Wednesday, July 1, 2026

Our Fault - இது மட்டும் ஸ்பானிஷ்


Our Fault

அப்டின்னு ஒரு ட்ரையாலஜியோட மூனாவது படம். இதுக்கு முன்னாடி வந்த My Fault London and Your Fault London படங்களைப் பத்தி Fault London அப்டின்னு ஒரு பதிவா எழுதியிருந்தேன். நண்பர்கள் அதை க்ளிக் பண்ணி வாசிக்கலாம். இப்ப இந்தப் படத்தையும் அமேசான் ப்ரைம்ல தான் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. ஆல்ரெடி அதை வாசிச்சிட்டதால சரியா கவனிக்காம அதை க்ளிக் பண்ணி பாக்க ஆரம்பிச்சவனுக்க செம ஷாக். ஆமாங்க, அது என்ன ஷாக்கிங் அனுபவம்ங்கறத பாக்கலாம் வாங்க.

கதைப்படி என்னவோ இருந்துட்டுப் போகட்டும். இது என்னடா நோவாவா வேற யாரோ ஒரு பொண்ணக் காட்றாங்கன்னு மொத ஷாக். அப்புறம் அந்த ஆங்கில எழுத்துக்களெல்லாம் ஜடை பின்னியிருந்தது. ஆத்தி அது ஸ்பானிஷ். அடுத்து கதை லண்டன்ல நடக்கல. இபிஸாவுல நடக்குது. ஏன் சம்பந்தமில்லாம நோவா இபிஸாவுக்குப் போறான்னு பார்த்தப்ப அது ஒரு கல்யாணத்துக்கு. அப்ப ஓகே. அதுவும் லியானுக்கும் ஜென்னாவுக்கும் கல்யாணம். அது போன யுவர் ஃபால்ட்லயே லியான் ஜென்னாகிட்ட ப்ரப்போஸ் பண்ணிருந்தான். ஓகே ஆனா அந்த ரெண்டு பேர் கூட வேற யாரோ நடிச்சிருந்தாங்க. எனக்கு பழைய ரெண்டு படத்துக்கும் இதுக்கும் உள்ள கதை தெரியும்ன்னாலும் யார் பேசறாங்க. யார்கிட்ட பேசறாங்கன்னு ஒன்னும் புரியல.

உடனே வண்டிய கூகுள் பக்கம் திருப்பினதுல தெரிஞ்சிகிட்டது. உண்மைல முதல் ரெண்டு பாகம் தான் ஆங்கிலத்துல எடுத்து அது தமிழ்ல டப்பிங் ஆகி ப்ரைம்ல ரிலீஸானது. இப்ப இந்த மூனாவது பாகத்தை அவங்க ஆங்கிலத்துலயே எடுக்கல. ஸ்பானிஷ்ல எடுத்திருக்காங்க. அதனால ஆங்கில கேஸ்ட்டிங் இல்ல. லண்டனும் இல்ல. ஆஷா பேங்க்ஸும் இல்ல. ரைட்டு. இனி இது யாருன்னு அப்பாவக் காணோம்னு தேடுற சி.எம் மாதிரி கண்ணுக்கு மேல கைய வச்சு தேட வேண்டியதா இருந்தது. ரொம்ப நேரம் கழிச்சுத்தான் கண்டுபுடிச்சேன். அது மைக்கெல்ன்னு. ஏண்டா போன பார்ட்லயே நிக் அவன அடிச்சே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனானேடான்னு செம கன்ப்யூசன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் சாகல, சாகறளவுக்கு அடிச்சதுக்குத்தான் ஜெயிலுக்குப் போனான்னு. எப்டியிருந்திருக்கும் நான் படம் பார்த்த லட்சணம்.

