Faces
அப்டின்னு ஒரு மலையாள சைக்கலாஜிக்கல் கொழப்பலாஜிக்கல் திரில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா அன்னா ரெஜி கோஷி நடிச்சது. ஹீரோவா நடிச்சவர் யார்னு தெரியல. அவர எங்கயோ அண்ணன் தம்பி, அமெரிக்க மாப்பிள்ளை கேர்க்ட்டர்ல பாத்த ஞாபகம். அன்னா ரெஜி கோஷிய ஒரு ஜீத்து ஜோசப் படத்துல பாத்ததுல இருந்தே ஃபாலோ பண்றேன். புடிக்கும். அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல, ப்ரவுன் கலர்ல ஹீரோயின் இருந்தாலே மனசுக்குப் புடிக்க ஆரம்பிச்சிடுது. இந்த ப்ரவுனிகள் லிஸ்ட் நமக்கு கொஞ்சம் நீளம். ஆனா படத்த சைக்கலாஜிக்கல் திரில்லர்ங்கற பேர்ல என்னத்தையோ சுட்டு வச்சிருக்கானுக. அதப் பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி ஒரு சின்ன தீ விபத்து வீட்டுல. அதுல நித்யாவுக்கு மண்டையில அடிபட்டுடுது. ஃபயர் ஆக்சிசெண்ட்டான மண்டையில மட்டுந்தானா அடிபடும். சரி மேல போவோம். நித்யா நாலு நாள் கோமால இருந்து நினைவு திரும்புது. அப்ப நார்மல் தான். ஆனா அங்க வந்த ஒரு ஆணைப் பாத்ததும் மைக்கெல்... மைக்கெல்... வந்துட்டியான்னு அவன் கையைப் புடிச்சிப் பாசத்தைப் பொழியிறாங்க. அதுக்கு அங்கிருந்த டாக்டரம்மா நர்ஸம்மா எல்லாரும் ஷாக்காகி, நித்யா அது மைக்கெல் இல்ல. கம்பவுண்டர் அலெகஸ்ங்கறாங்க. சொன்னதோட மட்டுமில்லாம, நித்யாகிட்ட இருந்து அலெக்ஸை பிரிச்சு விட்றாங்க. அந்தளவுக்கு மைக்கெலை எதிர்பார்த்துகிட்டிருந்திருக்கறாங்க நித்யா. ஆனா அவன் தான் மைக்கெலே இல்லியே, அலெக்ஸாச்சே. அப்றமும் ஏன் அவனை மைக்கெல்னு சொல்றாங்கன்னு அங்கிருந்த நித்யா உட்பட யாருக்குமே புரியறதில்ல. அடுத்து ரெண்டு வார்டு பாய்ஸ் வர்றாங்க. அவங்க ரெண்டு பேரும் பார்க்க முதல்ல வந்த மைக்கெல் என்றழைக்கப்பட்ட அலெக்ஸ் மாதிரியே இருக்காங்க. இப்பவும் நித்யா அவங்க ரெண்டு பேர்த்தையும் காட்டி மைக்கெல்ன்னு சொல்றாங்க.
அப்பதான் டாக்டருக்கும் படம் பாத்துகிட்டிருக்கற நமக்கும் புரிய வருது. அதாவது மண்டையில அடிபட்டதால நித்யாவுக்கு எந்த ஆணைப் பாத்தாலும் அது மைக்கெல் மாதிரியே தெரியிது. நித்யாவுக்கு மட்டுமல்ல. படம் பாக்கற நமக்கும் தான். ஏன்னா எல்லாமே சிஜியில மைக்கெல்லோட முகம் உடல் தான் நமக்கும் காட்றாங்க. ஆக மொத்தப் படமும் நித்யாவோட பர்செப்சன்ல தான்ங்கறது நமக்குப் புரிய வருது. அந்த மைக்கெல் எங்கன்னு யாருக்கும் தெரியல. அஃப்கோர்ஸ் நித்யாவுக்கும் தான். அவளுக்கு மைக்கெல் எங்கன்னு மட்டுமில்ல. ஆக்சிடெண்ட் எப்டி ஆச்சு, எதனால ஆச்சுன்னு அந்த விபத்தும் அதுக்கு முன்னாடி சில நாட்களும் சுத்தமா ஞாபகத்துல இல்ல. அந்த மெமரி ஃபைல் மண்டையில கரப்ட்டாகிடுச்சு.
