Monday, July 6, 2026

டெல்லி கிரைம் - சீசன் 1


Delhi Crime - Season 1

அப்டின்னு ஒரு உண்மையைத் தழுவின்னு சொல்றதை விட இந்தியாவையே உலுக்கின, பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கின ஒரு வழக்கை அப்டியே தழுவி எடுக்கப்பட்ட வெப்சீரிஸ். சன்டான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்ட்டிவலில் திரையிடப்பட்ட முதல் இந்திய வெப்சீரிஸ் இதுதான். இதுவரை இரண்டே இரண்டு வெப்சீரிஸ்கள் மட்டுமே அந்தத் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. இரண்டின் இயக்குநரும் ஒருவரே. அது ரிச்சி மேத்தா. மேலும் இண்டர்நேஷனல் எம்மி விருதைப் பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய வெப்சீரிஸும் இதுதான். ஒரு இந்திய வெப்சீரிஸை இரண்டாவது முறை நான் பார்த்ததும் இதைத்தான். இதுக்கு முன்னாடி நான் அப்டி வருசம் ஒரு முறை ஒரு சம்பிரதாயமா பார்த்துகிட்டிருந்தது மர்மதேசம் சீரிஸ்களைத்தான். இப்ப அதை நான் நிறுத்திக்கிட்டேன். போரடிக்கும்னு எல்லாம் இல்ல. நெறயவாட்டி பாத்துட்டேன்னும் இல்ல. பாக்கறதுக்கு நிறைய வேற படங்களும் வெப்சீரிஸ்களும் லைன் கட்டி வந்துகிட்டே இருக்கறதாலதான். அடுத்து இன்னும் பாக்கணும்னு வெய்ட்டிங்ல உள்ள பழைய கலெக்சன்ஸும் நிறைய இருக்கு. இதுல நிறைய ரீவாட்ச்சிங்ல வேற பாக்கறதும் உண்டு. டைம் இல்ல. அதான் காரணம். சரிங்க நேரடியா இதைப் பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்த்துடலாம் வாங்க.

உண்மையா சொல்ல வேண்டிய ஒரு வழக்கு. நிர்பயா வழக்கு கேள்விப்பட்டிருப்போம். அதுதான் இந்த டெல்லி கிரைம் வெப் சீரிஸ் உருவாகக் காரணம். 16 டிசம்பர் 2012ல ஒரு பஸ்ல நடந்த கொடூரச்சம்பவம் தான் இந்த வழக்கு. தன் நண்பர் ஒருத்தரோட நிர்பயாங்கற பிசியோதெரபி இண்டர்னா உள்ள 23 வயசுப் பொண்ணு அன்னிக்கி சினிமாவுக்குப் போயிட்டு திரும்ப வீட்டுக்குப் போக பஸ்ல ஏறியிருக்காங்க. அது டவுன் பஸ் கெடயாது. அது ஒரு ஸ்கூல் பஸ். அதுல ஆல்ரெடி டிரைவரோட சேர்த்து ஆறு பேர் இருந்திருக்காங்க. எல்லாருக்குமே இருபதுல இருந்து இருபத்தஞ்சுக்குள்ள தான் வயசிருந்திருக்கும். ஆறுமே ஆண்கள். இப்ப ஏழாவதா நிர்பயா கூட வந்த நண்பரும் ஒரு ஆண். நிர்பயா மட்டுமே பொண்ணு. இவங்க ரெண்டு பேரும் ஏறின கொஞ்ச நேரத்துல அந்த ஆறு பேரும் இவங்க ரெண்டு பேர்த்தையும் மிரட்டி அவங்ககிட்ட உள்ளதயெல்லாம் அடிச்சுப் புடுங்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் டிரைவரா இருந்தவன் இன்னொருத்தன் கிட்ட பஸ்ஸ ஓட்டச் சொல்லிக் குடுத்துட்டு, நிர்பயாவ மட்டும் பஸ் கடைசி சீட் பக்கமா தரதரன்னு இழுத்துட்டுப் போய், ரேப் பண்ணியிருக்கான். அதுக்கப்புறம் அங்கயிருந்த மத்தவங்களும் மாத்தி மாத்தி. இதுக்கு மேல அந்த டெஸ்கிரிப்சன்க்குள்ள போக வேண்டாம்.