ஒரு வழியா இது நோவா, இது நிக் இது வில்லியம்ஸ், நிக்கோட அப்பா நோவாவோட அம்மாவுக்கு ரெண்டாவது புருசன்னு புரிஞ்சுகிட்டேன். ஆனா திடீர்ன்னு இன்னொரு குண்டைப் போட்டானுக. ஒரு சீன். அதுல நோவா வலி தாங்க முடியாம கத்துற மாதிரி. அடுத்த சீன்ல ஒரு ஃப்யூனரலைக் காட்றங்க. திக்குன்னு ஆயிடுச்சு. என்றாது எடிட்டிங்ன்னு ஷாக்காயிட்டேன். அப்புறம் வெய்ட் பண்ணிட்டே இருந்தேன். அந்த ஃப்யூனரலுக்கு வந்தவங்க எல்லாரையும் குறுகுறுன்னு பாத்துகிட்டே இருந்தேன். அதுல யாரும் நோவா இல்ல. அப்ப நோவா எங்க செத்துட்டாளா 😧 அப்டின்னு பாத்துகிட்டிருந்தப்ப தான் புரிஞ்சது செத்தது நிக்கோட அம்மான்னு. இத்தனைக்கும் நான் நாவல் படிச்சிருந்ததயே மறந்துட்டேன் இந்த கேஸ்ட்டிங் குழப்பத்துல.

அடுத்து நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணேன். அந்த ப்ளட் சீன் காட்டிறக் கூடாதுன்னு. ஆனா ஆல்ரெடி நாவல்ல கதையா வந்ததுதான. நடந்துருச்சு. நிக் நடத்திட்டான். அதுக்கப்புறம் தான் நோவாவுக்கே தெரிய வருது ப்ரக்னெண்ட்ன்னு. அடேய் அண்ணனும் தங்கச்சியும்டா. அதுக்கப்புறம் என்ன நடந்துருக்கப் போவுது. ஆல்ரெடி பிரிஞ்சிட்டாங்க. ஆனா எப்ப எங்க நோவாவ பாத்தாலும் நிக்கால அடங்கியிருக்க முடியாது. இதுல அவ கூட வேற ஆளைப் பாத்தாலே பொசஸ்சிவ்னஸ். கொல்றதுக்குன்னே அடிப்பான். இந்தப் பக்கம் நோவா மட்டும் சும்மாயில்ல. காரைப் பாத்தாலே ரேஸ் விடனும்னு பறப்பா. நிக்கைப் பாத்தா அவாய்ட் பண்றேன்னு சீன் போடுறது இந்தப் பார்ட்லதான். ஆனா அவளும் அடங்கியிருக்க மாட்டா. அப்புறம் கர்ப்பமாகாம என்ன ஆகும்?

இதெல்லாம் பரவால்ல. இந்த இன்செஸ்ட்டைக் கூட நான் பயாலாஜிக்கல்ன்னு உலகமே சக்ஸஸ்ஃபுல்லா நாவலை வாங்கிப் படிச்சுத் தள்ளுது. ஆனா படம் ஃப்ளாப்புதான். குறிப்பா இந்த மூனாவது படம். ஆனா நோவா கர்ப்பம்ங்கறத அதுவும் ஆறு மாசம்ங்கறத நிக் கவனிக்கவே இல்லன்னு விட்டிங்க பார்றா ஒரு ரீலு. போங்கடா டேய். முன்ன வந்த ரெண்டு படத்தையே ஏண்டா பாத்தோம்னு தான் ஃபீலாச்சு. ஆனா ஆஷா பேங்க்ஸுக்காக ரெண்டு பார்ட்டையும் பார்த்தேன். ஆனா இப்ப ஆஷாவை எதிர்பார்த்து அவ இல்லாம படத்தைப் பாக்கனுமேன்னு பாத்தேன். கடைசில எப்டியோ ஒப்பேத்திட்டாங்க. அவ்ளோ சிறப்பாவெல்லாம் இல்லங்க. இந்தக் கதையை ஏத்துக்க வச்சதே அந்த ரிச்னஸ் தான். மொத்தமா நிக்கோட ரிச்சான லைஃப்ஸ்டைல் அண்ட் ஆஷா பேங்க்ஸ் நோவா கேரக்ட்டருக்கு கொடுத்த அந்த உருவம் இந்த ரெண்டும் தான் படத்தைப் பாக்க வச்சது. கடைசில அதுல இல்லாமயே மூனாவது பார்ட்டையும் ஒட்ட வச்சு பிம்பிளிக்கி பிலாப்பின்னு முடிச்சிட்டாங்க.

சரி ஃப்ரெண்ட்ஸ். அடுத்த பதிவுல நாம சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment