Tere Ishk Mein
அப்டின்னு ஒரு தனுஷ் நடிச்ச இந்திப்படம். க்ரிதி சனோன், பிரகாஷ் ராஜ் நடிச்சது. வேற யாரையும் உண்மைலயே தெரியாது. படம் பாக்க ஆரம்பிச்சதுல இருந்தே, ராஞ்சானா வைப்லயே தான் இருந்தேன். அந்த லொக்கேசனெல்லாம் வேற டிட்டோவா இருந்ததும் ஒரு காரணம். அதே ஆனந்த்.எல்.ராய், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் காம்பினேசன். அது எப்டி இருந்தது அப்டின்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி, காதல் - அது எப்டி சங்கருக்கு முக்தி மேல வருதுன்னு ஒரு ஆக்ட். அது ஃபுல்லா தனுஷ்க்குன்னு சில அடிப்படை குணாதிசயங்கள ஆடியன்ஸ்க்கு ரெஜிஸ்ட்டர் பண்ற மாதிரி சில ஆத்திரக்கார காட்சி வடிவமைப்புக்கள். அது அவ்ளோ ஒட்டல. அவர் ஏன் அடிக்கிறார். ஏன் எதிர்ல உள்ளவங்க அடி வாங்கறாங்கன்னு எதுவும் புரியல. எதுக்கு இப்டி ஒரு கதாபாத்திர வடிவமைப்புன்னு பாத்தா, க்ரிதியோட கேரக்டர் என்னன்னு பாத்தா, இந்த மாதிரி கோவக்காரப் பசங்களப் பத்தி தீசிஸ் பண்ற கேரக்ட்டர். அதுக்காக ஒரு தடாலடி என்ட்ரி. அதுல இருந்து, முக்தியோட மொத்த கவனமும், சங்கர் மேல குவியிது. சங்கர் எதிர்பார்க்கறது என்னன்னா, எங்களயெல்லாம் எந்தப் பொண்ணு பாக்கும்னு ஒரு எகத்தாளக் கேள்விக்காக, அவன் கூடவே சுத்த ஆரம்பிக்கிறா முக்தி. அங்க இருந்து அடுத்த ஆக்ட் ஆரம்பிக்கிது. அதான் காதல் வந்திருச்சே சங்கருக்கு, முக்தி மேல.
இதத்தான் ஃபர்ஸ்ட் ஆக்ட் ஃபுல்லா சுட்டு வச்சிருந்தாங்க. அதைத் தாங்கிக்கிட்டா அடுத்த ஆக்ட் உண்மையிலயே ஒரு எமோசனல் ரோலோகோஸ்ட்டருக்கு கொண்டு போகும் நம்மள. நானெல்லாம் ரொம்ப வீக் ஹார்ட்டட்ங்கறதால தனுஷ்க்கு அவ்ளோ வலிச்சிருக்குமான்னெல்லாம் தெரியல. ஆனா எனக்கு ரொம்பவே வலிச்சது. உண்மையில இண்டர்வெல்க்கு மேல என்னால படத்தைப் பாக்க முடியல. தைரியம் வரல. ரெண்டு நாள் வேற எந்தப் படத்தையும் பாக்க மனசும் வரல. மைண்ட் ஃபுல்லா அந்த வேதனைதான் ஓடிகிட்டிருந்தது.