இப்பக் கதைப்படிக்குள்ள போவோம். கதைப்படி ஒரு மணி நேரம் நடந்த இந்த ரேப் சம்பவத்துக்கு அப்புறம், அவங்க ரெண்டு பேர்த்தையும் ஓடுற பஸ்ல இருந்து வெளிய தூக்கி எறிஞ்சிருக்காங்க ஒட்டுத் துணி கூட இல்லாம. அதோட நிக்கல. அவங்கள இனிமேல் உயிரோட விடக் கூடாதுன்னு பஸ்ஸ ஏத்திக் கொன்னுடலாம்னு தான் வெளிய வீசி எறிஞ்சதே. ஆனா கீழ விழுந்த அவங்க ரெண்டு பேரும் எப்டியோ உருண்டுகிட்டே வந்து ரோட் சைடுல இருந்த சாக்கடைக்கு வெட்டியிருந்த பள்ளத்துல விழுந்ததால உயிர் தப்பிச்சிருக்காங்க. இவங்கள இப்டிப் பாத்த யாரோ ஒரு பொதுஜனம் போலிஸுக்கு கால் செய்ய அவங்க ரோந்துல இருந்த அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல, அவங்க வந்து இவங்க ரெண்டு பேர்த்தையும் ரெகவர் செஞ்சிருக்காங்க. அதுக்கப்புறம் இவங்கள ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணதுல அந்த ஆண் நண்பருக்குப் பெருசா எந்தக் காயங்களும் இல்ல. வெறும் முதலுதவியிலேயே சரியாக்கக் கூடிய அடிகள் தான். ஆனா நிர்பயாவுக்கு?

நிர்பயாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் ரிப்போர்ட் கொடுக்குறப்ப சொன்னது, அவங்க யாரையும் சும்மா விட்றாதிங்க. நிச்சயமா தூக்குல போடுங்கன்னு. எந்த டாக்டரும் இப்டி ஒரு ரிப்போர்ட்டைக் கொடுக்க மாட்டாங்க. அது எவ்வளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனோட கைவரிசையா இருந்திருந்தாலும். ஆனா இது ரொம்பவே கொடூரம். இந்த வெப்சீரிஸைப் பாக்குறப்ப டாக்டரை டிசிபி வர்த்திகா சதுர்வேதி சந்திக்கிறப்பவெல்லாம் நான் மேக்சிமம் என் காதை மூடிக்குவேன் இல்லன்னா வேற எங்கயாச்சும் போய்ட்டு திரும்ப மொபைலை எடுத்து சீரிஸ் பாக்குறத கண்டினியூ செய்வேன். ஏன்னா அந்த டெஸ்கிரிப்சனைக் கேக்க ரொம்பவே சகிப்புத்தன்மையும் அசாத்திய தைரியமும் வேணும். அந்த மாதிரி ரெண்டுமே என்கிட்ட இல்ல.

முதல் முறை இந்த சீரிஸைப் பார்த்தப்ப எனக்கு இதோட இண்டன்சிட்டியும் டார்க் டோனும் தான் என்னை ரொம்பவே கவர்ந்திருந்தது. இப்ப நான் அதெல்லாம் ஆல்மோஸ்ட் மறந்தே போயிட்டேன். கதை என்னன்னே ஞாபகத்துல இல்ல. உண்மைச் சம்பவம்னு மட்டும்தான் ஞாபகத்துல இருந்தது. மூனாவது சீசனும், ரெண்டாவது சீசனும் அடுத்தடுத்து பாத்தாச்சு. முதல் சீசனை மட்டும் ஏன் மிச்சம் வைக்கனும்னு பாக்க ஆரம்பிச்சேன். ஆனா இந்த முறை இந்த வெப்சீரிஸை அணுகற விதமும், என்னோட பர்செப்சனும் நிறைய மாறியிருந்ததை நான் நெஜமாவே ஃபீல் பண்ணேன். முதல்முறை நான் இதை ஒரு கிரைம் திரில்லரைப் பாக்கற ஃபீல்லயும், அதுல இருந்த டிடெக்ட்டிவ்னஸ் எக்ஸ்பீரியன்ஸ்னாலயும் தான் எக்ஸைட்டடா ஃபீல் பண்ணிப் பாத்திருந்தேன். ஆனா இப்ப அந்த ரெண்டு ஃபீலுமே இல்ல. எந்த எக்ஸைட்மெண்டுமே இல்ல. மாறா, இந்தச் சம்பவம் ஒரு பதிவா இப்பதான் மனசுல பட்டது.