அவ்ளோதான் அப்ப இருந்து நமக்கு நித்யாவுக்கும் மைக்கெலுக்குமான காட்சிகள் எல்லாம, நித்யா மெமரில இருந்து நினைச்சுப் பாக்கறாங்க. அது ஒரு சில இடங்களுக்குப் போகுறப்ப, சில விசயங்களைகப் பாக்குறப்பன்னு அப்பப்ப நினைவுகள் மீட்கப் படுது. அதுல மைக்கெல்ங்கறவன் ஒரு ஓவியன். நித்யாவுக்கு ஓவியம் தீட்டுறதுன்னா சின்ன வயசுல புடிச்ச விசயம். ஆனா அதைச் சொல்லிக்கக் கூட முடியாதளவுக்கு அவங்கப்பாவோட கோபத்தால அது பிஞ்சுலயே நசுக்கப்பட்ட ஆர்வம். அது மைக்கெல் மூலமா மறுபடியும் துளிர்விட அது நட்பா வளருது. நாளடைவுல ஓவியமும் ஓவியனும் ஒரே புள்ளியில அவளோட ஓவிய ஆசையில தெரிய அது காதலா மலருது. அதெல்லாமே நல்ல எபிசோடா நமக்குக் காட்டப்படுது. அதாவது நல்ல மெமரீஸ். சரி இத்தனைக்கும் அவங்க சந்தோசமாத்தானே இருந்தாங்க. அப்படின்னா இந்த மைக்கெல் இப்ப எங்க போனான்? அது உண்மையில விபத்து தற்செயலா இல்ல சதியா? மைக்கெல் உண்மையில இருக்கானா, இல்லையா? இல்ல நித்யாவே அவனைக் கொன்னுட்டான்னு வச்சுகிட்டாலும் அவன் பாடி எங்க? அப்டியெல்லாம் கைக்குக் கிடைக்காதளவுக்கு பாடிய டிஸ்போஸ் பண்ண நித்யா என்ன ஜார்ஜ் குட்டியா?
எங்க போன ராசான்னு நாமளும் நித்யாவோட சேர்ந்துகிட்டு ஒரு கன்ஃயூசன் ஸ்டேட்லயே இருக்கோம். இல்லேல்ல, கேரளா ஸ்டேட் இல்ல. இப்ப நித்யாவோட ஸ்டேட்டஸ் என்ன? கன்ஃப்யூஸ்டு ஸ்டேட் தானே! அப்டித்தான் நித்யாவையும், படம் முடியிற வரைக்கும் ஆடியன்சையும் ட்ரீட் பண்ணி வச்சிருக்காய்ங்க. இதுல படம் முடியிற வரைக்கும் வர்ற ஆண்கள் யாரா இருந்தாலும், அது நித்யாவோட அப்பாவாவே இருந்தாலும், அது நித்யாவோட பார்வையில தான் ஆடியன்ஸுக்கும் மைக்கெலா காட்டப்படுது. இதனால பல குழப்பங்கள். இதனாலேயே நித்யாவால சகஜமா சோஸியலைஸ்டா வாழ முடியறதில்ல. நமக்கும் ஒரு மாதிரியாத்தான் ஃபீலாகுது. இருந்தாலும் நம்ம ஃபுல் ஃபோகஸ் நித்யா மேல தான்ங்கறதால, பொறுத்துகிட்டேன் முழுப்படத்தையும்.
சில விசயங்கள் கதைக்குத் தேவையாவே இருந்தாலுமே, அது படத்துலயோ, நாவல்லயோ வர்றப்ப நம்மளால அதை ஏத்துக்க முடியறதில்ல அது நோலனோட சினிமாவாவே இருந்தாலும். நோலன், ஆமிர் கான், அப்புறம் இந்தப் படம்னு பல இடங்கள்லயும் ட்விஸ்ட்டுக்காக உருவ ஒற்றுமைய வச்சு கதையை நகர்த்தறதும், அந்த உருவ ஒற்றுமையை நம்பி மொத்தக் கதைக்குமான சின்னச் சின்ன ட்விஸ்ட்களை வச்சு ஒப்பேத்துறதும் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைச்சுப் பார்த்துடும். மீச வச்சா இந்திரன். மீச இல்லன்னா சந்திரன்னு இந்த கன்வீனியண்ட் ட்விஸ்ட் விசயத்தை எண்பதுகள்லயே பாலச்சந்தர் ஓட்டிருப்பாரு. ஆனா பாருங்க, இதுல பாக்கற எல்லாருமே மைக்கெல் மாதிரி தான் நித்யாவுக்குத் தெரியும். இப்பப் பாருங்க, இத வச்சு கதையை ஒப்பேத்தறது டைரக்ட்டர்ஸ்க்கு எவ்ளோ கன்வீனியண்டாவும், படம் பாக்கற நமக்கு எவ்வளவு கன்ஃப்யூஸ்டாவும் இருக்கும்னு.
உங்களுக்கு இந்த நெருடலெல்லாம் சுத்தமா ஒன்னுமே பண்ணாதுங்கற எண்ணமிருந்தா நிச்சயமா நீங்க பாக்கலாம் இந்த முகங்களை. மத்தபடி நான் அமேஸிங்காவெல்லாம் ஒன்னும் ஆகல. சரி பாக்க ஆரம்பிச்சிட்டோம்னும், அன்னா ரெஜி கோஷி வேற இருக்காங்கன்னும் பாத்து முடிச்ச படம். அவ்வளவு தான் படம் பார்த்த கதை. அவ்ளோ வொர்த் இல்ல. பாக்கலாம் அன்னா ரெஜி கோஷியோட நடிப்புக்காக. மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்.
வர்ட்டா!
No comments:
Post a Comment