் நல்லாவே எழுதிருக்காங்க வில்லன் உள்பட.
எனக்கு உண்மையிலேயே இந்தப் படம் ரொம்பப் புடிச்சது. நீங்களும் பாருங்க. உங்களுக்கும் புடிக்கும். அடுத்து ஒரு படத்தோட உங்களை சந்திக்கிறேன்.
வர்ட்டா!
No comments:
Post a Comment