ஆரம்பத்துல இந்தக்கதையை எடுக்கவே வேணாம்னு இதோட டைரக்ட்டர் ரிச்சி மேத்தா முடிவு பண்ணி வேற ஒரு கதையைத் தேடிட்டிருந்தாராம். ஆனா காலம் அவர இந்த வழக்குல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பா ச்சாயா சர்மா மாதிரி ஆட்களை சந்திக்க வச்சுகிட்டே இருந்ததாம். அதுக்கப்புறம் தான் இந்தக் கதையைத் தான் எடுக்கனும்னு ஒரு முடிவுக்கே வந்திருக்காரு ரிச்சி. ச்சாயா சர்மாவோட ரெப்லிகேசன் தான் டிசிபி வர்த்திகா சதுர்வேதி கதாபாத்திரம். எனக்கு இந்த முதல் சீசன்ல பாராட்டியே ஆக வேண்டிய ஒரு ரீசன் இருக்கு. அது என்னன்னா, அந்த பஸ்ல நடந்த எந்த சம்பவங்களையும் நமக்கு ஏழு எபிசோட்ல எந்த சீன்லயும் காட்சியா வந்திருக்காது. பர்ப்பஸாவே அதைத் தவிர்த்திருக்காங்க. இன்னும் சொல்லனும்னா அந்த நிர்பயாவோட திரை வர்சனா நடிச்ச கதாபாத்திரத்தோட முகத்தை குளோசப்ல மட்டும் இல்ல, மிட் சாட்ல கூட காட்டிருக்க மாட்டாங்க. மொத்தமும் வொய்டு லாங் ஷாட்ஸ் தான். குளோசப் எல்லாம் ட்ரீட்மெண்ட் சமயத்துல மட்டும்தான். அப்ப நமக்கு அது முதல்ல லாங் ஷாட்ல காட்டின ஆளுக்கும், இப்ப ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டிருக்கற ஆளுக்கும் எந்த ஒத்துமையும் இருக்காது. கடைசிவரைக்கும் நாம அவங்கள விக்டிமா மட்டுமே பாக்கனும்ங்கறது மேக்கர்ஸோட டெசிஸன்.

என்னதான் இந்தக் குற்றவாளிகள அஞ்சு நாள்ல தேடிக் கண்டுபுடிச்சிருந்தாலும், அதுல அந்த டிரைவர், முதல் ரேப்பிஸ்ட் திகார்ல வழக்கு கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடியே தற்கொலை செஞ்சுகிட்டான். அவனைத் தூக்குல போட்டிருந்தா கூட அது அவனுக்கு கம்மிதான்னு எனக்கு ஒரு தோனல். ஆனா இந்தக் கொடூர சம்பவத்துக்கும் மேல ஒரு விசயம் ரொம்பவே வேதனைப்படுத்தின விசயம் என்னன்னா, சிங்கப்பூர்ல ட்ரீட்மெண்டுக்குக் கொண்டு போயிருந்தாங்க, சம்பவம் நடந்து பதினாலாவது நாள் 29 டிசம்பர் 2012 அன்னிக்கி அங்க நிர்பயா இறந்துட்டாங்க.

ஆறு பேர்ல அஞ்சு பேர் இறந்துட்டாங்க. தற்கொலை செஞ்சுகிட்டான் ராம் சிங் எனும் அந்த டிரைவர். மத்த அஞ்சுல நாலு பேருக்கு 20 மார்ச் 2020ல தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. ஆனா, ஆறாவது ஆளைப் பத்தி, அந்த இன்னும் மிச்சமிருக்கற ஒருத்தனைப் பத்தி சொல்லனும். இந்தச் சம்பவத்தப்ப அவனுக்கு பதினேழு வயசு. அவனும் அந்த வன்புணர்வு செஞ்ச ஆறு பேர்ல ஒரு கொடூரன் தான். அவனுக்கு மூனு வருச தண்டனை மட்டுமே கெடச்சது. அதுக்கப்புறம் அவன் தண்டனைக் காலம் முடிஞ்சு வெளியதான் சுத்திட்டிருக்கான். இதுல கொடுமை என்னன்னா, அவன் ஐடெண்டிட்டி இன்னும் பொதுவுல வெளியிடப்படலங்கறதுதான். என்ன மாதிரியான டிசைன் இது?

No comments:

Post a Comment