Cheekatilo
அப்டின்னு ஒரு தெலுங்கு டப்பிங் ப்ளஸ் சீரியல் கில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா கோழி கூவுது ஆம்னியும், சுரேஷும், சோபிதா துலிபலாவும் தான். மத்த சிலரை பாத்தா மாதிரி இருக்கும் ஆனா எங்கன்னு தெரியாது. சத்தியமா. சரி இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாத்துடலாம் வாங்க.
கதைப்படி சந்தியா ஒரு க்ரைம் ரிப்போர்ட் நிகழ்ச்சியில செய்தி வாசிக்கிறவங்க. ஆனா அவங்களுக்கு உண்மைக்கு புறம்பா செய்தி வாசிக்கிறதுல இஷ்டமில்ல. அதனால அந்த வேலைய ரிசைன் பண்ணிட்டு ஒரு பாட்காஸ்ட் ஆரம்பிக்கிறாங்க. அப்ப அந்த ஐடியாவ கொடுத்த கூட வேலை பாத்துகிட்டிருந்த பாபிங்கற பொண்ணு கொடூரமான முறையில தன்னோட காதலனோட செத்துக் கெடக்குது. அது எப்டிங்கற டீடெயில்ஸ் தான் ரொம்ப ஒரு மாதிரி ஃபீல் கொடுத்துடுது சந்தியாவுக்கு.
அதாவது அவளோட காதலன் வாயில ஒரு பெல்ட்டோட உள்ள பால் மாதிரி ஒரு சமாச்சாரத்த வச்சு அடச்சி ரத்தக் கிளறியா செத்துக் கெடக்க, பாபி அவனுக்குப் பக்கத்துல ஒரு கேமிசோலோட உடல் முழுக்க ரத்தக் காயங்களோட ரேப் செய்யப்பட்டும் கழுத்தறுபட்டும் ஹால்ல செத்துக் கெடக்குது. இதுக்கு மேல கேள்விப் பொருள் என்னன்னா உள்ள அவங்க பெட்ரும்ல போயி பாத்தா எல்லாமே பி.டி.எஸ்.எம் அய்ட்டங்களா கெடக்க, இந்த விஷயம் எல்லா மீடியாக்கள்லயும் கேள்விப் பொருளாவும் கேலிப் பொருளாவும் மாறிடுது.
அதுக்கப்புறம் முழு வீச்சுல போட்காஸ்ட் பண்ண இறங்குறாங்க சந்தியா. இது காவல்துறைக்கு மிகப்பெரிய தலைவலிய உண்டு பண்ணுது. முப்பது செகண்ட் ஃபேம்க்காக என்ன வேணாலும் பேசலாம். ஆனா கடைசில கேசை சால்வ் பண்ணப்போறது போலீஸ் தான்னு பேட்டி கொடுக்குது போலீஸ். அதுக்கப்புறம் எப்டி இந்தக் கேஸ் சால்வ் ஆச்சுங்கறது தான் மீதிக்கதை.
ஒவ்வொரு ரேப்புலயும் கொலைகாரன் ஒரு சிக்னச்சர விட்டுட்டு போவான். ரேப் பண்ணப்புறம், கொல்றதுக்கு டைம் இருந்தா கொல்லுவான். இல்லன்னா ஒரு மொழம் மல்லியப்பூவயும், ஒரு சலங்கை மணியையும் அவங்க தலையில வச்சிட்டுப் போயிடுவான். கொன்னாலும் அதான். கொல்லலைன்னாலும் அதான்.
இத நூல் புடிச்சிகிட்டே ரொம்ப பின்னாடி போனா எக்கச்சக்க ரேப்புகள். ஒரு நேசத்த இங்க பதிவு பண்ணியே ஆகணும். இந்த சீன்களெல்லாம் நமக்கு போர் தொழில நியாகப்படுத்துது. அதுக்கப்புறம் நமக்கும் கதை மேல ஒரு நம்பிக்கை வந்துடுது. படமும் புடிக்க ஆரம்பிச்சிடுது.
அங்கிருந்து கடைசி வரைக்கும் யாரந்த சைக்கொன்னு கிளைமாக்ஸ் வரைக்குமே நம்மள யூகிக்க விடாம படத்த கொண்டு போனதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். ஆனா சைக்கோ ஃபிளாஷ்பேக் மட்டும் சிவப்பு ரோஜாக்கள நியாபகப்படுத்த தவறல. அதுவும் பெருசா துறுத்திக்கிட்டு தெரியலங்கறது ஒரு மிகப்பெரிய ஆறுதல்.
படத்துல ஆரம்பத்துல இருந்தே நமக்கு ஒரு விஷயம் தோனிக்கிட்டே இருக்கும். ஆமா இவ ஏன் வேலைய விட்டா? ஓ ஓகே உண்மைக்கு புறம்பா நியூஸ் படிக்க இஷ்ட்டமில்ல, கரெக்ட்டுதான். ஆமா இவ ஏன் பாட்காஸ்ட் ஆரம்பிக்கிறா? ஆமால்ல, பாபி தானே ஐடியா குடுத்தா, தவற அவ செத்தும் போயிட்டா. சரிதான் அப்டின்னு ஒவ்வொரு சீனுக்குமான ரீசனும் பர்ப்பஸும் கன்வின்சிங்கா இருக்கும். அதேதான் கிளைமாக்ஸ் வரைக்கும். ஆமா இவன் ஏன் இவள கொல்லுறான்? இவன் ஏன் இவள கொல்லாம விட்டான்? சரி இவ்வளவு காலமா ஏன் கேப் விட்டான்? அப்டின்னு எல்லாம் கன்வின்சிங்கா கொண்டு போனது செம.
அதனால படம் செமயா இருக்கு, தாராளமா பாக்கலாம்.
No comments:
Post a Comment