தன்னோட அப்பாகிட்ட இது விசயமா பேசனும்னு முக்தி சங்கரை தன் வீட்டுக்கு அழைக்க, அங்க அவளோட அப்பா ஒரு ஐ.ஏ.எஸ்ன்னு தெரிய வருது. அதுல அவர் தன்னோட ஸ்டேட்டஸ் பத்திப் பேச சூடான சுள்ளான் சங்கர், ஒரு சபதத்தை ஏத்துக்கறான், ஒருநாள் முதல்வர் மாதிரி, ஐ.ஏ.எஸ் ஆனதுக்கப்புறந்தான் உங்க பொண்ணுகிட்ட பேசுவேன்னு. ஆத்தாடியாத்தா! அதுக்கான எக்சாம் என்னன்னு கூட தெரியாத சங்கர், அதை எப்டி கையாண்டு படிப்படியா ஃபெயிலாகறான்ங்கறது தான் மீதிக்கதை. ஆனா உண்மையிலயே, சங்கர் அதை சீரியஸா, வேண்டாம், தான் விரும்புற ஒரு பொண்ணுக்காக ஒருத்தன் இவ்வளவு எறங்கிப் போயி அதை சீரியஸா எடுத்துகிட்டு தன்னை ஒரு ஐ.ஏ.எஸ்ஸா ஆக்க முயற்சிக்கிறான்னா, அந்தப் பொண்ண அவன் எவ்வளவு மதிக்கிறான்னு அர்த்தம்? அப்டித்தான் சங்கர், முக்திக்காக தன்னை ரொம்பவே மெனக்கெட வச்சுகிட்டு, அவன் எடுத்துகிட்ட முயற்சியில ஜெயிக்கவும் செய்யிறான். அவனோட சபதம் இதுதான் - ஐ.ஏ.எஸ் ஆனதுக்கப்புறம் தான் நான் உனக்கு கால் பண்ணுவேன். அப்ப நீ என் கால அட்டண்ட் பண்ணு முக்தின்னு சொல்லிட்டு போவாரு. அதுக்கப்புறம் அவளுக்கு கால் பண்றதுக்காக போராடுறதுதான் சங்கரோட லைஃப் பர்ப்பஸே.
காலும் பண்ணிடறான். அங்கயே மொத்தப் படமும் முடிஞ்சிடுச்சு. அதுக்கப்புறம் முக்தி சங்கரோட கால அட்டண்ட் பண்ணாளா, இல்லையாங்கறதெல்லாம், டைரக்ட்டரோட அப்போதைய தேவையைப் பொருத்தது. அவ்வளவுதான் படமே! அதுக்கப்புறமும் ஒரு ஆக்ட் இருக்கு. கொஞ்சம் எமோசனலான ஆக்ட் தான். ஆனா அதுல எல்லாமே நமக்கு தேவையில்லாததுவும், இர்ரெலவண்ட் சீன்ஸும் தான். தேரே இஷ்க் மேவைப் பொருத்த வரைல, சங்கர், முக்திக்கு கால் பண்ணானா இல்லையாங்கறதுதான். முக்தி சங்கரோட காலை அட்டண்ட் பண்ணாளா இல்லையாங்கறதுல இல்ல. அது எல்லாமே ஆஃப்டர் எஃபெக்ட்ஸ்தான். ஆமாங்க, அதை பாசிடிவ்வாவும் கொண்டு போலாம். ஆனா, அப்டிக் கொண்டு போனா என்ன பெரிய டெப்த் இருந்துடப் போகுது கதையில?
யாரையாவது காதலிக்கிறோம்ன்னா, அந்தக் காதலுக்காக மட்டுமே நில்லுங்க. அந்தப் பொண்ணு/ஆண் வேணாம்னு சொல்லிட்டா, ஒதுங்கி நின்னு அவங்கள காதலிச்சிகிட்டிருங்க. மூவ் ஆன் ஆகறது அவங்கவங்க தேவையைப் பொறுத்தது. நெனச்சுகிட்டே வாழறதும் லைஃப்ல ஒரு அழகான போர்சன் தான். கூட இல்லாதவங்கள கூட இருக்கறதா நெனச்சுகிட்டு. ஆனா, மனசுக்குள்ள அவங்களோட வாழ்ந்த காலம்தான் அழகான காலமா தோணும். அதைவிட அழகானது, அவங்கள நெனச்சுகிட்டே வாழறது தான். இதெல்லாம் படத்துல இருக்கான்னு கேக்காதிங்க. கிட்டத்தட்ட இப்டியும் இருந்திருக்கலாம்னு தான் சொல்ல வந்தேன். அது எனக்கு ரொம்பவும் புடிக்கவும் செஞ்சது. ஆனா, இப்டியெல்லாமா சங்கரோடா ஃபோன் காலுக்கப்புறம் கதை இருந்தது?
No comments:
Post a Comment